Archive for the ‘திருமகள்’ Category

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது: அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது[1]. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது[2], என்றார். இக்கதை ஜனவரியிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஊடக செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்[3]. இதற்கெல்லாம் என்ன பெரிய தொழிற்நுட்பம் தேவைப் படுகிறது என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

அலகில் பாம்பு இருக்கும் சிலை.
முன்பு பூ இருந்த சிலை, ஆனால் இது மரகத விக்கிரகம் இல்லை.

மயில் மூக்கில் இருந்தது பாம்பா, பூவா?: முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தானே சென்று பார்த்தார் எனும்போது, விவரங்களை அவர் அறிந்திருப்பார் என்றாகிறது. புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால், தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது[4]. இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும்,  அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது[5]. “புதிய சிலையை உருவாக்கலாம்,” என்பது திகைப்பாக இருக்கிறது அப்படியென்றால், ஸ்வர்ணம் எக்ஸ்போர்ட்ஸ் அச்சிலையை ஏற்றுமதி செய்ததாக கூறப் பட்டதை கண்டுகொள்ளவில்லையா?

போலீஸ் விசாரணையும், அறநிலையத் துறை அறிக்கைகளும் முரண்படுவது ஏன்?: தமிழக போலீஸார் மற்றும் அறநிலையத் துறை ஆளும் ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன. எனவே, ஒரே அரசின் இரு துறைகள், இருவேறான கருத்துகளை, விளக்கங்களை, விவரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், இந்த வழக்குகளில் 2004லிருந்தே, முரண்பட்ட, முன்னுக்கு முரணான வாதவிவாதங்கள், கருத்துகள், அறிக்கைக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. சிலை மாற்றப் பட்டது என்பதை ஒப்புக் கொண்டப் பிறகு, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், கைதுகள், ஜாமீனில் வெளி வருதல், மறுபடியும் பதவிகளில் அமர்ந்து கொள்ளுதல், ஆவணங்களை அழித்தல் என்றெல்லாம் நடந்து வருவது, சம்பந்தப் பட்ட குற்றமனப்பாங்கை (mens rea), குற்றம் செய்த நிலையை (culpability of mind and action), ஆதாரங்களை அழிக்கும் போக்கை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், உயர் அதிகாரிகள், அரசு, மந்திரிகள், முதலமைச்சர் என்று எல்லோருமே ஒன்றுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சி அளுக்கும் விசயமாகும். ஏனெனில், அது அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது போலிருக்கிறது. மேலும், குற்றம் செய்தவர்கள், அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்று இன்னும் ஆணவமாக, அகங்காரமாக, எதேச்சதிகாரத்துடன் செயல் படுவர். “பார்த்தியா, என்னை ஒண்ணும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது,” என்ற தோரணையில் மேன்மேலும் அநியாய காரியங்களில் செயல்படுவர்.

2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிப்பது: 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக காலந்தாழ்த்தி, வேண்டுமென்றே வழக்குகளை இழுத்தடித்துள்ளது தெரிகிறது. அதற்குள் பெயிலில் வெளியே வந்தவர்கள், கைதாகாமல் பெயில் வாங்கியவர்கள் நிச்சயமாக தமது அரசியல் தாக்கம், அதிகார பலம், பண பலம் முதலியவற்றை பிரயோகித்து, இருக்கு அத்தாட்சிகளை அழித்திருப்பர். திருமகள் 2100 ஆவணங்களை 2009மற்றும் 2013 ஆண்டுகளில் அழித்துள்ளார், என்பது தெரிகிறது. மயில் விக்கிரகம் சம்பந்தமான ஆவணங்களை திருமகள் அழித்ததை மூன்று இணை ஆணையர்களே தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களில் கொடுத்திருப்பதாக, போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியென்றால், அவர்களையும் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் என்று 04-03-2022 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன[6]. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்[7]. கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்[8]. இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[9]. பி.டி.ஐ பாணியில் இந்த வரிகள் மற்ற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன[10]. உக்ரைனுக்கு மற்ற விவகாரங்களுக்கு ஊதி ஊளையிடும் புலன் விசாரணை நிபுணர்கள் இவ்விசயத்தில் அப்படியே கமுக்கமாக சிலவரிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர்[11]. இந்த தனபாலும், அந்த தனபாலும் ஒன்றா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர், பிறகு இவர் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாற் என்று புரியவில்லை.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/missing-peacock-idol-buried-in-mylapore-temple-pond-police-report-filed-to-mhc/tamil-nadu20220301195013449

[2] மாலைமுரசு, கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலை கோவில் குளத்தில் புதைந்துள்ளதாக காவல்துறை தகவல்.!!, Muthu KumarMuthu KumarMar 1, 2022 – 17:30Updated: Mar 1, 2022 – 17:30.

[3] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Police-say-a-mysterious-peacock-statue-has-been-buried-in-the-temple-pond-at-the-Kabaliswarar-temple

[4] பத்திரிகை.காம், மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல், By A.T.S Pandian, March 1, 2022.

[5] https://patrikai.com/kapaleeswarar-temple-stolened-peacock-idol-buried-under-mylapore-temple-tank-tn-govt-information/

[6] தினமலர், கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலையை கண்டறிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு,  Added : மார் 03, 2022  22:34.

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2974651

[8]  தமிழ்.இந்து, தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல், செய்திப்பிரிவு, Published : 04 Mar 2022 06:53 AM; Last Updated : 04 Mar 2022 06:54 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/773776-kumbhabhishekham-1.html

[10] தினத்தந்தி, 1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல், பதிவு: மார்ச் 04,  2022 00:18 AM

[11] https://www.dailythanthi.com/News/State/2022/03/04001821/Minister-Sekarbabu-informed-that-this-year-Kumbabhishekam.vpf

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் – திருமகளின் பங்கு, கைது, பெயிலில் வெளிவருதல் முதலியன(3)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள்திருமகளின் பங்கு, கைது, பெயிலில் வெளிவருதல் முதலியன(3)

மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பெண் அதிகாரி திருமகளின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது[1]. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னை வனநாதர் சந்நிதியில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு புதிய மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்[2]. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணு சீனிவாசன், தமிழக அரசின் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்[3]. தான் நிறைய கோவில்களுக்கு நிதியுதவி கொடுத்திருப்பதாலும், கபாலீஸ்வரர் மீது நம்பிக்கையுள்ளதாலும், தனக்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்லப்பட்டது[4].

யார் இந்த திருமகள்?: இந்து சமய அறநிலையத்துறையின் முதல் பெண் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் திருமகள். பி.எஸ்.சி – எம்.எல் படித்து  டி.என்.பி.எஸ்.சி மூலம் அறநிலையத்துறைக்குத் தேர்வானவர்[5]. இவருடைய கணவர் தமிழக அரசுப் பணியிலும், மகன் மத்திய அரசுப் பணியிலும் உள்ளனர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சிதம்பரம் கோயிலிலும், கபாலீஸ்வரர் கோயிலிலும் செயல் அலுவலராகப் பணியாற்றியவர். சீனியர் அதிகாரியாரியான திருமகள் அறநிலையத்துறையின் விசாரணைக்கான கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வரும் குற்றங்கள் குறித்து இவர்தான் விசாரணை நடத்துவார். அப்போது, தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றியும், சிலரை வேண்டும் என்றே பல வருடங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்தும் திருமகள் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது[6]. அப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிலர், இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். எங்கே தன்னுடைய இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று, தனக்குக் கீழிருந்த பலரையும் பணிநீக்கம் செய்திருக்கிறார் என்கிறது அறநிலையத்துறை வட்டாரம்.

திருமகளுக்கு அடுத்தடுத்து முக்கியப் பதவிகள் கொடுப்பது: இதையடுத்து, துறை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் (பொது) என்ற பதவிக்கு வந்தார். அதாவது, அறநிலையத் துறையின் ஆணையருக்கு அடுத்த இடம் இந்தப் பதவி தான். மேலும், முன்னாள் ஆணையர் தனபால் நேரடி ஐ.ஏ.எஸ் இல்லாத போதும் ஆணையராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரைப் போலவே திருமகளும், அறநிலையத் துறையின் ஆணையராக வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், அறநிலையத் துறையின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதுதான், வேலியே பயிரை மேய்வ்து, திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற முரண்பாடுகள். இவ்வளவு ஊழல், மோசடி செய்து கைதான ஒருவருக்கு “லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர்” பதவி கொடுப்பது அராஜகமானது. தனால் தான், தமிழகத்தில் இத்தனை குற்றங்கள், தீமைகள், சட்டமீறல்கள் எல்லாம் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான், கபாலீஸ்வரர் கோயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் 2018ல் கைது செய்யப்பட்டார் திருமகள்.

வேணு சீனிவாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு: வேணு சீனிவாசன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மயிலாப்பூர் கோயில் கும்பாபிஷேக திருப் பணிக்குழு உறுப்பினர் என்ற முறையில்தான் கோயில் திருப் பணிகளில் ஈடுபட்டேன். இதற்காக எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கும்மேல் செலவு செய்துள்ளேன்[7]. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என தெரிவித்திருந்தார்[8]. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு, முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.மகாதேவனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒன்றாக விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு: “இந்த வழக்கில் மயிலாப்பூர் கோயிலில் இருந்த பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான ஆவணங்களை கூடுதல் ஆணையர் திருமகள் அழித்ததாகவும் அறநிலையத் துறையில் பணிபுரியும் 3 இணை ஆணையர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள தாகக் கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளனர்”.

வீடியோ ஆதாரங்கள்: “அதிலும் குறிப்பாக ஒரு இணை ஆணையர், பெண் அதிகாரி திருமகள் ஆவணங்களை அழிப்பதை கண்ணால் பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதேபோல மயில் சிலை மாற்றப்பட்டதற்கான ஆதாரமாக 2004-ல் கும்பா பிஷேகத்துக்கு முன்பாகவும், பின் பாகவும் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஆணையரான திருமகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வேணு சீனிவாசன் உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவர்கள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் தலா ரூ.1 லட்சத்துக்கான பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேணு சீனிவாசன் உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது. ஒருவேளை அதிகாரி திருமகள் விசாரணையின்போது இந்த 3 பேரில் யாரையாவது கைநீட்டினால் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களது முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார். குற்றச்சாட்டு நிரூபணமானால்.. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒருவேளை இந்த 3 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் இந்த நீதிமன்றத்தை நாடலாம். அதேபோல அவர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மாஜிஸ்ட்ரேட்டுகள்-நீதிபதிகள் “நீதி அரசர்கள்” நிலை: திருமகள் போன்ற ஊழல் ராணிகள் அதிகமாகி கோலோச்சும் போது, திராவிடத்துவ கொள்ளைகள் நியாயப் படுத்தப் பட்டு, அமுக்கப் பட்டு விடும். வழக்குகளும் இருக்காது. அரசு-கட்சி-ஜாதி முறையில் நியமனம் செய்யப் படும் நீதிபதிகளுக்கும் பிரச்சினை இருக்காது. ஏனெனில், எப்படியிருந்தாலும், எஜமான விசுவாசம் அவர்களின் மனங்களை உருத்திக் கொண்டே இருக்கும். இப்பொழுதே கடந்த 70 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்டுகள்-நீதிபதிகள் எப்படி தீர்ப்புகள், பெயில்கள் கொடுக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பனவற்றைக் கவனிக்கலாம். ஓய்வு பெற்ற அதே “நீதி அரசர்கள்” தாங்கள் எவ்வாறு நீதியை ஆட்சி செய்தார்கள், ஆண்டார்கள், கட்டுப் படுத்தினார்கள் போன்ற கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். போதாகுறைக்கு, சினிமாக்களிலும் காட்டுகிறார்கள்.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] தமிழ்.இந்து, மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கில் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன்: கூடுதல் ஆணையர் திருமகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம், செய்திப்பிரிவு, Published : 29 Nov 2018 09:20 am; Updated : 29 Nov 2018 09:20 am

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/147034-3.html

[3] புதியதலைமுறை, சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர், Sakthi Saravanan Published :09,Aug 2018 04:24 PM.

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/33878/Statue-Kidnap-case—Chairman-of-TVS-Motor-Venu-Srinivasan

[5] விகடன், சிலைக் கடத்தல் விவகாரம்ஆட்டம் காணும் அறநிலையத் துறை?, நமது நிருபர், Published:17 Dec 2018 5 PM; Updated:17 Dec 2018 5 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/144868-hrnce-higher-official-thirumagal-arrest-in-idol-theft-case

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், டி.வி.எஸ். தலைவர் வேணு சீனிவாசன் மீது என்ன புகார்? சிலை கடத்தல் வழக்குகளில் ஷாக்!, Written by WebDesk, Updated: August 10, 2018 4:14:37 pm.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tvs-motors-chairman-venu-srinivasan-the-accusations/

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் – பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, அவரின் பங்கு (2)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள்பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, அவரின் பங்கு (2)

முத்தைய ஸ்தபதி ஏற்கெனவே வழக்குகளில் மோசடிகளில் சிக்கியுள்ள நபர்: பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக எழுந்துள்ள புகாரில் பழனி கோயிலில் தொன்மையான உற்சவர் இருக்கும் நிலையில், பழைய சிலை அகற்றப்பப்படக் கூடாது என இந்திய தொன்மைச் சட்டத்தில் உள்ளது. மேலும் ஒரு உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் விதிகளை மீறி 2004-ம் ஆண்டு உற்சவர் சிலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.  200 கிலோ எடையில் பஞ்சலோகத்தால் ஆன சிலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டது[1]. பின்னர் சிலை செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது. ஆனால், தங்கம் பெறப்பட்டது, உபயோகப்படுத்தியது போன்ற விவரங்களில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றிற்கு முத்தையா தான் காரணம் என்று தெரிய வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்த வழக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது[3].

முத்தையா ஸ்தபதி யார்?: இந்து சமய அறநிலைய துறையின், ஸ்தபதி முத்தையா, 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்[4]. சென்னையில் வசித்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தொழில் அதிபரின் நட்பு கிடைக்க, முதல்வராக இருந்த, ஜெயலலிதாவிடம் முத்தையா அறிமுகமானார். தொடர்ந்து, அறநிலைய துறையின், ஆஸ்தான ஸ்தபதியாக முத்தையா நியமிக்கப்பட்டார். கோவில் சிலைகளை பாதுகாக்கும், ஸ்தானிகர்களிடம், ‘பல ஆண்டுகளாக, அபிஷேகம் நடப்பதால், சிலைகள் சேதம் அடைந்து விட்டன. புதிய சிலை செய்ய வேண்டும்’ என, அறிக்கை பெறுவார். பின், அதிகாரிகள் துணையுடன், புதியசிலைகள் செய்து, லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார்[5]. ஜெ., முதல்வராக இருந்த போது, 2000 -04ல், ‘பழனி கோவில் சிலை, விழும் நிலையில் உள்ளது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து நிகழும்’ எனக்கூறி, புதிய சிலை செய்துள்ளனர். அதில், 4.5 கிலோ தங்கம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஸ்தபதி முத்தையா மட்டும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட, பல இடங்களில், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்தபதி முத்தையா, மத்திய அரசிடம் இருந்து, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அந்த விருதை, திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.

தெய்வகுற்றங்களில் ஈடுபட்ட ஸ்தபதி: பத்ம விருது பெற்று பொறுப்புள்ள இவர், உண்மையாக, நாணயமாக இருந்திருந்தால் நிச்சயமாக இவர் இத்தகைய குற்றங்களில், மோசடிகளில், விக்கிரக கடத்தல், கள்ளத் தனங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார், சம்பந்தப் பட்டிருக்க மாட்டார் மற்றும் அந்த கடவுளே இவரை அவ்வாறு செய்திருக்க அனுமதித்து இருக்க மாட்டார். ஆனால், நிச்சயமாக இவரிடத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. தெய்வகுற்றத்தில் மற்றவர்களைப் போல இவரும் ஈடுபட்டிருக்கின்றார். இல்லையென்றால், இவரே, அவற்றைத் தடுத்திருக்கலாம் அல்லது ஸ்தபதி என்ற முறையில் ஆகம முறைகளை எடுத்துக் காட்டி நல்வழிகளை போதித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை, மாறாக குற்றவாளிகளுக்கு துணை போயிருக்கிறார் மற்றும் குற்றங்களிலும் ஈடு பட்டிருக்கிறார் என்று வழக்கு ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன. ஆகவே, திராவிடத்துவ நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு முதலியவை இத்தகைய ஸ்தப்திகளையும் குற்றம் செய்ய வழிகாட்டும், கும்பலோடு சேர வைக்கும், இந்துவிரோத காரியங்களில் ஈடுபட செய்யும் என்பது உண்மையாகிறது. பிறகு, இவர் எத்தனை சிற்பங்கள், பஞ்சலோக விக்கிரங்கள், கோவில்கள் உருவாக்கியிருந்தாலும், எந்த பிரயோஜனமும் இல்லை.

மூன்று சிலைகள் புதைக்கப் பட்டனவா, கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப் பட்டனவா?: ஆகம விதிப்படி, அகற்றப்படும் பழைய சிலைகளுக்கு பூஜை செய்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் துணையுடன் மூன்று சிலைகளும் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோயில் அதிகாரிகளிடம் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா விசாரணை நடத்தினார். இதில், கோயில்சிலைகள் மாயமானது உறுதிசெய்யப்பட்டது. சிலைகள் மாயமானது குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிலைகள் மாயமான காலகட்டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் டிசம்பர் 2017ல் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்[7].

இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் 1,600 ஆண்டுகள் தொன்மையானவை[8]. இதுபோன்ற புராதன சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, இந்த சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. புராதனமான இந்த சிலைகளை அகற்ற, கோயிலில் இருந்த பரம் பரை அர்ச்சகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் இருந்து நீக்கிவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்[9]. 2004-ல் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகளிடம் கேட்டபோது, ‘‘சிலைகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்கள் எது வுமே இல்லை. நான் அந்த சிலை களை பார்த்ததே இல்லை. போலீ ஸாரிடம் இருக்கும் ஆவணங்கள் தவறானவை. சிலைகள் மாய மானது பற்றி எனக்கு தெரியாது’’ என்கிறார். ஆகம விதிப்படி மண்ணில் சிலைகள் புதைக்கப்பட்டிருந்தால், எந்த இடத்தில் புதைக்கப்பட்டன என்ற விவரம் அறநிலையத் துறை யிடம் இல்லை”. இந்நிலையில் தான் வேணு சீனிவாசன், திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் முதலியோர் முன் ஜாமீன் மனு சமர்ப்பித்தனர்.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] தமிழ்.இந்து, பழனியில் கோயில் சிலை செய்ததில் முறைகேடு: பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கைது, செய்திப்பிரிவு, Published : 26 Mar 2018 06:41 PM; Last Updated : 26 Mar 2018 06:41 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/166193–1.html

[3] Madras High Court -J.Krishnamoorthy vs The Inspector General Of Police on 25 January, 2019; https://indiankanoon.org/doc/169285842/

[4] தினமலர், ஸ்தபதி முத்தையா ரூ.200 கோடி சொத்து குவிப்பு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ‘திடுக்’, பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018,23:01 IST..

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=1990040

[6] தினத்தந்தி, கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது, பதிவு: டிசம்பர் 17,  2018 05:00 AM

[7] https://www.dailythanthi.com/News/State/2018/12/17034136/In-the-Kapaleeswarar-temple-Action-in-peacock-statue.vpf

[8]  அதாவது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள், ஆனால், அக்காலத்தில் கபாலீஸ்வரர் கோவில், இங்கில்லை, கடற்கரையில் இருந்தது என்ற உண்மை மறுபடியும் போலீஸார் கூற்றுப் படியும் வெளி வருகிறது என்பதனை கவனிக்க வேண்டும்.

[9]  திராவிடத்துவ ஆட்சியினர், அதிகாரிகள் இவ்வாறு அர்ச்சகர்களை மிரட்டுவதை கவனிக்க வேண்டும். அதனால், கொஞ்சம்-கொஞ்சமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போர்வையில், இத்தகையை கொள்ளைகளுக்கு தோதுவாக ஒத்துழைக்கும் அர்ச்சகர்கள் உள்ளே வந்டு நிரப்பப் பட்டு விட்டால், இன்னும் ஒரு 30-40 ஆண்டுகளில் முழுவதுமாக கோவில்கள் திருடர்கள், கொள்ளையர்கள், கடத்தல்காரர்களின் கூடாரமாகி விடும்.

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் (1)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் (1)

கபாலீஸ்வரர் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபடுவது: நிச்சயமாக 2000 வருடங்களுக்கும் மேலான தொன்மையான கபாலீஸ்வரர் கோவில் பல காலங்களில் பலரால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது, வருகின்றது. ஜைனர்கள் இடைகாலத்தில், கடற்கரையில் இருந்த கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து இருந்ததை, அவர்களது கல்வெட்டுகள் காட்டுகின்றன[1]. அதே நேரத்தில், சோழர்களது நிவேதங்கள் கல்வெட்டுகளும் சிவனுக்கு கொடுத்த தானங்களையும் குறிப்பிடுகின்றன. துலுக்கர் மயிலையில் சில இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, உடல்களைப் புதைத்து, தர்கா கட்டிக் கொண்டு கலாட்டா செய்தனர். ஆற்க்காடு நவாப் இதற்கு ஆதரவு கொடுத்தான்[2]. 1523ல் போர்ச்சுகீசியர் கோவிலை இடித்த போது, இந்துக்கள் சில விக்கிரங்களை எடுத்து வந்து, தொலைவில் இப்பொழுதுள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்[3]. இப்பொழுது, திராவிடத்துவ, நாத்திக, பெரியாரிஸ்டுகளின் தாக்குதல்களில் கபாலீஸ்வரர் கோவில் உட்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில், அவரைப் போற்றி, போற்றிகள் சொல்லப் பட்டன. இப்பொழுது 2022ல் அவர்களுக்கே உரித்தான முறையில் இந்து அறநிலையத் துறை மூலம் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று தான், இந்த மரகத மயில் சிற்பம் காணாமல் போன விவகாரம், புகார்கள், கைதுகள் மற்றும் வழக்குகள். மரகத விக்கிரகம் (மரகதம் – எமரால்ட், Emerald) சாதாரணமாக 100-200 கோடிகள் என்று உலக சந்தையில் மதிப்பீடு செய்யப் படுகிறது.

புன்னை மரம் / விருக்ஷம், புன்னைவனநாதர், மயில் சிற்பம்: மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் ஸ்தல விருக்ஷம் புன்னை மரம் ஆகும். இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது.  அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அம்மனுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது. பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதி கபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின் போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது. இப்பொழுது அந்த மயில் சிற்பம் தான் இந்துவிரோத நாத்திகர்களால் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. பெரியாரிஸ, நாத்திக சித்தாந்திகள் ஆட்சிக்கு வருவதால், இந்து அறநிலையத் துறையில் அதிகாரிகளாக, ஊழியர்களாக வந்தால் என்னாகும், என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம். இந்நிலையில் தான் அத்தகைய நாத்திகர்களும் அர்ச்சகர் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, வேலை செய்ய உள்ளே வந்துவிடலாம் என்று வேறு சட்டத்தை வளைத்திருக்கிறார்கள்.

சம்பந்தப் பட்டவர்கள் மௌனம் காக்கின்றனர், ஒத்துழைக்க மறுக்கின்றனர் மற்றும் தம்மையும் மற்றவர்களையும் காக்க முயல்கின்றனர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று சிலைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். கபாலீஸ்வரர் கோவில் விவகாரத்தைப் பொறுத்த வரையில் இந்து அறநிலையத்துறையினர், அரசு அதிகாரிகள், கழகத்தினர், திராவிடத்துவவாதிகள், என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டிருப்பதால், இவ்வாறு மௌனம் காக்கின்றனர், ஒத்துழைக்க மறுக்கின்றனர் மற்றும் தம்மையும் மற்றவர்களையும் காக்க முயல்கின்றனர்., இதனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். திராவிடத்துவ ஆதரவுடன், இந்து அறநிலையத் துறையினர், கும்பாபிஷேகம் பெயரில் பழைய விக்கிரங்களை நீக்கி, போலி விக்கிரங்களை தயாரித்து வைத்து, விழாவை முடித்து வைக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், வகையில் ஆதாயம், பணம், பலன் கிடைப்பதால், அமைதி காக்கின்றனர். ஆனால், அந்த தொன்மை வாய்ந்த விக்கிரங்கள் என்னவாகின்றன என்பது மர்மமாகவே இருக்கின்றன. இங்குதான் சிலை கடத்தல் கும்பல்களுடன் இவர்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம் அல்லது தாமாகவே கூட அத்தகைய வேலைகளில் இறங்கியிருக்கலாம் என்றும் புலனாகிறது. இது ஒரு தேர்ந்தெடுத்த திட்ட வடிவ முறையாகி (modus operandi) செயல் பட்டு வருகிறது எனலாம். ஊடகங்களிலும் வெளிப்படையாக அத்தகைய விவரங்களும் வெளி வந்துள்ளன.

2004ல் கும்பாபிஷேகம் நடத்தப் பட்ட போது சிலைகள் மாயம் ஆனது: தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2004 ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் சேதம் அடைந்திருப்ப தாக கூறப்பட்டது. அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதியசிலைகள் வைக்கப்பட்டன[4]. “இந்த சிலைகள் சேதம் அடைந்துவிட்டன; புதிய சிலைகள் வைக்க வேண்டும்,” என, 2004ல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட, தற்போதைய ஹிந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், திருமகள், முடிவு செய்துள்ளார். இவருடன், முன்னாள் கமிஷனர், தனபால், ஆஸ்தான ஸ்தபதி, முத்தையா மற்றும் சில முக்கிய புள்ளிகளும் சேர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளனர்[5]. இரவோடு இரவாக, மரகத மயில் உட்பட, மூன்று சிலைகளையும் கடத்தியுள்ளனர். அறநிலையத் துறை சார்பில் இப்பணி மேற்கொள்ளப் பட்டது. ஆனால், கோயில் சிலைகளை மாற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 3 சிலைகளும் மாற்றப்பட்டன. மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.

2004லிருந்து வழக்குகள் இழுத்தடிப்பது ஏன்?: சிலைகள் மாற்றும் செய்ய சில அர்ச்சகர்கள், பக்தர்கள் எதிர்த்துள்ளனர் என்றால் அவ்விவகாரம், பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது. மேலும் சேதமடைததாகச் சொல்லப் படும் விக்கிரங்களும் புதைக்கப் பட்டன என்று கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள் என்றால். அவர்களுக்கும் விசயம் தெரிந்திருக்கிறது. இவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உண்மையினை கூற சொல்ல வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் அவ்வாறு நடக்கவில்லை, நடப்பதில்லை. மேலும் சம்பந்தப் பட்ட வழக்குகளும் இழுத்தடிக்கப் படுகின்றன. 2004 முதல் 2022 வரை, அத்தகைய வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது FIR பதிவு செய்யப் படுகிறது, கைது செய்யப் படுகிறார்கள் அல்லது கைதை எதிர்த்து அல்லது தடுக்க முன் ஜாமீன் மனு போடுகிறார்கள், அவ்வாறே பெயிலில் வெளியே வருகிறார்கள், கைதாகாமல் பெயில் பெறுகிறார்கள். இச்செய்திகள் எல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குற்றம் புரிந்தவர்கள், குற்றங்களை நடத்த, மாயமான விக்கிரங்கள் அவற்றின் விவரங்கள் வழக்குகளில் மூழ்கி, கிடப்பில் கிடக்கின்றன.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1]  ஏகாம்பரநாதன் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால், ஜைனர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே இருந்த போட்டி முதலியன தெரிந்த விசயமே.

[2]  உண்மையில் மயிலையிலுள்ள எல்லா நிலமும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது தான். இடைகாலத்திற்குப் பிறகு, 18-19ம் நூற்றாண்டுகளில் வரி வசூல் செய்ய ஆங்கிலேயர் மற்றும் நவாப்புகள் ஜில்லா, பிர்கா, தாலுகா எனெல்லாம் பிரித்துக் கொண்டார்கள். அதனால், அந்நிலங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகி விடாது.

[3]  கடற்கரையில் தான், கபாலீஸ்வரர் கோவில் வளாகம் இருந்தது. அதனால், இப்பொழுதுள்ள சாந்தோமில் உள்ள எல்லா கட்டிடங்களுமே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. 19-20ம் நூற்றாண்டுகளில் தமதாக்கிக் கொண்டனர்.

[4] தினமலர், மூன்று மாதம் தலைமறைவாக இருந்த திருமகள் கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018,22:52 IST

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2170214