Archive for the ‘பக்தர்’ Category

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ரியல் எஸ்டேட்கோவில் வியாபாரம் உதலியவை: இத்தகைய சூழ்நிலையில் தான் இப்பொழுது இவ்வாறு புதிய கோவில்களை உருவாக்குவது அல்லது இருக்கின்ற கோவில்களை மாற்றுவது அதை வைத்து வியாபாரம் செய்வது, சாலைகளை போடுவது, அந்த குறிப்பிட்ட நிலங்களின் விலையை அதிகமாக்குவது, இதன் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்குவது, என்று பல வழிகளில் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எத்தகைய குறிப்பிட்ட கோவில்களைத் தேர்ந்தெடுத்து அதை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு சங்கிலி போன்ற வியாபாரம் முறையில் திட்டங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்கலாம். கோவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், அதற்கு உண்டான வழிமுறைகள் அதாவது புதியதாக பக்தர்கள் வருவது, அவர்களை நம்பிக்கை அதிகமாகவது அல்லது அதிகமாக்குவது, அதற்கு உண்டான பிரச்சாரங்களை நடத்துவது போன்றவை வருகிறா அல்லது உண்மையிலேயே இருக்கும்கோவிலுக்கு எதையாவது செய்ய உதவுகிறார்களா என்று ஆராய்ந்தால், இந்த நாத்திக-பெரியாரிஸ கும்பல்களின் நோக்கம் தெரிந்து விடும்.

புதிய ஜோதிடர்கள்அர்ச்சகர்கள் உருவாக்கப் படுவது ஏன்?: நிச்சயமாக பகுத்தறிவு, பெரியாரிஸ சித்தாந்தம், திராவிட மாடல், இந்து விரோதம், சனாதன ஒழிப்பு என்பதெல்லாம் இவற்றிற்கு துணையாக இருக்காது. எந்த பலனையும் கொடுக்காது. ஆகவே இங்கு இத்தகைய ஆன்மீக பக்தி பரசத்துடன் வியாபாரத்திற்கு உண்டான முறையில் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிச்சயமாக அதிக விவரங்கள் தெரிந்தவர்கள் தான் துணை போக வேண்டும். அதனால் தான் சில ஜோதிடர்கள், சில அர்ச்சகர்கள் என்றெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய-புதிய கதைகளை உருவாக்குகிறார்கள், ஆதாரமாக புராணங்களை உருவாகுகிறார்கள். இந்த பலன் வேண்டுமானால் இத்தகைய பூஜைகள் செய்ய வேண்டும் கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால்,  பரிகாரங்கள் செய்ய வேண்டும், இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என்றெல்லாம் புதிய புதிய வழக்கங்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன. ஆகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சனி ஞாயிறு விடுமுறை காலங்களில் தூரத்திலிருந்து கூட கார்கள், வேன்கள் என்று கூட்டம்- கூட்டமாக பக்தர்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, அடவாடி வியாபாரமும் அதிகமாகிறது: ஏதோ ஒரு நாள் இரு நாள் அப்படியே குடும்பத்துடன் வந்து சென்று விடுகிறார்கள் என்றாலும், நாளுக்கு நாள் கூட்டம் 100, 200, 500, 1000 என்று அதிகமாக வரும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவிடம் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இங்குதான் வியாபாரமயமாக்கம்- உண்மையான பக்தர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள், மக்களை சுரண்டும் கோஷ்டிகள் -இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் உள்ளூர் மக்ககள் உண்மையாக இத்தருணத்தை தங்களுக்கு உபயமாக கொண்டு வசதிகளை ஏற்படுத்து வருமானத்தை ஈட்டலாம். சுற்றுலா என்று வரும் பொழுதும் தீர்த்த யாத்திரை என்று வரும் பொழுதும் இது ஒரு சாதாரண விஷயமே. ஆனால் குறிப்பிட நாட்களில் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் மக்கள் வருவார்கள், அதனால் அதை வைத்து வியாபாரம் செய்யலாம், கொழுத்தலாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கத்துடன் ஏதோ வசதிகளை செய்கிறேன் என்று கழிப்பிடத்திற்கு ஐம்பது ரூபாய் -நூறு ரூபாய் என்றெல்லாம் வசூல் செய்வது, வாகங்களை நிறுத்துவதற்கு 50-100 ரூபாய் என்று ரசீது போட்டு அடாவடித்தனம் செய்வது, போன்றவற்றில் மனக்கசப்பு, வெறுப்பு முதலியவை பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.

பக்தர்களை, பக்தியை பாதிக்கும் அடாவடி அயோக்கியத் தனமான வியாபாரங்கள்: அதே மாதிரி பூஜைக்கு வேண்டிய பொருள்களை விற்பதிலும் இரண்டு, மூன்று மடங்குகள் வைத்து விற்பது போன்ற காரியங்களை நம் கண்கூடாக இத்தகைய இடங்களில் கவனிக்கலாம். அதிலும் பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட பூக்கள், பழங்கள், எண்ணை போன்றவை, அதிலும் பரிகாரங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொருட்கள் இவை எல்லாமே மறுபடியும் மறுபடியும் கடைகளுக்கு வருவது, அதனை திருப்பி கொடுப்பது போன்ற செயல்களையும் நாம் கவனிக்கலாம். இத்தகைய, “சுழற்சி” வியாபாரம் பக்தி, பக்தர்களின் நம்பிக்கை முதலியவை சோதனைக்குள்ளாகி புனிதமும் கெட்டு விடுகிறது. ஆக இதில் பூஜாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் புனிதமற்ற காரியங்களையும் கவனிக்கலாம். மனசாட்சிக்கு உகந்து அல்லது விரோதமாக செய்கிறார்களா இல்லையா என்று ஆராய வேண்டா, ஆனால், நிச்சயமாக இந்த பூஜை-புனஸ்காரர்களில் ஈடுபடுபவர்கள் செய்யக் கூடாது. செய்ஜுறார்கள் என்றால், அதையும், “கலிகாலம்,” என்று சொல்லி நியாயப் படுத்தி விடலாம்.

பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பு: ஒருவிதத்தில், உண்மையான சிரத்தையான பக்தர்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது அல்லது தெரிந்து கொள்ளும் பொழுது, மிகவும் மன வருத்தம் அடைகிறார்கள். இதனாலும், பக்தர்களுக்கு நாளடைவில் பாதிப்பு ஏற்படுகிறது. வெறுத்து விடுகிறார்கள். கிருபானந்தவாரியாரியே மிரட்டிய கும்பல்களும் இந்த தமிழகத்தில் இருந்தார்கள். ஆக, சாதாரணமான, அப்பாவி பக்தர்கள் என்ன செய்ய முடியும். ஒருவேளை அயோத்தியா மண்டபத்தில் தருப்பைப் புல் விற்றுக் கொண்டிருந்த எழை பிராமணர்களை கத்தியால் வெட்டியது போல, வெட்டவும் அந்த பெரியாரிஸ்டுகள் தயாராக இருக்கலாம். பாதி பக்தர்களுக்கு வேண்டுதல் நடக்கிறது, பாதி பக்தர்களுக்கு வேண்டியது நடக்கவில்லை என்றால், “நடக்கவில்லை,” என்று பக்தர் என்றும் சொல்ல மாட்டார், தனக்குக் கொடுப்பினை இல்லை என்று அமைதியாக இருப்பார். ஆனால், பலன் பெற்றவர் சொல்லும் பொழுது, சொல்ல வைக்கும் பொழுது, இதற்கு விளம்பரம் கொடுத்து பரப்பும் பொழுது, சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்கிறது.

இந்துவிரோத-பெரியாரிஸ்டுகள் வளரும் விதம்: கிராமங்களில், தொலைவில் இருக்குமிடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இத்தகைய பெரியாரிஸ்டுகள், இந்துவிரோதிகள், முதலியவர்களை எதிர்த்து சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்களுக்கும் அர்சியல் பின்னணி இருந்தால், தட்டிக் கேட்கலாம், ஆனால், அவர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டு, அனுப்பப் படுவார்கள். கோவில்-வளர்க்கும் வியாபாரங்களும் இந்த மனிதர்களுக்குத் தான் கிடைக்கின்றன, கிடைக்கும். அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு எல்லா “ஆர்டர்களும், டெண்ர்களும்” கிடைக்கின்றன. பிறகு, அக்கோவிலையே கட்ட்ப் படுத்தும் அளவுக்கு “தாதாவாகிறார்கள்.” சிறப்பு தரிசனத்திற்கு, விஐபிக்கள் அவர்களிடம் தான் செல்ல வேண்டும். அப்படித்தான், நடந்து வருகிறது. இதனால் தான், இவர்கள் எல்லோருமே இந்துக்களாகத் தான் இருக்கிறார்கள், இந்துவிரோதிகளாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள். சனி இவர்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களைத் தான் பிடிக்கிறது. அதையும் இந்நாத்திகர்கள் பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

13-10-2024

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

மே20, 2022

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம்கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

ஆக ஏறவிட்டது ஏன், யாரால் என்று தான் கவனிக்க வேண்டும்: ஆனால், ‘திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது. அதனால், தேர் வீதி உலா, முதல் முறையாக கடும் மழையால் நிறுத்தப்பட்டது. உற்சவர் பெருமாள், இரவு முழுதும் தேரிலேயே இருந்தார். ‘முதல்வர் வெளிப்படையாக ஆதீனங்களை அவமதிக்கிறார். அவர் மனைவி வெளிப்படையாக ஆகம விதிகளை மீறி, ஆணவத்தை வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு கட்டுப்பட்ட அறநிலைய துறை செய்வது எல்லாமே தெய் குற்றமாகுது’ என்று, சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி வருகின்றனர். இது சரியான தகவல் அல்ல. ஹிந்து ஆன்மிக பக்தர்கள், இதில் வேதனைப்பட எதுவும் இல்லை. ஐதீகப்படி அல்லது வழக்கப்படியான நிகழ்வுகள் தான், 14ம் தேதி காலையில் நடந்தது.கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூசி, தங்கத் தகடு அமைக்கும் பணி நடக்கிறது.

நன்கொடை எதிர்பார்த்து, அனுமதித்து, பிரச்ச்னை ஆனது: இந்த நேரத்தில், தேர் திருவிழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்து வந்தால், விழா சிறக்கும் என்பதோடு, தங்க முலாம் பூசும் பணிக்கு உதவி கிடைக்கும். அவரே நேரடியாக செய்வார் அல்லது நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்வார் என்பது தான், இதற்கு ஏற்பாடு செய்த திருக்கோஷ்டியூர் மாதவனுடைய எண்ணம். அதில் தவறு ஏதும் இல்லை. கோவில் காரியம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார் அவ்வளவு தான். ஆனால், ஆன்மிக விஷயத்தில், அரசியலை நுழைத்து விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நிர்வாக அலுவலர் சேவற்கொடியோன் கூறியதாவது: “கோவில் தேர் உற்சவத்தை வைத்து, இருவிதங்களில் விமர்சிக்கின்றனர். கோவில் தேரில் பெண்களை ஏற அனுமதிக்க மாட்டோம் என்பது தவறு. காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். தேர் கம்பி வடத்தின் ஒரு பகுதியை, திருக்கோஷ்டியூரை சுற்றிலும் இருக்கும் மயில்ராயன் கோட்டை நாட்டார்களும், இன்னொரு பகுதியை பட்டமங்கலம் நாட்டாரும் தான் சேர்ந்து இழுப்பர்.

வழிபாடு முறையும் மீறப் பட்டது: அவர்களில் ஒரு சிலர், தேர் கம்பி வடத்தின் மேல் ஏறி நின்று தேரை இயக்க, துண்டை அசைத்து சைகை கொடுப்பர். அதன் பின் தான் தேர் இயக்கப்படும். இது தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அதே வகையில் தான் இந்த ஆண்டும் நடந்தது.தேர் இயக்கப்படுவதற்கு முன், நாட்டார் குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தேர் மேல் ஏறி உற்சவர் பெருமாளை வணங்குவது வாடிக்கை. அது இந்த ஆண்டும் நடந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக, துர்கா தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அவரோடு, ஜமீன் பரம்பரையின் மதுராந்தகி நாச்சியாரும் தரிசனம் செய்தார். ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு, கோவில் விழாக்களில் இன்றளவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மனைவி வந்ததால், அம்முறை மீறப் பட்டு, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவரும், தேரிலேயே ஏறி தரிசனம் செய்து விட்டார்!

மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதியுலா நிறுத்தம்: அதுமட்டுமல்ல… துர்கா தேர் ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பின், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குடும்பத்துடன், தேரில் ஏறி வழிபாடு செய்தார். அவர், ஆண்டுதோறும் தேர் ஏறி வழிபடுவது வாடிக்கை. மாலையில் தேர் கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை பெய்தது. தேர் செல்லும் வீதி முழுதும் மழை நீரால் சூழப்பட்டது. தேரை பத்திரமாக செலுத்த வசதியில்லை என்றதும், தேரை இயக்கும் நாட்டார்கள், ‘தேரை நாளை காலை இயக்கலாம்’ என, கூறி விட்டனர். அதையடுத்தே, மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதி உலா நிறுத்தப்பட்டது. மறுநாள் காலையில், 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதுபோன்று, கடந்த, 2012லும் மழை காரணமாக தேர் புறப்பாடு, ஒரு நாள் கழித்து நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூனார்.

2015ல் ஸ்டாலின் இக்கொவிலுக்கு விஜயம் செய்தார்: சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு சென்று பிரனவ் மந்திரமான ஓம் நமோ நாராயணாவை ராமானுஜர் பாடிய அஸ்டாங்க திவ்ய விமானத்தில் ஏறி பார்வையிட்டார்[1]. திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 108 வைணவத்தலங்களில் ஒன்றான சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[2]. கோவிலில் ராமானுஜர் சிலைகள், திருக்கோஷ்டியூர் நம்பி சிலைகளை அவர்கள் பார்வையிட்டனர். இப்படி செய்தி வெளியிட்டாலும், அவர் சாமி கும்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. பெருமாளிடம் மட்டும் பிரத்யேகமாக பற்று இருப்பது தெரிகிறது. தெலுங்கு மொழி பேசுபவர் மற்றும், ஓங்கோல், ஆந்திராவிலிருந்து, முத்துவேலர் வந்திருப்பதாலும், குலத் தொழிலாலும், பெருமாள் தரிசனம், சேவை, மறுக்காமல் இருக்கிறது. 1970களில் விஷ்ணு ஸ்டாலின் என்று சுவரொட்டிகள் ஒட்டியதாக ஞாபகம். ஆயிரம் விளக்குத் தொகுதியில், குறிப்பாக, ஆலயம்மன் கோவில் கூழ்-ஊற்றும் நிகழ்ச்சிகளுக்கு, ஸ்டாலின் மனைவியுடம் வருவது உண்டு. ஆனால், பிறகு வருவதை நிறுத்தி விட்டார்.

2015லிருந்து 2022 வரை நான்கு முறை திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வந்துள்ளார்:

  1. 2015ல் தேர்தல் சமயத்தில், தம்பதியர் இங்கு வந்துள்ளனர். “நமக்கு நாமே” நிகழ்ச்சியின் போது, கோவில்க்குச் சென்றது, திமுகவினரை திகைப்படையச் செய்தது.
  2. பிறகு 2022 வரை காலத்தில் மூன்று முறை வந்துள்ளார். அதாவது, 2022ல் இப்பொழுது வந்திருப்பதால், இதையில் இருமுறை வந்துள்ளார் என்று தெரிகிறது.
  3. 2021ல் தேர்தலுக்கு முன்னர், வெற்றி பேச வேண்டிக் கொண்டு, வந்திருக்க வேண்டும்.
  4. அதே போல, 2016ல் தேர்தலின் போதும் வந்திருக்கலாம்.

அப்பொழுது, தோல்வியடைந்தாலும், 2021ல் பெருமாள் உதவியிருக்கிறார் போலும். அதனால், துர்கா மறக்காமல் வந்து விட்டார். ஊடகங்களும் செய்தியை அவ்வாறே வெளியிட்டு விட்டன.

துர்காவின் நம்பிக்கை, பக்தி முதலியன: ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்ததை அழித்திருக்கலாம், ஆனால், வீட்டில், ஆசையாக துர்கா வைத்து விட்டிருக்கலாம். பதவி ஏற்றபோது, கண்கலங்கிய போது, அவரது வேண்டுதல்கள் எல்லாம் நடந்து விட்டன என்றே ஆயிற்று. முன்னர் கோவிலைப் புதிப்பித்துக் கட்டியது, பல கோவில்களுக்கு சென்றது – காசி, காளஹஸ்தி, திருமலை…முதலின, அர்ஜுன் நடிகரின் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றது என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன. இப்பொழுது, ஆன்மீகம், ஆன்மீக அரசு என்றெல்லாம் வெளிப்படையாக பேசுகிறார்கள். சேகர்பாபு, அறநிலையத் துறை சார்பாக, தினம்தினம் ஏதேதோ அறிக்கைகள் விடுகிறார், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிச்சயமாக பக்தர்கள் கண்டுகொளளவில்லை. நம்புவதாகவும் இல்லை. ஏதோ, செயற்கையாக, விளம்பரத்திற்காகவே செய்வதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு..ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார், By Mayura Akilan Published: Tuesday, September 29, 2015, 12:47 [IST].

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-visits-thirukosthiyur-temple/articlecontent-pf170866-236679.html

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

ஜூலை17, 2021

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை (திலவதியின் கட்டுரை): வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றி ருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும், என்று திலகவதி முடித்திருக்கிறார்.

திலவதி முடிவாகக் கொடுத்துள்ள அம்சங்களை, கீழ்கண்டவாறு பட்டியல் இடப் பட்டு, அலசப் படுகிறது:

  1. வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை.
  2. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்.
  3. இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது.
  4. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.
  5. ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்.
  6. இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்.

இனி, இந்த குறிப்பிட்ட அம்சங்கள் கீழ்கண்டவாறு அலசப் படுகின்றன.

சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்: சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான், என்று ஒப்புக் கொண்டுள்ளது நல்லது தான். “ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்”, என்று நியாயப் படுத்த முடியுமா? அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான் சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறது என்பது பெருமை அல்லவே. “பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே”, என்று வாதிடும் போது, மற்றவர்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.  ஐஜி பொன் மாணிக்கவேல் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. துறை சார்ந்தவர் எனும்போது, அவரைக் குறிப்பிடாமல், அவரது பணியைப் போறாமல், அமைதி காத்தது, பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது. .  ஐஜி பொன் மாணிக்கவேல் பொறுபெடுத்த போது, அவரை வேலை செய விடாமல், ஏன் வழக்குக் கூட போடப் பட்டது.  ஒருநிலையில், அவரது பதவிக் காலம் முடிந்தவுடன், நீட்டிக்காமல், அப்படியே, அவ்வேலை முடக்கப் பட்டது. அமைதியானது. இப்பொழுது, ஸ்டாலின் என்ன செவார் என்று பார்ப்போம்.

1817 ஆங்கிலேயர் காலம் முதல் திராவிடர் ஆட்சி 2021 வரை கோயில் நிர்வாகத்தில் ஊழல் நடப்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, சுதந்திரம் பெற்ற பிறகு கருணாநிதி ஆட்சிவரை இருந்த கோவில்-மடங்கள் நிர்வாக சட்டங்களைப் பற்றி விவரிப்பதில் எந்த புதிய விசயமும் இல்லை. அப்பொழுது ஊழல் இருந்தது என்றாதால், இப்பொழுதும் ஊழல் இருக்கிறது என்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு, அதைப் பற்றிக் குறிப்பிட்டு, எழுத வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்டதால், ஊழல் பிரச்சினை இந்து அறநிலையத் துறையில் அதிகமாகியுள்ளது அவரை உருத்துவது புரிகிறது. அப்பொழுது தர்மகர்த்தாக்கள் ஊழல் செய்தார்கள் என்றால், இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் திக-திமுக-அதிமுக என்றுதான் இருக்கிறார்கள். ஓமந்தூரர் குத்தகையை நிறுத்தினார் என்றால், பிறகு ஏன் வந்தது என்று விளக்கவில்லை. திருச்செந்தூர் வேல், கோவிலில் கொலை, பால் கமிஷன்  போன்றவை மறைக்கப் பட்டன. வாடகை-குத்தகைகளில் கோடானு கோடிகள் ஏய்ப்பு, நீதிமன்ற வழக்குகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தாலும் குறிப்பிடவில்லை.

அர்ச்சகரை குறைகூறும் திலகவதி: திலகவதி சொல்கிறார், “பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்”. அர்ச்சகருக்கு ஆகமங்களின் படி பூஜை, அபிஷேகம் முதலியவற்றைத் தான் செய்ய முடியுமே தவிர, சிலை மாற்றப் பட்டதா-இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. மாக்ரோ போட்டோ பார்த்து கண்டு பிடிக்கும், தடயவியல் நிபுணர் அல்லர். மேலும், இங்கு பதூர் என்பதனை பருத்தியூர் என்கிறார் போலும். ஏனெனில், பதூர் நடராஜர் சிலை தான், கடத்தப்பட்டு, பிரிடிஷ் மியூஸியத்திற்கு விற்க்கப் பட்டது. டாக்டர் ஆர். நாகசாமி, அப்பொழுது லண்டன் கோர்ட்டுக்குச் சென்று, ஆதாரம் கண்பித்து, 1991ல் அவ்விக்கிரகம் திரும்பக் கொடுக்கப் பட்டது[1].

வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை: இது போல யாரும், எப்பொழுதும் சொன்னதில்லை. 1970லிருந்து 2021 வரை திராவிட-நாத்திக ஆட்சி காலத்தில் கோவில்களில் ஊழல் பெருகியது, சிலைகள் என்பதைத் தான் எடுத்துக் காட்டப் பட்டது. இக்காலகட்டத்தில் வலதுசாரிகள் இல்லை, அதாவது, இப்பொழுது போன்ற பிஜேபி கட்சி-ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. இவ்விவரங்கள், விவகாரங்கள், வழக்குகள் பற்றி அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆக, இவ்வாறெல்லாம், திலகவதி வாதிப்பது, அவர்களுக்கு ஆதரித்து, பேசுவது போலிருக்கிறது. “வலதுசாரி ஆதரவாளர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதும், அரசியலாக்கும் நோக்கு வெளிப்படுகிறது. பிறகு “இடதுசாரி ஆதரவாளர்கள்” நிலை என்ன என்றும் கேட்கலாம்.மறைந்தது, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது, கைதானது, சஸ்பெண்ட் செய்யப் பட்டது, சிறைக்கு போனது என்பன நடந்துள்ளன

அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்: சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது. “இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்,” என்பது வேறு, கோவில்களில் அர்ச்சகர் வேலைகளுக்கு, “பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்வது,” என்பது வேறு. இது பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பிரச்சினை அல்ல. சிதம்பர தீக்ஷிதர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இருக்கின்ற லட்சக் கணக்கான கோவில்களில் ஆகமங்கள் மற்றும் ஆகமங்கள் அல்லாது செயல்படு கோவில்களில் பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பாரம்பரியம்-பரம்பரை வழக்கம்-உரிமைகளோடு பூஜாரிகளாக இருந்து வந்துள்ளனர்-வருகின்றனர். அதையும் யாராலும் மாற்ற முடியாது. இட-ஒதுக்கீடு போர்வையில் இந்துக்கள்-அல்லாதவர்களும் வரமுடியாது. இதெல்லாம் திகவதிக்கு தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

17-07-2021


[1] In 1991, Tamil Nadu retrieved a Pathur Nataraja idol, which had ended up at the British Museum, London, for restoration, en route to a private buyer in Canada. The idol is under lock and key in a temple vault in Tiruvarur district. Sand particles sticking to the idol were the clinching evidence to prove that the idol belonged to the Pathur temple. Chandrasekaran said macro photography of idols and careful documentation it with details of age and weight will be the best way to prevent theft. Macro photography captures minute details of the object and is especially useful when trying to differentiate between two similar idols.

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்க வேண்டுமா? பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! (1)

ஜூலை17, 2021

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்க வேண்டுமா? பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! (1)

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்க வேண்டுமா?: இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்க வேண்டுமா என்ற ரீதியில் கருத்துருவாக்கம் உண்டாக்க, இப்பொழுதைய திமுக-ஆட்சி முயல்வதாகத் தெரிகிறது. அமைச்சர் மூலமாக, திடீரென்று 24 x 7 திட்டத்தில் வேலை செய்வது போல தினம்-தினம் செய்திகள் வந்துள்ளதைக் கவனித்திருக்கலாம், கவனிக்கலாம். அறநிலைய அமைச்சர் முதல், ஆணைய அதிகாரி மற்ற ஊழியர்கள், எறும்புகள் போல, சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம், கோவில்-கோவிலாக விசிட், டிவி செய்திகள் முதலியன.. வரச்செய்கின்றனர். அந்நிலையில், கோவில் நிர்வாகத்தை அறநிலைத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன[1]. இந்த வாதம் நியாயமானது தானா? இப்படி கேள்வி எழுப்பி, திலகவதி ஐ.பி.எஸ் (முன்னாள் காவல்துறை அதிகாரி) எழுதியுள்ள, “அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்,” என்று ஆறுபக்க (26-31), பெரிய கட்டுரை, குங்குமத்தில் (16-07-2021) வெளியாகியுள்ளது, கவனிக்கத் தக்கது[2] . முதலில் அக்கட்டுரை அப்படியே கொடுக்கப் படுகிறது. “திலவதியின் கட்டுரை” என்று பத்திகளின் தலைப்பில் அடையாளத்திற்காகக் குறிப்பிடப் பட்டுள்ளது. பிறகு, அதைப் பற்றி அலசப் படுகிறது.

கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை (திலவதியின் கட்டுரை): கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை. தமது ஆன்மிக மரபு குறித்த மெளனமான பெருமித உணர்வு தமிழர்களுக்கு எப்போதும் உண்டு. அந்நியப் படையெடுப்புகள் நடந்தபோது கோயில்களுக்கும், விக்ரகங்களுக்கும் எந்த ஆபத்தும் நேரா வண்ணம் விக்ரகங்களை மண்ணில் புதைத்து வைத்தும், அதி உயரமான மதில் சுவர் எழுப்பியும் காத்தவர்கள் நம் முன்னோர்கள்! ‘‘கோயில் சிலைகள் களவு போகின்றன. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் என்ற பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்…’’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வாதம் நியாயமானதுதானா..?

சிலைத் திருட்டு வழக்குகளில் அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லை (திலவதியின் கட்டுரை): சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான். பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார். பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே! கோயில்கள் ‘பக்தர்கள்’ என்று சொல்லப்படும் தனியார் வசம் இருந்தபோதும் சிலைத் திருட்டுகளும், கோயில் நிலங்களில் முறைகேடுகளும் நடைபெற்றன. அப்போதுதான் அதிகளவில் நடைபெற்றன என்ற வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

1817ம் ஆண்டுமதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் (திலவதியின் கட்டுரை): இந்து திருக்கோயில்களை அரசு நிர்வகிப்பதற்கான தமிழ்நாடு இந்து சமய சட்டம் ஏதோ கலைஞர் கருணாநிதி கொண்டு வந்ததோ, திமுக ஆட்சியின்போது அறிமுகப்படுத்திய சட்டமோ அல்ல. இந்து சமயக் கோயில்களுக்குக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஊழல் மிகுந்து காணப்படுவதாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே புகார்கள் வரத் தொடங்கின. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், பிரிட்டிஷ் நிர்வாகத்திடமும் இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்தன. இந் நிலையில் 1817ம் ஆண்டு முதல்முறையாக மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் திருக்கோயில் களுக்கு வழங்கப்படும் நிதி முதலான அறக் கொடைகள் முறையாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது.

விக்டோரியா ஆட்சி காலத்திலும் 1858லும் தொடர்ந்த அச்சட்டம் (திலவதியின் கட்டுரை): இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தொடங்கி 1849ம் ஆண்டுக்குள் 21 மாவட்டங்களில் இருந்த 8,292 கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தர்மகர்த்தாக்கள், ஜமீன்தார்களின் வீடுகளிலிருந்த ஏராளமான கோயில் நகைகள் மீட்கப்பட்டன. மூடிக் கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. 1858ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து விக்டோரியா மகாராணியிடம் நேரடியாகச் சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை விக்டோரியா மகாராணிக்கு இருந்தது. இதனால் அவர், ‘மத விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது’ என கவர்ச்சி வாக்குறுதி அளித்தார். இது விக்டோரியா மகாராணி யின் செப்பு சாசனம் எனப் புகழ் பெற்றது.

நீதிகட்சி அட்சிக்கு வந்த போது, 1922ம் ஆண்டு இந்து பரிபாலன சட்டம் உத்தேசிக்கப் பட்டது (திலவதியின் கட்டுரை): இதையடுத்து, கோயில்களும் அவற்றின் சொத்துகளும் முன்பு யார் யார் வசம் இருந்தனவோ அதே ஊழல் பெருச்சாளிகள் வசம் சென்றன. அவர்கள் பழையபடி அவற்றைத் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். கோயில்களின் உள்ளே இருந்த விலை உயர்ந்த தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், சொத்துகளில் ஊழல் மலிந்து விட்டதாகவும் மீண்டும் பொதுமக்களின் புகார்கள் குவிந்தன. தர்மகர்த்தாக்கள் கோயில் நிலங்களை நிர்வகிப்பதன் வழியே கிடைக்கும் பெரும் வருவாயை அரசு கஜானாவுக்குக் கொண்டு சேர்க்காமல் முறைகேடு செய்தனர். இதன் மூலம் கோயில் நிலங்கள் ஏலத்துக்கு வந்தன. அப்படி ஏலத்துக்கு வரும்போது குறைந்த விலைக்கு அவர்களே வேறு நபர்களின் பெயரில் வாங்கிக் கொண்டார்கள். 1919ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது. அதே ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் விளைவாக இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. 1920ம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1927ம் ஆண்டுஇந்து சமய அறநிலைய வாரியம்உருவாக்கப்பட்டது (திலவதியின் கட்டுரை): அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துத் திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தார். இதற்காக 1922ம் ஆண்டு இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் உயர் சாதி அமைப்பு களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி 1925ம் ஆண்டு இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தினார். சில எதிர்ப்புகள் மற்றும் முயற்சிகளை அடுத்து 1927ம் ஆண்டு ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. திருக்கோயில்களின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1947லிருந்து 1949 வரையிலான இரண்டு ஆண்டு காலம் ஓமந்தூர் ராமசாமி, சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகக் கோயில்களில் நடந்த எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார். வைணவ நெறிகளைப் பின்பற்றிய முழுமையான ஆத்திகவாதியான ஓமந்தூரார், கோயில்களும் மடங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதால்தான் நாட்டில் நாத்திகம் வளர்கிறது என்று கூறினார். எனவே அறநிலையத் துறை சட்டங்களில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். கோயில் சொத்துகளைக் குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திய ஓமந்தூரார் மடங்களில் உள்ள நகைகள், பதிவேட்டில் பதிக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்க ஆணை பிறப்பித்தார். 1959ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அறநிலையத் துறையின் சட்டங்களில் உள்ள குறைகள் களையப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு இன்று வரை தொடரும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-07-2021


[1] குங்குமம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்!, திலகவதி ஐபிஎஸ் (முன்னாள் காவல்துறை அதிகாரி), 11 Jul 2021.

[2] http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18277&id1=9&issue=20210711