Archive for the ‘பத்மாவதி’ Category

ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப் பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

ஏப்ரல்3, 2023

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

17-03-2923 – காஞ்சனா மனநிறைவுடன் கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்த காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும் அவருடன் நானும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். என் தங்கை கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர், எனக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது. நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில்தான் தி.நகர் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்து கோவிலுக்கு தானமாக வழங்கினோம். தற்போது அந்த இடத்தில்  பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது. என்னை ஒவ்வொரு நொடியும் பெருமாள்தான காப்பாற்றி வருகிறார். வாழ்நாள் முழுவதும் அவர் நினைவு ஒன்றே போதும்…,” இவ்வாறு கூறினார்[2].

காஞ்சனா ஏன் நிலத்தை தானமாகக் கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.

2012 முதல் 2018 வரை ஆக்கிரமிப்பில் இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].

இந்நிலம் ஆக்கிரமிப்பு பற்றிய சரிபார்க்க முடியாத செவிவழி கதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.

சேதுராமன் குடும்பம் சம்பந்தப்பட்ட நிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.

கோவில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு முதலியவை தடுக்கப் படுமா அல்லது தொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

© வேதபிரகாஷ்

03-4-2023


[1] பத்திரிக்கை.காம், எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம், MAR 18, 2023

[2] https://patrikai.com/my-birth-has-come-to-an-end-said-actress-kanchana-at-padmavathi-mother-temple-kumbabishekam/

[3]  Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.

[4]https://indianexpress.com/article/india/india-others/kanchana-donates-rs-15-cr-land-to-tirumala-tirupati-devasthanam/

[5] Times of India, Actor Kanchana donates Rs 15 cr worth land to TTD, TNN / Oct 26, 2010, 03:54 IST.

[6] TTD.News, Donation of land to TTD by Smt. Girija Pandey and Ms Kanchana,

[7] Madras High Court – Mrs.Girija Pandey vs The Commissioner on 10 April, 2018

 In the High Court of Judicature at Madras Dated :  10.4.2018; Coram :

The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM

Writ Petition Nos.7847 & 7848 of 2018 & WMP.Nos.9791 to 9794 of 2018

1. Mrs.Girija Pandey

2. Ms.Vasundhara Devi (a) Kanchana                                                      …Petitioners

Vs

1.The Commissioner, Corporation    of Greater Chennai, Ripon Buildings,    Chennai-3.

2.The Assistant Revenue Officer,     Zone-9, Corporation of Greater    Chennai, No.1, Lake Area, 4th Cross Street, Nungambakkam, Chennai-34.                                    …Respondents

https://indiankanoon.org/doc/39110800/

[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155

MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.

Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.

[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர் சேதுராமனின் மூத்த மகன், மகள், மருமகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]

[10] https://tamil.oneindia.com/news/2013/06/28/tamilnadu-arrest-warrant-son-madurai-meenakshi-hospital-owner-178070.html?story=1

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (1)

ஏப்ரல்3, 2023

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (1)

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும்: கோவில் என்றாலே, பல பிரச்சினைகள், ஆக்கிரமிப்புகள், வழக்குகள் என்று எல்லாவற்றையும் தாண்டித் தான் வரவேண்டும் போலிருக்கிறது. சமீபத்தில் ஜி.என்.செட்டித் தெருவில் ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) மூலம் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்விக்கப் பட்டது. இது அமைதியாக நடந்தாலும், பல கோடி மக்களை சேர்ந்து அடைந்துள்ளது. தினமும், கோவிலுக்கு வரும் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. எதிர்பார்க்க முடியாது நிலையில் கூட்டம் வருகிறது. சனி-ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், கூட்டம் அலை மோதுகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர்[1]. நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன[2].  தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தேவஸ்தான குழு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து, வெங்கடநாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் செல்கின்றனர்.

காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையும், நிலம் விவகாரமும்: காஞ்சனா பெங்களூருவைச் சேர்ந்தவர். ஏழெட்டு மொழிகள் அறிந்தவர். படிப்பாளி. ஆனாலும் அப்பாவுக்குத் தொழிலில் நஷ்டம். ஏகப்பட்ட கடன். அவற்றிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்றால் வேலைக்குச் செல்ல வேண்டும் எனும் நிலை[3]. அப்படித்தான் ‘ஏர் ஹோஸ்டஸ்’ பணியில் சேர்ந்தார். வேறு வேலையும் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்தார்[4]. அந்நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, பல வருடங்கள் நடித்து, பெயர், புகழ், பணம் சம்பாதித்தார். ஒரு ஆண்பிள்ளை போன்று வேலை செய்து கொண்டே இருக்கும் நிலைதா இருந்தது. ஆனால் திருமணம் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ‘ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோயேம்மா’ என்று சக நடிகர்களும் நடிகைகளும் அறிவுரை சொல்லியும் ஏற்க முடியாமல் தவித்தார். குருவி சேர்ப்பது போல் சேகரித்த சொத்துகளும் உறவுகளிடம் மாட்டிக்கொண்டன. ‘இப்போ என்ன அவசரம், இன்னும் நடிக்கட்டும்’ என்று பணத்தில் குறியாக இருந்தார்கள் உறவினர்கள். வீடுவாசல், சொத்துபத்து என்று சேர்த்துவைத்துப் பார்த்தால், கல்யாண வயதெல்லாம் தாண்டிப்போயிருந்தது.

சொத்துகள், நிலம் பெற்றோர், உறவினர்களிடம் சிக்கிக் கொண்டது: காஞ்சனா சொன்னது, “அதன் பின்னர், உறவினர்களிடம் மாட்டிக்கொண்ட சொத்துகளை மீட்பது பெரிய சவாலாக உருவெடுத்தது.சட்ட உதவியை நாடி, போராடித்தான் சொத்துகளை மீட்டேன். அதிலும் பாதி சொத்துகளே கிடைத்தன,’ என்று சொல்லும் காஞ்சனா, சொத்துகளில் ஒரு பகுதியை திருப்பதி கோயிலுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். தைப் பற்றிய இவரங்கள் நீதிமன்ற ஆவணங்கள், தீர்ப்புகள் முதலியனவே எடுத்துக் காட்டுகின்றன. மிச்ச சொச்ச வாழ்க்கையை தன் சகோதரி வீட்டில் இருந்தபடி கழித்துக்கொண்டிருக்கும் காஞ்சனாவுக்கு வயது எண்பதுக்கும் மேலே. ஆன்மிகத்தில் நிம்மதியையும் அமைதியில் ஆனந்தத்தையும் தேடிக்கொண்டிருக்கும் காஞ்சனா எனும் பண்பட்ட நடிகையின் வாழ்க்கையில், சந்தோஷத்துக்கும் நிம்மதிக்கும்தான் நேரமில்லாமல் போய்விட்டது.

2010ம் ஆண்டு காஞ்சனா தானமாகக் கொடுத்தது: 2010-ம் ஆண்டு காஞ்சனா தி நகர், ஜிஎன் செட்டியில் உள்ள தனக்கு சொந்தமான 6 கிரவுண்ட் இடத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு தானமாக கொடுத்தார்[5]. ஆனால் அதற்கு முன்பாகவே 15 வருடங்கள் 1995-2010 இந்த இடத்திற்காக பல சட்ட சிக்கல்களை சந்தித்த நடிகை காஞ்சனா தனது சகோதரியின் கணவரும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டே உதவியுடன் இந்த இடத்தை வாங்கினார்[6]. அதன்பிறகு இந்த இடத்தை பலர் ஆக்கிரமித்திருந்தனர். இவ்விவரங்கள் தான் மறைக்கப் படுகின்றன. அவர்களை காலி செய்ய முயற்சி செய்து நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை தேவஸ்தானத்திற்காக ஒப்படைத்தனர். அதன்பிறகு 2021 வரை இந்த நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சில பிரச்னைகளால் தள்ளிப்போய்கொண்டிருந்தது.

2020ல் கோவில் கட்டும் வேலை ஆரம்பித்தது: அவர் கொடுத்த இடத்தில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவது என்று தேவஸ்தானம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கோயில் கட்டும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி 2023 மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக துவஜஸ்தம்பம் எனும் கோயில் கொடிமரம் 23-02-2023 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான (டிடிடி) தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, டிடிடி இணை செயலாளர் வீரபிரம்மம் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்[7].

சேகர் ரெட்டி கூறியது: இதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் ஏஜே சேகர் ரெட்டி கூறியிருப்பதாவது[8]: “திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் போன்று திநகர் பகுதியில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 6 கிரவுண்ட் இடத்தில் பத்மாவதி தாயாருக்கு 3 கிரவுண்ட் இடத்தில் கோயிலும், மீதமுள்ள 3 கிரவுண்ட் இடத்தில் மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்க இடம், புஷ்கரணி ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. பத்மாவதி தாயார் கோயில் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பூர்த்தியடைந்த நிலையில், இன்று கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்படும் மூலவர் பத்மாவதி தாயார் சிலையானது திருப்பதியில் வடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பத்மாவதி தாயார் சிலையானது சென்னைக்கு கொண்டு வரப்பட்டு வரும் மார்ச் 17 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செயப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

17-03-2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஐபிக்கள்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மங்களாசாசனம் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் யூடியூபில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இரவில் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினருடன் வந்திருந்துபத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார்[9]. அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, வி.ஜி.ராஜேந்திரன், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கே.கணேஷ், டாக்டர்கள் வெங்கடாசலம், தீரஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்[10].

© வேதபிரகாஷ்

03-4-2023


[1] மாலைமலர், தியாகராயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குவியும் பக்தர்கள், By மாலை மலர், 20 மார்ச் 2023 12:34 PM

[2] https://www.maalaimalar.com/devotional/worship/todays-spiritual-events-and-panjangam-april-3rd-2023-591592?infinitescroll=1

[3]  காமதேனு, காஞ்சனா: உச்சம் தொட்ட ஒற்றை நட்சத்திரம்!, Updated 16 aug 2022, 5,30 pm.

[4] https://kamadenu.hindutamil.in/cinema/actress-kanchana-birthday-special-article

[5] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், பல கோடி மதிப்பு நிலம்… தானமாக கொடுத்த நடிகை… இந்தியாவின் முதல் பத்மாவதி தாயார் கோவில், Written by WebDesk, March 20, 2023 23:23 IST.

[6] https://tamil.indianexpress.com/lifestyle/tamil-padmavathi-thayar-temple-indias-first-time-in-chennai-617493/

[7] ஏசியாநெட்.நியூஸ், நடிகை காஞ்சனா தானமாக கொடுத்த 6 கிரவுண்ட் இடத்தில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை!, R. siva kumar

First Published Feb 24, 2023, 10:41 AM IST , Last Updated Feb 24, 2023, 10:41 AM IST

[8] https://tamil.asianetnews.com/spiritual/new-temple-for-lord-padmavathi-at-t-nagar-in-chennai-rqkjqq

[9] தமிழ்.இந்து, சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம், செய்திப்பிரிவு, Published : 18 Mar 2023 04:21 AM; Last Updated : 18 Mar 2023 04:21 AM

[10] https://www.hindutamil.in/news/spirituals/962162-sri-padmavathi-temple-kumbabhishekam-held-in-chennai-tnagar-3