Archive for the ‘தீமிதி’ Category

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

ஜூலை25, 2023

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்காலமாக நடைமுறையில் உள்ளன: இந்து கோவில்களில் நடக்கும், நடந்து வரும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்-காலமாக நடைமுறையில் உள்ளன. சுருக்கமாக சொல்வதானால், ஜைன-பௌத்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவை இந்நாட்டு மதங்கள் மற்றும் பின்பற்றியவர் இந்தியர் என்ற நிலையில் ஓரளவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, பெருமளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. கோவில்கள், விக்கிரங்கள் இடிக்கப் பட்டன.  விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றிலும் நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், இடைகாலங்களில் அவர்களுடைய  அக்கிரமான இடைஞல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன. பிறகு ஐரோப்பிரர்களின் தலையீடுகளால், மறுபடியும் இடையூறுகள் ஏற்பட்டன. நடைமுறையில், நிர்வாகம் என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டன.

துலுக்கர்-ஐரோப்பியர் காலங்களில் இடையூறுகள் அதிகமாகின: ஜாதிய முறைகள், மதமாற்றம் போன்ற காரணங்களினால் இருக்கமாகின. அதன் படி, கோவில்களில் யார் நுழையலாம்-கூடாது போன்ற பிரச்சினைகளும் உண்டாகின. நவீனகாலங்களில், நகரமயமாக்கம் போன்ற காரணங்களினால், மேன்மேலும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், முதலியன ஏற்படுத்தப் பட்டன. மாற்று மதத்தினர் எண்ணிக்கை அடிகமாகிய போது, அவர்களும் இவற்றை எதிர்க்க ஆரம்பித்தார்கள். தடுக்க கலவரம் போன்ற முறைகளையும் கையாண்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்ற பிறகும். சட்டம்-ஒழுங்குமுறை என்ற ரீதியில் அடக்குமுறைகள் ஆரம்பித்தன.

1960களிலிருந்து திராவிட நாத்திகர்களால் தொந்தரவுகள்: 1960களிலிருந்து திராவிடம், பெரியாரிஸம், பகுத்தறிவு போர்வைகளில், முன்பில்லாத அளவுக்கு நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் அதிகமாகின. இந்துஅறநிலையத் துறையில் அத்தகையோர் நுழைய ஆரம்பித்தனர். இப்படியாக, கடந்த 60-70 ஆண்டுகளாக அவர்களின் தலையீடு மூன்று தலைமுறைகளாக உருமாறி பலவிதங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜாதிய அரசியல் நடத்துவதால் இந்துக்களும் அவ்வாறே பிரிந்து கிடக்கின்றனர். கோவில்களும் அவ்வாறே பிரிய ஆரம்பித்தன. இதற்கு ஜாதிவாரி அரசியல்-உள்-நுழைந்தவர்களும், ஜாதியவாதியினரும், காரணமாகினர். இதனால், கோவில் சம்பந்தப் பட்டவை வியாபார மயமாக்கப் பட்டன. முன்பெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் நடத்த யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. ஆனால், இன்று, போக்குவரத்து, மற்றவர்களின் நிலை, சட்டம்-ஒழுங்குமுறை என்று பல நிலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ள. இம்மாதிரிதான், இப்பொழுது திராவிட மாடலில் இப்பிரச்சினைகள் வளர்க்கப் பட்டுள்ளன.

சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டது: நிதானமாக யோசித்தால், போலீசுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். கோவில் திருவிழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது[1]. வன்முறையை தவிர்க்க, கோவில்களை மூடி விடலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[2]. மயிலாடுதுறை மாவட்டத்தில், ருத்ர மகா காளியம்மன் கோவில் உள்ளது[3]. இதன் அறங்காவலரான தங்கராசு, 92, என்பவர், தன் மகன் நடராஜன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு[4]: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, வரும் 23 முதல் ஆக., 1 வரை நடக்கவுள்ளது. விழா அமைதியாக நடக்கும் விதமாக, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, ஜூன் 21ல் எஸ்.பி.,க்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை[5]. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. அப்படியென்றால் போலீஸார் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கவில்லையே? அதனால், போலீஸ் ஷ்டேஷன்களை ஊடிவிடலாமா என்று கேட்கவில்லையே?

சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை: வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது[7]. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ”இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில், இரண்டு குழுக்களுக்கு இடையே பிரச்னை உள்ளது[8]. ”சீர்காழி தாசில்தார் தலைமையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை,” என்றார். அப்படியென்றால், பிரச்சினை அங்கும் உள்ளது. தாசில்தார், போலீஸார் முதலியவர்களையும் மீறும் அந்த “இரு பிரிவினர்” யார், அத்தகைய பலம் பொறுந்திய கூட்டத்தினர் யார், எந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமா? இல்லை எந்த ஜாதியினர் என்று கேட்கவேண்டுமா?

பிரச்சினை செய்யும் இரு பிரிவினர் தலைவர்களை கோவில் பொறுப்பிலிருந்து நீக்கி விடலாமே?: இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு[9]: தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது[10]. அதாவது, அந்த அலவுக்கு அடிக்கடி வழக்குகள் தொடுக்கிறார்கள் போலும். அப்படியென்றால் கடவுளை விட இதில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு இவர்களை கோவில்களினின்று வெளியேற்றி விடலாமே? திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகிறது[11]. கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன[12]. கடவுளை பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பெற தான் கோவில்கள் உள்ளன[13]. ஆனால், துரதிருஷ்டவசமாக கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாகின்றன[14]. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது[15]. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை[16]. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையை தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” இங்கு தான் பிரச்சினை அணுகுமுறை முரண்பாடாக இருக்கிறது.

அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன்: “அகங்காரம் இல்லாமல், கடவுளின் அருளை பெற விரும்பா விட்டால், கோவில்கள் இருப்பதன் நோக்கமே பயனற்றதாகி விடும்.கடவுள் பக்தியை கருத்தில் கொள்ளாத திருவிழாக்களில், இரு குழுவினர் இடையே ஏற்படும் தேவையற்ற பிரச்னையை தீர்க்க, போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். போலீஸ், வருவாய் அதிகாரிகளுக்கு இதை விட முக்கியமான பல பணிகள் உள்ளன. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். உண்மையில் நீதிபதி சரியாகத்தான் தீர்ப்புக் கொடுத்துள்ளார். ஊடகங்கள் தான் அதைத் திரித்து வெளியிட்ட ரீதியில் தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

25-07-2023


[1] தினமலர், திருவிழாக்கள் வன்முறை களமானால் கோவில்கள் அர்த்தமற்றதாகி விடும்!: நீதிமன்றம் கண்டனம், பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 02:03

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3382836

[3] தமிழ்.இந்து, “பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” – உயர் நீதிமன்றம் வேதனை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 21 Jul 2023 08:21 PM, Last Updated : 21 Jul 2023 08:21 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1060832-temple-festivals-to-demonstrate-strength-not-true-devotion-high-court.html

[5] காமதேனு, திருவிழாக்களில் வன்முறை வெடித்தால் கோயில்கள் இருப்பதற்கே அர்த்தமில்லை: உயர்நீதிமன்றம் வேதனை, Updated on : 21 Jul 2023, 7:26 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/the-madras-high-court-opined-that-temple-festivals-are-held-to-prove-who-is-the-stronger-of-the-two-factions

[7] தினமணி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை: உயா்நீதிமன்றம் வேதனை, By DIN  |   Published On : 22nd July 2023 05:32 AM  |   Last Updated : 22nd July 2023 05:32 AM.

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jul/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4041969.html

[9] தினத்தந்தி, கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை‘ – சென்னை ஐகோர்ட்டு வேதனை, ஜூலை 21, 5:45 pm

[10] https://www.dailythanthi.com/News/State/temple-festivals-are-held-to-show-strength-not-true-piety-high-court-agony-1012771

[11] நியூஸ்.7.தமிழ்.லைவ், திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை!” – சென்னை உயர்நீதிமன்றம்!, by Web EditorJuly 21, 2023.

[12] https://news7tamil.live/there-is-no-true-devotion-in-holding-temple-festivals-temples-may-be-closed-if-violence-erupts-during-festivals-high-court.html

[13] தமிழ்.வெப்.துனியா, கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!, Webdunia, வெள்ளி, 21 ஜூலை 2023 (16:36 IST)

[14] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-highcourt-says-about-temple-festival-123072100054_1.html?amp=1

[15] நக்கீரன், யார் பெரியவர் என நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது” – நீதிமன்றம் அதிருப்தி, செய்திப்பிரிவு, Published on 21/07/2023 (16:32) | Edited on 21/07/2023 (16:52)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-festivals-are-held-prove-who-greatest-court-disapproves