Archive for the ‘சோமநாதர்’ Category

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

கங்கைகொண்ட சோழபுரம் போன்ற சிற்பம், சிவனின் மூன்று கைகளும் உடைக்கப் பட்டிருக்கின்றதைக் கவனிக்கலாம்.
ஒருபக்க்ம் இருந்த சிற்பத்தைக் காணோம், இன்னொரு பக்கம் இருக்கும் சிலையின் கை உடைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்!

கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்களா?: கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். அம்பிகை கருவறை முகப்பு மண்டபத்தின் அருகிலேயே தெற்கு நோக்கி உள்ளது கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. கோவிலில் அனுக்கிரக மூர்த்தி, கங்காவிசர்ஜனர், அர்த்தநாரிஸ்வரர், சண்டாள ரூபமூர்த்தி, அதிகார நந்தி, பிட்சாடனர் போன்ற மூர்த்திகள் காணக்கிடைக்காத தெய்வாம்சம் மிகுந்த கலைநயமிக்க மூர்த்திகளாக உள்ளனர். அளவுக்கு அதிகமான பெருங்கோயில்களை அருகாமையிலேயே கண்டு புழங்கி வருவதாலோ என்னவோ நம் மக்கள் இவற்றிக்கு உரிய மரியாதையை தராமல் உள்ளனர். காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை!, என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்கள் போன்ற லாஜிக் வூத்தேசம் / முடிவு தவறானது. சரித்திர ரீதியில் உண்மையினை தெரிவிக்க வேண்டும்.

 மந்திரதந்திரயந்திர வழிபாடு, விசேஷமான சூலக்கல்[1]: மேலும் நுழைவு வாயிலின் அருகே சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய கற்கள் சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் நடப்பட்டிருக்கும். இங்கு காணப்படும் சூலக்கல்லில் சூலமும், அதன் மேற்புறம் சூரியன் – சந்திரன் வடிவமும் சூலத்தின் கீழ்ப்பகுதியில் பன்றியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது[2]. சோழர்கள் “மந்திர-தந்திர-யந்திர” வழிபாடுகளில், கிரியைகளில், பிரயோகங்களில் ஈடுபட்டபோது, இத்தகைய யந்திரங்கள், தேவதைகள், அவற்றிற்கான கோவில்கள் உருவாக்கப் பட்டன. உறையூரில் 850ல் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன் (846-881), தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்து, குலதெவமாக்கினார். அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அஷ்டகாளிகளை பிரதிட்டை செய்தார். நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர். பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. சாளுக்கிய மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் (வராகத்தை) பன்றியை அரசு இலச்சினையில் கொண்டிருந்தனர்.  இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.

முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்த கோவில்: தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் அதிட்டானப் பகுதியில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. அதாவது உடைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதற்கு தயக்கம். கட்டடக்கலை, சிற்பக்கலையின் அடிப்படையில் இக்கோயில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இவன் சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவன சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றவன். கீழைச் சாளுக்கிய மன்னனாகிய இராஜராஜ நரேந்திரனின் புதல்வன். இவனுடைய தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கைதேவியார் ஆவார். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் காணப்படும் சூலக்கல்லில் பன்றி (வராகம்) அரச சின்னம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதமுடிகிறது.  

கலைநயம் மிக்க சிற்பத்தின் கை உடைக்கப் பட்டுள்ளது……இதனை கவனிக்காதவர்கள் கலைக் காவலர்கள் என்றுக் கூறிக் கொண்டு அலைகிறார்கள்!
இருகைகள் உடைக்கப் பட்டிருப்பதைக் காணுங்கள். சிற்பி அதனை உருவாக்க தனது முழு உழைப்பைக் கொடுத்திரிக்கிறான். ஆனால், உடைத்தவன் உடைத்து விட்டு சென்று விட்டான். இன்று உடைத்தவனைப் போற்றுகிறார்கள்!

சிற்பங்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டாலும் காரணம் சொல்வதில்லை: இக்கோயிலில் பல சிற்பங்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணும்பொழுது கண்ணில் நீர் பெருகுகிறது, என்று ஒருவர் உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிட்டாலும், என்ன காரணம் என்று சொல்லவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் மகாமண்டபத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அங்கே தேவியுடன் அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் மட்டும் அமர்ந்து சண்டேசுவரருக்கு சண்டீசபதம் அளிக்கும் காட்சியை அழகிய சிற்பவடிவில் காணலாம். சிவபெருமான் தலைக்கு மேலே குடை காணப்படுகிறது. சிவபெருமான் காலின் கீழே சண்டேசுவரர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கைகளை உடைத்திருக்கின்றனர், என்று புலம்புவதோடு சரி. கருவறை விமானச் சுதைச் சிற்பங்கள் நாயக்கர்காலக் கலைச்சிறப்புடன் காட்சி தருகிறது. விமானத்தின் மீதும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன.

ராஜராஜன்ராஜேந்திரனை போற்றுவது, தூற்றுவது: ராஜராஜன், ராஜேந்திரன் முதலியோரை பார்ப்பன வருடிகள் என்று தூசித்து, பிருகதீஸ்வரர் கோவிலில் இந்தி கல்வெட்டுகள் இருக்கின்றன என்று பொய்களை சொல்லி, தமிழில் குடமுழுக்கு என்று பிரச்சினை கிளப்பி, இவ்வாறு பிரச்சாரம் செய்யும் தமிழ்வெறியர்களின் குறிக்கோள் என்ன? ராஜராஜன், ராஜேந்திரன் பிராமணர்களுக்கு “பிரமதேயம்” கொடுத்து பார்ப்பனீயத்தை ஊக்குவித்தான். அடிமைகளை வைத்து கோவில்கள் கட்டினான். கோவில்களில் பல தேவரடியார்களை வைத்து சமூகத்தைக் கெடுத்தான் போன்று எழுதியுள்ளார்கள். இப்படி ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை ஒரு பக்கம் தூஷிப்பது, இன்னொரு பக்கத்தில், பல நாடுகளை வென்றான், உலகத்தை ஆண்டான் என்றெல்லாம் புகழ்வது. இத்தகைய முரண்பாடும், இவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் பிரிவை உண்டாக்கி, பிரச்சினைகளை உருவாக்கத்தான் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மேலும், இவர்களுக்கு உதவுவது அயல்நாட்டவர் என்று தெரிகிறது. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், சரித்திரம், அகழ்வாய்வு என்று எந்த ஆதாரமும் இல்லாமல், “உலகம் முழுவதும் தமிழ் மொழி இருந்தது, கல்வெட்டுகள் இருக்கின்றன, தமிழ் தான் முதல் மொழி” என்ற திட்டத்துடன், மொழிப் பற்றை மொழிவெறியாக்கி, புதிய மொழி-அடிப்படைவாதம் போன்ற பயங்கரவாதத்தை உண்டாக்க பார்க்கின்றனர். தமிழன் கடல், கடல்சார் விஞ்ஞானம், கப்பல் கட்டும் தொழிற்நுட்பம் இவற்றில் எல்லாம் பெரிய முன்னோடிகள், விற்பனர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்றால், ஏன் ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை?

கோவில்களை சீரழிக்கும் திராவிடத்துவ வெறுப்பு, காழ்ப்பு அரசியல், நிர்வாகம்: திராவிட மேடைகளில் திராவிட தோள்களை பார்த்தீர்களா, சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம் மார் தட்டி வீராப்புப் பேசுவது வழக்கம்.. கருணாநிதி தன்னை ராஜராஜன் போலக் காட்டிக் கொண்டாலும், பெருங்கோவிலுக்குள் நுழைய பயந்தார். மதிலை உடைத்து, வழி செய்து கொண்டு உள்ளே நுழைந்தார்.. ஏ..ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசினாலும், ராஜராஜன் பார்ப்பன அடிவருடி, பார்ப்பனீயத்டைத் தூக்கிப் பிடித்தவன் என்ற் மற்ற மேடைகளில் பேசுவது வாடிக்கையான விசயமாக உள்ளது..  2021 வரை இத்தகைய கதைகளை புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்[3]. ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?, ராஜராஜ சோழனின் மறுபக்கம் என்று தலைப்புகளில் வெளிவரும் இந்த புத்தகங்களில், சரித்திரத் தன்மையே இல்லாமல், ஏதோ குழாயடி வம்பு, கிசுகிசுப்பு போன்று எழுதப்பட்டுள்ளனர்[4]. சரித்திர ஆதாரம் இல்லாமல், கட்டுக் கதைகளை இவ்வாறு பரப்புவதை, மெத்தப் படித்த மற்றவர்களும் கண்டிக்காமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இத்தகைய செயல்கள் துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், கலை-அழிப்புகள், இலக்கிய எரிப்புகளை விட மோசமாக இருப்பதைக் கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] கி.ஸ்ரீதரன், திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில், இதழ் 114, டிசம்பர் 16, 2014.

[2] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1310

[3] டி.எஸ்.கிருஷ்ணவேல், ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா? தமிழ் நூல் மன்றம், 2019.

[4] துரை.இளமுருகு, ராஜராஜ சோழனின் மறுபக்கம், நுண்மை பதிப்பகம், 2021. 

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html