Archive for the ‘ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில்’ Category

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

தொல்லியல்  துறை நிர்வாகம் சிறப்பாக இருக்குமா?: ”அப்படியும் சொல்ல முடியாது. முன்பெல்லாம் தொல்லியல் துறையில் உள்ள அனுபவம் மிக்க நிபுணர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேலைகளும் நிதானமாக நடந்தது. ஆனால், தற்போது கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.  ஒதுக்கப்படும் நிதியை, நடப்பு நிதியாண்டுக்குள் செலவழித்து விடவேண்டும் என்பதற்காக வேகவேகமாக வேலை செய்து கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரியகோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒப்பந்தம் ஆந்திராவில் உள்ள கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ராஜராஜசோழனுடைய நான்கு கல்வெட்டுத் தூண்களை உடைத்துவிட்டனர். இதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. 

முஸ்லிம்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்: 16 -ம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து நம் கோயில்கள் பலவற்றை இடித்தனர். நம் வரலாறுகளை அழித்தனர். அவர்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.  நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின் நிதர்சனமான சாட்சியங்களாகவும், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் நம் கோயில்களைப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கும் விட்டுவைக்க முடியும். நம் கலை, கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யமுடியும்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

2019ல் விடுத்த பக்தர்களின் கோரிக்கை: நாகநாதசுவாமி கோயிலில் பழமைமாறாமல் திருப்பணி செய்ய தமிழக தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் முடிவு செய்து அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு ரூ.35 லட்சத்தில் துவங்கியது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சை சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பணியை துவங்கும்போது இந்த கோயில் சாலையில் இடையூறாக உள்ளதால் இடிக்க வேண்டுமென அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்[1]. அப்போது பழமையான கோயிலை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் வரலாற்று ஆய்வாளர்கள், சிவனடியார்கள் முறையிட்டனர். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளனர். கோயில் திருப்பணியை விரைவில் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்[2]. இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிகுடில் சுவாமிகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது[3]: “…………இந்த இடம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், இடையூறாக உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தப்போவதாகவும் அறிகிறோம்.………………… கடந்த முறை இந்த சாலை அகலப்படுத்தப்பட்ட போதும் இதுபோன்ற வகையில் ஏற்கெனவே இருந்த பழமையான மதில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்ததாரர்கள் தான் தனது சொந்த செலவில் மீண்டும் புதிதாக வடக்குப் பகுதி மதிலை கட்டிக் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் மதில் இடிக்கப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக யாரும் தடுக்க முடியாமல் போய்விட்டது. ……… சுமார் 1000 ஆண்டுகளை கடந்தும், நமது பாரம்பரியத்தை பறைசாற்றியும் கல்வெட்டுகளால் பழம்பெருமைமிக்க வரலாறுகளையும் சான்றுகளுடனம் உள்ள இக்கோவிலை பாதுகாக்க வேண்டும் ……………….”  என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

2021ல் பக்தர்களின் கோரிக்கை:  இந்த கோவிலை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமக திருவிழாவின்போது கருங்கற்களை பிரித்தனர்[5]. ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிலைகளை தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து தனிகொட்டகை அமைத்து அங்கு பாதுகாப்பாக வைத்தனர்[6]. அதன் பின்னர் கோவிலில் திருப்பணிகள் செய்ய தொடங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது செடி, கொடிகள் மண்டி, புற்கள் முளைத்து புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலில் கோபுரம் மற்றும் மதில் சுவர்களில் செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆனதால் திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும். முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2014லிருந்து இக்கோவிலில் நடந்தவை[7]: பின்னர், இந்த ஆலயம் அரசு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்று பக்தர்கள் மன்றமான ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சுட்டிக்காட்டினார்[8]. இதையடுத்து, சுமார் ₹32 லட்சம் செலவில் கோயிலை புதுப்பிக்க மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியது மற்றும் HR&CE துறை பணியை மேற்கொண்டது. “2014ல் பாலாலயம் நடத்தப்பட்டு, தெய்வ விக்கிரங்ங்கள் தற்காலிகக் கொட்டகைக்கு மாற்றப்பட்டு, புதுப்பித்தல் தொடங்கியது. ஆனால் ஒப்பந்ததாரருக்கு தேவையான நிபுணத்துவம் இல்லாததால், கோவில் கிட்டத்தட்ட இடிக்கப்பட்டது. அகற்றப்பட்ட கற்களுக்கு சரியான எண்கள் போடப்படவில்லை. அவை சிதறிக் கிடக்கின்றன,” என்று சுவாமிகள் கூறுகிறார். “கோயிலை ஆய்வு செய்த யுனெஸ்கோ குழுவினர் பணியின் மீது அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள கோவில்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலுடன் கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே. சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இந்தக் கோயிலில் தமிழ்க் கூத்துக்கான தனித்துவம் உட்பட பழமையான கல்வெட்டுகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் திருவடிக்குடில் சுவாமிகள் கேட்ட கேள்விக்கு, கும்பகோணத்தில் உள்ள மனிதவள HR& CE துறை, யுனெஸ்கோ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தொல்லியல் துறை மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. “நாங்கள் சமீபத்தில் கோவிலை சீரமைக்க கோரி நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டினோம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு கூட திட்டமிட்டோம், ஆனால் தொற்றுநோய் காரணமாக அதை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. புதிய அரசாங்கத்தின் மாநில பட்ஜெட்டில் கணிசமான ஒதுக்கீட்டைப் பெற்ற தொல்லியல் துறை, இந்த பழமையான கோவிலை பாதுகாக்க விரைவில் புதுப்பிக்கும் என்று நம்புகிறோம்,” என்று சுவாமிகள் கூறினார்.

2002 வரை இக்கோவில் விவகாரம் மாறாமல் இருப்பது: 2022ல் இப்பொழுது, ஶ்ரீரங்கம் நரசிம்மன், இக்கோவிலுக்குச் சென்று, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கோவில்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல், தொடர்ந்து வழக்குகள் போட்டு, நிலைமையை எடுத்துக் காட்டுதல் என்று சிறப்பான பணியை செய்து வருகிறார். ஆக, இத்தனை ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து, அக்கோவில் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுக் கொன்டிருப்பதை அவரது விளக்கத்திலிருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில், சோழர்களைப் பற்றி லவ்-ஹேட் / விருப்பு-வெறுப்பு அரசியல் தான் நடந்து கொன்டிருக்கிறது. ஒரு வகையான அத்தகைய முரண்பாட்டை சித்தாந்தம் ஆக்கி, அதையே அவ்வப்பொழுது பேசுவதும், எழுதுவதும், இப்பொழுது இணைதளங்களில் தமக்கு விருப்பமான வகையில் பதிவுகள் செய்வது,  வீடியோக்கள் போடுவதும் வழக்கமாகி விட்டது. அதையே வியாபாரமாக்கி, வணிகமாகவும் மாற்றி விட்டனர். அத்தகைய நிலையில், ஏதோ டிவி பட்டி மன்றங்கள், வாத-விவாதங்கள் போன்றாகி, பொழுது போக்கு அம்சமாகி விட்டது. படித்து-கேட்டு-ரசித்து மறந்து விடும் நிலைக்கும் போய் விட்டது.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினகரன், உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி துவங்காவிட்டால் போராட்டம், 06:46 am Jun 14, 2019 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/941127

[3] தினமணி, மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலை அகற்ற ஆட்சேபனை, By dn  |   Published On : 09th May 2013 03:42 PM  |   Last Updated : 09th May 2013 03:42 PM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/may/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-676406.html

[5] மாலைமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய பக்தர்கள் கோரிக்கை, By மாலை மலர்30 ஜூன் 2021 2:21 PM (Updated: 30 ஜூன் 2021 2:21 PM)

[6] https://www.maalaimalar.com/devotional/worship/2021/06/30142128/2782559/Temple-Renovation-devotees-request.vpf

[7] The Hindu, Heritage activists for resumption of Manambadi temple renovation, SPECIAL CORRESPONDENT,  TIRUCHI AUGUST 18, 2021 20:01 IST; UPDATED: AUGUST 19, 2021 08:28 IST

[8] https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/heritage-activists-for-resumption-of-manambadi-temple-renovation/article35981995.ece

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

UNESCO குழு மே முதல் ஜூன் 2017 வரை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை  அண்மையில்  வெளியிட்டது: கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல… நிர்வாக மையங்களாகவும், கல்விக் கூடங்களாகவும் விளங்கியுள்ளன.  நம் நாகரிகமும், பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக் கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக மிஞ்சுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் கோயில்களை பாதுகாப்பதில் நமக்கிருக்கும் அலட்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும்  குழு,  தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் 2017 வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவுகளை அண்மையில்  வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. பழம் பெருமை மிக்க கோயில்களில் தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் கோயில்களின் ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[1].  யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோயில்களில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலும் இடம் பெற்றிருக்கிறது[2].    

மானம்பாடிநாகன்பாடிவீரநாராயணபுரம் இருக்கும் இடம்: கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிற்றூர்தான் மானம்பாடி. இங்குள்ள இறைவன், நாகநாதசாமி எனஅழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் இவரது பெயர் கைலாச முடையார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் வணிக தலமாக விளங்கியது. நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் மானம்பாடி என மருவியது. இந்த ஊர் வீர நாராயணபுரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்குதான் இருக்கிறது நாகநாத சுவாமி கோயில். இது, 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோயில் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.  காவிரி நங்கையின் அரிய சிற்பம் ஒன்று இந்தக் கோயிலில் இருக்கிறது.

2017ல் கோயிலைப் பற்றி ...விகடன் ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசியது:  பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயிலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். “இந்தக் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் பற்றியும் அவனது பேரன் குலோத்துங்கச் சோழன் பற்றியும் ஒன்பது கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. எங்குமே காணக் கிடைக்காத அரிய சிற்பங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், காவிரித் தாய் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பமும் நடராஜப் பெருமானின் திருவடிகளுக்கு அருகில் ராஜேந்திர சோழன் குடும்பத்துடன் இருப்பது போன்ற சிற்பமும் ராஜேந்திர சோழனின் ஒன்றரை அடி உயர உருவச் சிற்பமும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்தக் கோயில் நெடுங்காலமாக சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது. இதைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல் துறையின்  அப்போதைய இயக்குனர் நாகசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கோயிலைப் பார்வையிட்டு தொல்பொருள் துறையின்  ஸ்தபதிகளைக் கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்புக்கு வந்த இயக்குநர்கள் யாரும் கோயிலைக் கண்டுகொள்ளவே இல்லை.

நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றி கோவிலை இடிக்க முற்பட்டது: ‘இந்தக் கோயில் தொல்பொருள் துறைக்குச் சொந்தம்’ என்று  அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. மற்றுமொரு சிக்கலும் இந்தக் கோயிலுக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மத்திய அரசு அந்தப் பகுதியில் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றியது. கோயிலை இடிப்பதற்காக அடையாளக் குறியீடும் செய்யப்பட்டு விட்டது. அப்போதுதான்  ஊர்மக்கள் மூலமாக எனக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினோம்[3]. இத்தகவலைக் கேள்விப்பட்ட  இந்து சமய அறநிலைத் துறையினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு,  கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கியது. கோயில் புனரமைப்பு வேலைகள், கான்ட்ராக்டர் ஒருவரிடம்  ஒப்படைக்கப்பட்டு வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பிரச்னை உருவானது. அதன் பின்னர், வேறோரு கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 

திருப்பணிகள் தொடங்கப்பட்டபோது சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்கவேண்டும்:

* தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

 * திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில் முழுவதுமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். 

* கோயிலின் தற்போதைய நிலையை, சரியான அளவீட்டுடன்  பொறியாளர்களைக் கொண்டு வரைபடம் ஒன்று தயாரித்திருக்க வேண்டும். 

* ஒவ்வொரு சிற்பத்தின் மீதும் அடையாள எண் குறிக்கப்பட வேண்டும். 

* முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர்தான் வேலைகளையே தொடங்க வேண்டும். 

* நன்றாக இருக்கும் சிற்பங்களை தொடாமல்,  சேதமடைந்த சிற்பங்களை மட்டும் தனியாக எடுத்து பழுதுநீக்க வேண்டும்.

மேற்சொன்ன எந்த நடைமுறையும் மானம்பாடி கோயில் திருப்பணியில்  பின்பற்றப் படவில்லை.  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே சிற்பங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அதனால் சிற்பங்கள் பலத்த சேதமடைந்தன. அதன் பின்னர் அது கண்டுகொள்ளப் படவே இல்லை.  இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை உடனடியாக கைப்பற்றி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையிடமோ, இந்தியத் தொல்லியல் துறையிடமோ ஒப்படைக்க வேண்டும். இதுதான் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி” என்று ஆதங்கமாகக் கூறினார் பாலசுப்பிரமணியன். 

வேதபிரகாஷ்

06-11-2022


[1] விகடன், அலட்சியத்தால் சிதைக்கப்பட்ட, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானம்பாடி கோயில் சிற்பங்கள், ரா.செந்தில் கரிகாலன், Published: 14 Aug 2017,  7 PM; Updated:14 Aug 2017 7 PM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/99109-manambadi-temple-sculptures-that-were-destroyed-by-indifference#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

[3] A forum ‘Kudanthai Jyothirmani Iraippani Thirukoottam’ from Kumbakonam and Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, wrote to the then Chief Minister to spare the temple as it is an ancient monument. The NHAI then decided to leave the temple alone and submitted three alternate proposals for road project skirting the temple.

Deccan Chronicle, Thanjavur: Road project spares 1,000-year-old temple, Published: Sep 12, 2018, 3:25 am IST; Updated: Sep 12, 2018, 3:25 am IST.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/120918/thanjavur-road-project-spares-1000-year-old-temple.html

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

2017 – கோவில்களில் யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வுஅறிக்கை[1]: 2006ல் இவ்வழக்கு தொடரப் பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு, ஜூலை, 2016ல், ஒரு உத்தரவின் வாயிலாக, அறநிலையத்துறை திருப்பணி வேலைகள் செய்த, 10 கோவில்களில், ‘யுனெஸ்கோ’ ஆய்விற்கு வழிவகை செய்தது. அப்போது கோவில்களில் செய்துள்ள திருப்பணிகள், வர்ணங்கள் அழிந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்[2]. அப்போது அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன், தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.  இந்த ஆய்வை விரிவாக செய்த, யுனெஸ்கோ நிறுவன வல்லுனர்கள், விரிவான அறிக்கையை, 2017 ஆகஸ்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

யுனெஸ்கோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: அந்த அறிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை பற்றி, யுனெஸ்கோ கூறியுள்ளவை சில, நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பவை[3]:

* பெரிய அளவில் தொன்மை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறைக்கு திறனும் இல்லை; தகுதி படைத்த வல்லுனர்களும் இல்லை.

* இத்தகைய வேலைகள் மேற்கொள்ள, இவர்களிடம் முறையான வழிமுறைகள் இல்லை. தொன்மை பராமரிப்பு அறிந்த ஒப்பந்தக்காரர்களும் இல்லை.

* வேலை நடக்கும் இடங்களை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான ஸ்தபதிகள் திறனற்றவர்களாக இருந்தனர். அவர்களின் தகுதி, சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.இதை, தலைமை ஸ்தபதியும் ஒப்புக் கொண்டார்.

*சில அதிகாரிகளிடம் தொன்மை குறித்து, சிறிது உணர்வு காணப்பட்டது போல் தெரிந்தது. அவர்களுக்கு, எதிர்காலத்தில் தொன்மை குறித்த பயிற்சி அளிக்கலாம். ஆனால், பெரும்பாலான அதிகாரிகள், சிறிது கூட அடிப்படை தகுதி இல்லாமலும், திறமை இல்லாமலும், அத்தகைய பொறுப்பிற்கு பொருந்தாதவர்களாகவும் காணப்பட்டனர்.

*எந்த தொன்மையான கோவில் திருப்பணியிலும், இவர்கள் ஆகம வல்லுனர்களை கலந்து ஆலோசித்ததாகவே தெரியவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, பல கோவில்களில், திருப்பணி என்ற பெயரில் நடந்த மோசமான செயல்களை, யுனெஸ்கோ சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளத்தை ஒட்டி செய்யப்பட்ட வேலைகள், மிகுந்த குறைபாடுகள் உள்ளவை. மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், எந்த காரணமும், யோசனையும் இல்லாமல் இடித்து தள்ளப்பட்டது. மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவில், ஆகம, தொல்லியல் கொள்கை களுக்கு விரோதமாக இடிக்கப்பட்டது.

2017ல் நாத்திக ஸ்டாலின் வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டது[4]: திக, திக வழி திமுக, ஈவேரா-அண்ணா, கருணாநிதி போன்றோரின் நாத்திகம், இந்துவிரோதம் அறிந்ததே. அதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது, கோவில்கள் பற்றி வக்காலத்து வாங்கியது போல அறிக்கை விட்டது தமாஷாக உள்ளது. அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்[5]. இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான .தி.மு.. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை .நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது[7]………..திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பகுத்தறிவு வழியில் நடைபோடுகின்ற இயக்கம். கோவில்கள்சிற்பங்கள் உள்ளிட்டவற்றை வரலாற்றுப் பார்வையுடன் அணுகுகின்ற இயக்கம்[8]. நீதிக்கட்சி ஆட்சியாளர்களின் மக்கள் நலச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்கள் பாதுகாப்புச் சட்டத்தினால் அமைந்த அறநிலையத்துறை வாயிலாக பாரம்பரியம்மிக்க கோவில்கள் சீரமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன[9]………

ஸ்டாலின் திமுக சாதனைகளைப் பட்டியல் இட்டது: திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் மயிலாப்பூர் கோவில் குளம் முறையாகத் தூர்வாரப்பட்டது. திருவாரூர் கோவிலின் ஆழித்தேர் பழமைத்தன்மை மாறாமால் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பழந்தமிழரின் கட்டடக் கலை இலக்கணங்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் பயன்படுத்தி, குமரி முனையில் 133 அடியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கிறது. உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.…,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அட்சிக்கு வந்தவுடன், எத்தனை கோவில்கள் இடிக்கப் பட்டன என்பதை நினைவுகூற வேண்டும்.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினமலர், உண்மையை உணர்வோம்; கோவில்களின் தொன்மை காப்போம், Updated : மார் 11, 2020  03:32 |  Added : மார் 10, 2020  01:34

தமிழ்.வணக்கம், புனரமைப்பு பெயரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் சிடைப்பு: தமிழக அரசு மீது உனெச்கோ குற்றச்சாட்டு, அண்ணன், ஆகஸ்ட்.9, 2017.

[2] https://www.vikatan.com/arts/literature/133609-unesco-report-about-traditional-temples-destroys

[3]https://tamilvanakkam.com/2017/08/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

[4] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களை தமிழக அரசு சிதைத்து வருகிறது: மு. ஸ்டாலின், Written by Ganesh Raj, August 16, 2017 6:51:39 pm

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/unesco-mentioned-tamilnadu-government-destroys-historical-symbols-says-mk-stalin/

[6] தமிழ்.இந்து,  அதிமுக அரசு திருக்கோயில்களை சிதைப்பது வரலாற்றை அழிக்கும் செயல்: ஸ்டாலின் தாக்கு, செய்திப்பிரிவு, Published : 16 Aug 2017 03:07 PM, Last Updated : 16 Aug 2017 03:07 PM.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/232482-.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல்அரசுக்கு ஸ்டாலின் கண்டனம், By Mayura Akilan Published: Wednesday, August 16, 2017, 17:58 [IST].

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-condemns-historic-tn-temples-fallinginto-decay-292962.html

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (1)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (1)

தமிழகத்தில் கோவில்களின் நிலை: தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது, ஆனால், பெரியாரிஸ-நாத்திக-திராவிடத்துவ அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால், திருப்திகரமாக அது நடப்பதாக இல்லை[1]. இந்திய தொல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்துறைகளும் கோவில்களின் பராமரிப்பு, மராமத்து, சரிபார்த்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது[2]. கோவில் சர்வே துறை என்று தனியாக இந்திய தொல்துறையில் உள்ளது. இவ்வாளவு இருந்தும், லட்சகணக்கான தமிழக கோவில்கள் முறையாக பராமரிக்கப் படாமல், இடிந்து விழும், இடிந்து விழுந்த, நிலைகளில் இருக்கின்றன. அவற்றில் இருந்த புராதன விலை மதிமற்ற விக்கிரங்கள், சிலைகள், சிற்பங்கள் முதலியனவும் மறைந்து வருகின்றன. பக்தர்கள், விவரங்கள் தெரிந்தவர், விழிப்புணர்வு கொண்டவர்கள் அவ்வப்பொழுது, புகார் கொடுப்பது, எச்சரித்தல் போன்றவற்றை செய்து வருகிறார்கள். இருப்பினும், சில வாரங்களில், மாதங்களில் மறக்கப் பட்டு விடும். பல சோழர் காலத்து கோவில்களைப் போல, மானம்பாடியில் உள்ள, சிவன் கோவிலுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி, முன்னேற்றம் போர்வையில் நடக்கும் வேலைகளில் சரித்திர புராதன  கட்டிடங்கள் இடிக்கப் படுதல், மறைந்து விடுதல்: உள்கட்டமைப்பு [infrastructure] மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி [infrastructure developmet] முன்னேற்றம் பெயரில், முதலில் அணைகள் கட்டுவது, பிறகு நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் இப்பொழுது, நான்கு வழி, ஆறு வழி நெடுஞ்சாலைகள் ஓடுவது-விரிவாக்கம் என்ற ரீதியில், சாலைக்கு இருபுறங்களிலும் உள்ள பழங்கால மண்டபங்கள், கட்டிடங்கள் கோவில்கள் முதலியவை இடித்துத் தள்ளப் பட்டன, படுகின்றன. சரித்திர காலத்திற்கு முந்தைய [pre-historic], பழங்கற்கால [paleolithic], பெருங்கற்கால [megalithic], புதிய கற்கால [neolithic] சின்னங்கள் முற்ரிலுமாக மறைந்து வருகின்றன[3]. பொதுவாக, டென்டெர்-கான்ட்ரேக்டுகளில் அத்தகைய புராதன சின்னங்கள், கட்டிடங்கள் பாதிக்கப் படக் கூடாது, இடிக்கப் படக்கூடாது, அவ்வாறு பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டால், அவை இடம் பெயர்க்கப் பட்டு கட்டித் தரப்பட வேண்டும் என்றெல்லாம் சரத்துகள் போடப் படுகின்றன. ஆனால், பெயருக்கு, சில இடங்களில் எதையோ ஒப்புக்கு செய்து விட்டு பல இடங்களில் அவற்றை காணாமல் போக செய்து விடுகின்றனர். நாளடைவில் மக்களும் மறந்து விடுகின்றனர்.

விக்கிரவாண்டி தஞ்சாவூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொண்ட போது, கோவிலின் வடபகுதியும் இடிக்கும் நிலைக்கு ஆளானது: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், சாலை விரிவாக்க பணிகளுக்காக, இடிக்கப்பட இருந்தது. இந்நிலையில், கோவிலை தமிழக தொல்லியல் துறை ஏற்பதற்கான, நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஆறு மாத காலமாக, பக்தர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் நடத்திய போராட்டத்துக்கு, வெற்றி கிடைத்துள்ளது[4]. நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி எனும் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், திருப்பணி செய்யப்பட்டதாக, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், போதிய பராமரிப்பின்றி காணப்பட்டது. விக்கிரவாண்டி தஞ்சாவூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொண்ட போது, கோவிலின் வடபகுதியும் இடிக்கும் நிலைக்கு ஆளானது. இதுகுறித்து, தினமலர் நாளிதழி“ல் விரிவான கட்டுரைகள் வெளியாகின.

2013ல் தொல்துறை ஏற்கும் என்ற அறிவிப்பு: அதன் பின், சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கோவிலை இடிப்பது குறித்து, பொதுமக்களிடமிருந்து, கருத்து கேட்டது. அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, தொல்லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும், பக்தர்களும், கோவில் இடிப்புக்கு எதிராக, குரல் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். பல்வேறு இந்து ஆன்மிக அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத்தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, சாலை விரிவாக்க திட்டம், மாற்றப்பட்டு வேறு பாதையில், செயல்படுத்தப்படும்’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது[5]. கோவில் இடிக்கப்படாது’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவாதம் அளித்தாலும், அக்கோவிலை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, அக்கோவிலை தமிழக தொல்லியல் துறை ஏற்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அத்துறையின் அதிகாரிகள் கூறுகையில், ‘கூடிய விரைவில், அதற்கான பணி துவங்கும். தொல்லியல் துறை ஏற்பதன் மூலம், அதன் தொன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்’ என்றனர்.

2006ல் பொதுநல வழக்கு தொடர்ந்ததுயுனெஸ்கோ அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது: ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) பரிந்துரைகளின்படி, பாரம்பரிய கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[6]. ஆகஸ்ட் 2016ல் PIL மனு விசாரணைக்கு வந்தபோது, பூட்டான், இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இயக்குநரும் யுனெஸ்கோ பிரதிநிதியும் எழுதிய கடிதத்தின் நகல், ஜூலை 15 தேதியிட்ட HR&CE ஆணையருக்கு அனுப்பப்பட்டது, அதில் கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் உள்ளன. அது நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டன[7]. தகவல்தொடர்பு படி, UNESCO நிறுவனம் HR&CE துறையால் முன்மொழியப்பட்ட பாதுகாப்பு கையேட்டைப் பரிசீலிப்பது கடினம் என்று கூறியது, ஏனெனில், பொதுவான தொழில்முறை புரிதலின் படி, அத்தகைய கையேட்டின் அடிப்படைக் கொள்கைகளை அது கவனிக்கத் தவறிவிட்டது. யுனெஸ்கோ அறநிலையத் துறையின் தற்போதைய நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், ஆகம சாஸ்திரத்தின் கொள்கை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளை சமரசம் செய்யவும், அதன் மூலம் பாதுகாப்பு பயிற்சியாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது..

2017ல் யுனெஸ்கோ குழு ஆய்வு செய்தது: திருப்பணி என்ற பெயரில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் சேதப்படுத்தப்படுவதாகவும், வர்ணங்கள் அழிக்கப்படுவதாகவும், Sand blast மூலம் சிற்பங்களின் தன்மை அழிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் 2006ல்  பொது நல வழக்கு தொடர்ந்தனர்[8]. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில்களில் நடைபெற்றுள்ள திருப்பணிகள் பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளதா? என்றும், கோவில்களின் சிற்பங்கள், பழங்காலத்து ஓவியங்கள், கல்வெட்டுகள் பாதிக்கப்பட் டுள்ளதா? என்று ஆய்வு செய்ய யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு) மற்றும் தொல்லியல் துறையும் இணைந்து அறநிலையத்துறையுடன் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தர விட்டது[9]. இந்த உத்தரவை தொடர்ந்து கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில், மேலக்காவேரி பிரம்மேஷ்டிபுர பகுதியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில், திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி நாகநாதர் கோவில் ஆகிய கோவில்களை யுனெஸ்கோ பிரதிநிதி தேவாசெயிக் ஜெயின், அவரது மாணவர் அபூர்வா மற்றும் தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் பகவான்சாரதி, திருச்சி தொல்லியல்துறை பராமரிப்பு அலுவலர் சங்கரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்[10].

வேதபிரகாஷ்

06-11-2022


[1]  திமுக மற்றும் அதிமுக மாறிமாறி ஆட்சி செய்தாலும், இந்து அறநிலைஅத் துறை பொறுத்த வரையில், ஊழலை ஒன்றும் செய்ய முடியாத இலை தான் ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் வழக்குகளில் சிக்குவது, கைதாவது, இறைக்குச் செல்வது என்றெல்லாம் இருந்தாலும்,வெளியே இருந்தாலும், இப்பிரச்சினையும் இருந்து கொண்டுதான் உள்ளது

[2]  இதில் 1960களிலிருந்தே ஊழல் இருந்துவௌவதாலும், நாத்திகம் எல்லா துறை அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவரையும் நோய் பொன்று பீடித்துள்ளது.

[3]  குவாரிகளால் இவை எல்லாமே அழிந்து வருகின்றன, பாறை கலைச் சின்னங்கள், ஓவியங்கள் எல்லாமும் மறைந்து விடுகின்றன. அகழாய்வு, தொல்லியல், தொல்துறை அதிக்ரிகள், விற்பனர்கள், முதலியோரும் கண்டுகொள்வதில்லை.

[4] தினமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலை தொல்லியல் துறை ஏற்கிறது : நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி, நமது நிருபர், Added : செப் 29, 2013  01:01

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=814841

[6] The Hindu, Go by UNESCO suggestions on temples, HC tells State, CHENNAI: AUGUST 25, 2016 00:00 IST; UPDATED: AUGUST 25, 2016 06:22 IST

[7] https://www.thehindu.com/news/cities/chennai/Go-by-UNESCO-suggestions-on-temples-HC-tells-State/article14588568.ece

[8] தினத்தந்தி, கோவில்களில் யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு தினத்தந்தி மே 3, 2017, 4:15 am (Updated: மே 3, 2:59 am).

[9] https://www.dailythanthi.com/News/Districts/2017/05/03025944/The-temples-of-the-UNESCO-and-Archaeologists-in-the.vpf

[10] விகடன், அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!, இ.லோகேஷ்வரி, Published:12 Aug 2017 5 AMUpdated:12 Aug 2017 5 AM.