Archive for the ‘சுகவனேஸ்வரர் கோவில்’ Category

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

ஒக்ரோபர்7, 2012

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

திராவிடக்கொள்ளைதொடர்வதுஏன்? பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”, இந்திய விரோதிகளாக்கி, இந்து விரோதிகளாக்கி, மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி, அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு, மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர்[1]. அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன[2]. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்[3].

 

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008) http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008)) http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகுகுடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களைஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம்ஆக்கிரமிப்புவிவகாரம்ரோசையா– கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

முறைகேடாககுத்தகைக்குவிடப்பட்டகோவில்நிலங்கள்கையகப்படுத்தப்படும்[4]என்று அறிவித்தால் மட்டும் போதுமா, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே? இனி ஆளுங்கட்சியினர் பிரமிப்பை ஏற்படுத்தி, சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், பிறகு, ஊறிப்போன கோவில்-திருட்டுத் திராவிடம் பழையபடி, கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு இறங்கி விடும்.

அப்துல்லாவிற்கும்அகஸ்தீஸ்வரர்கோவிலுக்கும்என்னசம்பந்தம்?: அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அகஸ்திஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக அப்துல்லா என்பவர்[5] 32 லட்சம் பாக்கி வைத்துள்ளாறாம்! கலீல் உர் ரஹ்மான் 10 லட்சம் பாக்கியாம்! அதெப்படி இப்படி முஸ்லீம்கள் கோவில் சொத்தை அனுபவிக்க முடிகிறது? இந்த அழகில் இவர்கள் கோர்ட்டுக்கு வேறு போகிறார்கள். இந்துக்களை இன்னும் இழிவு பேசிவரும் முஸ்லீம்கள் இருக்கும் போது, முஸ்லீம்கள் இவ்வாறு கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் தொழிலை விடவேண்டும். இல்லையெனில் இவர்களை இக்கால ஔரங்கசீப்புகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் கடவுள் தான் ஒசத்தி என்று தம்படாம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்படி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் வெட்கம்கூடபடாமல், பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் எனும்போது, இதுவும் ஜிஹாதின் ஒருவழியாகப் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்[6]: சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி – 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது “ஜரூராக” வசூல் செய்யப்படுவதை[7] அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’: சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’ இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 “கிரவுண்ட்’ சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 “கிரவுண்ட்’ நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 46 “கிரவுண்ட்’ இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 “கிரவுண்ட்’ இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, “கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

456 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஏன் – எப்படி?: கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 “கிரவுண்ட்’ இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 “கிரவுண்ட்’ இடத்தில் இருந்து, 30 “கிரவுண்ட்’ இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 “கிரவுண்ட்’ நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, “இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை’ என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் தக்கார்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?: பி. விஜயகுமார் ரெட்டி என்பவர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருவதோடு, பாக்கியைச் செல்லுத்தாவிட்டால், காலிசெய்யுமாறு நோட்டீஸையும் கொடுத்துள்ளார்[8]. இவர் மீட்டுள்ள சொத்தின் மதிப்பு ரூ.230 கோடிகளுக்கு மேல் என்கிறார்[9]. இதேபோல மற்ற தக்கார்கள் ஏன் வேலை செய்வதில்லை? குறிப்பாக மேஎலேயுள்ள நிலத்தை ஏன் விட்டு வைத்தார்? கோர்ட் கேஸ் என்று சொல்லிவிடுவார், ஆனால், அது நியாயம் அல்லவே? திருமூலர் சொன்னதை, இந்துக்களும் மறக்கலாமோ? பிறகு, நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் வரி பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’: கமிஷனர் அதிரடி நடவடிக்கை[10]: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான 7 கடைகள் பஸ் நிலையம், சன்னதி தெருவில் உள்ளன. இதனை அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், வெங்கடேசன், முருகேச ரெட்டி, ஜான்மனுவேல் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் நடத்தி வந்தனர்.  இதில் 6 கடைகளுக்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் ரூ.6 லட்சம் வரை நகராட்சிக்கு வரிபாக்கி ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கியை செலுத்தாமல் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், என்ஜினீயர் சண்முகம், சுகாதார அதிகாரி லட்சுமி கணேசன், தலைமை எழுத்தர் அமராவதி பொன்மணி, பொதுப்பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வரிபாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதிரடியாக அவர்கள் 6 கடைகளுக்கும், சீல் வைத்தனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, 2011-12ம் ஆண்டு மட்டும் நகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரை வரிபாக்கி உள்ளது. வரிசெலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றார். ஆனால், கோவில் குத்தகை, வாடகை பாக்கி என்றால் அதிகாரிகள் “சட்டப்படி நடவடிக்கை எடுத்து” அமைதி காத்துக் கொண்டிருப்பார்கள் போலும், அப்படியென்றால் திராவிடக் கொள்ளை தொடர்கிறதா?

நிர்வாக சீர்கேட்டால் ரூ.20 லட்சம் குத்தகை பணம் பாக்கி; கடும் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்[11]: புதிய கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பழைய புத்தி போகாது போலும்.திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டால் 1 வருடங்களாக ரூ.20 லட்சம் குத்தகை பணம் வசூல் செய்யாமல் பாக்கியாக உள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஏ.என்.சம்பத் தலைமை தாங்கினார். ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துப்பரவு அலுவலர் பாஸ்கர், துப்பரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் லோகநாதன், விஸ்வநாதன், எம்.எஸ்.செல்வ பாண்டியன், எல்.வி. நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:- பி.லோகநாதன் – தமிழகத்தில் 3 முறையாக ஜெயலலிதாவை முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இல.ஆனந்தன்- தே.மு.தி.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறசெய்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

லோகநாதன்- சுகாதார பிரிவுக்கு 2011- 2012 ஆண்டிற்கு சுண்ணாம்பு நீருக்கு 3 லட்சம் தேவையா? கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் குறைவாக வாங்கியுள்ளீர்கள்.

சம்பத்(தலைவர்)-ஆடு அறுக்கும் தொட்டி குத்தகை பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கியுள்ளது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையாளர்- குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

விஸ்வநாதன்-பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட குத்தகை ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் பாக்கி உள்ளது ஏன் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்யவில்லை.

பி.லோகநாதன்-வார சந்தை குத்தகை ரூ. 7லட்சத்து 14 ஆயிரம் கடந்த 2009 ஆண்டு முதல் நிலுவையில் ஏன் வசூல் செய்யவில்லை.

சம்பத்(தலைவர்)- குத்தகை வசூல் செய்யாமல் ரூ.20 லட்சம் பாக்கியாக உள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.

பச்சையப்பன் – இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன்- பேருந்து நிலைய நுழைவு கட்டண குத்தகை ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் 500 குத்தகை வசூலில் பாக்கி உள்ளது என்ன நிர்வாகம் நடக்கிறது.

ஆணையாளர்- துறை அலுவலர் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதில் முறைகேடு கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

சம்பத் (தலைவர்) -குத்தகை பணம் செலுத்தவில்லை என்றால் மறு டெண்டர் விட்டு விட்டு குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் போலும். திருத்தணி நகராட்சி கமிஷனெர் போல, இங்குள்ள கமிஷனர் ஒன்றும் செய்யமாட்டார் போலும்.

ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள்: 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.  ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி, இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334 ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

வாடகை பாக்கி: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15 ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6 லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6 ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசாணையில்சலுகை 33.33லிருந்து 15%, கிட்டத்தட்ட 20% குறைப்பு[12]: கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; வாடகை உயர்வை குறைக்க வேண்டும் என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு, மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்து முன்னணிக்குத்தான் இவ்விவரங்கள் தெரியும் போலும்: கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில் வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை, குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், கதை தொடகிறது போலும்: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது: காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்[13]. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது[14].

திருப்போரூர் என்ன சளைத்ததா?: திராவிடர் பாதை எல்லா ஊரிலும் பின்பற்றத்தான் செய்வார்கள். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழன் சொன்னது அக்காலத்தில், இன்றோ, ஒரு கோவிலையும் கொள்ளையடிகாமல் இருக்கவேண்டாம் என்று திராவிடர்கள் செயல்பட்டு வருகின்றனர். கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்: ராமகோபாலன்[15]: தரிசன கட்டணத்தை ரத்து செய்வதுடன் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “’கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. கேரளா மற்றும் வடமாநில கோவில்களில் இப்படி கட்டணம் வசூலிப்பது கிடையாது. காசு கொடுத்து சாமியை பார்க்க சாமி காட்சி பொருள் அல்ல. எனவே தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி ரூ.200 கோடி வரை உள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாக்கி தொகையை வசூலிக்க அரசு அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கோவில் களை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள், துறவிகள், இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என்று பேசினார்.

வேதபிரகாஷ்

07-10-2012


[5] தினமலர், அக்டோபர் 6, 2012. சென்னைப் பதிப்பு.

[6] தினமலர், ஆகஸ்ட் 14,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=529267

[7] இதிலென்ன “ஜரூராக” வசூல் செய்வது என்று தெரியவில்லை. கோவிலுக்கு பாக்கி செல்லுத்தாமல் இருப்பவர்கள் இந்துக்கள் என்றாலும் அவர்கள் இந்து மதத்தின் விரோதிகள் என்றுதான் ஆகிறார்கள். அவர்கள் நவீன கால இரண்யகசிபுகள் எனலாம். அனவே அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒன்றும் விஷயமில்லை, மாறாக வெட்கப்பட்டு, கூனிக்குருக வேண்டும். நாத்திகர்கள் என்றோ, ககுத்தறிவுவாதிகள் என்றோ கூட சொல்லிக்கொள்ளமுடியாது, அப்படி செய்தால், அவர்கள் இந்து துரோகிகளைவிட மோசமானவர்கள் எனலாம்.

[9] “We have recovered a little more than 46 grounds from encroachers after starting our drive in March (2012). The property recovered is worth more than Rs 230 crore,” says P. Vijaykumar Reddy, the temple takkar (trustee).

[13] தினமலர், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2012,23:46 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 01,2012,05:16 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557027

[14] தினமலர், அக்டோபர் 05,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560259

 

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை!

மே23, 2010

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3112

இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.

தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.