Archive for the ‘வங்கியில் முதலீடு’ Category

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

ஓகஸ்ட்11, 2021

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும். என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[1]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[2]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[3]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[4]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[5]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[6]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

திராவிட-நாத்திக-இந்துவிரோத-விக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சேகர் பாபுவை புகழும் சில ஊடகங்கள்: சமயம் TOI (Times of India) என்று சொல்லிக் கொண்டாலும், அது சேகர் பாபு புகழ் பாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாக சுழன்று சேகர் பாபு களப்பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது, ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த நடவடிக்கை, கொரோனா காலத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மருத்துவமனைகளுக்கு அளிப்பது என சேகர் பாபுவின் நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு தெரிவித்துள்ளார்[7]. மேலும், தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்றும் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்[8].

2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன: ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன[9]. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும்[10]. இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். இதனை உடனடியாக மேற்கொள்ளத் தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் கூறியுள்ளார். இக்குழுக்களில் இந்துவிரோதிகள், ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட நியமிக்கப் படுவர். இப்பொழுது, தமிழ்நாடு பாடநூல் துறை நிறுவனமே அதனை மெய்ப்பித்துள்ளது. நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை[11]. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது[12]. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது: தினமலரில், இதனை விமர்சித்து, கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹஎன்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாஎன சொல்ல முடியுமா என்ன?” விபூதி-குங்குமம் வைத்தே இந்துக்கள ஏமாற்றி விடுவோம் என்று சொன்னவரும் இன்று அமைச்சராக இருக்கிறார். ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீடியோ, புகைப் படங்கள், செய்திகள் எல்லாம் இன்றும் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோவில்களில் தங்க நகைகள், தங்க விக்கிரகம் முதலியவற்றில் எல்லாம் மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, இந்நிலையில், தங்க அகைகளை உருக்குகிறேன் என்றால், அதில் கோடிகளில் ஊழல் செய்வர் என்பது திண்ணம். ஆகவே, இத்தகையோர், கோவில் விவகாரங்களிலிருந்து, தூரத்தில் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

11-08-2021


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு..ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[3] தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[4] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[5] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic , Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[6] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[7] சமயம், கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டி: தமிழக அரசிடம் புதிய திட்டம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 23 Jul 2021, 11:35:00 AM

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/new-money-earning-scheme-to-be-implemented-from-temple-gold-in-tamilnadu/articleshow/84669132.cms

[9] சமயம், கோயில்கள் வருவாய் பெருக்க திமுக அமைச்சர் சேகர்பாபு சூப்பர் திட்டம்!,  Akash G | Samayam TamilUpdated: 24 Jul 2021, 08:28:00 AM.

[10] https://tamil.samayam.com/latest-news/salem/hindu-temples-gold-will-be-made-as-biscuits-will-be-kept-deposit-which-generates-income-minister-sekar-babu-new-plan-salem-byte/articleshow/84677474.cms

[11] தினமலர், இது உங்கள் இடம் : ‘இரண்யாய நமஹசொல்லணுமோ!, Updated : ஆக 03, 2021  03:15 |  Added : ஆக 03, 2021  03:12.

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320

இப்படி வேடம் போட்டு, ஓட்டுக் கேட்டு இந்துக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியில் பேச்சு, உருதுவில் போஸ்டர் இத்யாதிகள்.
இன்றைக்கு இவர் அமைச்சராக உள்ளார்!