Archive for the ‘அரோகரா’ Category

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் – இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

மார்ச்24, 2022

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா 22-03-2022 அன்று நடந்தது[1]. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்[2]. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்[3]. காளிகாம்பாள் கோவிலில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. ஆனால், “முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்”, என்ற தலைப்புடன் தினகரன் நாளிதழில் சிறியதாக செய்தி வெளிவந்துள்ளது[4]. “முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தன. அருகில், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அறநிலயத்துறை ஆணையர் குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.” தமிழ் முரசு என்ற நாளிதழிலும் இச்செய்தி வந்துள்ளது[5]. முரசொலியில் முழுவதுமாக செய்தி வந்துள்ளது[6].

பக்தி பரவசத்துடன் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது[7]: “குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் முன்னிலையில் காளிகாம்பாள் கோவிலில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்அமைச்சர் அடுத்த 2 வாரங்களில் தொடங்கி வைக்க உள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான பிரச்சினை குறித்து இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமலும் இறைவனை மகிழ்ச்சியோடு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்குவது துறையின் நோக்கமாகும்,” இவ்வாறு அவர் பேசினார். ஒரு வேளை, துர்கா ஸ்டாலின் உத்தரவு கொடுத்திருப்பார் போலும்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது[8]: “காளிகாம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடபெருவிழா கோலாகலமாக பக்தி உணர்வுடன் இன்று நடைபெற்று இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் சுமார்  2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள். ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடந்து வருவதுடன், கோவில் விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், திருப்பணிகள், கோவில் நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றி வருவதை நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறோம்,” என்றார்[9].

தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசியதாவது: “இந்து சமய அறநிலையத்துறை புதிதாக தொடங்கி உள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது. கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்து பாதுகாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறநெறி பாடசாலை தொடங்க முயற்சி எடுத்துள்ள முதல்அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்,”  இவ்வாறு அவர் பேசினார்.

500க்கும் மேலான பக்தர்கள் பால்குடம் எடுத்தது: முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈவேரா நாத்திகத்தில் ஊறி, பெரியாரிஸ போதையில் நனைந்து, இந்துவிரோத பேச்சுகளைப் பேசி, நெற்றியில் விபூதி என்றெல்லாம் வைத்தால் துடைத்தெறியும் ஸ்டாலினுக்கு எப்படி பால்குடம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு, இரண்டு மடாதிபதிகள் தலைமைத் தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மதுரை ஆதீனம் திமுக ஆதரவாக இருந்தார். இப்பொழுதைய ஆதீனம் இந்து, தாமரை மலர வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்..

கூடிய சீக்கிரத்தில், இந்து அறநிலையத் துறை, “ஸ்டாலின் போற்றும் துறையாக மாறப் போகிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், திக, வீரமணி போன்றோரும், இந்துத்துவ வாதிகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. சேகர் பாபு, தன்னை இந்து என்று காட்டிக் கொண்டு, அறநிலையத் துறையை ஒட்டு மொத்தமாக திமுக ஆதரவு கோஷ்டிகளை நிரப்பி, கோவில் சொத்து, குத்தகை, வாடகை என்று எல்லாவற்றையும் சுரட்ட திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதனால், கோடிக் கணக்கில் சொத்துக்களைக் கொண்ட மடாதிபதிகளைப் பிரித்து, திட்டத்தை அமூல் படுத்தி கொள்ள செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளன. இத்தகைய மடாதிபதிகள், திராவிடத்துவ போதையில் போற்றி………………….போற்றி அகவல் பாடப் போகிறார்கள்! முன்னால் ஒரு தடவை கருணாநிதிக்கு செய்தார்கள். முட்டாள் இந்துக்கள்,……..பிரஹஸ்பதி இந்துத்துவ வாதிகள்,……மற்ற காவி இத்யாதிகள்,……………….மேகதாது, டாஸ்மாக், ………….என்று பேசி காலந்தள்ளப் போகிறார்கள்! ஸ்டாலினுக்கு அரோகரா! வேல் பிடித்தவனுக்கு அரோஹரா!!!!!!! கருணாநிதி மைந்தனுக்கு அரோஹரா!!!!!!! முழக்கங்களும் அதிகமாகும்.

©  வேதபிரகாஷ்

24-03-2022


[1] தினத்தந்தி, காளிகாம்பாள் கோவிலுக்கு ரூ.2½ கோடியில் வெள்ளித்தேர்: ‘இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு,” பதிவு: மார்ச் 23,  2022 16:00 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/23160028/Rs-24-crore-silver-for-Kalikambal-temple-Praise-for.vpf

[3] தினகரன், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், 2022-03-22@ 20:06:00.

[4] தினகரன், முதல்வர் பிறந்தநாள் பாகுட ஊர்வலம், நகரம், சென்னை 23-03-2022, பக்கம்.4.

[5]  தமிழ்முரசு, சென்னை 22-032022, பக்கம்.4

[6]  முரசொலி, 22-03-2022, பக்கம்.11.

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=751780

[8] மாலைமலர், காளிகாம்பாள் கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பில் புதிய வெள்ளித்தேர்அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார், பதிவு: மார்ச் 22, 2022 15:01 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2022/03/22150127/3604654/tamil-news-minister-sekhar-babu-started-new-velli.vpf