Archive for the ‘மடத்துக்கு சொந்தமாக நிலம்’ Category

தருமபுரம் ஆதீனமடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.

மஹாபாரத யுத்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர். 

வழக்குப் பதிவு, கைது முதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].

முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்.. 

2018ல் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன்  பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.

ஆன்மீகக் கூட்டா, அரசியல் கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: தருமபுர ஆதீனத்தை மிரட்டிய பா.. பிரமுகர்; 4 பேர் கைது, Web Desk, 29 Feb 2024 12:55 IST

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-search-bjp-secretary-who-threats-dharumapuram-aadheenam-with-sexual-tape-release-4126860

[3] தினகரன், போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி, February 29, 2024, 5:52 pm

[4] https://www.dinakaran.com/chief-minister-dharumapuram-atheenam-thank-you/

[5] விகடன், `பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்!’ – திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு, கே.குணசீலன், Published:17 Oct 2018 3 PM; Updated:17 Oct 2018 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/139957-thiruvavaduthurai-aadheenam-files-complaint-against-bjp-cadre

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிக்கும் நிலையில் வெளிவரும் செய்திகள் (1)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிக்கும் நிலையில் வெளிவரும் செய்திகள் (1)

திருச்செந்துறை கிராமத்தில் நடப்பது என்ன?: தினமலரில் 09-09-2022ல் வெளிவந்துள்ள செய்தி முக்கியமானது. ஏனெனில், தமிழகத்தில் எத்தனைப் பெரிய மோசடிகள், சட்டமீறல்கள், சட்டங்களை மீறிய குற்றங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோர் திட்டமிட்டு பல்லாண்டுகளாக செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. இனி விவரங்களைப் பார்ப்போம். திருச்சி அருகே முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கு, அருகில் உள்ள அந்தநல்லுார் ஒன்றியத்தைச் சேர்ந்த திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அவசர தேவைக்காக, 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை, ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்தார். 3.50 லட்சம் ரூபாய்க்கு கிரைய பத்திரம் ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்ய, 5ம் தேதி, திருச்சி மூன்றாம் எண் சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. ‘வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்‘ என, சார் – பதிவாளர் முரளி கூறியுள்ளார்[1]. அதற்கு ராஜகோபால், ‘1992ல் வாங்கிய என் நிலத்தை விற்க, வக்பு வாரியத்திடம் ஏன் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்?’ என அப்பாவியாக கேட்டுள்ளார்[2].

வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு ஆணையிட அதிகாரம் உள்ளதா? – இது தான் நடைமுறை: அதற்கு சார் – பதிவாளர் முரளி, திருச்செந்துறை கிராமத்தில் உள்ள எந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், இது தான் நடைமுறை. ‘மொத்த கிராமமும் தங்களுக்கு சொந்தமானது என, வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு ஆவணங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது[3]. ‘மேலும், கிராமத்தில் உள்ள நிலத்திற்காக பத்திரம் பதிய வருவோர், தங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் எனவும் கூறி உள்ளது‘ என, விளக்கம் அளித்துள்ளார்[4]. அத்துடன், 250 பக்க வக்பு வாரிய கடித நகலையும், ராஜகோபாலிடம் காட்டிஉள்ளார். அந்த கடிதத்தில், தமிழகம் முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தங்களுடையது என, வக்பு வாரியம் கூறியுள்ளது. இதனால் நொந்து போன ராஜகோபால், கிராம மக்களிடம் பிரச்னையை கூற, ஒட்டுமொத்த கிராமமும் கொந்தளித்துள்ளது.

நிலத்தின் சொந்தக் காரர் யாரிடமோ சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற கூத்து என்ன?: ‘ஏற்கனவே பதிவான பத்திரம், சிட்டா, அடங்கல், வருவாய் ‘ஏ’ பதிவு, வில்லங்க சான்று உள்ளிட்ட வருவாய்த் துறை ஆவணங்கள் தங்களிடம் இருக்கும்போது, திருச்செந்துறை கிராம சொத்துக்களை தங்களுடையது என, வக்பு வாரியம் எப்படி குறிப்பிடலாம்?’ என, கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்பிரச்னை, மாவட்ட கலெக்டரிடம் சென்றபோது, ‘இது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்பே, இதில் முடிவெடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளார். ஒருவர் வாங்குவது, இன்னொருவருக்கு விற்பது, பிறகு அதை முஸ்லிம், கிருத்துவர் வாங்குவது போன்ற நாடகங்களும் அரங்கேறி வருகின்றன………….100 – ஆண்டுகள் லீஸ் / குத்தகை போன்ற போர்வைகளிலும், இத்தகைய மோசடிகள் நடக்கின்றன………..திராவிட, திராவிடத்துவ, இந்துவிரோத கும்பல்கள் பகுத்தறிவு போர்வையில் இந்த சூதை, மோசடியை, குற்றங்களை செய்து வருகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் எல்லா நிலமும் கடவுளுடைது தான்: இந்துக்களின் சரித்திரத்தை மறைக்க, மறுக்க, மறக்க செய்யப் படும் சூழ்ச்சிகள் தான் இவை……….பெயரை மாற்றினால், மதம் மாறினால்,  என்ன விளைவுகள் ஏற்படும், அரசாங்கம் எந்த அளவுக்கு ஊனமாகி விடும் என்பதற்கு இன்னொரு உதாரணம்….. உண்மையில் தமிழகத்தில் உள்ள எல்லா நிலங்களும்  சாமிக்கு / கடவுளுக்கு சொந்தமான நிலங்கள் தான். துலுக்கர் வந்த பிறகு, அவரது ஆட்சிக்கு உட்பட்டதாக சரித்திரம் சொல்லிக் கொண்டாலும், கோவில்கள், மடங்கள் இருந்தன, இருந்து வந்துள்ளன………..பிறகு தான், வக்ப் எல்லாம் உருவானது… ஆகவே, எந்த நிலமும் வக்பு அல்லது மற்ற மதத்தினருக்கு சொந்தமானது என்பது, பொய் தான்.. ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது, ஜமீந்தார்களை, துலுக்கர்களை வைத்து நிலவரி வசூலித்தது……… அப்பொழுது, இந்த-ஜமீன் நிலம், இந்த ஜமீன்தாருக்கு சொந்தம் எனப் பட்டது…….பிறகு தான் வக்பு வந்தது…………………….எனவே இந்தியாவில் மதரீதியில், கிருத்துவர்-துலுக்கர்களுக்கு சொத்தாக நிலங்கள் உள்ளன என்பது அபாண்டமான பொய்-பித்தலாட்டம் ஆகும்..

பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோவில் மற்றும் ஆஸ்தான மண்டபம்: இது குறித்து, திருச்சி மாவட்ட பா.ஜ., பிரமுகர் அல்லுார் பிரகாஷ் கூறியதாவது: “திருச்சிக்கு அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் விவசாய பூமி; ஹிந்துக்கள் நிரம்பிய கிராமம். வக்பு வாரியத்துக்கும், திருச்செந்துறை கிராமத்துக்கும் என்ன சம்பந்தம்? காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் அழகிய கிராமம் தான் திருச்செந்துறை. அங்கு, பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது என, பல்வேறு ஆவணங்கள், சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலுக்கு திருச்செந்துறை கிராமத்திலும், கிராமத்துக்கு வெளியேயும், 369 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது”. ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்?

வட்டாட்சி அலுவலகம் எப்படி மோசடிகளை அனுமதிக்கிறது?: இந்த கோவில் நிலமும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதா? எதன் அடிப்படையில் இப்படி செய்கின்றனர்? வருவாய் ஆவணங்கள் தனிநபர்களுக்கு சொந்தமானதாக இருக்கும்போது, அடிப்படை ஆதாரம் இல்லாமல், வக்பு வாரியம் எப்படி அறிவிக்க முடியும்? வக்பு வாரியம் கடிதம் எழுதினாலும், அதை சரிபார்க்காமல், பத்திரப் பதிவு துறை உயர் அதிகாரிகள், பத்திரம் பதியக் கூடாது என, எப்படி உத்தரவிட்டனர்? ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் பங்குனி மாத ஆதிபிரம்மோற்சவ விழாவின் போது திருச்செந்துறை கிராமத்தில் எழுந்தருளுவார். அங்கு பெருமாள் எழுந்தருளும் ஆஸ்தான மண்டபம் உள்ளது. இவ்வாறு அல்லுார் பிரகாஷ் கூறினார். வட்டாட்சி அலுவலகத்தில் மாபெரும் மோசடி நடக்கிறது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. அங்கிருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆவணங்களை வைத்துக் கொண்டு, மோசடிக் காரர்களுக்குத் துணைப் போகின்றனர் அல்லது அத்தகைய திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதும் தெரிகிறது.

பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி கூறியதாவதுஅரசிடம் பேசுவோம்!’: பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி கூறியதாவது: நீர்நிலைகள், வக்பு வாரிய சொத்துக்கள், கோவில் சொத்துக்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. போலி ஆவணங்கள் வாயிலாக, சம்பந்தம் இல்லாதவர்கள் கையில் நிலங்கள் இருப்பதாக, அரசுக்கு தகவல்கள் வந்தன; சில வழக்குகளும் போடப்பட்டன. இப்பிரச்னையில் நீதிமன்றம் அரசை விமர்சித்ததோடு, சொத்துக்களை மீட்க, சரியான வழிமுறைகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 2016ல், சொத்துக்களை மீட்க, சட்டதிருத்தங்களை அரசு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் தங்கள் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வக்பு வாரியம் களம் இறங்கியது. ஆனால், அதற்கும் தனிநபர் சொத்திற்கும், இந்து நிலங்கலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த அடிப்படை விசயம் அவர்கலுக்குத் தெரியாதா என்ன?

வக்பு வாரிய பிரச்சினையை இந்துக்களுடன் தொடர்பு படுத்துவது ஏன்?: தங்கள் சொத்துக்களாக கண்டறியப்பட்டதை வரிசைப்படுத்தி, அவற்றை பத்திரப் பதிவு துறைக்கு தெரியப்படுத்தி உள்ளது. மேலும், குறிப்பிட்ட சொத்துக்கள் தொடர்பாக, பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், அதை நிறுத்தவும் பதிவு துறையிடம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் திருச்செந்துறை, கடியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் முழுமையும் வக்பு வாரிய சொத்துக்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன. இருந்தபோதும், திருச்செந்துறை கோவிலும், அதற்கு சொந்தமான நிலங்களை கூட, வக்பு வாரிய சொத்துக்கள் என குறிப்பிடுவது அபத்தம் தான். வக்பு வாரிய கடிதத்தின் அடிப்படையில், பத்திரப் பதிவுகளை மறுக்கும்போது, நடைமுறையில் சிக்கல் வருகிறது. இது குறித்து, சிறுபான்மையினர் நலத் துறை செயலர், வக்பு வாரிய தலைவரிடம் பேச உள்ளோம். திருச்செந்துறை, கடியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களை தவிர, சென்னை, திருவல்லிக்கேணியிலும் வக்பு வாரிய சொத்து பிரச்னை உள்ளது. இது குறித்து அரசிடம் பேசி, உரிய பரிகாரம் தேடப்படும். இவ்வாறு அவர் கூறினார்[5].

© வேதபிரகாஷ்

12-09-2022


[1] தினமலர், ஹிந்து கிராமமேவக்புவாரிய சொத்து?பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் அக்கிரமம்! Updated : செப் 10, 2022  10:13 |  Added : செப் 09, 2022  22:08.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3118817

[3] மீடியான் நியூஸ், ஒரு ஹிந்து கிராமத்தையே சுருட்டிய வக்பு வாரியம்?!, Kathiravan Mediyaan News, : செப் 10, 2022 

[4] https://mediyaan.com/waqf-board-thiruchenthurai-village/

[5] – நமது நிருபர் – தினமலர், மேற்படி செய்தி, Updated : செப் 10, 2022  10:13 |  Added : செப் 09, 2022  22:08.

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் – இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

மார்ச்24, 2022

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா 22-03-2022 அன்று நடந்தது[1]. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்[2]. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்[3]. காளிகாம்பாள் கோவிலில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. ஆனால், “முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்”, என்ற தலைப்புடன் தினகரன் நாளிதழில் சிறியதாக செய்தி வெளிவந்துள்ளது[4]. “முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தன. அருகில், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அறநிலயத்துறை ஆணையர் குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.” தமிழ் முரசு என்ற நாளிதழிலும் இச்செய்தி வந்துள்ளது[5]. முரசொலியில் முழுவதுமாக செய்தி வந்துள்ளது[6].

பக்தி பரவசத்துடன் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது[7]: “குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் முன்னிலையில் காளிகாம்பாள் கோவிலில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்அமைச்சர் அடுத்த 2 வாரங்களில் தொடங்கி வைக்க உள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான பிரச்சினை குறித்து இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமலும் இறைவனை மகிழ்ச்சியோடு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்குவது துறையின் நோக்கமாகும்,” இவ்வாறு அவர் பேசினார். ஒரு வேளை, துர்கா ஸ்டாலின் உத்தரவு கொடுத்திருப்பார் போலும்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது[8]: “காளிகாம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடபெருவிழா கோலாகலமாக பக்தி உணர்வுடன் இன்று நடைபெற்று இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் சுமார்  2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள். ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடந்து வருவதுடன், கோவில் விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், திருப்பணிகள், கோவில் நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றி வருவதை நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறோம்,” என்றார்[9].

தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசியதாவது: “இந்து சமய அறநிலையத்துறை புதிதாக தொடங்கி உள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது. கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்து பாதுகாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறநெறி பாடசாலை தொடங்க முயற்சி எடுத்துள்ள முதல்அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்,”  இவ்வாறு அவர் பேசினார்.

500க்கும் மேலான பக்தர்கள் பால்குடம் எடுத்தது: முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈவேரா நாத்திகத்தில் ஊறி, பெரியாரிஸ போதையில் நனைந்து, இந்துவிரோத பேச்சுகளைப் பேசி, நெற்றியில் விபூதி என்றெல்லாம் வைத்தால் துடைத்தெறியும் ஸ்டாலினுக்கு எப்படி பால்குடம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு, இரண்டு மடாதிபதிகள் தலைமைத் தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மதுரை ஆதீனம் திமுக ஆதரவாக இருந்தார். இப்பொழுதைய ஆதீனம் இந்து, தாமரை மலர வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்..

கூடிய சீக்கிரத்தில், இந்து அறநிலையத் துறை, “ஸ்டாலின் போற்றும் துறையாக மாறப் போகிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், திக, வீரமணி போன்றோரும், இந்துத்துவ வாதிகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. சேகர் பாபு, தன்னை இந்து என்று காட்டிக் கொண்டு, அறநிலையத் துறையை ஒட்டு மொத்தமாக திமுக ஆதரவு கோஷ்டிகளை நிரப்பி, கோவில் சொத்து, குத்தகை, வாடகை என்று எல்லாவற்றையும் சுரட்ட திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதனால், கோடிக் கணக்கில் சொத்துக்களைக் கொண்ட மடாதிபதிகளைப் பிரித்து, திட்டத்தை அமூல் படுத்தி கொள்ள செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளன. இத்தகைய மடாதிபதிகள், திராவிடத்துவ போதையில் போற்றி………………….போற்றி அகவல் பாடப் போகிறார்கள்! முன்னால் ஒரு தடவை கருணாநிதிக்கு செய்தார்கள். முட்டாள் இந்துக்கள்,……..பிரஹஸ்பதி இந்துத்துவ வாதிகள்,……மற்ற காவி இத்யாதிகள்,……………….மேகதாது, டாஸ்மாக், ………….என்று பேசி காலந்தள்ளப் போகிறார்கள்! ஸ்டாலினுக்கு அரோகரா! வேல் பிடித்தவனுக்கு அரோஹரா!!!!!!! கருணாநிதி மைந்தனுக்கு அரோஹரா!!!!!!! முழக்கங்களும் அதிகமாகும்.

©  வேதபிரகாஷ்

24-03-2022


[1] தினத்தந்தி, காளிகாம்பாள் கோவிலுக்கு ரூ.2½ கோடியில் வெள்ளித்தேர்: ‘இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு,” பதிவு: மார்ச் 23,  2022 16:00 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/23160028/Rs-24-crore-silver-for-Kalikambal-temple-Praise-for.vpf

[3] தினகரன், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், 2022-03-22@ 20:06:00.

[4] தினகரன், முதல்வர் பிறந்தநாள் பாகுட ஊர்வலம், நகரம், சென்னை 23-03-2022, பக்கம்.4.

[5]  தமிழ்முரசு, சென்னை 22-032022, பக்கம்.4

[6]  முரசொலி, 22-03-2022, பக்கம்.11.

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=751780

[8] மாலைமலர், காளிகாம்பாள் கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பில் புதிய வெள்ளித்தேர்அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார், பதிவு: மார்ச் 22, 2022 15:01 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2022/03/22150127/3604654/tamil-news-minister-sekhar-babu-started-new-velli.vpf

தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

மார்ச்24, 2012

தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

தமிழகத்தில் பகுத்தறிவு, புத்தறிவு, புது-அறிவு என்றெல்லாம் பேசிக்கொண்டு தாலிகள் அறுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், தாலிகள் அறுக்க விழாக்கள் நடத்தியதால், மரத்துவிட்டன போலும் மனங்கள். ஆகையால் கோவில் கொள்ளை என்றால், ஏதோ இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சி. என்னே திராவிடத்தின் அலங்கோலம், கோவில் நிலங்களை திருட்டுத் தனமாக பட்டாப் போட்டு விற்பதில்[1] அலாதியான மகிழ்ச்சி. குடிசை மாற்று வாரியத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பர்[2]. கருணாநிதி[3]-ஜெயலலிதா[4] என்று மாறி-மாறி ஆட்சி செய்தாலும், இந்த கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியன நிற்பதில்லை. ஆக, இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற கொடிய கொள்ளையர்கள், குரூரத் திருடர்களையும் மிஞ்சி விடுவர் போலும்[5]! இதில் ரோசய்யா வந்தாலும், பங்கு கேட்காமல் விடுவதில்லை[6]. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை  கொள்ளையடிக்கப்படுகின்றன[7] என்று எடுத்துக் காட்டியுள்ளேன். டிசம்பர் 2009ல் ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலியவை கொள்ளையடிக்கப் பட்டன[8]. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றான் தமிழன் அன்று, இன்றோ குடியிருக்கும் இடத்தில் கோவில் வேண்டாம் என்பதோடு, இருக்கின்ற கோவில்களையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள்[9]. கருணநிதியே ஒரு விஜய நகரக் காலத்து மண்டபத்தை இடிக்கச் சொன்ன போது[10] படை தளபதி வீரமணி சும்மா இருப்பாரா, கோவில்களை இடி என்று முழங்கினார். மடாதிபதிகள் பலர் மிரட்டப் பட்டனர்; பொய் வழக்குகள் போடப்பட்டன; இளையபட்டங்களைத் தூண்டி விட்டு பிரிக்க சதி செய்தன; மடங்களினின்று மடாதிபதிகள் துரத்தப் பட்டனர்; மடங்கள் அபகரிக்கப் பட்டன[11]. சில மடங்களில் பிரிவினை ஏற்படவும் வழி வகுத்தன[12]. இதனால் பயந்து போன சில ஆதீனங்கள் கருணநிதியின் அடியையும் வருட ஆரம்பித்தன[13], இவை மொத்தமாக கீழ் கண்ட இணைத்தளங்களில் காணலாம்: https://atheismtemples.wordpress.com/

ஜனவரி 10, 2012 – புதுகை அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளை கோவிலுக்குள் புகுந்து மர்ம கும்பல் கைவரிசை ; தினமலர் – ஜனவரி 11, 2012: புதுக்கோட்டை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

இவ்விவரங்கள் பல இணை தளங்களினின்று பெறப்பட்டுள்ளன. எங்கிருந்து பெறப்பட்டன என்ற குறிபுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய தமிழகக் கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியவற்றைப் பார்க்கும் போது, அதில் ஒரு முறை காணப்படுகிறது.

விராலிமலை அடுத்த விராலூர் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை பாராமரிப்பில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விசேஷ நாளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வருவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி உற்சவ மூர்த்தி சிலைகள் மூலஸ்தானத்துக்குள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கலைநயமிக்க இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் உடையதும், பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜைக்கு பின் வழக்கம்போல் நடைகளை அடைத்துவிட்டு கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் பூஜைக்காக அர்ச்சகர் மணிகண்டன் கோவிலுக்கு வந்தபோது மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்ததைக்கண்டு திடுக்கிட்டுள்ளார்.  கருவறைக்குள் சென்று பார்த்தபோது பெருமாள் அருகில் இருந்த இரண்டு தேவியர் சிலைகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் இதுகுறித்து

பொதுவாக தமிழகத்தில் முன்னர், தாலியைத் திருட மாட்டார்கள். ஆனால், இப்பொழுது, தெருக்களில் நடந்து செல்லும் போது, வீட்டு வாசலில் குனிந்து கோலம் போடும் போது, கழுத்தில் இருக்கும் தாலியைப் பறித்துச் செல்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களது மனநிலை மாறியுள்ளது. அதற்குக் காரணம் என்ன?

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விராலிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு விரைந்த போலீஸார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் மூலஸ்தான மெயின் கதவுகளின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றபின் கருவறை கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமாள் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளை மோப்பம் பிடித்த நாய் மார்ஷல் விராலிமலை – மதுரை சாலையில் ஒரு கி.மீ., தூரம்வரை ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. இதுபோன்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. “இரண்டு நாட்களில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு சிலைகள் மீட்கப்படும்,” என பக்தர்களுக்கு டி.எஸ்.பி., கலியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.

ஜனவரி, 28, 2012 குரும்பூரில்கோயில்பூட்டைஉடைத்துஉண்டியல்கொள்ளைதினமலர் – ஞா, 29 ஜன., 2012: குரும்பூரில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:குரும்பூர் அருளானந்தபுரத்தில் முனியசாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் கோயில் பூட்டியிருந்தது. சம்பவத்தன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் குரும்பூர் சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.

பிப்ரவரி 19, 2012, பரஞ்ஜோதி அம்மன் கோயில், காஞ்சிபுரம்[14]: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள். நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

 பிப்ரவரி 24, 2012 – குலசேகரன்பட்டினம் கோவிலில் கொள்ளை போன அம்மன் சிலை மீட்பு: வாலிபர் கைது[15]: கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த நகை வியாபாரி முருகன். இவர் கோவை டவுன் ஹாலில் இருந்து சித்ரா செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் 1 கிலோ வெள்ளி நகைகளை வைத்திருந்தார்.பஸ் நவ இந்தியா அருகே சென்ற போது அவரிடம் இருந்த கைப்பையை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு இறங்க முயன்றார். சுதாரித்து கொண்ட முருகன் சத்தம் போட்டார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (26) என்று தெரிய வந்தது.மேலும் விசாரணையில் அவர் திருச்செந்தூர் குலசேகரன் பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவிலில் இருந்து பழமையான ஐம்பொன் சிலையை திருடி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.பாலசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் 4? கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 25, 2012 – சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில், தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

 மார்ச் 6, 3012- பெரியகுளம் அருகே காளியம்மன் கோவிலில் நகை, சிலைகள் கொள்ளை: போலீசார் விசாரணை[16]: தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை பூசாரி சந்திரசேகரன் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவுகள் உடைக்கப் பட்டு சாமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மற்றும் வெண்கல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சந்திரசேகரன் தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற “மர்ம” ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். சமீப காலமாக பெரியகுளம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மார்ச் 7, 2012 – விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை, கொடுங்கையூர், சென்னை[17]: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில்

மூன்று மாதங்களில் தமிழகத்தில் இத்தனை கோவில் கொள்ளைகள் நடக்கின்றன என்றால், அது நாத்திகத்தின் விளைவா அல்லது பகுத்தறிவாளர்களின் சதியா?

நவக்கிரக சன்னதி அமைக்கப்படுகிறது. தங்கராஜ் நாடார் திருப்பணியை செய்து வருகிறார். செவ்வாய்கிழமை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்சகரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்று விட்டார்.  புதன்கிழமை காலை அர்ச்சகர் சுப்பிரமணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கராஜ் நாடாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்ச் 8, 2012, ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்கோயில்: பெர்ங்குடி, சென்னை: சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது[18]. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 18, 2012: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு[19] – பதிவு செய்த நேரம்:2012-03-20 12:55:44: வாடிப்பட்டி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை இப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு கோயில் நிர்வாகி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 23, 2012 – மாரியம்மன் கோவில் – ஊத்துக்கோட்டை, திருப்பேர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம்[20]: கோவில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், திருப்பேர் ஊராட்சிக்கு உட்பட்டது பங்காருபேட்டை கிராமம். இங்கு, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, மக்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம்போல, கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கோவிலைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. கோவில் பூசாரி சுப்பிரமணி பென்னலூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சிலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

வேதபிரகாஷ்

24-03-2012


திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்!

ஜூன்16, 2010

கருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்!

கபாலீஸ்வரர் கோவில் இடித்த போது சைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கபாலீஸ்வரர் கோவிலில் நுழைவோம் என்று சென்னையில் கேடுகெட்ட கிருத்துவர்கள் அடவடித்தனம் செய்து, கலாட்ட செய்தபோது, இந்த சைவ ஆதினங்களைக் காணோம், லிங்கத்தைத் தொட்டு வழிபாடு செய்வோம் என்று ஆர்பரித்தபோது, எந்த சுரணையுள்ள சைவனையும் காணோம். ஆனால், இப்பொழுதோ, இந்த கூட்டங்கள் வந்து இப்படி பேசுகின்றன! தேவையில்லாமல் கோவிலில் எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேந்தும் எனும் போது, ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று, பேசி, வழக்குகளை வேறு போட்டுள்ளனர்.

சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும்: சைவ ஆதினங்கள் நாளுக்கு நாள் மிகவும் தங்களது நிலையை விட்டுக் கொடுத்து அரசியல்வாதிகளின் அடிமைகளாக, கைப்பாவைகளாக செயல்படுவது சைவ நம்பிக்கையாளர்களை வருத்தம் கொள்ளச் செய்யும். சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும், நாத்திக ஆட்சியாளர்களிடம் அவர்கள் பணிந்து போவது, பயப்படுவது……………..முதலிய மிகவும் அவமானமான செயல்களாகும். ஏற்கெனவே, கோவில்-மடம் நிலங்கள் எல்லாம் இதே கருணாநிதி-அரசு நயவஞ்சமாக கவர்ந்து விற்றுவருவதை எடித்துக் காட்டியுள்ள நிலையிலும் அதனைத் தட்டிக் கேட்காமால், அவருக்கே பட்டங்கள் கொடுத்து தமாஷாக்கள் செய்து வருவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அதனால் தான் மாற்று மதத்தினர், குறிப்பாக, முஸ்லீம்கள் மதுரை ஆதினத்தை மிரட்டியுள்ளார்கள்.

இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார்.

தமிழ்-வியாபாரிகள், தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் : காந்தளகம் சத்திதானந்தம்சிட்னி  தமிழ்ப் பேராசிரியர் கந்தையா, முதலியோர் தமிழை வைத்துக் கொண்டு நன்றாக வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பொழுது மாநாட்டிற்கு வந்துள்ள கூட்டத்தில் அதிகமாக உள்ளது, இத்தகைய வியாபாரக் கூட்டமே. முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளபடி, மின்னாக்கம் செய்வேன் என்றெல்லாம் காசு பண்ண கிளம்பியுள்ளனர். இவர்கள் எல்லோரும், தமிழை எப்படி காத்தார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.

“பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்’

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=20320

கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: சென்னை : “”கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்,” என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார். சென்னை தமிழ்க் கணினி மொழியியல் கழகம் மற்றும் “காந்தளகம்’ வெளியீட்டகம் சார்பில், ஒலியியல் அறிஞர் புனல் க.முருகையன் எழுதிய “பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியிட்டு விழா சென்னைப் பல்கலையில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட, திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு: விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு. கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

ஞானக் கருவூலமான பன்னிரு திருமுறையை, வேற்று மொழியாளர் அவர் மொழி வடிவிலேயே பயிலும் வகையில் ஒலி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இது தமிழுக்கு ஒரு புதிய வகை இலக்கிய படைப்பு. தற்காலிக கணினி ஆளுமையில், இந்நூல் தமிழுக்கு புதிய பரிமாணத்தைத் தரும். இவ்வாறு பெரியகருப்பன் பேசினார்.காந்தளகம் பதிப்பக உரிமையாளர் சத்திதானந்தம் பேசும்போது,””திருமுறைகளை அனைத்து மொழிகளிலும் எடுத்துச் சென்றுள்ளோம். ஏழு மாத உழைப்பில் வந்துள்ள பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல், புது அத்தியாயத்தை ஏற்படுத்தும். தமிழில் 97 ஒலிகள் உள்ளது கண்டறிந்தது வரலாற்றுப் பணி” என்றார்.

திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார். முடிவில் நூலாசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான், சென்னைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் தெய்வசுந்தரம், சிங்கப்பூர் சிம் பல்கலை தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிட்னி பல்கலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.