Posts Tagged ‘பூஜை’

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

மே20, 2022

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம்கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

ஆக ஏறவிட்டது ஏன், யாரால் என்று தான் கவனிக்க வேண்டும்: ஆனால், ‘திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது. அதனால், தேர் வீதி உலா, முதல் முறையாக கடும் மழையால் நிறுத்தப்பட்டது. உற்சவர் பெருமாள், இரவு முழுதும் தேரிலேயே இருந்தார். ‘முதல்வர் வெளிப்படையாக ஆதீனங்களை அவமதிக்கிறார். அவர் மனைவி வெளிப்படையாக ஆகம விதிகளை மீறி, ஆணவத்தை வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு கட்டுப்பட்ட அறநிலைய துறை செய்வது எல்லாமே தெய் குற்றமாகுது’ என்று, சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி வருகின்றனர். இது சரியான தகவல் அல்ல. ஹிந்து ஆன்மிக பக்தர்கள், இதில் வேதனைப்பட எதுவும் இல்லை. ஐதீகப்படி அல்லது வழக்கப்படியான நிகழ்வுகள் தான், 14ம் தேதி காலையில் நடந்தது.கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூசி, தங்கத் தகடு அமைக்கும் பணி நடக்கிறது.

நன்கொடை எதிர்பார்த்து, அனுமதித்து, பிரச்ச்னை ஆனது: இந்த நேரத்தில், தேர் திருவிழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்து வந்தால், விழா சிறக்கும் என்பதோடு, தங்க முலாம் பூசும் பணிக்கு உதவி கிடைக்கும். அவரே நேரடியாக செய்வார் அல்லது நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்வார் என்பது தான், இதற்கு ஏற்பாடு செய்த திருக்கோஷ்டியூர் மாதவனுடைய எண்ணம். அதில் தவறு ஏதும் இல்லை. கோவில் காரியம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார் அவ்வளவு தான். ஆனால், ஆன்மிக விஷயத்தில், அரசியலை நுழைத்து விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நிர்வாக அலுவலர் சேவற்கொடியோன் கூறியதாவது: “கோவில் தேர் உற்சவத்தை வைத்து, இருவிதங்களில் விமர்சிக்கின்றனர். கோவில் தேரில் பெண்களை ஏற அனுமதிக்க மாட்டோம் என்பது தவறு. காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். தேர் கம்பி வடத்தின் ஒரு பகுதியை, திருக்கோஷ்டியூரை சுற்றிலும் இருக்கும் மயில்ராயன் கோட்டை நாட்டார்களும், இன்னொரு பகுதியை பட்டமங்கலம் நாட்டாரும் தான் சேர்ந்து இழுப்பர்.

வழிபாடு முறையும் மீறப் பட்டது: அவர்களில் ஒரு சிலர், தேர் கம்பி வடத்தின் மேல் ஏறி நின்று தேரை இயக்க, துண்டை அசைத்து சைகை கொடுப்பர். அதன் பின் தான் தேர் இயக்கப்படும். இது தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அதே வகையில் தான் இந்த ஆண்டும் நடந்தது.தேர் இயக்கப்படுவதற்கு முன், நாட்டார் குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தேர் மேல் ஏறி உற்சவர் பெருமாளை வணங்குவது வாடிக்கை. அது இந்த ஆண்டும் நடந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக, துர்கா தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அவரோடு, ஜமீன் பரம்பரையின் மதுராந்தகி நாச்சியாரும் தரிசனம் செய்தார். ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு, கோவில் விழாக்களில் இன்றளவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மனைவி வந்ததால், அம்முறை மீறப் பட்டு, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவரும், தேரிலேயே ஏறி தரிசனம் செய்து விட்டார்!

மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதியுலா நிறுத்தம்: அதுமட்டுமல்ல… துர்கா தேர் ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பின், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குடும்பத்துடன், தேரில் ஏறி வழிபாடு செய்தார். அவர், ஆண்டுதோறும் தேர் ஏறி வழிபடுவது வாடிக்கை. மாலையில் தேர் கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை பெய்தது. தேர் செல்லும் வீதி முழுதும் மழை நீரால் சூழப்பட்டது. தேரை பத்திரமாக செலுத்த வசதியில்லை என்றதும், தேரை இயக்கும் நாட்டார்கள், ‘தேரை நாளை காலை இயக்கலாம்’ என, கூறி விட்டனர். அதையடுத்தே, மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதி உலா நிறுத்தப்பட்டது. மறுநாள் காலையில், 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதுபோன்று, கடந்த, 2012லும் மழை காரணமாக தேர் புறப்பாடு, ஒரு நாள் கழித்து நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூனார்.

2015ல் ஸ்டாலின் இக்கொவிலுக்கு விஜயம் செய்தார்: சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு சென்று பிரனவ் மந்திரமான ஓம் நமோ நாராயணாவை ராமானுஜர் பாடிய அஸ்டாங்க திவ்ய விமானத்தில் ஏறி பார்வையிட்டார்[1]. திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 108 வைணவத்தலங்களில் ஒன்றான சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[2]. கோவிலில் ராமானுஜர் சிலைகள், திருக்கோஷ்டியூர் நம்பி சிலைகளை அவர்கள் பார்வையிட்டனர். இப்படி செய்தி வெளியிட்டாலும், அவர் சாமி கும்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. பெருமாளிடம் மட்டும் பிரத்யேகமாக பற்று இருப்பது தெரிகிறது. தெலுங்கு மொழி பேசுபவர் மற்றும், ஓங்கோல், ஆந்திராவிலிருந்து, முத்துவேலர் வந்திருப்பதாலும், குலத் தொழிலாலும், பெருமாள் தரிசனம், சேவை, மறுக்காமல் இருக்கிறது. 1970களில் விஷ்ணு ஸ்டாலின் என்று சுவரொட்டிகள் ஒட்டியதாக ஞாபகம். ஆயிரம் விளக்குத் தொகுதியில், குறிப்பாக, ஆலயம்மன் கோவில் கூழ்-ஊற்றும் நிகழ்ச்சிகளுக்கு, ஸ்டாலின் மனைவியுடம் வருவது உண்டு. ஆனால், பிறகு வருவதை நிறுத்தி விட்டார்.

2015லிருந்து 2022 வரை நான்கு முறை திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வந்துள்ளார்:

  1. 2015ல் தேர்தல் சமயத்தில், தம்பதியர் இங்கு வந்துள்ளனர். “நமக்கு நாமே” நிகழ்ச்சியின் போது, கோவில்க்குச் சென்றது, திமுகவினரை திகைப்படையச் செய்தது.
  2. பிறகு 2022 வரை காலத்தில் மூன்று முறை வந்துள்ளார். அதாவது, 2022ல் இப்பொழுது வந்திருப்பதால், இதையில் இருமுறை வந்துள்ளார் என்று தெரிகிறது.
  3. 2021ல் தேர்தலுக்கு முன்னர், வெற்றி பேச வேண்டிக் கொண்டு, வந்திருக்க வேண்டும்.
  4. அதே போல, 2016ல் தேர்தலின் போதும் வந்திருக்கலாம்.

அப்பொழுது, தோல்வியடைந்தாலும், 2021ல் பெருமாள் உதவியிருக்கிறார் போலும். அதனால், துர்கா மறக்காமல் வந்து விட்டார். ஊடகங்களும் செய்தியை அவ்வாறே வெளியிட்டு விட்டன.

துர்காவின் நம்பிக்கை, பக்தி முதலியன: ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்ததை அழித்திருக்கலாம், ஆனால், வீட்டில், ஆசையாக துர்கா வைத்து விட்டிருக்கலாம். பதவி ஏற்றபோது, கண்கலங்கிய போது, அவரது வேண்டுதல்கள் எல்லாம் நடந்து விட்டன என்றே ஆயிற்று. முன்னர் கோவிலைப் புதிப்பித்துக் கட்டியது, பல கோவில்களுக்கு சென்றது – காசி, காளஹஸ்தி, திருமலை…முதலின, அர்ஜுன் நடிகரின் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றது என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன. இப்பொழுது, ஆன்மீகம், ஆன்மீக அரசு என்றெல்லாம் வெளிப்படையாக பேசுகிறார்கள். சேகர்பாபு, அறநிலையத் துறை சார்பாக, தினம்தினம் ஏதேதோ அறிக்கைகள் விடுகிறார், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிச்சயமாக பக்தர்கள் கண்டுகொளளவில்லை. நம்புவதாகவும் இல்லை. ஏதோ, செயற்கையாக, விளம்பரத்திற்காகவே செய்வதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு..ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார், By Mayura Akilan Published: Tuesday, September 29, 2015, 12:47 [IST].

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-visits-thirukosthiyur-temple/articlecontent-pf170866-236679.html

நாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது.

ஜூன்23, 2014

நாத்திக திராவிடஅரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும் சேர்ந்துள்ளது.

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி

கணேச மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலர்: ஜெயலலிதா பேரவை நகர செயலர் கைது,  தோஷம் கழிக்க கடற்கரைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டபோது,  தட்டிக் கேட்டவரை தாக்கியதாக, அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம்,  தேவிபட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்தவர், கணேசமூர்த்தி, 34; அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர்.  தேவிபட்டினம் பூசாரிகள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். அதாவது பூஜாரியாக உள்ளார், எங்கு எப்படி பூஜாரி பயிற்சி பெற்றார், எப்படி உறுப்பினர் ஆனார் என்று தெரியவில்லை. நவபாஷன கடற்கரைக்கு,  தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உறவினர், கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்துள்ளார்.   ஆட்சி மாறினாலும், திராவிட பாரம்பரியத்தில் கோவிலை வைத்துக் கொண்டு சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவது,  திராவிட கட்சிகள் என்பது எடுத்துக் காட்டுகின்றன.

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி.1

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி.1

பரிகார பூஜை செய்ய ஏஜென்டுகள், டென்டர், கமிஷன்: என்னத் தான் பகுத்தறிவு, நாத்திகம் பேசினாலும்,  மனங்களில் வக்கிரம் இருக்கும் போது அவற்றையே உபயோகப்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டு நியாயப்படுத்தும் போக்கைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட ஆத்திகர்கள் பார்த்து வருகின்றனர். செருப்புக்கு,  சிறுநீர் கழிக்க போன்ற சாதாரண விசயங்களில் டென்டர் என்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். இவையெல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தான் கொடுக்கப் படுகின்றன. இந்நிலையில் பரிகாரபூஜை என்றால் சொல்ல வேண்டுமா? திராவிடக் கட்சிக்காரர் டென்டர் எடுத்திருக்கிறார்; அவரது உறவினரான கணேசமூர்த்தி என்பவர் தான் பூஜாரி; இவர் எப்படி பூஜாரியாக செயல்பட்டு வருகிறார் எனேறு எந்த திராவிடப் பழங்களும் கேட்டதாகத் தெரியவில்லை.

Navapashanam temple

Navapashanam temple

குழந்தை  பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால்  பரிகாரம்:கடந்த, 14ம்தேதி இரவு, 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண்,  குழந்தைகளுடன் தோஷ பரிகாரம்செய்ய வந்திருந்தார்[1]. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை   பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால்  பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன்   தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள்   கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது   அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த  பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50  மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில்  வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால்   பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார   பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை  நிர்வாணமாக்கியுள்ளார்[2]. சிறிய லிங்கத்தை வைத்து பெண்ணின் உடல் முழுவதும் 108 முறை  தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்[3]. கணேசமூர்த்தியின்  இந்த பூஜை குறித்து,  பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக  சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை  கூறி கதறி அழுதுள்ளார்.  தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு  கற்பூரசுந்தரம் என்பவர் தான் பரிகார பூஜைக்காக கணேச மூர்த்தியை   சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து  வைத்துள்ளார்.  இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள்  கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம்,   கணேச மூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.

திராவிட புரோகிதம்

திராவிட புரோகிதம்

அரசியல் ஆவணத்துடன் கொலை மிரட்டல் விடுத்த திராவிட பூஜாரி: கற்பூரசுந்தரம் கணேச மூர்த்தியை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, கற்பூரசுந்தரத்தை தாக்கினார்.    ‘நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’  எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி[4]. கற்பூரசுந்தரத்தை தாக்கி, கட்சி அதிகாரத்தைக் காட்டிக் கொண்டதுடன் கணேச மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து,  கற்பூரசுந்தரம் புகார் கொடுத்தார் தேவி பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, கணேச மூர்த்தியை கைது செய்துள்ளனர்.  இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேச மூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி,  உத்தரவிட்டிருக்கிறார்[5].  அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவில் சொல்லப் பட்டிருக்கிறது[6].

திராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்

திராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்

திராவிட-நாத்திக ஆட்சியில் கண்டவர்கள் எல்லாம் பரிக்கார பூஜை செய்து கொடுக்கிறார்களாம்: பரிகார பூஜைகள் செய்யவும், தோஷம் கழிக்கவும், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள்,  தேவி பட்டினம் கடற்கரைக்கு தினமும் வருகின்றனர். அவர்களிடம், புரோக்கர்களே பரிகாரம் செய்வதாக ஏமாற்றி, அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர்.  “புரோக்கர்கள்” என்றால் திராவிடக் கட்சிகளின் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர். பரிகார பூஜைகளுக்கு கட்டண நிர்ணயம், குறிப்பிட்ட கால நிர்ணயம், பூஜை செய்வோருக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்க,  அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திராவிட புரோகிதம்.திருமணம்

திராவிட புரோகிதம்.திருமணம்

போலீஸார் குற்றமீறல் சட்டப் பிரிவுகளை விடுத்து வேறு பிரிவுகளில் புகார் பதிவு செய்தல்: இது குறித்து கற்பூர சுந்தரம் தேவி பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார்.  அதில் பெண்ணுக்கு நடந்த சில்மிஷ கொடுமைகளையும் விரிவாக தெரிவித்துள்ளார்.  கணேச மூர்த்தியை போலீசார் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டும் இன்று கைது செய்தனர். பெண்ணை நிர்வாணப் படுத்தி மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை[7].  இதையறிந்த தேவி பட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தேவி பட்டினம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். இதில்,  யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து கணேச மூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்[8].

Karu-with-Saibaba-in his house

Karu-with-Saibaba-in his house

திராவிட பூஜாரியின் வழக்கமான பலாத்கார லீலைகள்: இரவில் தான் பூஜை[9] கணேச மூர்த்தி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:  யாத்திரை வந்த பெண் பக்தர்களிடம் இது போன்று சில்மிஷங்களை தொடர்ந்து கணேச மூர்த்தி செய்து வந்துள்ளார்.  வெளியூர் பக்தர்கள் என்பதால் வெளியே சொன்னால் தங்களுக்குத் தான் பிரச்னை என கருதி மவுனமாக சென்றுள்ளனர்.  இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேச மூர்த்தி தொடர்ந்து இத்தகைய நிர்வாண பூஜை என்ற பெயரில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்.  இளம் பெண்கள் என்பதால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்வாராம். அப்போது தான் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல், கோயில் மறைவில்,  கடலுக்குள் தனது இஷ்டப்படி சில்மிஷங்களை செய்யமுடியும் என்பதால் இந்த டெக்னிக்கை கையாள்வாராம்.  அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

karunanidhi-with-kulla-eating-kanji

karunanidhi-with-kulla-eating-kanji

போலிகளுக்கு எப்போது வரும் தடை?: போலிகளுக்கு எப்போது வரும் தடை என்று தினமலர் கேட்டுள்ளது. ஆனால், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போலிகள் மட்டுமல்ல திராவிட பூஜாரிகள், திராவிட அரசியல் ஏஜென்டுகள் மற்றும் நாத்திக புரோக்கர்கள். வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேச மூர்த்தி தனது   சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை   அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை  குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள்  என்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் பூஜையை செய்ய வேண்டும்  என்பாராம். கோயில் வளாகத்தில் இது போன்ற போலி ஆசாமிகள்   ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த  தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்[10]. விடுதலை இச்செய்தியை போட்டு கிண்டலடித்தது விமர்சனம் செய்துள்ளது[11].  பெண்மையை பலாத்காரம் செய்து அரசியல் கட்சி போர்வையில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது அவனின் வன்மத்தைத் தான் காட்டுகிறது. இத்தகைய மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படவேண்டும்.

Nedunchezhiyan_Karunanidhi_MGR-eating together

Nedunchezhiyan_Karunanidhi_MGR-eating together

முரண்பட்ட சித்தாந்தங்களும், தொடரும் குற்றங்களும்: ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் பதவியில் ஆட்சி செய்து வரும் நிலையில் இத்தகைய பலாதகாரங்கள், அத்துமீறல்கள் முதலியவை நடந்து வருகின்றன. ஒரு பெண் ஆட்சி செய்யும் போது, இப்படி தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அரசியல், மதம், ஜாதி, பணக்காரன் என்ற ரீதியில் அவைகள் ஒன்று செய்திகள் வெளியிடுவதோடு நின்று விடுகின்றன. கருணாநிதி ஜெயலலிதாவை “ஆரிய அம்மையார்” என்று இன்று வரை ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் அழைத்து / எழுதி வருகிறார். சரித்திர ரீதியில் அச்சித்தாந்தம் குப்பையில் போனப் பிறகுக் கூட தமிழகத்தில் தான் அதனை பொறுக்கி வைத்துக் கொண்டு இன்றும் துவேசத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஜாதித் தீயை ஊதிக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஒரு பார்ப்பன / ஆரிய முதலமைச்சர் ஆட்சியில் கோவில் நிர்வாகம் முதலியவை ஒழுங்காக நடக்க வேண்டும் என்றுள்ள மக்கள் எதிர்பார்ப்பு சட்டப்படித்தான் இருக்கிறது. இது கடவுள் நம்பிக்கையின் மீது ஆதாரமானதே தவிர ஜாதியின் மீதான நம்பிக்கை அல்ல. கோவில் வருவாயில், மக்களின் வரிப்பணத்தில் நடக்கும்போது, அவர்கள் அவ்வாறே பார்ப்பார்கள். ஆனால், ஒரு திராவிடக் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு, இன்னொரு திராவிடக் கட்சி தலைவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லது தானும் அத்தகைய திராவிடப் பாரம்பரியங்களுக்கு சளைக்கவில்லை என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தால், அரசியல் தொடர்புள்ளவர்கள், அதனை வைத்துக் கொண்டு பணம் பண்ணத்தான் பார்ப்பார்கள்.

EVR priest, Karunanidhi devotee

EVR priest, Karunanidhi devotee

கோவில்களில் குற்றங்கள் ஏற்படுவது, திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தினால்தான்: திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தில் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் இருக்கிறார்கள், இருக்கத்தான் செய்வார்கள். தமிழக திராவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, தொடர்புள்ளவர்களுக்கு லஞ்சம் என்பது சாதாராண விசயம் தான். செய்யவேண்டிய வேலைக்கும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிட அரசு ஊழியன் வேலை செய்வான். எப்படி பள்ளி-கல்லூரி, போக்குவரத்து-போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளில் வேலைக்கு லட்சங்கள் கொடுத்து, கோடிகளை அள்ள வருகிறார்களோ, கோவில் நிர்வாகத்திற்கு வருபவர்களும் அத்தகைய ஊழல் எண்ணங்கள், லஞ்சலாவண்ய எதிர்பார்ப்புகள், மாமூல் வசூல்கள் என்ற நிலையில் தான் இருப்பார்கள். இவற்றுடன் மற்ற எதிர்பார்ப்புகளும் சேரும்போது, சமூகத்தைச் சீரழிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார்கள். திருச்செந்தூர் கோவிலில் கொலை, பழனி கோவிலில் விக்கிரத்தையே சுரண்டும் அரசியல், உண்டியல்கள் உடைப்பு, கோவில் நிலம் அபகரிப்பு என்பதெல்லாம் கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒன்று நம்பிக்கையுள்ளவர்கள், குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், இந்துக்கள் தாம் கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை எக்காரணத்திற்கும் அரசியல்வாதி கூட்டில் சேர்க்கக் கூடாது. அபொபொழுதுதான், இத்தகைய அநியாயங்கள், பாலியல் குற்றங்கள் முதலிவவற்றை அழிக்க முடியும்.

 © வேதபிரகாஷ்

20-06-2014

[1]தினமலர், தோஷம்கழிக்கபெண்ணிடம்அத்துமீறல்: சில்மிஷ.தி.மு.., பிரமுகர், ஜூன்.17, 2014

[2]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96960

http://www.dinamalar.com/news_detail.asp?id=1000818

[3]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96878

[4]http://www.dinamalar.com/news_detail.asp?id=1001757&Print=1

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1000818

[6]தினமலர், பெண்ணிடம்அத்துமீறிய.தி.மு.., பிரமுகர்நீக்கம்: முதல்வர்உத்தரவுக்குகட்சியினர்வரவேற்பு,  18-06-2014

[7]http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=58205

[8]தினகரன், தேவிப்பட்டினத்தில்பரிகாரபூஜைஎன்றபெயரில்இளம்பெண்ணைநிர்வாணப்படுத்திசில்மிஷம்,   20-06-2014.

[9]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96878

[10] தினகரன்,ராமநாதபுரம்அருகேநடந்தகொடுமைகோயிலுக்குள்பெண்ணுக்குநிர்வாணபூஜை: பரிகாரம்என்றபெயரில்அத்துமீறல், ஜூன்.18,2014

[11]http://www.viduthalai.in/headline/82376-viduthalai.html

செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

ஓகஸ்ட்21, 2011

செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?


கனகாம்பாள் என்ற தமிழச்சி மற்றும் வீராங்கனை: கனகாம்பாள் என்ற 70 வயது மூதாட்டி இந்த கோவிலை காத்து வருகிறார் என்றால் மிகையாகாது. விதவையாக ஆதரவின்றி அங்கேயே கோவில் வளகத்தில் வாழ்ந்து வருகிறார். தமக்கு முடிந்த வரையில் கோவிலைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தி வைக்கிறார். அந்த பாட்டி எப்படி பலமுறை அங்கு ஆக்கிரமிப்புச் செய்ய கிருத்துவர்கள் மற்றும் இதர சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தபோது, தனியாக அவர்களுடன் விவாதித்து, கத்தி, மிரட்டி விரட்டி அனுப்பியுள்ளதை விளக்கினார்[1]. இக்காலத்தில், யார்-யாரோ தம்மை “தமிழச்சி” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அந்த பகட்டு “தமிழச்சிகள்” எல்லாம் இந்த பாட்டியம்மாவிடம் பிச்சை வாங்கவேண்டும், கால்களில் விழுந்து வணங்க வேண்டும். உண்மையில், இந்த பாட்டி தான் மாபெரும் தமிழச்சி எனலாம். சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை கதிகலங்கி மிரட்டோடி வைத்த வீரப்பெண்மணியை ஒத்தவர் இந்த கனகாம்பாள்! அரசாங்கத்தின் தரப்பில் “வீராங்கனை” என்ற பட்டமும் யார்-யாருக்கோ பரிந்துரைக்கப்படுகிறது, அவ்வாறே கொடுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில், இந்த பாட்டிக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இனிமேல் யாராவது பரிந்ரைத்தால் நன்றாக இருக்கும்.


கிருத்துப் பாதிரியின் பொய் வழக்கு பொய்த்தது: ஏனோ கிருத்துவர்களுக்கு குறிப்பாக, அவ்வூர் கிருத்துவ பாதிரி ஒருவன் பலவழிகளில் பயமுறுத்தி, பீதியைக் கிளப்பி அந்த புராதனமான கோவில் மற்றும் கோவில் நிலத்தை அபகரிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அப்பட்டமாகவே தெரிய வந்துள்ளது. ஒருமுறை யாரோ வெடிகுண்டு வைத்து அந்த கோவிலை தகர்க்கப் போகிறார்கள் என்று புரளியையை வேறு அப்பாதிரி கிளப்பி விட்டிருக்கிறான் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு பயங்கரவாத எண்ணம், கோவிலை ஆக்கிரமிப்பதில் தேவையா அல்லது அந்த கோவிலை முற்றிலுமாக இடித்துத்தள்ளிவிட வேண்டும் என்று “மாலிக்காப்பூர்” எண்ணத்துடன் கிருத்துவர்கள் இருந்திருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.


கோவில் நிலத்தை, கோவிலுடன் விற்கமுடியுமா? செஞ்சி ஶ்ரீ கோதண்டராமர் ஆலயம் மற்றும் கோவில் நிலத்தை, கோவிலுடன் விற்றிருப்பது, அதை ஒரு கிருத்துவ பாதிரியார் மதவெறி, ஆத்திரம், குரோதம் முதலிய இந்தியவிரோத-இந்துவிரோத மிக அதிகமான வெளிப்படையான குற்ற உணர்வுகளுடன் வாங்கியிருப்பது, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (மாநில தாசில்தார், பதிவு சார்பாளர்கள் முதலியோர்) எதையும் கண்டுகொள்ளாமல் மாற்றிக் கொடுத்திருப்பது, வழக்கு ஆரம்பித்தபோது கூட, உள்ளூர் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது, கோவிலைப் பூட்டி வைத்தது போன்ற காரியங்களை நோக்கும்போது, இது ஒரு சாதாரணமான நிலம் விற்றல்-வாங்குதல் என்ற செயல் அல்ல, ஆனால் அதற்கும் மேலாக ஒரு சதிதிட்டம் உள்ளது என்று தெரிய வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், திருவண்ணாமலை முதலிய இடங்களில் அதிக காலமாக தங்கி வாழ்ந்து வரும் அந்நிய பாதிரிகளின் சதிதிட்டமாக இருக்கலாம் என்று தெரிகிறது. திருவண்ணாமலையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ரமணாஷ்ரம் கிருத்துவர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக குற்றம் சட்டப் படுகிறது[2]. திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை வழியிலுள்ள இடங்கள் பலவற்றை ஆக்கிரமித்து, மோசடி செய்து வாங்கி சர்ச்சுகளைக் கட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த 30 வருடங்களாக அயல்நாட்டைச் சேர்ந்த கிருத்துவ மிஷனிரிகள் வேலை செய்து வருகின்றன. அதே கும்பல்தான் ஶ்ரீ கோதண்டராமர் ஆலயத்தின் மீது கண்வைத்து கார் இயங்களை ஆரம்பித்தன, ஆனால் சட்டமுறையில் தோல்வியடைந்துள்ளனர்.


இந்துக்களின் வெற்றி: செஞ்சியில் (விழுப்புர மாவட்டம்) ஶ்ரீ கோதண்டராமர் ஆலயம் அறக்கட்டளை என்றதை விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவி சட்டப்படி போராட்டி கடந்த மே மாதம் 2011ல் தான் இந்த கோவிலை மீட்டுள்ளது. கிருத்துவர்கள் இந்த வழக்கில் பற்பல மோசடிகள் செய்துள்ளனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், பதிவு அலுவலகம் முதலியோர், குறிப்பாக கிருத்துவர்களாக இருந்தவர்கள், பலமுறை சட்டத்திற்கு புறம்பாக, அதாவது, இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன. தில்லியில் ஆவணங்கள் சரிபார்த்தபோது கூட, தில்லியில் இருக்கும் அதிகாரக் கிருத்துவர்கள் தடுக்க தமது தாக்கத்தை, அழுத்தத்தை உபயோகித்துள்ளனர். ஆனால், அதற்கும் மேலாக பழைய ஆவணங்கள் உண்மையை எடுத்துக் காட்டியதால், இந்த எல்லா கிருத்துவர்களின் முகமூடிகளையும் கிழித்து, அவர்களது தீய சதிதிட்டத்தை வெளிப்படையாக காட்டியுள்ளது[3]. ஆனல் இங்கும் ஊடகங்களில் இந்த விஷயம் வெளிவராமல் செய்துள்ளது.


ஒருவருடம் கோவில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது: ஒருவருடம் பிரச்சினையில் இருந்தபோது, கோவிலுக்குப் பூட்டுப் போட்டு வைத்தனர். இந்துக்கள் கோவிலுள் வரமுடியாதபடி தடுக்கப்பட்டனர். அதாவது அவர்கள் உரிமைகள் தடுக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருந்தன. கோவில் பாதுகாப்பும் இருந்தது. இப்பொழுது வழக்கு ஹிந்துக்களின் சார்பாக முடிவாகியுள்ளதால், போலீஸார் சென்று விட்டனர். அக்கோவில் சிதலமடைந்துள்ள நிலையில், பற்பல சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். அப்பொழுது, போலீஸ் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வளவு நடந்த பின்னரும், அரசிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று உணரவில்லை. இப்பொழுதுகூட, இறந்தவர்களுக்குக் கிரியைகள் செய்ய (கீழே குறிப்பிட்டுள்ளபடி), குறுக்குவழியாக இக்கோவில் வளாகத்தின் வழியாக சென்று வருகின்றனர். வாகனங்களுடன் வந்து செல்கின்றனர். சென்ற ஒரு வருட காலத்தில் பிப்ரவரி 2010 முதல் பிப்ரவரி 2011 வரை, கோவிலில் போலீஸ் பாதுகாப்பு இருந்தபோது, அவ்வாறு அவர்கள் செல்லாமல் இருந்தார்களா இல்லை செல்ல அனுமதித்தார்களா என்று தெரியவில்லை!


வெற்றிக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது: ஹிந்துக்கள் கோவிலைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆற்றுக்குச் செல்லும் வழியில், குவிந்திருந்த மண்ணை அப்புறப்படுத்தியதில், படிகட்டுகள் தெரிந்துள்ளன. இதனால், மிக்க பரவசத்துடன் படிகட்டு பூஜையினையும் நடத்தியுள்ளனர். பல கற்தூண்கள், குறுக்குத்தூண்கள்,  கூரை கற்பலகைகள் என சுற்றிலும் கிடந்தவற்றை, வலது பக்கத்தில் குவித்து வைத்துள்ளனர்.


இந்துக்களே கோவில் நிலத்தை அசுத்தப் படுத்துவது, அமங்கலப் படுத்துவது: இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் போது, உள்ளூர் இந்துக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று இறப்பு-கிரியைகள் செய்ய, “குறுக்கு வழி” என்று கோவில் வளாகம் வழியாக சென்று வருகின்றனர். 04-08-2011 அன்று ஆற்றில், இறந்தவர்களுக்குக் கிரியைச் செய்ய, இக்கோவில் வழியாகத்தான் செல்கிறார்கள். கிரியைக்கு வேண்டிய பச்சை தென்னம் ஓலை முதலியவற்றையும் அந்த வழியாகத்தான் எடுத்டுச் செல்கின்றனர். அவர்களின் கார்கள் மற்ற வாகனங்கள் தாராளமாக உள்ளே நுழைந்து வந்து, ஆற்றங்கரையில் நிறுத்திவிட்டு, ஆற்றின் நடுவேயுள்ள மண்டபத்திற்குச் செல்கின்றனர்.


முகமதியர்களின் கோவில் இடிப்பு, சிற்பங்கள் உடைப்பு வன்முறைகள்: கோவிலின் இடது பக்கத்தில், முகமதியர்கள் இங்கு வந்து இக்கோவிலை இடித்து துவம்ஷம் செய்து, அருகில் ஒரு நினைவிடம் போன்று கட்டப்பட்யுள்ளனர். ஆனால், அதற்குள் சென்று பார்த்தால், அது ஒரு பழைய இந்து மண்டபத்தை அப்படியே மேலாக மாற்றிக் கட்டி அந்தகைய கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. சுமார் 10 x 10 அளவில் உள்ள அம்மண்டபத்தில் நுழைந்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதன் உள்ளே ஏறிச் செல்ல கற்படிகட்டுகள் போல போடப்பட்டிருப்பது, பழைய இந்து கோவில் தூண்களே. அவற்றில் கடவுளர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. அதன் மீது காலை வைத்து ஏறி உள்ளே செல்ல வேண்டும். வட இந்தியாவில் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டுள்ளபோது, கடைபிடித்த அதே முறை இங்கும் கையாளப்பட்டுள்ளது. நடுவில் அல்லது ஒரு மூலையில் நின்று கொண்டு உயரே பார்த்தால், அந்த கட்டுமானத்தைப் பார்த்தால், எண்கோண வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ள தூண்கள் அதன் மீது படிப்படியாக, கோபுரத்திற்கு வேண்டிய உள்கட்டுமான அமைப்பைப் பார்க்கலாம்.


இந்துக்கள் வழக்கில் வெற்றிப் பெற்றப் பிறகு முஸ்லீம்கள் செய்யும் குறும்புத்தனமான ஆனால் விஷமத்தனமாக பிரச்சினை: இப்பொழுது, யாரோ ஒரு முஸ்லீம் அவ்வப்போது மதியம் வந்து, ஊதுவத்தியைக் கொளுத்தி வைத்து, தொழுகை நடத்தி விட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் 04-08-2011 அன்று அங்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தபோது யாரும் வரவில்லை. நிச்சயமாக, இந்துக்கள் இந்த வழக்கில் வென்றுவிட்ட நிலையில், மறுபடியும் விஷமத்தனமாக பிரச்சினை ஏற்படுத்தவே, அவ்வாறு அந்த முஸ்லீம் செய்வதாகத் தெரிகிறது[4]. கிருத்துவர்களுக்குப் பிறகு, முஸ்லீம்கள் அடாவடித்தனத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. முதலில்தாவர்கள் தமிழகத்தில் இப்படி பல கோவில்கள் இடிக்கப்பட்டதற்கு, கொள்ளையடிப்பதற்கு வெட்கப்படவேண்டும், பிராயசித்தம் செய்யவேண்டும். ஏன், இப்பொழுதும் பல்லாவரம் (சென்னை), கீழக்கரை, காரைக்கால், நாகப்பட்டனம், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் உள்ள தர்கா-மசூதிகள் அகற்றப்பட்டு, இந்துக்களுக்குத் திரும்ப அளிக்கப்பட வேண்டும். இன்றும் அந்த தர்காக்கள்-மசூதிகளுக்குள் கோவில் தூண்கள், சுவர்கள் மற்ற கட்டுமான அமைப்புகள் காணப்படுகின்றன.

முடிவுக்கு வந்தது சர்ச்சை: செஞ்சி கோதண்டராமர் ஆலயம் திறப்பு[5]First Published : 09 Feb 2010 01:17:59 AM IST

செஞ்சி,​ பிப்.8, 2010 :​ ​ சர்ச்சைக்குள்ளான செஞ்சி கோதண்டராமர் கோயில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு,​​ வழக்கம்போல் வழிபாடு நடைபெற்றது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோதண்டராமர் ஆலயம் உள்ளது.​ இதில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில்,​​ கடந்த டிசம்பர் 7-ம் தேதி கோதண்டராமர் ஆலயம் அமைந்துள்ள இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும்,​​ 1878-ம் ஆண்டு மயிலம் ஆதீனம் பரம்பரையில் இருந்து ரூ.500-க்கு வேடந்தாங்கல் எப். டாரூஸ் என்பவர் கிரையம் வாங்கியதாக கிறிஸ்தவர்கள் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.  இதையடுத்து கோயிலில் பூஜை செய்யக்கூடாது என்று கூறி வட்டாட்சியர் மூலம் கோயிலை பூட்டி விட்டனர்.

இது தொடர்பாக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கோயிலுக்கு சீல் வைக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து இந்து முன்னணியினர்,​​ கோதண்டராமர் ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும்,​​ அனுமதி மறுத்தால் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.​ ​

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கோதண்டராமர் ஆலயத்தில் வழிபாடு நடத்த கோயில் சாவியை ஊர் பொது மக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதன் பேரில்,​​ செஞ்சி வட்டாட்சியர் ஊர் பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியிடம் சாவியை திங்கள்கிழமை ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் செஞ்சி கூட்டுசாலையில் இருந்து கோதண்டராமர் ஆலயதுக்கு ஊர்வலமாக சென்றனர்.​

பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் கோயில் சாவியை ஊர் பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியினரிடம் வழங்கினார். இதையடுத்து கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.​ இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாககுழு உறுப்பினர் காஞ்சி கண்ணன்,​​ மாவட்டச் செயலர் எஸ்.வி.சுப்பரமணியம்,​​ விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலர் சி.துரைரங்கராமானுஜதாசர்,​​ பழனி,​​ கணேசன்,​​ தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

200 ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த கோதண்டராமர் கோயில் தீர்த்தவாரி படித்துறை (பிப்ரவர் 2011): இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த கோதண்டராமர் கோயில் தீர்த்தவாரி படித்துறை, சீரமைப்பினால் வெளிப்பட்டுள்ளது[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கோதண்டராமர் கோயில் உள்ளது. தற்போது, இடிபாடுகளுடன் காணப்படும் இக்கோயிலைச் சுற்றி மிகப் பெரிய சுற்றுச் சுவரும், ஏராளமான மண்டபங்களும், சந்நிதிகளும் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன[7]. இக்கோவிலை 1714ம் ஆண்டில் ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நவாப்பிற்கும் நடந்த படையெடுப்பின் போது உடைத்து சேதப்படுத்தினர். இதன் பிறகு, இந்து மன்னர்கள் ஆட்சி இல்லாமல் போனதுடன், பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் பிடியிலும் நீண்ட நாள் செஞ்சி இருந்தது. இதனால் இக்கோயிலை புனரமைக்கவும், வழிபாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனாலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள இக்கோவில் மண்டபத்தில் மாசி மக தீர்த்தவாரி மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது, கோதண்டராமர் கோவில் பகுதியை புதுப்பித்து, திருப்பணிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த தீர்த்தவாரி படித்துறையில் மண்ணை அகற்றியுள்ளனர். இதுவரை சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இப்பகுதி, தற்போது கலையம்சத்துடன் படித்துறையாக அழகுடன் காட்சி தருகிறது. இந்த படித்துறையில் 18ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடத்த உள்ளனர். இதில் சிங்கவரம் ரங்கநாதர் செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் செஞ்சி பகுதியில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி  நடைபெற்றது: செஞ்சி, பிப். 18, 2011: செஞ்சி சங்கராபரணி நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது[8].  விழாவை முன்னிட்டு சிங்கவரம் அரங்கநாதர் ஊர்வலமாக புறப்பட்டு கோதண்டராமர் ஆலயத்துக்கு வருகை புரிந்தார். பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன் சங்கராபரணி நதிக்கரை படித்துறையில் அரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் நதியில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் சிறப்புப் பூஜைகளுடன் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்த காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், செஞ்சி பெரியகரம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மாரியம்மன். லட்ச தீப செல்வவிநாயகர், இல்லோடு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பகல் 1 மணிக்கு செஞ்சி சங்கராபுரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வசந்த மண்டபத்தில் சிறப்புப் பூஜையும், இதைத் தொடர்ந்து செஞ்சி நகர வீதிகளில் திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவை ஸ்ரீகோதண்டராம சுவாமி அறக்கட்டளை விழா குழுவினரும் பொது மக்களும் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் இப்பொழுதும் அதே நிலையில் உள்ளது: இந்திய தொல்துறைத் துறை அல்லது தமிழக தொல்துறைத் துறைகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அக்கோவிலின் பழையகாலம் பற்றிய விவரங்கள் வெளிவந்தால், மேலும் பிரச்சினகள் வரும் என்றதற்காக மௌனமாக இருக்கிறார்களா? இந்துக்களிடம் உள்ள அக்கோவிலை புனர்-நிர்மாணம் செய்யவேண்டியது அவர்களுடைய கடமையாகும். உழவாரப்பணி செய்யும் குழுக்கள்[9], “ரீச்” போன்ற இயக்கங்கள், மாதம் ஒருமுறையாவது, இங்கு வந்து, இருக்கும் கலைப்பொக்கிஷங்களைக் காக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எங்கெங்கோ சுற்றுலா செல்கிறார்கள், அதற்கு பதிலாக இங்கு ஒருமுறை வந்தால், பழமையை அறிந்து பாராட்ட முடியும். உள்ளூர் அன்பர்கள் சிலர், அங்கு வந்து செல்கின்றனர். தங்களது செலவில் பராமரிப்பு வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், அரசு எடையும் செய்வதில்லை. ஆனால், கோவில் நன்றாக வளர்ந்தவுடன், அறநிலைத்துறை மூலம் உள்ளே நுழைந்து விடும்[10]. ஆகவே இந்துக்கள் இதனை தகுந்த முறையில் நிர்வகித்து, புனர்-நிர்மாணம் செய்து, கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.

வேதபிரகாஷ்

21-08-2011


[1] 04-08-2011 அன்று நேர்காணலில் அந்த வீராங்கனையிடமிருந்து பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

[3] தில்லியிலுள்ள சில ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, முடிவிற்கு அதிகாரிகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. நல்லவேளை, அவற்றையும் மாற்றாமல் விட்டுவைத்தார்களே என்று சந்தோஷப்படவேண்டும்.

[4] செஞ்சியில் உள்ள நல்ல முஸ்லிம் அன்பர்கள், இந்த வேலையை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். அந்த முஸ்லீமிற்கு தகுந்த அறிவுரைக்கூறி அத்தகைய கலவர வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறித்தடுக்கப்படவேண்டும்.

[7] அவையெல்லாம் இருந்த நிலையில் தான், கிருத்துவர்கள் அக்கோவில் நிலமே எங்களுடையது என்று கேட்டு, ஒருவருடமாக கோவிலைப் பூட்டிவைத்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டுள்ளனர். கர்த்தர் அவர்களை நன்றாகவே ஆசிர்வதிக்கக் கூடும்!

[9] உழவாரப்பணிக் குழுக்கள் இங்கு வந்து பணி செய்வதற்கு அதிகமாகவே உள்ளது எனலாம். ஒருவேளை ராமர் கோவில் என்று வரமாட்டார்களா என்று தெரியவில்லை. அப்படியெனில், வைணவர்களும் அத்தகைய பணிக்குழுக்களை ஆரம்பித்து திருப்பணி செய்யவேண்டும்.

[10] இரவோடு இரவாக வந்து, உண்டியலை வைத்து விடுவார்கள்! பிறகு, உள்ளே கட்டிடம் கட்டிக் கொண்டு, திருவண்ணாமலை கோவிலுள் உள்ளதைப் போன்று, “ஃபைவ்-ஸ்டார்” பாணியில் அலுவலகத்தையும் கட்டிக் கொள்வர்கள்!

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

ஓகஸ்ட்13, 2011

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

நாத்திகத்திற்குப் பிறகு ஆத்திகமா, நாத்திகமா, இல்லை திராவிட பாணியில்  கொள்ளையா?  கருணாநிதி, இந்து எதிரி, விரோதி, துரோகி, துவேஷி என்று நன்றாகத் தெரிந்த விஷயம். அதேபோல இருக்கும் நாத்திக இந்து-விரோதி கூட்டங்கள் பற்பல பெயர்களில், உருவங்களில் அமைப்புகளாக வளர்ந்து, விரிந்து அத்தகைய துவேஷங்களை பரப்பி மக்களை கடந்த 60 வருடங்களாக கெடுத்து வைத்துள்ளனர். அத்தகைய மனப்பாங்கு, மனத்தில் ஊறித்திளைத்த அநியாயங்களை நியாயப்படுத்தி பேசிவந்த திறமை, அக்கிரமங்களை சரியென்றே தோற்றமளிக்கச் செய்த சாதுர்யம் முதலியவை மக்களில் சில பிரிவினரை உள்ள சட்டங்களை மதிக்காமல், தார்மீக கட்டுமுறைகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல் கொலை, கொள்ளை முதலிய காரியங்களில் அதிகமாகவே செய்து வருகின்றன. அந்நிலையில், இப்பொழுது அரசு மாறியுள்ள நிலையில், குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும், அத்தகைய கோவில் கொள்ளைகள், அம்மன் தாலி திருட்டுகள்,  உண்டியல் உடைப்புகள், கவசங்கள், கலசங்கள் முதலியவற்றைக் களவாடுதல் என்று தொடர்ந்து நடந்து வருவதன் மர்மம், பின்னணி என்ன? திராவிட பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு தொடர்கின்றனவா?  ஏற்கெனவே சில விஷயங்கள் “தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன”, என்ற தலைப்பில் அலசப்பட்டுள்ளன[1].

ஆடி மாதத்தில் அம்மன் தாலி அறுப்புகள் ஏன்? ஆடிமாதத்தில் தமிழகம் முழுவதும், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அம்மன் கோவில்களில் பூஜை, அபிசேகம், என மக்கள் விமசரியாகக் கொண்டாடி வருகின்றனர்[2]. அம்மன் தாலிகள், கவசங்கள் ஆடிமாதத்திலேயே நடக்கின்றன என்றால், அது தங்கம், வெள்ளி உலோக மதிப்பிற்காக கொல்ளையடிக்கப் படுகின்றனவா அல்லது அம்மன் ஒன்றும் செய்யமாட்டாள், அது வெறும் சிலைதான், இல்லை, அம்மனை வழிபட்டு கூட திருடலாம், அம்மன் பார்த்துக் கொள்வாள் (!) என்று திருடுகின்றனரா?

அம்மனைப் பார்க்க வரும், அம்மணிகளின், தமிழச்சிகளின்  தாலிகளையும் பறிக்கின்றவர்கள் தமிழர்களா?

  • உண்மையிலேயே அவர்கள் தாலிக்கட்டிய தாய்மார்களுக்குப் பிறந்தவர்களா,
  • தாலி கட்டிய மனைவிகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களா,
  • தாலிக்கட்டிய சகோதரிகள், மகள்கள், பெண்களைக் கொண்டவர்களா,
  • அத்தகைய குடும்பத்தைக் கொண்டவர்களா, சேர்ந்தவர்களா?
  • என்னத்தான் நடக்கிறது, தமிழ் நாட்டில், தமிழகத்தில்?
  • பிறகெதற்கு அம்மன் பெயரில் சினிமா எடுக்கின்றனர்?
  • கேடு கெட்ட, சமுதாயத்தை சீரழிக்கின்ற சினிமாக்களுக்கும் பூஜை போடுகின்றனர்?
  • கேடுகெட்ட நடிகைகளுக்கு முன் அம்மன் சிலைகள், படங்கள் வைத்து பூஜை செய்வது மாதிரி நாடகம் ஆடுகின்றனர்?

தெய்வபக்தியும் இல்லை, தாய் பக்தியும் இல்லை, பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவில்லை, பெண்ணினத்தை கௌரவமாக நடத்தத் தெரியவில்லை…. இல்லை, இதுவே இப்பொழுது தமிழகர்களின் நாகரிகமாகக் கூட மாறிவிட்டதோ என்னவோ? சம உரிமை என்று பேசும் பெண்களும் இதைப்பற்றிக் கவலைப் படுவதாக இல்லை. இது பெண்களின் உரிமைகளில் வராதா?

பூதப்பாண்டி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு; மர்ம கும்பல் அட்டூழியம்[3]:பூதப்பாண்டி, ஆக. 4, 2011- பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகியபாண்டிய புரம் எட்டாமடையில் முத்தாரம்மன், சுடலை மாடன் கோவில்கள் உள்ளன. 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன.  வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்துச்செல்வார்கள். இக்கோவிலில் முத்தாரம்மன், சாஸ்தா, வினாயகர், நாகர், நாக கன்னி, நாகலெட்சுமி உள்பட 7 சாமி சிலைகள் உள்ளன. இதில் அங்குள்ள ஒரு பீடத்தில் 1 1/2 அடி உயரத்தில் நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது.

அப்போது முத்தாரம்மன் கோவிலுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பீடத்தில் இருந்த நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிய அந்த கும்பல் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் வீசி விட்டு சென்றுள்ளது. இதைப்போல் அந்த பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் புகுந்த கும்பல் சுடலைமாட சாமியின் சிலையை சேதப்படுத்தி விட்டு சென்று உள்ளனர். அழகியபாண்டி புரம், பெரிய குளத்தங்கரையில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமியின் தலையை உடைத்து நடுரோட்டில் வீசிச் சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி அப்பாத்துரை, சாமி சிலைகள் உடைக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஊர் கமிட்டிக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்து வரும் கோவில் கொள்ளை, திருட்டுகள்:  ஒரு பத்து நிமிட கூகுள் தேடலில் கீழ்கண்ட கொள்ளைகள் காணக்கிடைக்கின்றன, பட்டியல் இடப்படுகிறது. இவற்றில் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நடத்தை முறை, கொள்ளை அமைப்பு, மனப்பாங்கு முதலியவை தெரியவருகின்றன.

  1. 08-08-2011: வள்ளியூர் (திருநெல்வேலி) அருகே காட்டு நாயக்கர் பராமரிப்பில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோவிலில், சாமி சிலைகள் சேதப்படுத்தப் பட்டன.
  2. 4 ஆகஸ்ட் 2011 – ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை : மர்ம ஆசாமிகளுக்கு வலை
  3. 3 ஆகஸ்ட் 2011 – திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி நடைபெற்றது. திருச்சி உறையூரில் புகழ் 
  4. 1 ஆகஸ்ட் 2011 – உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்துரூ.20 ஆயிரம் கொள்ளை: நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கைவரிசை.
  5. 29-06-2011: புதுச்சேரி: கண்டமங்கலம் அருகே, சின்ன புதுப்பட்டு கிராமத்தில், கோவில் பூட்டை உடைத்து இரண்டு பஞ்சலோக சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
  6. ஜூலை 14, 2011: வேலூர்,: அம்பலூர் அருகே எக்லாஸ்புரம் ஆற்றங்கரையோரம் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், புதன்கிழமை நள்ளிரவு சுவாமிக்கு  அணியப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி கீரிடம் திருடு போனதாம்.புகாரின்பேரில் அம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
  7. 25 ஜூன் 2011 – பேய்க்குளம் அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு.
  8. ஜூலை 16, 2011: திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கோயில் கோபுரத்தின் மீது உள்ள பழைமை வாய்ந்த 3 கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
  9. 14 ஜூன் 2011 – ‘பழநி அருகே கோபுர கலசம் திருட்டு: கோவில்களை குறிவைக்கும் கும்பல்’..
  10. 17 ஜூன் 2011 புதுவை அண்ணா நகரில் கோவிலில் கொள்ளை …
  11. 17 மே 2011 – பள்ளிபாளையம் அடுத்த ராகவானந்தா நகரில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோவில் முன் திரண்டனர். மக்கள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் மூன்று பேர், அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற மக்கள், ஒருவரை மடக்கிப் பிடித்து பள்ளிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பள்ளிபாளையம் அடுத்த தாஜ்நகரை சேர்ந்த ராமதாஸ் (22) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  12. 6 மே 2011 – தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு. கோவிலில்அம்மன் தாலி திருட்டு.
  13. 6 மே 2011 – திண்டுக்கல்லில் கோவிலில் கொள்ளை முயற்சி: அபாய மணி ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓட்டம்.
  14. 7 மார்ச் 2011 – திரவுபதி அம்மன் கோவிலில்
  15. 22 பிப்ரவரி 2011 – தூத்துக்குடி அருகே கோயில் கோபுரத்திலுள்ள வெண்கல கலசம் திருட்டுப்போனது.    திருட்டுகும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே செட்டியாபத்து கிராமத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் கோபுரத்தில் பல லட்சம் மதிப்பிலான கலசம் இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி கோயில் உச்சியில் ஏறி கலசத்தை திருடிச் சென்றுள்ளனர். 
  16. 13 பிப்ரவரி 2011 – தஞ்சையில் சோழர் கால கோவிலில் நகை திருட்டு. அதிகம்  தஞ்சாவூர்: தஞ்சையில் சோழர் காலத்து கோவிலில் நகைகள் திருட்டு போனது..
  17. 10 பிப்ரவரி 2011 – சுவாமி சிலைகள் திருடு 
  18. 9 பிப்ரவரி 2011 – கோவில் விழாவில் நகை கொள்ளை…மதுராந்தகத்தில் நடந்த கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் பொன் நகையை சிலர் களவாடி னர். மதுராந்த கம் தேரடி தெருவை சேர்ந் தவர் சிறீ ராமுலு. இவரது மனைவி வரலட்சுமி (வயது 68).
  19. 29 ஜனவரி 2011 –அழகர்சாமி கோவிலில்  சுவாமி சிலைகள் திருடு போயிருந்தன.  ஆனந்த வள்ளியம்மாள் ஐம்பொன் சிலைகள் திருடுபோயிருந்தன. .
  20. 21 ஜனவரி 2011 – கோவிலில் அம்மன் தாலி திருட்டு 
  21. 6 ஜனவரி 2011 – தாவடிப் பிள்ளையார் கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் 
  22. 25-08-2009: நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீஸ் உடையில் வந்தவர்கள் உடைத்ததால், பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே வடக்கு மாத்தாரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆக., 30 ல் விசர்ஜனம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்துள்ள அமைப்பினர் தான் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த ராஜாசெந்தில், ராமச்சந்திரன், நீலகண்டன், ராஜா, கண்ணன், பாலமுருகன் ஆகிய ஆறு பேரும் பாதுகாப்பு பணியில்..

வேதபிரகாஷ்

12-08-2011


[1] வேதபிரகாஷ்,தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன, https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/

https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D2/

[2] சன் – கலைஞர் டிவிக்கள் வழக்கம் போல பூதக்கண்ணாடி, உண்மை என்று பொய்களைப் பரப்பி வருகின்றன. சமீபத்தில் அவர்கள் கொடுக்கும் விளக்கமாவது, மக்கள் மனம் புண்படுத்தாது மாதிரி, புண்படுத்துவார்களாம்!

பூசாரியிடம் தகராறு இருவர் கைது: இதுவும் அவன் செயலா?

ஓகஸ்ட்8, 2010

பூசாரியிடம் தகராறு இருவர் கைது: இதுவும் அவன் செயலா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57531

தினமலர், ஆகஸ்ட் 08,2010,

குடும்பத்துடன் பூஜை செய்யச் சென்றவர்: விருத்தாசலம் : கம்மாபுரம் அருகே கோவில் பூசாரியிடம் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கம்மாபுரம் அடுத்துள்ள சின்னகோட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவிகாந்தி. இவர் அதே ஊரில் உள்ள வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்தக் கோவிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை (50) குடும்பத்துடன் பூஜை செய்யச் சென்றார்.

பூஜை செய்யாமல் காலம் கடத்துவதாக சண்டை: அப்போது பூசாரி சஞ்சீவிகாந்தி பூஜை செய்யாமல் காலம் கடத்துவதாக கூறி அய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் அருள்பிரகாசம், அருள்தாஸ் ஆகியோர் பூசாரியிடம் தகராறு செய்து தாக்கினர். [கூட்டமாக இருந்ததா, பூஜையை வேகமாக நடத்தவில்லையா என்ற விவரங்கள் தெரியவில்லை. பூஜாரியை அடிக்கும் வகையில் என்ன நடந்தது?].

பூஜாரியை அடித்தவர்கள் கைது: இதுகுறித்து சஞ்சீவிகாந்தி கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து அய்யாதுரை, அருள்பிரகாசம் ஆகிய இருவரையும் கைது செய்து அருள்தாஸை தேடி வருகின்றனர் [இத்தகைய தாக்க்தல்களின் பின்னணியை ஆராய வேண்டும் – பூசை செய்வது தாமதம் ஆனதா, அல்லது வேறு காரணங்களுக்காக தாக்காப்பட்டாரா முதலிய விவரங்க்ளை ஆராயவேண்டும்].

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு!

ஓகஸ்ட்8, 2010

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு

தமிழக கோவில்களில் வருமானத்தை பெருக்க மக்களிடம் எதற்கு கொள்ளை? தமிழக கோவில்களில், வருமானத்தை பெருக்க, பூஜை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில், இரண்டு ரூபாயாக இருந்த அர்ச்சனை கட்டணம், ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனை, புதுக்கணக்கு பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.

பூஜை கட்டணம் உயர்வு செய்தி இந்து முன்னணி மூலம் வெளியிடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் கருணாநிதி முந்திக் கொண்டு வரும் போது, இதற்கு மட்டும் ஏன் இந்து முன்னணி வரவேண்டும்? திமுகவிற்கும், இந்து முன்னணிக்கும் ஏதாவது உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதா? நிலுவையில் இருக்கின்ற வாடகை, குத்தகை……………….இத்யாதி பாக்கிகளை வசூல் செய்தாலே கோடிகள் கிடைக்கும். அப்படியிருக்கும்போது, சாதாரண மக்களை சுரண்ட இப்படி கருணாநிதி இறங்கியுள்ளது, நிச்சயமாக இந்துக்களுக்கு தொந்தரவு செய்யத்தான் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன் கூறியதாவது: அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ரூபாயாக இருந்த இரு சக்கர வாகன பூஜை டிக்கெட் 30, 10 ரூபாயாக இருந்த நான்கு சக்கர வாகன பூஜை 50, 15 ரூபாயாக இருந்த சகஸ்ரநாம அர்ச்சனை 50, 25 ரூபாயாக இருந்த புது கணக்கு பூஜை 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடாமல் திடீரென கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பூசப்பன் கூறினார்.

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் 5 மடங்கு உயர்வு, ஆகஸ்ட் 07,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56381&Print=1