Archive for the ‘கிரியைகள்’ Category

தருமபுரம் ஆதீனமடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.

மஹாபாரத யுத்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர். 

வழக்குப் பதிவு, கைது முதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].

முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்.. 

2018ல் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன்  பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.

ஆன்மீகக் கூட்டா, அரசியல் கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: தருமபுர ஆதீனத்தை மிரட்டிய பா.. பிரமுகர்; 4 பேர் கைது, Web Desk, 29 Feb 2024 12:55 IST

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-search-bjp-secretary-who-threats-dharumapuram-aadheenam-with-sexual-tape-release-4126860

[3] தினகரன், போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி, February 29, 2024, 5:52 pm

[4] https://www.dinakaran.com/chief-minister-dharumapuram-atheenam-thank-you/

[5] விகடன், `பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்!’ – திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு, கே.குணசீலன், Published:17 Oct 2018 3 PM; Updated:17 Oct 2018 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/139957-thiruvavaduthurai-aadheenam-files-complaint-against-bjp-cadre

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

திராவிடத்துவ ஆட்சியில் மடத்தில் பிரச்சினை 25-02-2024ல் கொடுக்கப் பட்ட புகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].

தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10].  அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?

உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரில் புகார்: பின்னர் இது தொடர்பாக –

  1. செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
  2. செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
  3. திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
  4. திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
  5. வினோத்,
  6. விக்னேஷ் –

ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி கொடுத்த மனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, வீ.தமிழன்பன், Published : 29 Feb 2024 01:24 PM; Last Updated : 29 Feb 2024 01:24 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1208136-threat-to-dharmapuram-adheenam-case-registered-against-9-people-including-bjp-leader-4-arrested.html

[3] மாலைமலர், தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது, By Maalaimalar, .1 மார்ச் 2024 12:23 PM (Updated: 1 மார்ச் 2024 1:14 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/4-arrested-for-threatening-money-from-dharmapuram-adheenam-705717

[5] தினமலர், தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் பா.., நிர்வாகி உட்பட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மார் 01, 2024 01:21.

[6] https://m.dinamalar.com/detail-amp.php?id=3564373

[7] தினத்தந்தி, ஆபாச வீடியோவை வெளியிடுவோம்..தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள், By – தினத்தந்தி, Update: 2024-02-29 07:59 GMT.

[8] https://www.dailythanthi.com/amp/News/State/dharmapuram-adheenam-was-threatened-political-leaders-arrested-1095535

[9] இடிவி.பாரத், மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல்பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.

https://www.etvbharat.com/ta/!state/dharmapuram-adheenam-threatened-by-dmk-bjp-party-persons-that-they-will-publish-controversial-videos-tns24022901092

[10]

[11] புதியதலைமுறை, ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.

[12] https://www.puthiyathalaimurai.com/crime/4-people-arrested-who-threated-dharmapuram-adheenam

[13] விகடன், ஆபாச வீடியோ பெயரில் தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் – 4 பேர் கைது; பாஜக, திமுக புள்ளிகள் தலைமறைவு, கே.குணசீலன், Published: 01-03-2024 at 4 PM; Updated: 1-03-2024 at 7 PM.

[14] https://www.vikatan.com/crime/in-darumapuram-adheenam-case-4-arrested-and-other-4-in-search

[15] பிபிசி தமிழ், தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள்என்ன நடக்கிறது?, முரளிதரன்- காசிவிஸ்வநாதன், 1 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்- அந்தந்த கோவில் ஆகம முறைப் படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

ஓகஸ்ட்27, 2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்அந்தந்த கோவில் ஆகம முறைப்படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனம் நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].

புதிய சட்டத்தின் படி செய்யப் பட்ட நியமனம் நிறுத்தி வைக்கப் பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சர்டிபிகேட் / சான்றிதழ் இருந்தால் எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.

அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் போன்றவை பின்பற்ற முடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.

சுகவனேஸ்வரர் கோவில் தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].

ஆகமமா, ஆகம பயிற்சியா, பரம்பரை நியமனமாபோன்றவை தொடர்பிரச்சினைகளாக இருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ் 12-08-2023 / 27-08-2023


[1] தினத்தந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை, தினத்தந்தி ஆகஸ்ட் 12, 1:50 am

[2] https://www.dailythanthi.com/News/State/all-castes-are-ordained-priests-prohibition-against-cancellation-of-appointment-1028514

[3] தினகரன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி, August 12, 2023, 12:54 am.

[4] https://www.dinakaran.com/allcaste_priest_cancel_icourtbranch/

[5] தினமலர், அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள்: ஆக 12,2023 06:10

[6] https://m.dinamalar.com/detail.php?id=3401950

[7] ஏபிபி.லைவ், Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை, By: சுதர்சன் | Updated at : 11 Aug 2023 06:44 PM (IST), Published at : 11 Aug 2023 06:00 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-sets-aside-single-judge-order-of-cancelling-archakas-appointment-under-tamil-nadu-govt-directive-134417

[9] இடிவி.பாரத், குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!, Published: Aug 11, 2023, 5:19 PM

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/hc-madurai-bench-stays-order-of-single-judge-cancelling-appointment-of-kumaravayalur-temple-priests/tamil-nadu20230811171918018018770

[11] நக்கீரன், அர்ச்சகர் நியமனம்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/07/2023 (13:21) | Edited on 28/07/2023 (13:31),

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ordination-priests-madras-high-court-action

[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.

[13] https://tamil.news18.com/national/supreme-court-disposes-of-cases-related-to-appointment-of-archakas-in-tamil-nadu-temples-1121582.html – gsc.tab=0

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

ஜூலை25, 2023

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்காலமாக நடைமுறையில் உள்ளன: இந்து கோவில்களில் நடக்கும், நடந்து வரும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்-காலமாக நடைமுறையில் உள்ளன. சுருக்கமாக சொல்வதானால், ஜைன-பௌத்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவை இந்நாட்டு மதங்கள் மற்றும் பின்பற்றியவர் இந்தியர் என்ற நிலையில் ஓரளவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, பெருமளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. கோவில்கள், விக்கிரங்கள் இடிக்கப் பட்டன.  விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றிலும் நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், இடைகாலங்களில் அவர்களுடைய  அக்கிரமான இடைஞல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன. பிறகு ஐரோப்பிரர்களின் தலையீடுகளால், மறுபடியும் இடையூறுகள் ஏற்பட்டன. நடைமுறையில், நிர்வாகம் என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டன.

துலுக்கர்-ஐரோப்பியர் காலங்களில் இடையூறுகள் அதிகமாகின: ஜாதிய முறைகள், மதமாற்றம் போன்ற காரணங்களினால் இருக்கமாகின. அதன் படி, கோவில்களில் யார் நுழையலாம்-கூடாது போன்ற பிரச்சினைகளும் உண்டாகின. நவீனகாலங்களில், நகரமயமாக்கம் போன்ற காரணங்களினால், மேன்மேலும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், முதலியன ஏற்படுத்தப் பட்டன. மாற்று மதத்தினர் எண்ணிக்கை அடிகமாகிய போது, அவர்களும் இவற்றை எதிர்க்க ஆரம்பித்தார்கள். தடுக்க கலவரம் போன்ற முறைகளையும் கையாண்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்ற பிறகும். சட்டம்-ஒழுங்குமுறை என்ற ரீதியில் அடக்குமுறைகள் ஆரம்பித்தன.

1960களிலிருந்து திராவிட நாத்திகர்களால் தொந்தரவுகள்: 1960களிலிருந்து திராவிடம், பெரியாரிஸம், பகுத்தறிவு போர்வைகளில், முன்பில்லாத அளவுக்கு நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் அதிகமாகின. இந்துஅறநிலையத் துறையில் அத்தகையோர் நுழைய ஆரம்பித்தனர். இப்படியாக, கடந்த 60-70 ஆண்டுகளாக அவர்களின் தலையீடு மூன்று தலைமுறைகளாக உருமாறி பலவிதங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜாதிய அரசியல் நடத்துவதால் இந்துக்களும் அவ்வாறே பிரிந்து கிடக்கின்றனர். கோவில்களும் அவ்வாறே பிரிய ஆரம்பித்தன. இதற்கு ஜாதிவாரி அரசியல்-உள்-நுழைந்தவர்களும், ஜாதியவாதியினரும், காரணமாகினர். இதனால், கோவில் சம்பந்தப் பட்டவை வியாபார மயமாக்கப் பட்டன. முன்பெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் நடத்த யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. ஆனால், இன்று, போக்குவரத்து, மற்றவர்களின் நிலை, சட்டம்-ஒழுங்குமுறை என்று பல நிலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ள. இம்மாதிரிதான், இப்பொழுது திராவிட மாடலில் இப்பிரச்சினைகள் வளர்க்கப் பட்டுள்ளன.

சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டது: நிதானமாக யோசித்தால், போலீசுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். கோவில் திருவிழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது[1]. வன்முறையை தவிர்க்க, கோவில்களை மூடி விடலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[2]. மயிலாடுதுறை மாவட்டத்தில், ருத்ர மகா காளியம்மன் கோவில் உள்ளது[3]. இதன் அறங்காவலரான தங்கராசு, 92, என்பவர், தன் மகன் நடராஜன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு[4]: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, வரும் 23 முதல் ஆக., 1 வரை நடக்கவுள்ளது. விழா அமைதியாக நடக்கும் விதமாக, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, ஜூன் 21ல் எஸ்.பி.,க்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை[5]. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. அப்படியென்றால் போலீஸார் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கவில்லையே? அதனால், போலீஸ் ஷ்டேஷன்களை ஊடிவிடலாமா என்று கேட்கவில்லையே?

சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை: வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது[7]. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ”இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில், இரண்டு குழுக்களுக்கு இடையே பிரச்னை உள்ளது[8]. ”சீர்காழி தாசில்தார் தலைமையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை,” என்றார். அப்படியென்றால், பிரச்சினை அங்கும் உள்ளது. தாசில்தார், போலீஸார் முதலியவர்களையும் மீறும் அந்த “இரு பிரிவினர்” யார், அத்தகைய பலம் பொறுந்திய கூட்டத்தினர் யார், எந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமா? இல்லை எந்த ஜாதியினர் என்று கேட்கவேண்டுமா?

பிரச்சினை செய்யும் இரு பிரிவினர் தலைவர்களை கோவில் பொறுப்பிலிருந்து நீக்கி விடலாமே?: இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு[9]: தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது[10]. அதாவது, அந்த அலவுக்கு அடிக்கடி வழக்குகள் தொடுக்கிறார்கள் போலும். அப்படியென்றால் கடவுளை விட இதில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு இவர்களை கோவில்களினின்று வெளியேற்றி விடலாமே? திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகிறது[11]. கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன[12]. கடவுளை பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பெற தான் கோவில்கள் உள்ளன[13]. ஆனால், துரதிருஷ்டவசமாக கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாகின்றன[14]. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது[15]. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை[16]. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையை தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” இங்கு தான் பிரச்சினை அணுகுமுறை முரண்பாடாக இருக்கிறது.

அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன்: “அகங்காரம் இல்லாமல், கடவுளின் அருளை பெற விரும்பா விட்டால், கோவில்கள் இருப்பதன் நோக்கமே பயனற்றதாகி விடும்.கடவுள் பக்தியை கருத்தில் கொள்ளாத திருவிழாக்களில், இரு குழுவினர் இடையே ஏற்படும் தேவையற்ற பிரச்னையை தீர்க்க, போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். போலீஸ், வருவாய் அதிகாரிகளுக்கு இதை விட முக்கியமான பல பணிகள் உள்ளன. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். உண்மையில் நீதிபதி சரியாகத்தான் தீர்ப்புக் கொடுத்துள்ளார். ஊடகங்கள் தான் அதைத் திரித்து வெளியிட்ட ரீதியில் தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

25-07-2023


[1] தினமலர், திருவிழாக்கள் வன்முறை களமானால் கோவில்கள் அர்த்தமற்றதாகி விடும்!: நீதிமன்றம் கண்டனம், பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 02:03

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3382836

[3] தமிழ்.இந்து, “பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” – உயர் நீதிமன்றம் வேதனை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 21 Jul 2023 08:21 PM, Last Updated : 21 Jul 2023 08:21 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1060832-temple-festivals-to-demonstrate-strength-not-true-devotion-high-court.html

[5] காமதேனு, திருவிழாக்களில் வன்முறை வெடித்தால் கோயில்கள் இருப்பதற்கே அர்த்தமில்லை: உயர்நீதிமன்றம் வேதனை, Updated on : 21 Jul 2023, 7:26 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/the-madras-high-court-opined-that-temple-festivals-are-held-to-prove-who-is-the-stronger-of-the-two-factions

[7] தினமணி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை: உயா்நீதிமன்றம் வேதனை, By DIN  |   Published On : 22nd July 2023 05:32 AM  |   Last Updated : 22nd July 2023 05:32 AM.

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jul/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4041969.html

[9] தினத்தந்தி, கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை‘ – சென்னை ஐகோர்ட்டு வேதனை, ஜூலை 21, 5:45 pm

[10] https://www.dailythanthi.com/News/State/temple-festivals-are-held-to-show-strength-not-true-piety-high-court-agony-1012771

[11] நியூஸ்.7.தமிழ்.லைவ், திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை!” – சென்னை உயர்நீதிமன்றம்!, by Web EditorJuly 21, 2023.

[12] https://news7tamil.live/there-is-no-true-devotion-in-holding-temple-festivals-temples-may-be-closed-if-violence-erupts-during-festivals-high-court.html

[13] தமிழ்.வெப்.துனியா, கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!, Webdunia, வெள்ளி, 21 ஜூலை 2023 (16:36 IST)

[14] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-highcourt-says-about-temple-festival-123072100054_1.html?amp=1

[15] நக்கீரன், யார் பெரியவர் என நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது” – நீதிமன்றம் அதிருப்தி, செய்திப்பிரிவு, Published on 21/07/2023 (16:32) | Edited on 21/07/2023 (16:52)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-festivals-are-held-prove-who-greatest-court-disapproves