Archive for the ‘சென்னிமலை’ Category

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

மதபோதகர் மீது வழக்கு: 13-10-2023 அன்றைய இந்துக்களின் கூட்டம் அரசுக்கு தெளிவான சமிஞையை அனுப்பியுள்ளது. ஆமாம், இந்துக்கள் விழித்துக் கொன்டு விட்டார்கள், இனி அவர்கள் திரண்டு எதிர்த்தால், மற்றவர்கள் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. மேலும் இந்துக்களை கைது செய்து விட்டு, கிருத்துவர்களை கைது செய்யாமல் இருப்பது, வெளிப்படையான பாரபட்சத்தினையும் வெளிப்படுத்தியது. இதனால், அரசு கிருத்துவர்களையும் கைது செய்து தனது செக்யூலரிஸத்தை மெய்பிக்க முயன்றது போலும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்[1]. தேடும் அளவுக்கு அவர்கள் என்ன அந்த அளவுக்கு பெரிய குற்றவாளிகளா அல்லது “நீ ஒளிந்து கொள், நாங்கள் தேடுவது போல தேடி பிடிக்கிறோம்,” என்றார்களோ என்று தெரியவில்லை.

18-10-2023 சேகர் பாபுவின் கள ஆய்வு: அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்[2]. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்[3]யொருவழியாக அவர்கள் செய்த குற்றம் மற்றும் சட்டப் பிரிவுகளைக் கண்டு பிடித்து விட்டனர் போலும். ஆனால், இருவரும் தலைமறைவாகினர்[4]என்ற செய்தியும் வந்தது. அந்த அளவுக்கு  எல்லாமே வேக-வேகமாக நடக்கிறது போலும். இத்தகைய நடவடிக்கை முன்னரே எடுத்திருந்தால், எல்லாவற்றையும் நடக்காமல் பார்த்திருக்கலாமே? பிறகு, “தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும்” நடவடிக்கை ஏன்? இங்கும் “மைனாரிட்டி” வேலை செய்ததா? போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டது[5]. இருப்பினும், தனிப்படை அமைக்கப் பட்டது போன்ற செய்திகள் வெளிவரவில்லை.

அல்லேலுயா கோஷமிட்ட சேகர் பாபுவின் பேட்டி: இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் செங்கல்பட்டில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்[6]. மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், சென்னிமலையில் 18-10-2023 அன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது[7]: “அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு செயல்படுகிறது[8]. மற்றொரு மதத்தினரை அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[9]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[10]. வழக்கில் தொடர்புடைய மற்றொருவரும் [வெள்ளக் கோவிலைச் சேர்ந்த பாதிரி] கைது செய்யப்படுவார்[11]. சென்னிமலை சர்ச்சையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வரும் 20-ம் தேதி (நாளை) ஈரோடு ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,” இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்[12].

திராவிடத்துவவாதிகள் நடுநிலையாக இருப்பார்களா?: சட்டப் படி கைது என்றால் நடவடிக்கை தொடர வேண்டுமா இல்லை ஏதாவது மத்தியஸ்தம் செய்து வைக்கப் போகிறார்களா? திராவிடத்துவ வாதிகள் யாராக இருந்தாலும், இந்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நடுநிலையாக இருந்தாலே போதும். ஆனால், முதலமைச்சர் முதல், இந்து அறநிலைய அமைச்சர் வரை, மற்ற திக-திமுக கருப்புப் பரிவாரங்கள் எல்லாமே, இந்துவிரோதமாகத்தான் செயல் பட்டு வந்துள்ளன. பிறகு, இந்துக்களுக்கு எப்படி நீதி, நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மறுபடியும் “சனாதன ஒழிப்பு” மாநாடு நடக்காமல் இருக்குமா, இந்து அறநிலைய அமைச்சர் அங்கு இல்லாமல் போவாரா அல்லது அல்லேலுயா என்று அவர் கூவாமல் இருப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் உத்திரவாதமும் கொடுக்க முடியாது. இப்பொழுது இவர் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. முன்னர் அல்லேலுயா என்று கோஷம் போட்டு, பிறகு “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் கலந்து கொண்டு, இப்பொழுது, இவ்வாறு பேசுவதும் திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] ஜீ.நியூஸ், கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைதுபாதிரியாருக்கு வலைவீச்சுசேகர்பாபு தகவல்பின்னணி என்ன?, Written by – Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 05:55 PM IST.

[2] https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-organization-administrator-arrested-in-erode-said-by-minister-sekar-babu-check-reason-here-468489

[3] தினமணி, சென்னிமலை குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி கைது, By DIN  |   Published On : 19th October 2023 01:19 AM  |   Last Updated : 19th October 2023 01:19 AM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2023/oct/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4092472.html

[5]  தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையைஏசுமலையாக மாற்றுவோம்– ‘சர்ச்சை பேச்சுசரவணன் ஜோசப் அதிரடி கைதுதூக்கியது போலீஸ்! By Mathivanan Maran Published: Wednesday, October 18, 2023, 19:24 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chennimalai-name-row-christian-munnani-leader-sarvanan-joseph-arrested-by-police-549445.html

[7] தமிழ்.இந்து,  சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, செய்திப்பிரிவு; Published : 19 Oct 2023 05:43 AM; Last Updated : 19 Oct 2023 05:43 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1141398-controversial-speaker-on-chennimalai-murugan-temple-issue-arrested.html

[9] 360-செய்தி, சென்னிமலை பெயரை மாற்றுவோம்சர்ச்சை பேச்சால் கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது!!, Author: Udayachandran RadhaKrishnan, 18 October 2023, 9:14 pm.

[10] https://www.updatenews360.com/tamilnadu/lets-change-the-name-of-chennimalai-christian-front-leader-arrested-for-controversial-speech-181023/

[11] தமிழ்.நியூஸ்.18, சென்னிமலை முருகன் கோவிலை கிறித்தவ மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் ஜோசப் கைது!, LAST UPDATED : OCTOBER 19, 2023, 12:58 PM IST.

[12] https://tamil.news18.com/erode/chennimalai-police-arrested-a-christian-munnani-functionary-for-trying-to-incite-communal-violence-1200206.html

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

ஜோசப் என்கிற சரவணன் கைது: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது ஜோசப் செங்கல்பட்டில் 18-10-2023 அன்று  செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவருகின்றன. “ஜோசப் என்கிற சரவணன்” என்று ஊடகங்கள் குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும். அப்படியென்றால், இந்து பெயர்களில் கிருத்துவர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இது “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டமா அல்லது, புதியதாக வேறொரு திட்டத்தை வகுத்துள்ளனரா என்று தெரியவில்லை. ஏற்கெனவே எஸ்.சிக்கள் கிருத்துவ மதம் மாறியும், சலுகைக்காக இந்துவாகவே வேடமிட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் இப்படி புதுப் பிரச்சினையைக் கிளப்புகின்றனர் போலும். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது[2]. முன்பே குறிப்பிட்டப் படி, இதுவும் ஒரு திட்டமாகவே செயல்பட்டு வருகிறது. முதலில் வீட்டில் நடத்துகிறேன் என்று ஆரமித்து, பிறகு, வீடு சர்ச்சாக மாறிவிடுகிறது. பிரச்சினைகளும் ஆரம்பித்து விடுகின்றன.

17-09-2023 வீட்டில் செய்த ஜெபமும், மோதலும்: கடந்த செப்.,17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர்[3]. அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்[4]. கடந்த மாதம் 17-ம் தேதி 17-09-2023 அன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சின்னசாமி, கோகுல் ஆகியோரைக் கைது செய்தனர். இதற்கே சில அரசியல் கட்சிதலைவர்கள் சிறுபான்மையினர் தாக்கப் பட்டனர், அவர்களது உரிமைகள் பறிக்கப் படுகின்றன என்றெல்லாம் அறிக்கை விட ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிலர், சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது.

25-09-2023 கிருத்துவர்களின் ஆர்பாட்டமும், இந்துவிரோத பேச்சும்: இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார்[5]. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கடந்த 13-ம் தேதி 13-10-2023 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்[6]. 25,000 என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக திக, மதிமுக, விசிக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர். இருப்பினும், இந்துக்களின் எழுச்சி நன்றாகவே உணரப் பட்டது. ஆளும் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருத்துவர்களும் விசயம் பெரிதாகி விடாமல் பர்த்துக் கொள்ள இறங்கி விட்டனர். அது ஒரு பாதிரியரின் வெளிப்படையான மன்னிப்பு வீடியோ வெளிப்படுத்தியது.

பாதிரியாரின் மன்னிப்பு வீடியோ: பாதிரியார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சென்னிமலை என்று சொல்லி ஒரு காரியம் குறித்து அனைத்து சேனல்களிலும் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் வன்மைக்குரிய காரியம். அதை அவர்கள் செய்திருக்கவே கூடாது[7]. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன்[8]. மற்றவர் வழிபடும் ஸ்தலத்திற்கு சென்று தான் நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாய் கருதுகின்றேன். ஆகவே, அப்படிப்பட்டவர்கள் மீது கட்டாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். “பிரிச்சி பாருங்க”.. முதல் விதையை “அங்கிட்டு” தூவிய எடப்பாடி பழனிசாமி.. பாஜகவை விட, குஷியில் திமுக அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போகின்றார்கள் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு சிலர் செய்யும் காரியத்தினால் மொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தவறான பெயர் உண்டாகிறது என்பதில் எந்த விதமுமான சந்தேகமும் கிடையாது. கிறிஸ்தவ முன்னணினு சொல்றாங்க… அந்த கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை. கிறிஸ்தவ முன்னணியில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது. வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன். இந்து மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய மனம் திறந்து, இந்த தவறான காரியம் குறித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பெயரால் ஏற்பட்ட இந்த ஒரு காரியத்திற்காக கிறிஸ்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேள்கிறேன். தயவு கூர்ந்து மன்னித்து கொள்ளுங்கள். நமக்குள் எந்த விரோதமும் வேண்டாம். வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் என்று கூறி மீண்டும் கையெடுத்து கும்பிட்டார். மீண்டும் உங்களை நாங்கள் சகோதரர்கள் சகோதரிகளாய் கேட்டு கொள்ள விரும்புகிறோம். நாம் எல்லாம் அனைவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். மன்னித்து கொள்ளுங்கள். ஆகவே நம்மிடையே வேற்றுமைகள் வேண்டாம்[9]. மீண்டும் நான்ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் கூறியுள்ளார்[10].

அமைதி, சமரசத்தைப் போற்ற வேண்டும்: இப்பாதிரி எந்த டினாமினேஷனைச் சேர்ந்தவராக இருந்தாலும் இருக்கும் நிலைமையை சரிசெய்ய, அமைதிக்கு, சமரசத்திற்கு ஏற்றமுறையில் பேசியிருப்பதை கவனிக்கலாம். இத்தகைய அணுகுமுறை இருந்தால், நிச்சயமாக பிரச்சினை இல்லாமல் எல்லா நம்பிக்கையாளரும் அமைதியாக வாழலாம். இந்தியாவில் அப்படித்தான் ஆயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும், இந்துக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் அனுசரித்து, பொறுமையாகத் தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே பொறுமைக்கும் எல்லை உண்டு என்று மற்றவர்களும் உணர வேண்டும். குட்ட-குட்ட குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள், ஒரு நாள் தலை நிமிரவும், தடுக்கவும் செய்வார்கள். பிறகு, பதிலுக்குப் பதில் என்று கையை ஓங்கினால், நிலைமை மோசமாகி விடும். ஆகவே, எல்லோரும்க அமைதியாக அஹிம்சையைத் தான் பின் பற்ற வேண்டும். அது கோழைத்தனம் அல்ல, ஆனால், மிகப் பெரிய வலுவான ஆயுதமாகும்.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] தினமலர், சென்னிமலை பெயரை மாற்றுவோம் என பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன்ஜோசப் கைது, மாற்றம் செய்த நாள்: அக் 18,2023 22:31.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3460756

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னிமலை முருகன் கோயிலைஇயேசு மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு; கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது, Web Desk, Oct 19, 2023 18:31 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/christian-munnani-functionary-arrested-for-controversy-speech-chennimalai-murugan-mount-will-change-calvary-mount-1563783

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், சென்னிமலைக்கு கிறிஸ்தவ பெயர்! கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி கைது!, Kathiravan V • HT Tamil, Oct 18, 2023 05:47 PM IST

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/saravanan-joseph-who-said-he-was-going-to-change-the-name-of-chennimalai-was-arrested-131697630583238.html

[7] மீடியான்.காம், சென்னிமலை விவகாரம் வருத்தம் தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார், Jansi Rani Tulasi Raman, அக்டோபர் 19, 2023, 6.30 pm.

[8] https://mediyaan.com/christian-priest-expressed-grief-over-chennimalai-issue/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையை ஜீசஸ் மலையாக்குவோம்.. கிளம்பிய சர்ச்சை.. கையெடுத்து கும்பிட்டு பாதிரியார் மன்னிப்பு, By Jeyalakshmi C Published: Tuesday, October 17, 2023, 17:46 [IST]

[10] https://tamil.oneindia.com/news/chennai/chennai-priest-apologizes-for-christians-to-rename-chennimalai-as-jesus-malai-549091.html?story=1

சென்னிமலை இந்துக்களின் அறப்போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்க வேண்டும்–உரிமைகள் காக்கப் படவேண்டும்!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களில் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்கவேண்டும் உரிமைகள் காக்கப் படவேண்டும்!

இந்துவிரோத கூட்டத்தினரின் பாரபட்ச செயல்பாடு……

இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையே?

25-09-2023 கிறிஸ்தவர்களுக்கு சாதமாக, அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023  சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..

இந்துக்கள் கைது, ஆனால் கிறிஸ்துவர்களின் மீது நடவடிக்கை இல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.

தானாகக் கூடியக் கூட்டம்…

இந்துக்களின் எழுச்சி……

13-10-2023 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].

கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.

இந்து முன்னணி தலைவர்கள்……

மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்

இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.

25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………

கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், சென்னிமலை முருகன் கோவிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் எனப் பேசிய அமைப்பினரை கைது செய்யக்கோரி 13ல் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: அக் 10,2023 15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453240

[3] தினமணி, இந்து முன்னணி சார்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 01st October 2023 11:37 PM  |   Last Updated : 01st October 2023 11:37 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2023/oct/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4081779.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, என்னது ஏசு மலையா? “சென்னிமலை எங்கள் மலை“- பல்லாயிரக்கணக்கில் திரண்டுமுருகர்கூட்டம் முழக்கம்!, By Mathivanan Maran, Published: Saturday, October 14, 2023, 7:22 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-devotees-protest-against-rename-demand-on-chennimalai-as-jesus-malai-547997.html

[7] தினத்தந்தி, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தினத்தந்தி, அக்டோபர் 14, 7:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaicondemnation-protest-of-hindu-munnani-1072464

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

சென்னிமலையின் சிறப்புகள்: கொங்கு நாட்டு பகுதியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிவன் மலையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[1]. இக்கோவில்களின் தெய்வீகத் தன்மைகளை முழுமையாக யாராலும் சொல்லி விடவோ விளக்கி விடவோ முடியாது[2]. சென்னிமலையானது ஒவ்வொரு யுகங்கள் தோறும் மகுடகிரி புஷ்பகிரி கனககிரி சிரகிரி என்னும் பெயரைக் கொண்டது. இம்மலையை சுற்றி 24 தீர்த்தங்கள் உள்ளன.அவற்றுள் செங்கழுநீர் தீர்த்தம் குமார தீர்த்தம் இடும்பன் தீர்த்தம் யம தீர்த்தம்பட்சி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்றவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலம். ஆதலால் இம்மலையை ஆதிபழநி என அழைப்பர். இங்கு இடும்பனுக்கு சன்னிதி கிடையாது. லட்சோப லட்சம் பக்தர்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களின் இல்லங்களில் நிறைவான அருளாட்சி செய்யும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாலன் தேவராய சுவாமிகள் அரங்கேற்றம் செய்த அருள் தலம். ஒரு ஜாதகருக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் முருகப்பெருமான் சன்னிதிமுன் வந்து அவர் நின்றால் தோஷத்தை சுக்கு நுாறாக்கி தீவினைகளை பொடிபொடியாக்கி செவ்வாய் அனுக்கிரக்தை அவரே வழங்குவார். ஆதலால் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாய் இடம் பெறவில்லை. இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற தலம் தான் சென்னிமலை. இவ்வாறு அமைதியாக நிகழ்ந்து வரும் வேலையில், சில கிறிஸ்துவர்கள், இம்மமலையில் ஒரு சிறிய சர்ச்சைக் கட்டி பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்: இது கிறிஸ்துவர்களின் ஒரு திட்டமாகவே மாறிவிட்டது. திண்டிவனம் போகும் வழியில், அச்சரப்பாக்கம் மலையில், இப்படி ஒரு சர்ச்சைக் கட்டி, நாளடைவில் அதனை, அனைத்துலக கிறிஸ்துவ சுற்றுலா தலமாக்கி விட்டனர். இதே போல பல இடங்களில் முதலில் ஒரு சிலுவையை நடுவது, ஜெபம் செய்வது, கொட்டகை அமைப்பது, பிறகு கூரையுடன் ஒரு அறையை அமைப்பது, பிறகு அதனை கட்டிடமாக மாற்றுவது என்று படிப்படியாக செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பதும் மர்மமாக இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அவ்வாறு பட்ட கொடுப்பது, மின்சாரம் இணைப்புக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள். உள்ளூரில் புகார் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அச்சரப்பாக்கத்தில் சட்டங்களை மீறி கட்டப் பட்டுள்ள சர்ச்சை இடிக்க நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகுக் கூட, அதனை கிடப்பில் போட்டு அமைதியாக இருக்கிறார்கள். “சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்” ஆக, இது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு செயல், அபகரிப்பு திட்டம் மற்றும் மதரீதியில் கலவரங்களை உண்டாக்கும் போக்கு போன்றவை வெளிப்படுவதை தெளிவாகக் கவனிக்கலாம்.

சென்னிமலையில் அனுமதியற்ற ஜெபக்கூடமும், தொந்தரவுசர்ச்சைகளும்: சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 17-ந் தேதி 2023 17-09-2023 அன்று கிறிஸ்தவ போதகர் அர்ஜூனன் என்ற ஜான் பீட்டர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார்.  இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொள்ளும் நிலைமை, அவசியம், அந்தஸ்து ஏன் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், எஸ்சி-இந்துக்களை மதம் மாற்றி, “தலித் கிறிஸ்தவர்” என்ற பிரச்சினையை கடந்த 40 ஆண்டுகளாக செய்து வருவதையும் கவனிக்கலாம். மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடந்தது. வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். இவற்றையெல்லாம் எப்படி, ஏன், எவ்வாறு தமிழக அரசு அதிகாரிகள் அனுமதித்தார்கள் அல்லது தெரிந்தும், தெரியாத்து மாதிரி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

The church built…..

17-09-2023 அன்று இரு பிரினிடையே மோதல்: ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ஜான் பீட்டர் குடும்பத்தினரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் 25-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் டி.சரவணன் தலைமை தாங்கினார்[4]. ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம் (ஈரோடு) மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[5]. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், ‘புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றவிட மாட்டோம்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது[6]. போலீஸார் நிச்சயமாக இவற்றை கண்டுகொண்டிருப்பர், வீடியோ பதிவும் செய்திருப்பர்.

கைதுகளில் பாரபட்சம் ஏன்?: இப்பொழுதெல்லாம் வெறுப்புப் பேச்சு பற்றி அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன். பல வழக்குகளும் நடந்து வருகின்றன. இதில் கூட கிறிஸ்தவர்கள் தாக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளனவேயன்றி, இந்துக்கள் கதி என்னவென்று இக்கட்சியினர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆக செக்யூலரிஸம் வேலை செய்கிறதா அல்லது இந்து விரோதம் செயல்படுகிறதா என்று கவனிக்கலாம். இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள்[7]. போலீஸாரிடமும் மனு கொடுத்தனர்[8]. கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[9]. திருமாவளவன் கிறிஸ்துவர்களைத் தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என்றார்[10]. கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், ஜெபக்கூட்டத்தினர் மிரட்டல் பேச்சு: சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு, மாற்றம் செய்த நாள்: அக் 13,2023 17:21

[2] https://m.dinamalar.com/detail.php?id=3456337

[3] தினத்தந்தி, சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், செப்டம்பர் 26, 2:25 am.

[4] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaichristian-organizations-protest-1060460

[5] கல்கி.ஆன்லைன், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றப்போவதாக கூறிய கிறிஸ்தவ அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!, Published on : 14 Oct 2023, 11:28 am

[6] https://kalkionline.com/news/daily-news/demonstration-against-the-christian-organization-that-said-it-will-turn-chennimalai-into-calvary-hill

[7] தினகரன், சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு, September 21, 2023, 4:33 am

[8]https://www.dinakaran.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கிறிஸ்தவர்கள் மீது அட்டாக்! தமிழ்நாட்டுக்கே ஆபத்து என திருமா வார்னிங், By Noorul Ahamed Jahaber Ali, Published: Sunday, September 24, 2023, 21:09 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-warn-about-the-attack-on-christians-in-erode-chennimalai-541985.html