Archive for the ‘ISO சான்றிதழ்’ Category

ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை!

திசெம்பர்19, 2009
ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை!
* இனி  மொஹம்மது கஜ்னி, இப்ராஹிம் லோடி, ஔரங்கசீப், மாக்லிகாஃபூர் போன்ற கொள்ளையர்கள் தூரத்திலிருந்து வரவேண்டாம். உள்ளுரிலேயே கைதேந்ர்தவர்கள் இருப்பது நன்றாகவேத் தெரிகிறது.

டி மதிப்புள்ள மரகதலிங்கம் திரும்பப்பெறப்பட்டது என்று படோபடமாக செய்திகள், படங்கள் எல்லாம் வெளிவந்தன. ஏதோ சிலை திருட்டுத் தடுப்பு காவல் துறையினர் பயங்கரமாக வேலை செய்து பிடித்தது போல படம் காட்டினர். ஆனால், கொள்ளை என்னவோ நடந்து கொண்டுதான் உள்ளது. இதோ உண்மைகள்………………

கோவில்களில் தொடர் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
டிசம்பர் 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14790

அரியலூர்: அரியலூர் அருகே, கோவில்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான, 51 வெண்கல சுவாமி சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம், கோவிலின் நிர்வாக அலுவலர் முருகேஷ் உள்ளிட்டோர் சுவாமி சிலைகளை கணக்கெடுக்கும் பணிக்காக, கோவில் காப்பகத்துக்கு சென்றனர். அப்போது, கோவில் காப்பகத்தின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வாயில் கதவுகள் திறந்து கிடந்தன.

பூட்டப்பட்டக் காப்பகத்த்லிருந்து வெண்கல சிலைகள் மாயம்! கோவில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்கல சிலைகளை கணக்கெடுத்த போது, சோமாஸ்கந்தர், கந்தன், மயில் வாகன முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், ஐயனார் உள்ளிட்ட ஆறு சுவாமி சிலைகள் திருடப்பட்டது தெரிந்தது. கோவில் நிர்வாகத்தின் புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

* பூட்டிய 3, 4 மற்றும் 5வது கதவுகள் எவ்வாறு திறந்து கிடக்கும்?
* பூட்டுகள் திறக்கப்பட்டனவா, உடைக்கப் பட்டனவா?
* யார் யாரிடம் சாவிகள் இருந்தன?
* நன்றாகத் தெரிந்தவர்கள்தாம் திருடியிருக்கின்றனர்.
* அயல்நாடுகளில் சோமஸ்கந்தர் சிலை விலை அதிகம் என்பதனால் குறிப்பாக அதைத் திருடியது தெரிகிறது.
* நிச்சயமாக இது ஒரு திட்டமிட்டுத் திருடிய “உத்தியோகத்”திருட்டு / சிலைக் கடத்தல் கும்பல்.

பூட்டை உதைத்து கோவில் உண்டியல் பணம் கொள்ளை: இதேபோல், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மீன்சுருட்டி சலுப்பை கிராமத்தில், துறவு மேல் அழகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கோவில் நடையை சாத்திய பிறகு, கோவில் கதவின் பூட்டை உடைத்து, கோவில் உண்டியலில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவில் தர்மகர்த்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

* கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நௌழைந்திருக்கவேந்தும்.
* பிறகு உண்டியலையும் உடைத்திருக்கவேண்டும்.
* எனவே அத்தகைய விவரங்களை அறியாதவர்கள் திருடியிருக்கமுடியாது.

மூன்று கோவில்களில்மர்மநபர்கள் கைவரிசை
டிசம்பர் 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14792

வேலூர்:அரக்கோணம் அருகே, ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தில், பழமையான அகத்தீஸ் வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கோபுர கலசம் திருடு போனது.

அகத்தீஸ் வரர் கோவிலில் கொள்ளை: இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் குருக்கள், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமியின் மீதிருந்த வெள்ளி திருநீர்பட்டை, ருத்ராட்ச மாலை, தங்கத்தாலி, பொட்டு, வெள்ளி கிரீடம், வெள்ளிக் கவசம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிந்தது.அதே பகுதியில் உள்ள மற்றொரு கோவிலான பிரம்ம அய்யங்கார் கோவிலின் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், குறிசொல்லும் கோவிலின் ஜன்னலை உடைத்து, அங்கிருந்து பட்டுத்துணிகளை கொள்ளையடித்துள்ளனர். மூன்று கோவில்களின் கொள்ளை சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ஏற்பெனவே கோபுர கலசங்கள் மட்டும் திருடும் கோஷ்டி பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் உள்ளது என்பதனை, அத்தகையத் திருட்டுகள் வைத்து உண்ரலாம்.
* இப்பொழுது அரக்கோணம், வேலூர் பகுதிகளில் அத்தகைய திருட்டுகள் இருப்பதனால், அதே கோஷ்டி இங்கு வந்துள்ளதா அல்லது இன்னொரு கோஷ்டி உருவாகியுள்ளதா என்று ச்சராயவேண்டும்.
* பொருட்களை எடுத்துள்ள முறைப் பார்க்கும்போது, இது பொருள் மதிப்பிற்காகத் திருடியதைப் போல உள்ளது.
* அதாவது மேற்குறிப்பிடப் பட்ட சிலைகளைத் திருடிய “உத்தியோகத்” திருடர்கள் அல்லர்.

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

நவம்பர்13, 2009

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

கோவில் நிர்வாகத் தரம் பார்க்கும் நிறுவனங்கள், முயற்ச்சிகள்: திடீரென்று இப்பொழுது கோவில்கள் எல்லாம் ISO தரச்சான்றிதழ் (ISO Certification) பெற்றாகிவிட்டன என்று தெரிவிக்கப் படுகின்றன. உடனே கோவில் டிரஸ்ட் அதிகாரிகள், தலைவர்கள், “இப்பொழுதெல்லாம் கோவில்கள் மிகவும் நன்றக நிர்வகிக்கப்படுவதாகவும், வெளியாட்களின் சேவையால் கோவிலின் பாதுகாப்பு மற்றும் தூய்மை நன்றாக இருப்பதாகவும் வைத்திருப்பதாகவும்“ அறிக்கைகள் விடப்படுகின்றன, செய்திகள் வருகின்றன. உடனே மற்றவர்களும் அப்பாதையைப் பின்பற்றுவோம் என்று கிளம்பிவிட்டர்கள்.

கோவில்களை சுத்தப்படுத்த வெளியாட்கள் வரவேண்டும் என்றால் இந்துக்கள் வெட்கப்பட வேண்டும்: இந்துக்களுக்கு என்ன கொஞ்சம் கூட சூடு, சொரணை, தன்மானம்…..  ….  ….  …இவையெல்லாம் இல்லையா, அல்லது மறந்து விட்டதா? “இந்துக்களாக” சாமி கும்பிட உள்ளே வரும்வரும் அவர்களுக்கு கொஞ்சம்கூட புத்தியில்லையா? மனத்திற்குள் இருக்கும் மாசை, அழிக்கை, குப்பைகளை அழிக்கத்தானே இந்துக்கள் கோவில்களுக்கு வருகிறார்கள்? ஒருவேளை, இத்தனை ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்து அங்கேயே இவையெல்லாவற்றையும் கொட்டிவிட்டுச் சென்றதால்தானோ, இந்த பெறுக்கிகள் இன்று தூய்மை செய்கிறேன் என்று கிளம்பி விட்டர்கள்? பாருங்களேன், கோவில்களுக்கு உள்ளயேயும், வெளியேயும்! [மனிதனால் வெளியேற்றப் பட்ட குப்பைகள், நாகரிக குப்பைகள், விஞ்ஞானமுறையில் கொட்டப்பட்டக் குப்பைகள்] அத்தகைய “பக்திகரமான” ஊழலை, அசிங்கத்தை ஏன் செய்ய வேண்டும்? இதையேல்லாம் தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லிக் கொடுத்தார்களா?

உழவாரப்பணி எங்கே போயிற்று? நமது திருமூலர் சொல்லியதைவிடவா, இவர்கள் நமக்கு ஆலய நிர்வாகத்தைப் பற்றி சொல்லிவிட போகின்றனர்? நினைவிருக்கிறதா? திருநாவுக்கரசர் / அப்பர் அடிகள் அந்த தள்ளாடும் வயதினிலும் எப்படியிருந்தார்? குவாலிஸ் காரில் சென்றாரா? கையிலே உழவாரப்ப்டை வைத்துக் கொண்டுதானே கோவில்களில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். ஆமாம், “பெருசு” பற்றியெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஏளனம் பேசி திசைத் திருப்பும் காலமிது! இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். எப்படி தங்களது மீதான தாக்குதல்கள் அதி-நவீன முறையில் பிரயோகிக்கப் படுகிறது, செயல்படுகிறது என்பதனை உணர்ந்து, அறிந்து காரியத்தில் இறங்கவேண்டும் [ஏனெனில் படித்த நண்பர்களே அத்தகைய நவீன நிர்வாகமுறை நல்லதிற்காகத்தானே என்று வாதிட தோன்றும்]

கோவில்களைக் கட்டியவர்களுக்கு நிர்வாகம் தெரியாதா? கோவில் நிர்வாகம் என்பது ஒன்றும் புதிய கலையல்ல, அதை இந்தியர்களுக்கோ, இந்துக்களுக்கோ புதியதாகச் சொல்லிக் கொடுக்க. கோவிகளைக் கட்டத் தெரியும், ஆனால் நிர்வகிக்கத் தெரியாது என்பன போல சித்தரித்துக் காட்டும் இந்த முயற்ச்சிகள் கோவில்களில் உண்மையான அக்கரை இல்லாத “கருப்புப் பரிவார்”, “சிகப்புப் பரிவார்” கோஷ்டிகள், மறைமுகமாக கோவில் பணத்தை சட்டரீதியாக உறுஞ்சுவதற்கு என்றுதான் தெரிகிறது. மேலும் அத்தகைய எண்ணத்தை உருவாக்குவதே நச்சுத்தனமானது.

“குருகுலங்கள்” அழிக்கப்பட்டு வியாபாரக் கூடங்கள் வளர்ந்தமை: எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாக்கப் பட்டு அதிலும், சிறுபான்மையினர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதுபொல, நேரிடையாக கோவில்களில் நுழைந்து, இந்தியநாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழிக்கப் போடும் வேடமோ என்ரு எண்ணத் தோன்றுகிறது. விஜயநகர காலத்திற்குப் பிறகு வந்த மேனாட்டு வியாபாரக் கம்பெனிகளும், இனிமேல் வரப்போகும் வியாபாரக் கம்பெனிகளும் ஆலயங்களைக் காக்காது, நிச்சயமாகக் கொள்ளைத் தான் அடிக்கும்.

கோவில்கள் வியாபாரக் கம்பெனிகள் அல்ல: இப்படியே விட்டுவிடால், எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாகி போய்விட்டதோ, அதுபோல, கோவில்களும் கம்பனிகளாகிவிடும்! பிறகென்ன, லாபம்-நஷ்டம் பார்க்கவேண்டியிருக்கும்! ஒரு பொருளை / சேவையை விற்ப்பவன் மற்றும் வாங்குபவன் என்ற நிலையில் கோவில்கலின் நிலையைக் குறைத்துவிட்டால், அத்தகைத் தரம், தரமாகாது. அது கோவில்களுக்கு(ள்) வரும் “நம்பிக்கையாளர்களின்” திறம் குறைந்துவிட்டது என்பதுதான் பொருள்! பிறகு எந்த கோவில்கள் லாபத்துடன் இயங்குகிறது-இல்லை, எந்த கோவில்கள் வேவை செய்யும் கம்பெனிகளுக்கு சம்பளம் / போனஸ் கொடுக்கிறது-இல்லை, அத்தகைய கோவில்களின் மீது வழக்குகள், அத்தகைய குற்ரங்களை மீறியதற்கு கோவில்களின் மீது அபராதங்கங்கள், திவாலா நோட்டீஸுகள், ஜப்தி…………………அல்லது அடுத்த கோவில் ”தத்தெடுத்து”க் கொள்வது (takeover)………..  …  … இப்படியெல்லாம் நடக்கும். அது இந்துக்களுக்குத் தேவையா? அதுமட்டுமா, வேவை செய்யும் வேலையாட்கள் இந்த கோவில் சங்கம் . அந்த கோவில் சங்கம் என்று ஆரம்பித்துவிட்டு, கோவில் முன்பே கொடியேற்றி விடுவர்! அவை அரசியல் சார்புடையாதாக இருக்கும். திடீரென்று “ஸ்டிரைக்”கும் நடக்கும்! இதெல்லாம் தேவையா?

கோவில்களை பாதுகாப்பது யார்? “வெளியாட்களை நியமித்தல்” (Outsourcing) என்ற ரீதியில், இவர்களே புதிய கம்பெனிகளைத் தோற்றுவித்து அல்லது உள்ல கம்பெனிகளையே காசு கொடுத்து வாங்கிவிட்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். செக்யூரிடி கம்பெனிகள் பாதுகாப்பு அளிக்குமாம். பிறகு, யாராக இருக்கும் இந்த செக்யூரிடி கம்பெனிகள்? யார் அதில் பயிற்ச்சி கொண்டு, கோவில்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வருவர்? அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட வரலாமே? ஏன் இத்தகைய வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடனே “ஜிஹாதி தீவிரவாதிகள்” இன்று முதலே “இந்துக்கள்” போர்வையில் பயிற்ச்சி பெற்று கழகங்களின் கம்பெனிகள் மூலம் கோவில்களுக்குள் நுழைந்து விடுவார்களே? பிறகு, கோவில்களினின்று குண்டுகள் வெடிக்கும்! உடனே நம்முடைய செக்யூலரிஸ சித்தாந்திகள் மற்றவர்கள் “இந்து தீவிரவாதிகளே, குண்டு வைத்துவிட்டு” மற்றவர்கள்மீது பழி போடுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார்கள். கோவிகளில் “ரையிட்” நடக்கும். ஞாபகம் இருக்கிறதா, “Operation Bluestar”!

இந்து அறநிலையத்துறை சான்று பெற்றுவிட்டதா? நாத்திகக் கூட்டங்கள் கோவில் சொத்துகளைக் கொள்ளையடித்து, ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபுர்களையும் வென்றுவிட்ட இவர்கள், இன்று கோவில் நிர்வாகத்தைப் பற்றி பேசுகின்றனர். கோடிக்கணக்கான கோவில் பணம் நிலுவையுள்ளதை வசூல் செய்ய இவர்களுக்குத் துப்பில்லை, நாதியில்லை. கோவில் நிலங்களையே பட்டாப் போட்டு கொடுத்து விட்டபிறகு, தவறு என்று “சர்க்குலர்” விடும் நிர்வாகம் இந்த கொள்ளையடிக்கும் நிர்வாகம். “இந்து அறநிலையத்துறை”யில் சம்பந்தமே இல்லாதவர்கள் வேலையில் இருந்து கொண்டு கோடிக்கணக்கான இந்துக்களை ஆட்டிப் படைக்கிறார்கள். கும்பாபிஷேகம் நடத்துகிறோம் என்று லட்சக்கணக்கில் வசூல் பணத்தை விழுங்கிவிடுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பல்லாயிரக் கணக்கான வழக்குகள் போட்டு, நல்ல காரியங்களை முடக்கி வைத்துள்ளார்கள்.

படித்த இந்து இளைஞர்கள் முன்னே வரவேண்டும்: இன்று ஓரளவிற்கு இந்து இளைஞர்களுக்கு விழிப்பு வந்துயிருக்கிறது [சித்தாந்தங்களினால் குழம்பியுள்ளனர் என்பது வேறு விஷயம்]. ஆகவே எப்படி கோவில்களைக் காப்பது என்பது பற்றி அவர்கள் தீவிரமான சிந்தனையுடன் அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை நுண்ணமாக யோசித்து, அலசி முடிவிற்கு வரவேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அங்கங்குள்ள இளைஞர்கள் கோவில்களுக்குச் சென்று சுத்தப்படுத்த ஆரம்பித்தாலே போதும், அந்த குப்பைகளை அள்ள, இன்னொரு டென்டர் விட்டுவிடுவார்கள்! கோடிக்கணக்கான “இந்துக்கள்” உள்ளனரே, அப்படி ஒருநாள் வந்து புல்லைப் பிடுங்கி, களையெடுக்க ஆரம்பித்துவிட்டலே போதும், இத்தகைய அதி-நவீன-யுக்திக்காரர்கள் அடங்கி விடுவர்கள்.

எழுமின், விழுமின்: விவேகானந்தர் சொல்லியபடி இந்துக்கள் விழித்துக் கொள்ளவும், எழுந்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது! இனி வெட்கப் படாமல், பாரபட்சம் பார்க்காமல், தைரியம்மாகப் புல்லைப் பிடுங்க வேண்டும், களையெடுக்க வேண்டும், நச்சுண்ணிகள், சாருண்ணிகள், ஒப்புண்ணிகளை அழித்துவிட வேண்டும். புறப்படுங்கள், எழுமின், விழுமின்!