Posts Tagged ‘சிலை’

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது: அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது[1]. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது[2], என்றார். இக்கதை ஜனவரியிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஊடக செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்[3]. இதற்கெல்லாம் என்ன பெரிய தொழிற்நுட்பம் தேவைப் படுகிறது என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

அலகில் பாம்பு இருக்கும் சிலை.
முன்பு பூ இருந்த சிலை, ஆனால் இது மரகத விக்கிரகம் இல்லை.

மயில் மூக்கில் இருந்தது பாம்பா, பூவா?: முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தானே சென்று பார்த்தார் எனும்போது, விவரங்களை அவர் அறிந்திருப்பார் என்றாகிறது. புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால், தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது[4]. இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும்,  அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது[5]. “புதிய சிலையை உருவாக்கலாம்,” என்பது திகைப்பாக இருக்கிறது அப்படியென்றால், ஸ்வர்ணம் எக்ஸ்போர்ட்ஸ் அச்சிலையை ஏற்றுமதி செய்ததாக கூறப் பட்டதை கண்டுகொள்ளவில்லையா?

போலீஸ் விசாரணையும், அறநிலையத் துறை அறிக்கைகளும் முரண்படுவது ஏன்?: தமிழக போலீஸார் மற்றும் அறநிலையத் துறை ஆளும் ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன. எனவே, ஒரே அரசின் இரு துறைகள், இருவேறான கருத்துகளை, விளக்கங்களை, விவரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், இந்த வழக்குகளில் 2004லிருந்தே, முரண்பட்ட, முன்னுக்கு முரணான வாதவிவாதங்கள், கருத்துகள், அறிக்கைக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. சிலை மாற்றப் பட்டது என்பதை ஒப்புக் கொண்டப் பிறகு, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், கைதுகள், ஜாமீனில் வெளி வருதல், மறுபடியும் பதவிகளில் அமர்ந்து கொள்ளுதல், ஆவணங்களை அழித்தல் என்றெல்லாம் நடந்து வருவது, சம்பந்தப் பட்ட குற்றமனப்பாங்கை (mens rea), குற்றம் செய்த நிலையை (culpability of mind and action), ஆதாரங்களை அழிக்கும் போக்கை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், உயர் அதிகாரிகள், அரசு, மந்திரிகள், முதலமைச்சர் என்று எல்லோருமே ஒன்றுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சி அளுக்கும் விசயமாகும். ஏனெனில், அது அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது போலிருக்கிறது. மேலும், குற்றம் செய்தவர்கள், அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்று இன்னும் ஆணவமாக, அகங்காரமாக, எதேச்சதிகாரத்துடன் செயல் படுவர். “பார்த்தியா, என்னை ஒண்ணும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது,” என்ற தோரணையில் மேன்மேலும் அநியாய காரியங்களில் செயல்படுவர்.

2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிப்பது: 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக காலந்தாழ்த்தி, வேண்டுமென்றே வழக்குகளை இழுத்தடித்துள்ளது தெரிகிறது. அதற்குள் பெயிலில் வெளியே வந்தவர்கள், கைதாகாமல் பெயில் வாங்கியவர்கள் நிச்சயமாக தமது அரசியல் தாக்கம், அதிகார பலம், பண பலம் முதலியவற்றை பிரயோகித்து, இருக்கு அத்தாட்சிகளை அழித்திருப்பர். திருமகள் 2100 ஆவணங்களை 2009மற்றும் 2013 ஆண்டுகளில் அழித்துள்ளார், என்பது தெரிகிறது. மயில் விக்கிரகம் சம்பந்தமான ஆவணங்களை திருமகள் அழித்ததை மூன்று இணை ஆணையர்களே தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களில் கொடுத்திருப்பதாக, போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியென்றால், அவர்களையும் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் என்று 04-03-2022 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன[6]. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்[7]. கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்[8]. இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[9]. பி.டி.ஐ பாணியில் இந்த வரிகள் மற்ற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன[10]. உக்ரைனுக்கு மற்ற விவகாரங்களுக்கு ஊதி ஊளையிடும் புலன் விசாரணை நிபுணர்கள் இவ்விசயத்தில் அப்படியே கமுக்கமாக சிலவரிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர்[11]. இந்த தனபாலும், அந்த தனபாலும் ஒன்றா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர், பிறகு இவர் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாற் என்று புரியவில்லை.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/missing-peacock-idol-buried-in-mylapore-temple-pond-police-report-filed-to-mhc/tamil-nadu20220301195013449

[2] மாலைமுரசு, கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலை கோவில் குளத்தில் புதைந்துள்ளதாக காவல்துறை தகவல்.!!, Muthu KumarMuthu KumarMar 1, 2022 – 17:30Updated: Mar 1, 2022 – 17:30.

[3] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Police-say-a-mysterious-peacock-statue-has-been-buried-in-the-temple-pond-at-the-Kabaliswarar-temple

[4] பத்திரிகை.காம், மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல், By A.T.S Pandian, March 1, 2022.

[5] https://patrikai.com/kapaleeswarar-temple-stolened-peacock-idol-buried-under-mylapore-temple-tank-tn-govt-information/

[6] தினமலர், கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலையை கண்டறிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு,  Added : மார் 03, 2022  22:34.

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2974651

[8]  தமிழ்.இந்து, தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல், செய்திப்பிரிவு, Published : 04 Mar 2022 06:53 AM; Last Updated : 04 Mar 2022 06:54 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/773776-kumbhabhishekham-1.html

[10] தினத்தந்தி, 1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல், பதிவு: மார்ச் 04,  2022 00:18 AM

[11] https://www.dailythanthi.com/News/State/2022/03/04001821/Minister-Sekarbabu-informed-that-this-year-Kumbabhishekam.vpf

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது– தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டது (4)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானதுதொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டது (4)

வீடியோ ஆதாரங்கள்சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கூறியதாவது[1]: “புன்னைவன நாதருக்கு திருப்பணியே நடக்கவில்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், புன்னைவன நாதர் சன்னதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. புன்னை வன நாதருக்கு நடந்த திருப்பணி யில் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் கலந்து கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எதையோ மறைக்க அல்லது யாரையோ காப்பாற்றுவதற்காக அறநிலையத் துறை அதிகாரிகள் இவ்வாறு கூறுகின்றனர். சிலைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. யாருக்கு விற்றனர், இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால், அற நிலைய அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுப்பதால், வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].

வழக்கு ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ள விவரங்கள்: இதற்கெல்லாம் எந்த விமர்சனமோ, விளக்கமோ தேவையில்லை.

  1. இந்த வழக்கில் மயிலாப்பூர் கோயிலில் இருந்த பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும்,
  2. அதுதொடர்பான ஆவணங்களை கூடுதல் ஆணையர் திருமகள் அழித்ததாகவும்
  3. அறநிலையத் துறையில் பணிபுரியும் 3 இணை ஆணையர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள தாகக் கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
  4. அதிலும் குறிப்பாக ஒரு இணை ஆணையர், பெண் அதிகாரி திருமகள் ஆவணங்களை அழிப்பதை கண்ணால் பார்த்ததாகவும் கூறியுள்ளார்
  5. புன்னை வன நாதருக்கு நடந்த திருப்பணி யில் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் கலந்து கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
  6. எதையோ மறைக்க அல்லது யாரையோ காப்பாற்றுவதற்காக அறநிலையத் துறை அதிகாரிகள் இவ்வாறு கூறுகின்றனர்.
  7. சிலைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  8. யாருக்கு விற்றனர், இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
  9. ஆனால், அற நிலைய அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுப்பதால், வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது,

2018ல் வழக்கு பதிவு செய்யப் பட்டாலும் அறநிலையத் துறை ஒத்துழைக்காமல் இருப்பது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னை வனநாதர் சன்னதியில் மிகவும் பழமை வாய்ந்த புராதன மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு சிலை தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புராதன சின்னமாக விளங்கக்கூடிய பழமையான மயில் சிலையை அகற்றி விட்டு அதற்கு பதில் வேறு சிலை அமைக்கப் பட்டுள்ளதாகவும், உண்மையான சிலை திருடப் பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக 2018 முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போன சிலை எங்கு இருக்கிறது என்பது தெரியாமலேயே உள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது[3]. மேலும் பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணையை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தமிழக அரசும், இந்துசமய அறநிலையத்துறையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்[4].

2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டது: மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது என்பதே திகைப்பாக இருக்கிறது. இதைப் பற்றி ஏன் விசாரணை, நடவ்டிக்கை எல்லாம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.  “அதிலும் குறிப்பாக ஒரு இணை ஆணையர், பெண் அதிகாரி திருமகள் ஆவணங்களை அழிப்பதை கண்ணால் பார்த்ததாகவும் கூறியுள்ளார்….” என்று நீதிமன்றம் 2018லேயே கூறியுள்ளது. வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சம்ப்ந்தப் பட்ட கோப்புகள், ஆவணங்கள் முதலியவை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அவற்றை அழிக்க முடியாது. ஆகவே கைதான இந்து அறநிலைய அதிகாரிகள் மறுபடியும் பணியில் அமர்த்துவது, அதே இடத்தில் வருவது என்பனவெல்லாம் ஆதாரங்களை அழிக்கத்தான். ஆகவே, கைதாகி, பெயிலில் வெளிவந்த  திருமகள் போன்ற அதிகாரிகள் நிச்சயமாக நியாயம், தருமம் என்று இல்லாமல், மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணாக இருந்தும், அவ்வாறான அதர்ம காரியங்களில் ஈடுபட்டு குற்றங்களை செய்துள்ளார். உண்மையில், வெட்கம், மானம், சூடு, சொரணை என்றெல்லாம் இருந்தால், இருந்திருந்தால், என்றோ ராஜினாமா செய்து விட்டு, செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய, காசிக்கு இல்லை மற்ற புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்றிருப்பார். ஆனால், எதுவும் இல்லை என்றதால், இன்னும் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்.

பிப்ரவரி 2022ல் மயில் சிலை குளத்தில் புதைக்கப் பட்டது என்றது: இதுதொடர்பாக நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது[5]. காணாமல் போன மயில் சிலை ஆகமவிதிகளின்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது[6]. இதையடுத்து கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி மயில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது[7]. இதற்காக 01-02-2022 அன்று போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், நீச்சல் வீரர்களுடன் கோவில் குளம் அருகில் கூடினார்கள். நீதிமன்ற உத்தாவு படி இந்த முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன[8]. இதற்காக 6 படகுகள் மற்றும் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் திடீரென குளத்தில் மூழ்கி மயில் சிலையை தேடும் பணி தள்ளி வைக்கப்பட்டது. வேறொரு நாள் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இன்னொரு நாள் இதேபோன்று திட்டமிடப்பட்டு மயில் சிலையை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] தமிழ்.இந்து, மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலைகள் எங்கே?- மூடி மறைக்கும் அறநிலைய அதிகாரிகள்; வழக்கு விசாரணை நீள்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தகவல், செய்திப்பிரிவு, Published : 18 Dec 2018 09:17 am; Updated : 18 Dec 2018 09:54 am.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/150246–3.html

[3] தமிழ்.சமயம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!, Manikandaprabu S | Samayam Tamil, Updated: 19 Jan 2022, 5:36 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/madras-hc-order-to-submmit-probe-report-on-mylapore-temple-pecock-statue/articleshow/88997692.cms?minitv=true

[5] .மாலைமலர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்தில் மயில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?, பதிவு: பிப்ரவரி 02, 2022 15:23 IST.

[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/02152309/3447339/Tamil-News-Mylapore-Kapaleeswarar-temple-peacock-statue.vpf

[7] புதியதலைமுறை, மாயமான மயிலாப்பூர் கோயில் மயில் சிலை: தெப்பக்குளத்தில் மறைக்கப்பட்டதா? தொடரும் விசாரணை, தமிழ்நாடு,    kaleelrahman Published :02,Feb 2022 08:56 AM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/128485/Mysterious-Mylapore-Temple-Peacock-Statue-Hidden-in-the-Teppakulam–Continuing-investigation

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் – பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, அவரின் பங்கு (2)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள்பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, அவரின் பங்கு (2)

முத்தைய ஸ்தபதி ஏற்கெனவே வழக்குகளில் மோசடிகளில் சிக்கியுள்ள நபர்: பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக எழுந்துள்ள புகாரில் பழனி கோயிலில் தொன்மையான உற்சவர் இருக்கும் நிலையில், பழைய சிலை அகற்றப்பப்படக் கூடாது என இந்திய தொன்மைச் சட்டத்தில் உள்ளது. மேலும் ஒரு உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் விதிகளை மீறி 2004-ம் ஆண்டு உற்சவர் சிலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.  200 கிலோ எடையில் பஞ்சலோகத்தால் ஆன சிலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டது[1]. பின்னர் சிலை செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது. ஆனால், தங்கம் பெறப்பட்டது, உபயோகப்படுத்தியது போன்ற விவரங்களில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றிற்கு முத்தையா தான் காரணம் என்று தெரிய வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்த வழக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது[3].

முத்தையா ஸ்தபதி யார்?: இந்து சமய அறநிலைய துறையின், ஸ்தபதி முத்தையா, 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்[4]. சென்னையில் வசித்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தொழில் அதிபரின் நட்பு கிடைக்க, முதல்வராக இருந்த, ஜெயலலிதாவிடம் முத்தையா அறிமுகமானார். தொடர்ந்து, அறநிலைய துறையின், ஆஸ்தான ஸ்தபதியாக முத்தையா நியமிக்கப்பட்டார். கோவில் சிலைகளை பாதுகாக்கும், ஸ்தானிகர்களிடம், ‘பல ஆண்டுகளாக, அபிஷேகம் நடப்பதால், சிலைகள் சேதம் அடைந்து விட்டன. புதிய சிலை செய்ய வேண்டும்’ என, அறிக்கை பெறுவார். பின், அதிகாரிகள் துணையுடன், புதியசிலைகள் செய்து, லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார்[5]. ஜெ., முதல்வராக இருந்த போது, 2000 -04ல், ‘பழனி கோவில் சிலை, விழும் நிலையில் உள்ளது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து நிகழும்’ எனக்கூறி, புதிய சிலை செய்துள்ளனர். அதில், 4.5 கிலோ தங்கம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஸ்தபதி முத்தையா மட்டும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட, பல இடங்களில், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்தபதி முத்தையா, மத்திய அரசிடம் இருந்து, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அந்த விருதை, திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.

தெய்வகுற்றங்களில் ஈடுபட்ட ஸ்தபதி: பத்ம விருது பெற்று பொறுப்புள்ள இவர், உண்மையாக, நாணயமாக இருந்திருந்தால் நிச்சயமாக இவர் இத்தகைய குற்றங்களில், மோசடிகளில், விக்கிரக கடத்தல், கள்ளத் தனங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார், சம்பந்தப் பட்டிருக்க மாட்டார் மற்றும் அந்த கடவுளே இவரை அவ்வாறு செய்திருக்க அனுமதித்து இருக்க மாட்டார். ஆனால், நிச்சயமாக இவரிடத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. தெய்வகுற்றத்தில் மற்றவர்களைப் போல இவரும் ஈடுபட்டிருக்கின்றார். இல்லையென்றால், இவரே, அவற்றைத் தடுத்திருக்கலாம் அல்லது ஸ்தபதி என்ற முறையில் ஆகம முறைகளை எடுத்துக் காட்டி நல்வழிகளை போதித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை, மாறாக குற்றவாளிகளுக்கு துணை போயிருக்கிறார் மற்றும் குற்றங்களிலும் ஈடு பட்டிருக்கிறார் என்று வழக்கு ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன. ஆகவே, திராவிடத்துவ நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு முதலியவை இத்தகைய ஸ்தப்திகளையும் குற்றம் செய்ய வழிகாட்டும், கும்பலோடு சேர வைக்கும், இந்துவிரோத காரியங்களில் ஈடுபட செய்யும் என்பது உண்மையாகிறது. பிறகு, இவர் எத்தனை சிற்பங்கள், பஞ்சலோக விக்கிரங்கள், கோவில்கள் உருவாக்கியிருந்தாலும், எந்த பிரயோஜனமும் இல்லை.

மூன்று சிலைகள் புதைக்கப் பட்டனவா, கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப் பட்டனவா?: ஆகம விதிப்படி, அகற்றப்படும் பழைய சிலைகளுக்கு பூஜை செய்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் துணையுடன் மூன்று சிலைகளும் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோயில் அதிகாரிகளிடம் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா விசாரணை நடத்தினார். இதில், கோயில்சிலைகள் மாயமானது உறுதிசெய்யப்பட்டது. சிலைகள் மாயமானது குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிலைகள் மாயமான காலகட்டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் டிசம்பர் 2017ல் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்[7].

இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் 1,600 ஆண்டுகள் தொன்மையானவை[8]. இதுபோன்ற புராதன சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, இந்த சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. புராதனமான இந்த சிலைகளை அகற்ற, கோயிலில் இருந்த பரம் பரை அர்ச்சகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் இருந்து நீக்கிவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்[9]. 2004-ல் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகளிடம் கேட்டபோது, ‘‘சிலைகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்கள் எது வுமே இல்லை. நான் அந்த சிலை களை பார்த்ததே இல்லை. போலீ ஸாரிடம் இருக்கும் ஆவணங்கள் தவறானவை. சிலைகள் மாய மானது பற்றி எனக்கு தெரியாது’’ என்கிறார். ஆகம விதிப்படி மண்ணில் சிலைகள் புதைக்கப்பட்டிருந்தால், எந்த இடத்தில் புதைக்கப்பட்டன என்ற விவரம் அறநிலையத் துறை யிடம் இல்லை”. இந்நிலையில் தான் வேணு சீனிவாசன், திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் முதலியோர் முன் ஜாமீன் மனு சமர்ப்பித்தனர்.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] தமிழ்.இந்து, பழனியில் கோயில் சிலை செய்ததில் முறைகேடு: பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கைது, செய்திப்பிரிவு, Published : 26 Mar 2018 06:41 PM; Last Updated : 26 Mar 2018 06:41 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/166193–1.html

[3] Madras High Court -J.Krishnamoorthy vs The Inspector General Of Police on 25 January, 2019; https://indiankanoon.org/doc/169285842/

[4] தினமலர், ஸ்தபதி முத்தையா ரூ.200 கோடி சொத்து குவிப்பு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ‘திடுக்’, பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018,23:01 IST..

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=1990040

[6] தினத்தந்தி, கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது, பதிவு: டிசம்பர் 17,  2018 05:00 AM

[7] https://www.dailythanthi.com/News/State/2018/12/17034136/In-the-Kapaleeswarar-temple-Action-in-peacock-statue.vpf

[8]  அதாவது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள், ஆனால், அக்காலத்தில் கபாலீஸ்வரர் கோவில், இங்கில்லை, கடற்கரையில் இருந்தது என்ற உண்மை மறுபடியும் போலீஸார் கூற்றுப் படியும் வெளி வருகிறது என்பதனை கவனிக்க வேண்டும்.

[9]  திராவிடத்துவ ஆட்சியினர், அதிகாரிகள் இவ்வாறு அர்ச்சகர்களை மிரட்டுவதை கவனிக்க வேண்டும். அதனால், கொஞ்சம்-கொஞ்சமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போர்வையில், இத்தகையை கொள்ளைகளுக்கு தோதுவாக ஒத்துழைக்கும் அர்ச்சகர்கள் உள்ளே வந்டு நிரப்பப் பட்டு விட்டால், இன்னும் ஒரு 30-40 ஆண்டுகளில் முழுவதுமாக கோவில்கள் திருடர்கள், கொள்ளையர்கள், கடத்தல்காரர்களின் கூடாரமாகி விடும்.

மயிலை கபாலீஸ்வர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் (1)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வர் கோவில்புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, 2004லிருந்து நடக்கும் சட்ட நடவடிக்கைகள், நீதி மன்ற வழக்குகள் (1)

கபாலீஸ்வரர் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபடுவது: நிச்சயமாக 2000 வருடங்களுக்கும் மேலான தொன்மையான கபாலீஸ்வரர் கோவில் பல காலங்களில் பலரால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது, வருகின்றது. ஜைனர்கள் இடைகாலத்தில், கடற்கரையில் இருந்த கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து இருந்ததை, அவர்களது கல்வெட்டுகள் காட்டுகின்றன[1]. அதே நேரத்தில், சோழர்களது நிவேதங்கள் கல்வெட்டுகளும் சிவனுக்கு கொடுத்த தானங்களையும் குறிப்பிடுகின்றன. துலுக்கர் மயிலையில் சில இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, உடல்களைப் புதைத்து, தர்கா கட்டிக் கொண்டு கலாட்டா செய்தனர். ஆற்க்காடு நவாப் இதற்கு ஆதரவு கொடுத்தான்[2]. 1523ல் போர்ச்சுகீசியர் கோவிலை இடித்த போது, இந்துக்கள் சில விக்கிரங்களை எடுத்து வந்து, தொலைவில் இப்பொழுதுள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்[3]. இப்பொழுது, திராவிடத்துவ, நாத்திக, பெரியாரிஸ்டுகளின் தாக்குதல்களில் கபாலீஸ்வரர் கோவில் உட்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில், அவரைப் போற்றி, போற்றிகள் சொல்லப் பட்டன. இப்பொழுது 2022ல் அவர்களுக்கே உரித்தான முறையில் இந்து அறநிலையத் துறை மூலம் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று தான், இந்த மரகத மயில் சிற்பம் காணாமல் போன விவகாரம், புகார்கள், கைதுகள் மற்றும் வழக்குகள். மரகத விக்கிரகம் (மரகதம் – எமரால்ட், Emerald) சாதாரணமாக 100-200 கோடிகள் என்று உலக சந்தையில் மதிப்பீடு செய்யப் படுகிறது.

புன்னை மரம் / விருக்ஷம், புன்னைவனநாதர், மயில் சிற்பம்: மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் ஸ்தல விருக்ஷம் புன்னை மரம் ஆகும். இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது.  அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அம்மனுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது. பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதி கபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின் போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது. இப்பொழுது அந்த மயில் சிற்பம் தான் இந்துவிரோத நாத்திகர்களால் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. பெரியாரிஸ, நாத்திக சித்தாந்திகள் ஆட்சிக்கு வருவதால், இந்து அறநிலையத் துறையில் அதிகாரிகளாக, ஊழியர்களாக வந்தால் என்னாகும், என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம். இந்நிலையில் தான் அத்தகைய நாத்திகர்களும் அர்ச்சகர் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, வேலை செய்ய உள்ளே வந்துவிடலாம் என்று வேறு சட்டத்தை வளைத்திருக்கிறார்கள்.

சம்பந்தப் பட்டவர்கள் மௌனம் காக்கின்றனர், ஒத்துழைக்க மறுக்கின்றனர் மற்றும் தம்மையும் மற்றவர்களையும் காக்க முயல்கின்றனர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று சிலைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். கபாலீஸ்வரர் கோவில் விவகாரத்தைப் பொறுத்த வரையில் இந்து அறநிலையத்துறையினர், அரசு அதிகாரிகள், கழகத்தினர், திராவிடத்துவவாதிகள், என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டிருப்பதால், இவ்வாறு மௌனம் காக்கின்றனர், ஒத்துழைக்க மறுக்கின்றனர் மற்றும் தம்மையும் மற்றவர்களையும் காக்க முயல்கின்றனர்., இதனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். திராவிடத்துவ ஆதரவுடன், இந்து அறநிலையத் துறையினர், கும்பாபிஷேகம் பெயரில் பழைய விக்கிரங்களை நீக்கி, போலி விக்கிரங்களை தயாரித்து வைத்து, விழாவை முடித்து வைக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், வகையில் ஆதாயம், பணம், பலன் கிடைப்பதால், அமைதி காக்கின்றனர். ஆனால், அந்த தொன்மை வாய்ந்த விக்கிரங்கள் என்னவாகின்றன என்பது மர்மமாகவே இருக்கின்றன. இங்குதான் சிலை கடத்தல் கும்பல்களுடன் இவர்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம் அல்லது தாமாகவே கூட அத்தகைய வேலைகளில் இறங்கியிருக்கலாம் என்றும் புலனாகிறது. இது ஒரு தேர்ந்தெடுத்த திட்ட வடிவ முறையாகி (modus operandi) செயல் பட்டு வருகிறது எனலாம். ஊடகங்களிலும் வெளிப்படையாக அத்தகைய விவரங்களும் வெளி வந்துள்ளன.

2004ல் கும்பாபிஷேகம் நடத்தப் பட்ட போது சிலைகள் மாயம் ஆனது: தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2004 ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் சேதம் அடைந்திருப்ப தாக கூறப்பட்டது. அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதியசிலைகள் வைக்கப்பட்டன[4]. “இந்த சிலைகள் சேதம் அடைந்துவிட்டன; புதிய சிலைகள் வைக்க வேண்டும்,” என, 2004ல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட, தற்போதைய ஹிந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், திருமகள், முடிவு செய்துள்ளார். இவருடன், முன்னாள் கமிஷனர், தனபால், ஆஸ்தான ஸ்தபதி, முத்தையா மற்றும் சில முக்கிய புள்ளிகளும் சேர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளனர்[5]. இரவோடு இரவாக, மரகத மயில் உட்பட, மூன்று சிலைகளையும் கடத்தியுள்ளனர். அறநிலையத் துறை சார்பில் இப்பணி மேற்கொள்ளப் பட்டது. ஆனால், கோயில் சிலைகளை மாற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 3 சிலைகளும் மாற்றப்பட்டன. மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.

2004லிருந்து வழக்குகள் இழுத்தடிப்பது ஏன்?: சிலைகள் மாற்றும் செய்ய சில அர்ச்சகர்கள், பக்தர்கள் எதிர்த்துள்ளனர் என்றால் அவ்விவகாரம், பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது. மேலும் சேதமடைததாகச் சொல்லப் படும் விக்கிரங்களும் புதைக்கப் பட்டன என்று கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள் என்றால். அவர்களுக்கும் விசயம் தெரிந்திருக்கிறது. இவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உண்மையினை கூற சொல்ல வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் அவ்வாறு நடக்கவில்லை, நடப்பதில்லை. மேலும் சம்பந்தப் பட்ட வழக்குகளும் இழுத்தடிக்கப் படுகின்றன. 2004 முதல் 2022 வரை, அத்தகைய வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது FIR பதிவு செய்யப் படுகிறது, கைது செய்யப் படுகிறார்கள் அல்லது கைதை எதிர்த்து அல்லது தடுக்க முன் ஜாமீன் மனு போடுகிறார்கள், அவ்வாறே பெயிலில் வெளியே வருகிறார்கள், கைதாகாமல் பெயில் பெறுகிறார்கள். இச்செய்திகள் எல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குற்றம் புரிந்தவர்கள், குற்றங்களை நடத்த, மாயமான விக்கிரங்கள் அவற்றின் விவரங்கள் வழக்குகளில் மூழ்கி, கிடப்பில் கிடக்கின்றன.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1]  ஏகாம்பரநாதன் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால், ஜைனர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே இருந்த போட்டி முதலியன தெரிந்த விசயமே.

[2]  உண்மையில் மயிலையிலுள்ள எல்லா நிலமும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது தான். இடைகாலத்திற்குப் பிறகு, 18-19ம் நூற்றாண்டுகளில் வரி வசூல் செய்ய ஆங்கிலேயர் மற்றும் நவாப்புகள் ஜில்லா, பிர்கா, தாலுகா எனெல்லாம் பிரித்துக் கொண்டார்கள். அதனால், அந்நிலங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகி விடாது.

[3]  கடற்கரையில் தான், கபாலீஸ்வரர் கோவில் வளாகம் இருந்தது. அதனால், இப்பொழுதுள்ள சாந்தோமில் உள்ள எல்லா கட்டிடங்களுமே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. 19-20ம் நூற்றாண்டுகளில் தமதாக்கிக் கொண்டனர்.

[4] தினமலர், மூன்று மாதம் தலைமறைவாக இருந்த திருமகள் கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018,22:52 IST

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2170214

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன – இவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்!

ஒக்ரோபர்4, 2021

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளனஇவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்!

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன: கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வுசெய்ய தொல்லியல் துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[1]. தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன[2]. இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை[3]. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் களவு போன வழக்கில், தொல்லியல் துறை ஆணையரும் 5-ஆவது பிரதிவாதியாக சோ்க்கப்பட்டார்[4]. அவற்றை கண்டறிந்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்களை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது[5]. இதன்படி, சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி, வேலூர் மண்டலத்தில் ரஞ்சித் சுபாஷினி உள்ளிட்ட 28 அலுவலர்களை கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[6]. ஒரு குழுவுக்கு 2 முதல் 4 நபா்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று இந்த குழுவினர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை,என்பதே அப்பட்டமான பொய்: 36,000 கோவில்களில் சுமார் 10 என்றாலே 3,60,000 சிலைகள் வரும், ஆனால், உண்மையில், பெரும்பான்மையான கோவில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் இருக்கின்றன. 100, 1000 கால் மண்டபங்களிலேயே 1000, 10,000 என்று சிலைகள் உள்ளன. தூண்கள் கொள்ளையடிக்கும் போது, அதனுடன் சிற்பங்களும் களாவாடப் படுகின்றன. தமிழகத்தில், தெரு, நெடுஞ்சாலைகள் என்ற பாதைகளில் பல லட்சக் கணக்கான மண்டபங்கள் உள்ளன. உண்மையில் அவை மண்டபங்கள் மட்டுமல்லாது, கொவிலையும் கொண்டிருக்கும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 300 ஆண்டுகளில், சாலைகளின் விரிவாக்கம், நகர விரிவாக்கம் போன்றவற்றால், லட்சக் கணக்கான மண்டபங்கள் மாயமாகி விட்டன. மறுபடியும் வேறு இடங்களில் வைக்கிறோம் என்ற சரத்து இருந்தாலும், லாரிகளில் அப்புறப் படுத்துவதோடு சரி, பிறகு, அவை என்னவாகின என்று தெரியாமல் உள்ள நிலை தான் உள்ளது. ஆனால், விஜிபி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில், பல கோவில் தூண்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆயிரக் கணக்கில் இந்தியாவை விட்டும் வெளியேறியுள்ளன. அதாவது, 100 ஆண்டுகளுக்கு குறைவான காலத்தைக் கொண்டது என்று சான்றிதழ் பெறப் பட்டு, ஏற்றுமதி ஆகியுள்ளன. இதற்கும், நமது நாட்டு தொல்துறை அதிகாரிகள், சரித்திராசிரியர்கள் முதலியோர் தாராளமாக உதவியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அவற்றிற்கு தொடர்புடைய சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களே அதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

இப்படி 24, 36, 48 என்று தொல்துறையினர் எப்படி ஆய்வு மேற்கொள்ள முடியும்?: ஒரு பக்கம் தொல்துறையில் ஆட்களே இல்லை, ஆள் எடுப்பதில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். பிறகு, இத்தனை ஆட்கள் எப்படி திடீரென்று இந்த வேலைக்குக் கிளம்பியுள்ளனர் என்று தெரியவில்லை.

இந்த குழுவில் சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள்[7]

  1. பாக்கியலட்சுமி,
  2. சுபலட்சுமி,
  3. வேலூர் மண்டலத்தில் ரஞ்சித்,
  4. சுபாஷினி,
  5. விழுப்புரம் மண்டலத்தில் காவியா,
  6. விக்டர் ஞானராஜ், விழுப்புரம் மண்டலம்
  7. திருச்சி மண்டலத்தில் சாய்பிரியா,
  8. பிரபாகரன், திருச்சி மண்டலம்
  9. சக்திவேல், திருச்சி மண்டலம்
  10. தஞ்சாவூர் மண்டலத்தில் தங்கத்துரை,
  11. உமையாள், தஞ்சாவூர் மண்டலம்
  12. காஞ்சிபுரம் மண்டலத்தில் லோகநாதன்,
  13. ஸ்ரீகுமார், காஞ்சிபுரம் மண்டலம்
  14. மற்றொரு சுபாஷினி, காஞ்சிபுரம் மண்டலம்
  15. மயிலாடுதுறை மண்டலத்தில் பாஸ்கர்,
  16. வசந்தகுமார், மயிலாடுதுறை மண்டலம்
  17. சேலம் மண்டலத்தில் வெங்க குரு பிரசன்னா,
  18. பரந்தாமன், சேலம் மண்டலம்
  19. கோவை மண்டலத்தில் நந்தகுமார்,
  20. ஜெயப்பிரியா, கோவை மண்டலம்
  21. சுரேஷ், கோவை மண்டலம்
  22. மதுரை மண்டலத்தில் பரத்குமார்,
  23. ரமேஷ், மதுரை மண்டலம்
  24. சிவகங்கை மண்டலத்தில் சுரேஷ்,
  25. அஜய்குமார், சிவகங்கை மண்டலம்
  26. சக்திவேல், சிவகங்கை மண்டலம்
  27. திருநெல்வேலி மண்டலத்தில் ஆசைதம்பி,
  28. பாஸ்கர், திருநெல்வேலி மண்டலம்
  29. காளீஸ்வரன், திருநெல்வேலி மண்டலம்
  30. ஹரிகோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி மண்டலம், ஆகியோர் உள்ளனர்[8].

பாதுகாப்பு மையங்களில் ஆய்வு: இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து இணைஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: “தொல்லியல் துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து, பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோயில்களில் சிலைகள் சரியாகஉள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறையால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையம், கோயில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்வதற்காக 28 அலுவலர்களைக் கொண்ட 12 குழுக்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, குழுக்களின் ஆய்வுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு இணைஆணையர்கள், உதவி ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வு தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் எழுகின்ற வினாக்கள்: நாத்திக அரசு,இப்படி திடீர்-திடீர் என்று ஏதோ அறிக்கை விட்டுக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

  1. தொல்லியல் துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள இவர்கள் யார், இவர்களுக்கு சிலைகளை ஆராய திறமை, அனுபம் உள்ளதா?
  2. இந்த ஆய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றால், யார் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்?
  3. ஒருவேளை சஸ்பென்ட் / கைது செய்யப் பட்ட அதிகாரிகள் மறுபடியும் அறநிலையத்துறையில் வேலை செய்து வருகிறார்கள். அத்தகைய அதிகாரிகள் மற்றும் அவர்களில் கூட்டாளிகள் தடுக்க முயற்சிப்பார்கள் போலும்.
  4. ஒரு வேளை, இத்தகைய ஆய்வு, ஆய்வு அறிக்கை என்று தயார் செய்து, 2021ல் என்ன உள்ளனவோ அவற்றை மட்டும் உள்ளன என்று அறிக்கைக் கொடுத்து, மாயமானவற்றை மறைத்து விடுவார்கள் போலும்.
  5. 2021 வரை, “கிளீன் சிட்” கொடுத்து விட்டார்கள் என்று கூட மார் தட்டிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு தப்பித்துக் கொள்ளலாம்.
  6. 12 குழுக்கள் – ஒரு குழுவுக்கு 2 முதல் 4 நபா்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். 12 x 2 = 24 அல்லது 12 x 4 = 48 என்று இவர்கள் என்ன ஆய்வு /ஆராய்ச்சி செய்யப் போகின்றனர்?
  7. தொல்துறையில் ஆட்களே இல்லை, ஆள் எடுப்பதில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். பிறகு, இத்தனை ஆட்கள் எப்படி திடீரென்று இந்த வேலைக்குக் கிளம்பியுள்ளனர் என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்தார்களா என்றும் தெரியவில்லை.
  8. கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும் என்றால், 36,000 கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன என்று என்ன ஆவணங்களை வைத்திருக்கின்றனர்?

© வேதபிரகாஷ்

04-10-2021


[1] தமிழ்.இந்து, சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா?- கோயில்களில் ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு: உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஆணையர் அறிவுறுத்தல், Published : 04 Oct 2021 03:11 AM; Last Updated : 04 Oct 2021 06:18 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/722761-statues-in-temples.html

[3] தினமணி, கோயில் சிலைகள்: ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு, By DIN  |   Published on : 04th October 2021 01:19 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/oct/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3711392.html

[5] மாலைமுரசு,  கோயில் சிலைகளை ஆய்வு செய்ய குழுதமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவு, webteamwebteamOct 3, 2021 – 11:47.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Team-to-inspect-temple-idols

[7] தினகரன், கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய 28 அலுவலர்கள் கொண்ட 12 குழு தொல்லியல் துறையில் அமைப்பு, 2021-10-03@ 00:38:07.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709564

தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

மார்ச்24, 2012

தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

தமிழகத்தில் பகுத்தறிவு, புத்தறிவு, புது-அறிவு என்றெல்லாம் பேசிக்கொண்டு தாலிகள் அறுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், தாலிகள் அறுக்க விழாக்கள் நடத்தியதால், மரத்துவிட்டன போலும் மனங்கள். ஆகையால் கோவில் கொள்ளை என்றால், ஏதோ இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சி. என்னே திராவிடத்தின் அலங்கோலம், கோவில் நிலங்களை திருட்டுத் தனமாக பட்டாப் போட்டு விற்பதில்[1] அலாதியான மகிழ்ச்சி. குடிசை மாற்று வாரியத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பர்[2]. கருணாநிதி[3]-ஜெயலலிதா[4] என்று மாறி-மாறி ஆட்சி செய்தாலும், இந்த கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியன நிற்பதில்லை. ஆக, இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற கொடிய கொள்ளையர்கள், குரூரத் திருடர்களையும் மிஞ்சி விடுவர் போலும்[5]! இதில் ரோசய்யா வந்தாலும், பங்கு கேட்காமல் விடுவதில்லை[6]. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை  கொள்ளையடிக்கப்படுகின்றன[7] என்று எடுத்துக் காட்டியுள்ளேன். டிசம்பர் 2009ல் ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலியவை கொள்ளையடிக்கப் பட்டன[8]. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றான் தமிழன் அன்று, இன்றோ குடியிருக்கும் இடத்தில் கோவில் வேண்டாம் என்பதோடு, இருக்கின்ற கோவில்களையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள்[9]. கருணநிதியே ஒரு விஜய நகரக் காலத்து மண்டபத்தை இடிக்கச் சொன்ன போது[10] படை தளபதி வீரமணி சும்மா இருப்பாரா, கோவில்களை இடி என்று முழங்கினார். மடாதிபதிகள் பலர் மிரட்டப் பட்டனர்; பொய் வழக்குகள் போடப்பட்டன; இளையபட்டங்களைத் தூண்டி விட்டு பிரிக்க சதி செய்தன; மடங்களினின்று மடாதிபதிகள் துரத்தப் பட்டனர்; மடங்கள் அபகரிக்கப் பட்டன[11]. சில மடங்களில் பிரிவினை ஏற்படவும் வழி வகுத்தன[12]. இதனால் பயந்து போன சில ஆதீனங்கள் கருணநிதியின் அடியையும் வருட ஆரம்பித்தன[13], இவை மொத்தமாக கீழ் கண்ட இணைத்தளங்களில் காணலாம்: https://atheismtemples.wordpress.com/

ஜனவரி 10, 2012 – புதுகை அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளை கோவிலுக்குள் புகுந்து மர்ம கும்பல் கைவரிசை ; தினமலர் – ஜனவரி 11, 2012: புதுக்கோட்டை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

இவ்விவரங்கள் பல இணை தளங்களினின்று பெறப்பட்டுள்ளன. எங்கிருந்து பெறப்பட்டன என்ற குறிபுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய தமிழகக் கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியவற்றைப் பார்க்கும் போது, அதில் ஒரு முறை காணப்படுகிறது.

விராலிமலை அடுத்த விராலூர் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை பாராமரிப்பில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விசேஷ நாளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வருவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி உற்சவ மூர்த்தி சிலைகள் மூலஸ்தானத்துக்குள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கலைநயமிக்க இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் உடையதும், பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜைக்கு பின் வழக்கம்போல் நடைகளை அடைத்துவிட்டு கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் பூஜைக்காக அர்ச்சகர் மணிகண்டன் கோவிலுக்கு வந்தபோது மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்ததைக்கண்டு திடுக்கிட்டுள்ளார்.  கருவறைக்குள் சென்று பார்த்தபோது பெருமாள் அருகில் இருந்த இரண்டு தேவியர் சிலைகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் இதுகுறித்து

பொதுவாக தமிழகத்தில் முன்னர், தாலியைத் திருட மாட்டார்கள். ஆனால், இப்பொழுது, தெருக்களில் நடந்து செல்லும் போது, வீட்டு வாசலில் குனிந்து கோலம் போடும் போது, கழுத்தில் இருக்கும் தாலியைப் பறித்துச் செல்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களது மனநிலை மாறியுள்ளது. அதற்குக் காரணம் என்ன?

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விராலிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு விரைந்த போலீஸார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் மூலஸ்தான மெயின் கதவுகளின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றபின் கருவறை கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமாள் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளை மோப்பம் பிடித்த நாய் மார்ஷல் விராலிமலை – மதுரை சாலையில் ஒரு கி.மீ., தூரம்வரை ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. இதுபோன்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. “இரண்டு நாட்களில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு சிலைகள் மீட்கப்படும்,” என பக்தர்களுக்கு டி.எஸ்.பி., கலியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.

ஜனவரி, 28, 2012 குரும்பூரில்கோயில்பூட்டைஉடைத்துஉண்டியல்கொள்ளைதினமலர் – ஞா, 29 ஜன., 2012: குரும்பூரில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:குரும்பூர் அருளானந்தபுரத்தில் முனியசாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் கோயில் பூட்டியிருந்தது. சம்பவத்தன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் குரும்பூர் சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.

பிப்ரவரி 19, 2012, பரஞ்ஜோதி அம்மன் கோயில், காஞ்சிபுரம்[14]: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள். நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

 பிப்ரவரி 24, 2012 – குலசேகரன்பட்டினம் கோவிலில் கொள்ளை போன அம்மன் சிலை மீட்பு: வாலிபர் கைது[15]: கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த நகை வியாபாரி முருகன். இவர் கோவை டவுன் ஹாலில் இருந்து சித்ரா செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் 1 கிலோ வெள்ளி நகைகளை வைத்திருந்தார்.பஸ் நவ இந்தியா அருகே சென்ற போது அவரிடம் இருந்த கைப்பையை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு இறங்க முயன்றார். சுதாரித்து கொண்ட முருகன் சத்தம் போட்டார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (26) என்று தெரிய வந்தது.மேலும் விசாரணையில் அவர் திருச்செந்தூர் குலசேகரன் பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவிலில் இருந்து பழமையான ஐம்பொன் சிலையை திருடி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.பாலசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் 4? கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 25, 2012 – சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில், தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

 மார்ச் 6, 3012- பெரியகுளம் அருகே காளியம்மன் கோவிலில் நகை, சிலைகள் கொள்ளை: போலீசார் விசாரணை[16]: தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை பூசாரி சந்திரசேகரன் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவுகள் உடைக்கப் பட்டு சாமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மற்றும் வெண்கல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சந்திரசேகரன் தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற “மர்ம” ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். சமீப காலமாக பெரியகுளம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மார்ச் 7, 2012 – விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை, கொடுங்கையூர், சென்னை[17]: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில்

மூன்று மாதங்களில் தமிழகத்தில் இத்தனை கோவில் கொள்ளைகள் நடக்கின்றன என்றால், அது நாத்திகத்தின் விளைவா அல்லது பகுத்தறிவாளர்களின் சதியா?

நவக்கிரக சன்னதி அமைக்கப்படுகிறது. தங்கராஜ் நாடார் திருப்பணியை செய்து வருகிறார். செவ்வாய்கிழமை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்சகரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்று விட்டார்.  புதன்கிழமை காலை அர்ச்சகர் சுப்பிரமணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கராஜ் நாடாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்ச் 8, 2012, ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்கோயில்: பெர்ங்குடி, சென்னை: சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது[18]. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 18, 2012: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு[19] – பதிவு செய்த நேரம்:2012-03-20 12:55:44: வாடிப்பட்டி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை இப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு கோயில் நிர்வாகி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 23, 2012 – மாரியம்மன் கோவில் – ஊத்துக்கோட்டை, திருப்பேர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம்[20]: கோவில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், திருப்பேர் ஊராட்சிக்கு உட்பட்டது பங்காருபேட்டை கிராமம். இங்கு, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, மக்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம்போல, கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கோவிலைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. கோவில் பூசாரி சுப்பிரமணி பென்னலூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சிலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

வேதபிரகாஷ்

24-03-2012


சட்டத்தின் பார்வையில் ராமர் – டாக்டர் இரா.நாகசாமி

ஒக்ரோபர்12, 2010

சட்டத்தின் பார்வையில் ராமர்டாக்டர் இரா.நாகசாமி

டாக்டர் இரா.நாகசாமி[1]: எல்லாரும் எதிர்பார்த்திருந்த அயோத்தி வழக்கில், மூன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்டனர். அத்தீர்ப்பில் இரண்டு முக்கிய முடிவுகள் வெளிவந்துள்ளன[2].

 

அவற்றில் முக்கிய முடிவு, பாபர் மசூதியின் கீழே ஒரு கோவிலின் இடிபாடுகள் உள்ளன என்பதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்[3]. பாபர், அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு மசூதியைக் கட்டினாரா என்ற கேள்வியே அர்த்தமற்றதாகி விட்டது[4]. ஆதலின், அதைப் பற்றி யாரும் இப்போது கவலைப்படவில்லை. அந்த இடம் வழிபாட்டில் இருந்த இடம் என்பதால், இஸ்லாமியருக்கு மூன்றில் ஒரு பங்கும், நிர்மோகி அகாராவுக்கு ஒரு பங்கும், ராம் லாலாவுக்கு ஒரு பங்குமாக பிரித்துக் கொடுக்க நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதுகுறித்து பல கருத்துக்கள் எழுந்துள்ளன.

 

“இத்தீர்ப்பு சட்டப்படி அளிக்கப்பட்டதல்ல; ராமர் உயிருள்ள மனிதர் போல கருதும் நம்பிக்கைக்கு இடமளித்து, ராம் லாலாவுக்கு ஒரு பங்கு எனக் கொடுத்துள்ளது சட்டத்துக்கு ஏற்புடையது அல்ல. நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து அளித்தது. தெய்வம் என்ற நம்பிக்கையை மனிதர் போல் கொண்டு தீர்ப்பளித்துள்ளது நம் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல. ஆதலால், சட்டப்படி மேல் முறையீடு செய்து, இதை தோற்கடிக்க வேண்டும்’ என்பது வாதம். “தெய்வத்துக்கு நிலம்; பிற பொருள்கள் உரிமை கொள்ள முடியுமா?’ என்று பல வன்மையான கட்டுரைகள் வருகின்றன[5].

 

தஞ்சையில் மாபெரும் கோவிலை கட்டி, ஆயிரம் ஆண்டுகள் ஆனதை பெரும் விழாவாக இப்பொழுது தான் முடித்திருக்கிறோம். இவ்விழாவையும், இதைக் கட்டிய ராஜராஜனின் புகழையும் வரிந்து கட்டி எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவன் பண்பாட்டுக்கு செய்துள்ள மகத்தான பணியை வாழ்த்தாத வாயில்லை.  ராஜராஜன் தான் தோற்றுவித்த தெய்வத்தை எவ்வாறு போற்றி வணங்கியிருக்கிறான் என்று இவ்வமயம் காணலாம். தன், தெய்வத்தை உயிருள்ள ஒரு பெருமகனை எவ்வாறு காண்பானோ அவ்வாறு தான் கண்டிருக்கிறான். அவன், தன் கோவிலில் எழுதியுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் சட்டப்படி பதிவான பத்திரங்கள் தான். அவன், தன் தெய்வத்துக்கு வழிபாட்டுக்கு, பிற செலவுகளுக்கும் ஏராளமான நிலங்களும், ஊர்களும் அளித்து அவற்றை துல்லியமாக எழுதி வைத்துள்ளான்.

 

அவற்றில் அவன், “இராஜராஜீச்வரம் உடைய பரமசுவாமிக்கு நாம் கொடுத்தது’ என்று தெளிவாக எழுதியுள்ளான். நிலம் கொடுத்தது மட்டுமல்ல, அணிகலன்கள் கொடுத்தது, சமையல் கலங்கள் கொடுத்தது என என்னென்ன கொடுத்தானோ, அத்தனையையும் தனித்தனியாக, “அவருக்கு கொடுத்தது’ என்றே எழுதியுள்ளார். அத்துடன், அந்த தெய்வத்தை, “உடையார்’ என்றும் தவறாது கூறுகிறான். அதாவது, நிலம், அணிகலன் என எல்லாவற்றையும் உடையவர் அவர் என்று கூறுகிறான்.  ராஜராஜன் பின்பற்றிய சட்டப்படி கோவிலில் உறையும் தெய்வம் உயிருள்ள மனிதர் போலவே கொள்ளப்பட்டுள்ளது என தெள்ளத் தெளிவாக குறித்துள்ளான்[6].

 

இது, ஆயிரம் ஆண்டு பண்பாடு. இது ஏதோ ராஜராஜன் தோற்றுவித்த மரபு அல்ல. அவனுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நிலவிய சட்ட மரபு தான்[7]. பல்லவர், பாண்டியர், சோழர் விட்டுச் சென்றுள்ள சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் தான்.  அவை, அனைத்திலும் தெய்வத்தை மனிதர் போல் பொருள் கொள்ளும் தத்துவமாகத்தான் கருதப்பட்டுள்ளது. ராஜராஜனுக்குப் பின்னரும் இன்று வரை கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் அனைத்தும் அந்தந்த தெய்வத்துக்கு கொடுக்கப்பட்டவை தான். பல்லாயிரம் கல்வெட்டுகள் உள்ளன.

 

வெள்ளைக்காரர்கள் காலத்திலும் கோவில் தெய்வம் பொருள் கொள்ள முடியுமா? என்ற வாதம், நீதிமன்றங்களில் வந்துள்ளன. வெள்ளைக்கார நீதிபதிகளும், சட்டத்தை ஆய்ந்து, தெய்வங்களுக்கு பொருள் கொள்ளும் உரிமை உள்ளது என்பதை பல வழக்குகளிலே நிரூபித்து தீர்ப்பு கூறியுள்ளனர்.  படாதாகூர், சோடாதாகூர் என்ற வழக்கு ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றுள்ளன. அவற்றில் எல்லாம் இந்த நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும், செப்பேடுகளும், வெள்ளைக்காரன் நீதியும் கூட இம்முடிவுக்கே வந்துள்ளன.

 

அலகாபாத் நீதிபதிகள் நீதி முறை தெரியாதவர் அல்ல. பல தீர்ப்புகளையும் ஆய்ந்து, சான்றுகளையும் அறிந்தோர். ஆதலின் அவற்றை ஆதாரமாகக் கொண்டு அளித்த தீர்ப்பு, சரியான, சட்டப்படி நேர்மையான தீர்ப்பே. வரலாறும், அண்மைக் கால தீர்ப்பும், அதையே காட்டுகின்றன. நம்பிக்கையின் பேரில் அளிக்கப்பட்ட தீர்ப்பல்ல. அந்நீதிபதிகள் வரலாற்று நோக்கிலும், சட்ட நோக்கிலும் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.ஆதலின், சட்டத்தின் பார்வையில், ராம் லாலாவுக்கு கொடுக்கப்பட்ட நிலம் சரியே.

 

டாக்டர் இரா.நாகசாமி


[1] டாக்டர் இரா.நாகசாமி – முந்தைய தமிழ்நாட்டு மாநில தொல்துறையின் இயக்குனர், தொல்துறை நிபுணர், சரித்திர ஆசிரியர். குறிப்பாக பத்தூர் நடராஜர் சிலை / விக்கிரகத்தை கடத்திச் சென்று, இங்கிலாந்தில் விற்றபோது, லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி, விக்கிரகத்தை அடையாளங்காட்டி மீட்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். அப்பொழுது லண்டன் நீதிமன்றத்தில், சிலை / விக்கிரகம், சட்டப்படி, ஒரு நபர்தான் ஆகவே, அவர், அவருடைய கோவிலுக்குச் சொந்தமானவர். ஆகவே, அவர் கோவிலுக்குத்தான் ஒப்படைக்க வேண்டும். அதாவது, கோவில் விக்கிரகத்திற்குச் சொந்தமானது, விக்கிரகம் கோவிலுக்குச் சொந்தமானது. அதுபோலத்தான், சட்டப்படி அயோத்தி நிலம் ராமருக்குச் சொந்தமானது, ராமருக்கு அயோத்தி நிலம் சொந்தமானது.

[2] தினமலர், சட்டத்தின் பார்வையில் ராமர்டாக்டர் இரா.நாகசாமி, பதிவு செய்த நாள் : அக்டோபர் 10, 2010,23:49 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 12,2010,02:18 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=103771

[3] முழு தீர்ப்பு படிக்கக் கிடைப்பதால், அதைப் படித்து மற்றவர்கள் கருத்து சொல்லவேண்டும். ஆனால், பலரும், படிக்காமலேயே, தீர்ப்பு பற்றி குறைகூறுவது சரியில்லை.

[4] அதாவது அந்த பிரச்சினை, ஆதாரங்களின் மீதுள்ள நிலையில், கோவில் உள்ளது என்பதனால், அந்த சர்ச்சையை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

[5] சட்டப்படி விக்கிரகம் என்பது ஒரு நபர், அவருக்கு சொத்து முதலியவை உரிமையாக வைத்திருக்கலாம், சடங்குகள், விழாக்கள் நடத்தலாம்…….எல்லா உரிமைகளும் உண்டு. அந்த சட்ட உரிமைகளை மறுப்பதுதான், சட்டவிரோதமானது.

[6] முன்னர் குறிப்பிட்டப்படி, விக்கிரகம் ஒரு சட்டாப்பூர்வன்மான நபர், ஆகவே, அவர் சொத்தை வைத்துக் கொள்ளலாம், அனுபவிக்கலாம். மற்றவர்கள் அதை / அவற்றை கையாட நினைத்தால், கொள்ளையடித்தால், அவரது இருப்பிடத்தை / கோவிலை இடித்தால் வழக்குப் போடலாம், சட்டப்படி, திரும்ப தனது சொத்தைக் கேட்டுப் பெறாலாம்.

[7] சட்ட மரபு என்று அழகாக விளக்கியுள்ளார். ஏனெனில் சட்டமும் மனிதனால் ஒருவாக்கப்பட்டதே. காலங்காலமாக இருக்கும் சட்ட-சம்பிரதாயங்களை அனுசரித்தே சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

விக்கிரங்கள், காதர்பாட்சா, ஜஸ்டின்: நாத்திக-செக்யுலார் அரசு!

ஓகஸ்ட்20, 2010

விக்கிரங்கள், காதர்பாட்சா, ஜஸ்டின்: நாத்திக-செக்யுலார் அரசு!

ஐபொன் விக்கிரங்களை சிலைகள் என்பானேன்? தமிழில் சிலை, விக்கிரகம் என்ற சொற்களுக்கு பொருள் வித்தியாசம் உள்ளது. சிலைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். கோவிலில் பூஜிக்கப்படக்கூடிய விக்கிரங்கள் இருக்கிம். அவை பெரும்பாலும் ஐம்பொன் உலோகத்தினால் செய்ய்யப்பட்டவையாக இருக்கும். ஆகவே ஊடகங்கள், விக்கிரங்களை சிலைகள் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

திருவையாறில் திருடியவர்கள் சென்னையில் கைது: இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் இயக்குனர் (ஏடிஜிபி) டோக்ரா, ஐ.ஜி. ராஜேந்திரன் மற்றும் எஸ்.பி. ராதிகா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]:  “சிலை திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்ஸ் பெக்டர் காதர்பாட்ஷா, சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் மெரினா கடற்கரையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது உழைப்பாளர் சிலை அருகே இரண்டு பேர் சந்தேகிக்கப்படும்படி நடமாடுவது தெரியவந்தது. அவர்களிடம் பை ஒன்றும் இருந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது அவர்கள் வைத்திருந்த பையில் ஐம்பொன் சாமி சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சாமி சிலைகளை கொள்ளை அடித்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

ஐம்பொன் விக்கிரங்களைத் திருடும் ஜஸ்டின், ஆல்ரின்: “அவர்களில் ஒருவர் பெயர் ஜஸ்டின், லால்குடியைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஆல்ரின் பிரபு, அரியலூரைச் சேர்ந்தவர். இந்த இருவரும் சிலை திருடி விற்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். புதுக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலில் இவர்கள் கைவரிசை காட்ட முயன்று பின்னர் சூழ்நிலை சரியில்லாதததால் அதனை கைவிட்டனர். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தில்லைஸ்தானம் எனும் ஊரை தேர்வு செய்தனர். இந்த ஊரில் உள்ள கிரிதபுரீஸ்வரர் ஆலயத்தில் பின்புறமாக மரத்திலிருந்து கயிறு கட்டி உள்ளே இறங்கி பூட்டை உடைத்து அங்கிருந்து நடராஜர் உள்பட 6 சாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது இவர்களோடு மேலும் 2 கூட்டாளிகள் இருந்தனர். கொள்ளையடித்த சாமி சிலைகளை புரோக்கர் மூலம் விற்க முயன்றவர்கள், காவிரி ஆற்றில் அதனை புதைத்து வைத்தனர். இதனிடையே, அம்மன் சிலையை கூட்டாளிகளில் ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டார். இரண்டு சிலைகளை விற்க முயன்றபோது மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவற்றை சாக்கடையில் வீசி விட்டனர். பிரதோஷ அம்மன் சிலையை புரோக்கர் மூலம் விற்பதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில்தான் தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவிரி ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் சந்திரசேகர் ஆகிய சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

ஐம்பொன் சிலைகள் ஆன்மீக அடையாளமாக விளங்குவதோடு நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பறை சாற்றுகின்றன: “ஐம்பொன் சிலைகள் ஆன்மீக அடையாளமாக விளங்குவதோடு நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பறை சாற்றுகின்றன. இவற்றை திருடி விற்க முயலும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 7 சிலை தடுப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன”, இவ்வாறு அவர்கள் கூறினர். “சிலைகளை திருடுவது பொருளாதார குற்றம் மட்டுமல்ல; கலாசாரத்தின் மீதான தாக்குதல். சிலை திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா தெரிவித்தார்[2].


[1] மாலைச்சுடர், ரூ.25 லட்சம் சிலைகள் மீட்பு, Friday, 20 August, 2010   01:25 PM

http://www.maalaisudar.com/newsindex.php?id=35187%20&%20section=1.

[2] தினமலர், சிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு, ஆகஸ்ட் 20, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=66581

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன (2)

ஓகஸ்ட்3, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை  கொள்ளையடிக்கப்படுகின்றன (2)

சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53938

Idol-theft-regulat-in-TN

Idol-theft-regulat-in-TN

சென்னை, ஆகஸ்ட் 03,2010: மதுரை, நெல்லை பகுதிகளில் திருடிய சாமி சிலைகளை விற்க முயன்றவர்களை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிலை திருட்டு தடுப்புப்பிரிவு தனிப்படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நிற்றுக் கொண்டிருந்த மருதுபாண்டி, ரவிச்சந்திரன் கைப்பைகளை சோதித்தனர். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருடப்பட்ட ஒரு அடி அம்மன் உலோக சிலை மற்றும் கேரளாவிலிருந்து கொண்டு வந்த பள்ளிகொண்ட பெருமாள் சிலை இருந்தது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் பிடிப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இச்சிலைகளை விற்க முயன்ற புரோக்கர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.