Archive for the ‘கொலை மிரட்டல்’ Category

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

திராவிடத்துவ ஆட்சியில் மடத்தில் பிரச்சினை 25-02-2024ல் கொடுக்கப் பட்ட புகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].

தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10].  அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?

உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரில் புகார்: பின்னர் இது தொடர்பாக –

  1. செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
  2. செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
  3. திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
  4. திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
  5. வினோத்,
  6. விக்னேஷ் –

ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி கொடுத்த மனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, வீ.தமிழன்பன், Published : 29 Feb 2024 01:24 PM; Last Updated : 29 Feb 2024 01:24 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1208136-threat-to-dharmapuram-adheenam-case-registered-against-9-people-including-bjp-leader-4-arrested.html

[3] மாலைமலர், தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது, By Maalaimalar, .1 மார்ச் 2024 12:23 PM (Updated: 1 மார்ச் 2024 1:14 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/4-arrested-for-threatening-money-from-dharmapuram-adheenam-705717

[5] தினமலர், தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் பா.., நிர்வாகி உட்பட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மார் 01, 2024 01:21.

[6] https://m.dinamalar.com/detail-amp.php?id=3564373

[7] தினத்தந்தி, ஆபாச வீடியோவை வெளியிடுவோம்..தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள், By – தினத்தந்தி, Update: 2024-02-29 07:59 GMT.

[8] https://www.dailythanthi.com/amp/News/State/dharmapuram-adheenam-was-threatened-political-leaders-arrested-1095535

[9] இடிவி.பாரத், மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல்பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.

https://www.etvbharat.com/ta/!state/dharmapuram-adheenam-threatened-by-dmk-bjp-party-persons-that-they-will-publish-controversial-videos-tns24022901092

[10]

[11] புதியதலைமுறை, ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.

[12] https://www.puthiyathalaimurai.com/crime/4-people-arrested-who-threated-dharmapuram-adheenam

[13] விகடன், ஆபாச வீடியோ பெயரில் தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் – 4 பேர் கைது; பாஜக, திமுக புள்ளிகள் தலைமறைவு, கே.குணசீலன், Published: 01-03-2024 at 4 PM; Updated: 1-03-2024 at 7 PM.

[14] https://www.vikatan.com/crime/in-darumapuram-adheenam-case-4-arrested-and-other-4-in-search

[15] பிபிசி தமிழ், தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள்என்ன நடக்கிறது?, முரளிதரன்- காசிவிஸ்வநாதன், 1 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o