Archive for the ‘ஜாகீர்கான்’ Category

ஜாகீர்கானுக்கு வலம்புரி சங்கின் மீது ஆசை, குருக்களுக்கு காசின் மீது ஆசை!

ஜூன்6, 2010

கோவில் குருக்கள் உட்பட நான்கு பேர் சிக்கினர் : சங்கு மோசடியில் ஈடுபட முயன்றனர்

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010,00:14 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=12158

வீரமணியின் குசும்புத் தனம்!

இன்றைய விடுதலையில், இதே செய்தியை வெளியிட்டுவிட்டு, தலைப்பு, இப்படியுள்ளது:

“கடவுள் சிலை கண்திறக்குமா? காஞ்சிபுரத்தில் வலம்புரி சங்கை மோசடி செய்ய முயன்ற கோவில் குருக்கள் உள்பட 4 பேர் கைது”, என்றுள்ளது!

உண்மையான நம்பிக்கையாளனாக இருந்திருந்தால், அந்த ஜாகிர்கான் சுந்தரத்தைத் தூண்டியிருக்க மாட்டான்.

அப்பொழுது, அல்லாவையும் வீரமணி அதே கேள்வியைக் கேட்டிருக்கவேண்டும்.

ஜாகீர்கானுக்கு வலம்புரி சங்கின் மீது ஆசை, குருக்களுக்கு காசின் மீது ஆசை!

சடங்குகளுக்கு உபயோகப் படுத்தப் படும் வலம்புரி சங்கு: காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சங்கு மோசடியில் ஈடுபட சங்கு உரிமையாளரை வற் புறுத்திய கோவில் குருக்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த தூசி மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(42). இவரிடம் ஐந்து கிலோ எடை கொண்ட மிகப் பெரிய வலம்புரி சங்கு உள்ளது. அவரது தந்தை வாங்கியது. இச்சங்கை கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் பூஜைக்கு பயன் படுத்தி வருகிறார். வெளியூர்களில் நடக்கு கோவில் கும்பாபிஷேகம், யாகங்கள் போன்றவற்றுக்கு பயன் படுத்த யாரேனும் சங்கு கேட்டால் கொடுப்பார்.

சங்கைப் பார்த்த ஜாகீர்கான் – மோமின்-காஃபிர் கூட்டு: இச்சங்கை வில்லிவாக் கத்தைச் சேர்ந்த ஜாகீர்கான் (37) என்பவர் பார்த்தார்.  இந்த சங்கை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்ட எண்ணினார். இவர் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(40) பெரியகாஞ்சிபுரம் மளிகைத் தெருவைச் சேர்ந்த இன்பநாதன்(45) பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவில் குருக்கள் சுந்தரம்(42) ஆகியோர் பழக்கமாகினர். அவர்களிடம் ஜாகீர்கான் சங்கு விவரத்தை தெரிவித்தார்.

மோகனை ஏமாற்றிய சுந்தரம்: தூத்துக்குடியில் புரோக்கர்கள் உள்ளனர். அந்த சங்கை வாங்கினால் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என் றனர். தொடர்ந்து அனைவரும் மோகனை சந்தித்து பேசினர். ஆனால், அவர் சங்கு விற்பதற்கில்லை என்று கூறிவிட்டார். தங்கள் ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேகத் திற்கு சங்கு வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு சங்கு தருவதாக மோகன் உறுதி அளித்தார். நேற்று காலை நான்கு பேரும் காஞ்சிபுரம் வந் தனர். பின் மோகனுக்கு போன் செய்து, “காமாட்சியம்மன் கோவிலில் உள் ளோம். சங்கை கொண்டு வாருங்கள்’ என்றனர். அதை ஏற்று, மோகன், சங்குடன் காஞ்சிபுரம் வந்தார். நான்கு பேரும், அவரிடம் தற்போது ஒருவர் வருவார். அவர் சங்கு விற்கிறீர்களா எனக் கேட்பார். ஆமாம் எனக் கூறுங்கள் என்றனர். அதைக் கேட்டு மோகன் அதிர்ச்சி அடைந்தார். சங்கை காண்பித்து யாரையோ ஏமாற்ற முயற்சிக் கின்றனர் என்பதை உணர்ந் தார். உடனடியாக சிவகாஞ்சி போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவவேளியப்பன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சங்கு மோசடியில் ஈடுபட முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.