Archive for the ‘நவீன உபகரணங்கள்’ Category

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

ஓகஸ்ட்13, 2011

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

நாத்திகத்திற்குப் பிறகு ஆத்திகமா, நாத்திகமா, இல்லை திராவிட பாணியில்  கொள்ளையா?  கருணாநிதி, இந்து எதிரி, விரோதி, துரோகி, துவேஷி என்று நன்றாகத் தெரிந்த விஷயம். அதேபோல இருக்கும் நாத்திக இந்து-விரோதி கூட்டங்கள் பற்பல பெயர்களில், உருவங்களில் அமைப்புகளாக வளர்ந்து, விரிந்து அத்தகைய துவேஷங்களை பரப்பி மக்களை கடந்த 60 வருடங்களாக கெடுத்து வைத்துள்ளனர். அத்தகைய மனப்பாங்கு, மனத்தில் ஊறித்திளைத்த அநியாயங்களை நியாயப்படுத்தி பேசிவந்த திறமை, அக்கிரமங்களை சரியென்றே தோற்றமளிக்கச் செய்த சாதுர்யம் முதலியவை மக்களில் சில பிரிவினரை உள்ள சட்டங்களை மதிக்காமல், தார்மீக கட்டுமுறைகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல் கொலை, கொள்ளை முதலிய காரியங்களில் அதிகமாகவே செய்து வருகின்றன. அந்நிலையில், இப்பொழுது அரசு மாறியுள்ள நிலையில், குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும், அத்தகைய கோவில் கொள்ளைகள், அம்மன் தாலி திருட்டுகள்,  உண்டியல் உடைப்புகள், கவசங்கள், கலசங்கள் முதலியவற்றைக் களவாடுதல் என்று தொடர்ந்து நடந்து வருவதன் மர்மம், பின்னணி என்ன? திராவிட பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு தொடர்கின்றனவா?  ஏற்கெனவே சில விஷயங்கள் “தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன”, என்ற தலைப்பில் அலசப்பட்டுள்ளன[1].

ஆடி மாதத்தில் அம்மன் தாலி அறுப்புகள் ஏன்? ஆடிமாதத்தில் தமிழகம் முழுவதும், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அம்மன் கோவில்களில் பூஜை, அபிசேகம், என மக்கள் விமசரியாகக் கொண்டாடி வருகின்றனர்[2]. அம்மன் தாலிகள், கவசங்கள் ஆடிமாதத்திலேயே நடக்கின்றன என்றால், அது தங்கம், வெள்ளி உலோக மதிப்பிற்காக கொல்ளையடிக்கப் படுகின்றனவா அல்லது அம்மன் ஒன்றும் செய்யமாட்டாள், அது வெறும் சிலைதான், இல்லை, அம்மனை வழிபட்டு கூட திருடலாம், அம்மன் பார்த்துக் கொள்வாள் (!) என்று திருடுகின்றனரா?

அம்மனைப் பார்க்க வரும், அம்மணிகளின், தமிழச்சிகளின்  தாலிகளையும் பறிக்கின்றவர்கள் தமிழர்களா?

  • உண்மையிலேயே அவர்கள் தாலிக்கட்டிய தாய்மார்களுக்குப் பிறந்தவர்களா,
  • தாலி கட்டிய மனைவிகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களா,
  • தாலிக்கட்டிய சகோதரிகள், மகள்கள், பெண்களைக் கொண்டவர்களா,
  • அத்தகைய குடும்பத்தைக் கொண்டவர்களா, சேர்ந்தவர்களா?
  • என்னத்தான் நடக்கிறது, தமிழ் நாட்டில், தமிழகத்தில்?
  • பிறகெதற்கு அம்மன் பெயரில் சினிமா எடுக்கின்றனர்?
  • கேடு கெட்ட, சமுதாயத்தை சீரழிக்கின்ற சினிமாக்களுக்கும் பூஜை போடுகின்றனர்?
  • கேடுகெட்ட நடிகைகளுக்கு முன் அம்மன் சிலைகள், படங்கள் வைத்து பூஜை செய்வது மாதிரி நாடகம் ஆடுகின்றனர்?

தெய்வபக்தியும் இல்லை, தாய் பக்தியும் இல்லை, பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவில்லை, பெண்ணினத்தை கௌரவமாக நடத்தத் தெரியவில்லை…. இல்லை, இதுவே இப்பொழுது தமிழகர்களின் நாகரிகமாகக் கூட மாறிவிட்டதோ என்னவோ? சம உரிமை என்று பேசும் பெண்களும் இதைப்பற்றிக் கவலைப் படுவதாக இல்லை. இது பெண்களின் உரிமைகளில் வராதா?

பூதப்பாண்டி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு; மர்ம கும்பல் அட்டூழியம்[3]:பூதப்பாண்டி, ஆக. 4, 2011- பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகியபாண்டிய புரம் எட்டாமடையில் முத்தாரம்மன், சுடலை மாடன் கோவில்கள் உள்ளன. 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன.  வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்துச்செல்வார்கள். இக்கோவிலில் முத்தாரம்மன், சாஸ்தா, வினாயகர், நாகர், நாக கன்னி, நாகலெட்சுமி உள்பட 7 சாமி சிலைகள் உள்ளன. இதில் அங்குள்ள ஒரு பீடத்தில் 1 1/2 அடி உயரத்தில் நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது.

அப்போது முத்தாரம்மன் கோவிலுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பீடத்தில் இருந்த நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிய அந்த கும்பல் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் வீசி விட்டு சென்றுள்ளது. இதைப்போல் அந்த பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் புகுந்த கும்பல் சுடலைமாட சாமியின் சிலையை சேதப்படுத்தி விட்டு சென்று உள்ளனர். அழகியபாண்டி புரம், பெரிய குளத்தங்கரையில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமியின் தலையை உடைத்து நடுரோட்டில் வீசிச் சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி அப்பாத்துரை, சாமி சிலைகள் உடைக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஊர் கமிட்டிக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்து வரும் கோவில் கொள்ளை, திருட்டுகள்:  ஒரு பத்து நிமிட கூகுள் தேடலில் கீழ்கண்ட கொள்ளைகள் காணக்கிடைக்கின்றன, பட்டியல் இடப்படுகிறது. இவற்றில் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நடத்தை முறை, கொள்ளை அமைப்பு, மனப்பாங்கு முதலியவை தெரியவருகின்றன.

  1. 08-08-2011: வள்ளியூர் (திருநெல்வேலி) அருகே காட்டு நாயக்கர் பராமரிப்பில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோவிலில், சாமி சிலைகள் சேதப்படுத்தப் பட்டன.
  2. 4 ஆகஸ்ட் 2011 – ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை : மர்ம ஆசாமிகளுக்கு வலை
  3. 3 ஆகஸ்ட் 2011 – திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி நடைபெற்றது. திருச்சி உறையூரில் புகழ் 
  4. 1 ஆகஸ்ட் 2011 – உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்துரூ.20 ஆயிரம் கொள்ளை: நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கைவரிசை.
  5. 29-06-2011: புதுச்சேரி: கண்டமங்கலம் அருகே, சின்ன புதுப்பட்டு கிராமத்தில், கோவில் பூட்டை உடைத்து இரண்டு பஞ்சலோக சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
  6. ஜூலை 14, 2011: வேலூர்,: அம்பலூர் அருகே எக்லாஸ்புரம் ஆற்றங்கரையோரம் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், புதன்கிழமை நள்ளிரவு சுவாமிக்கு  அணியப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி கீரிடம் திருடு போனதாம்.புகாரின்பேரில் அம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
  7. 25 ஜூன் 2011 – பேய்க்குளம் அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு.
  8. ஜூலை 16, 2011: திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கோயில் கோபுரத்தின் மீது உள்ள பழைமை வாய்ந்த 3 கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
  9. 14 ஜூன் 2011 – ‘பழநி அருகே கோபுர கலசம் திருட்டு: கோவில்களை குறிவைக்கும் கும்பல்’..
  10. 17 ஜூன் 2011 புதுவை அண்ணா நகரில் கோவிலில் கொள்ளை …
  11. 17 மே 2011 – பள்ளிபாளையம் அடுத்த ராகவானந்தா நகரில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோவில் முன் திரண்டனர். மக்கள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் மூன்று பேர், அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற மக்கள், ஒருவரை மடக்கிப் பிடித்து பள்ளிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பள்ளிபாளையம் அடுத்த தாஜ்நகரை சேர்ந்த ராமதாஸ் (22) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  12. 6 மே 2011 – தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு. கோவிலில்அம்மன் தாலி திருட்டு.
  13. 6 மே 2011 – திண்டுக்கல்லில் கோவிலில் கொள்ளை முயற்சி: அபாய மணி ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓட்டம்.
  14. 7 மார்ச் 2011 – திரவுபதி அம்மன் கோவிலில்
  15. 22 பிப்ரவரி 2011 – தூத்துக்குடி அருகே கோயில் கோபுரத்திலுள்ள வெண்கல கலசம் திருட்டுப்போனது.    திருட்டுகும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே செட்டியாபத்து கிராமத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் கோபுரத்தில் பல லட்சம் மதிப்பிலான கலசம் இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி கோயில் உச்சியில் ஏறி கலசத்தை திருடிச் சென்றுள்ளனர். 
  16. 13 பிப்ரவரி 2011 – தஞ்சையில் சோழர் கால கோவிலில் நகை திருட்டு. அதிகம்  தஞ்சாவூர்: தஞ்சையில் சோழர் காலத்து கோவிலில் நகைகள் திருட்டு போனது..
  17. 10 பிப்ரவரி 2011 – சுவாமி சிலைகள் திருடு 
  18. 9 பிப்ரவரி 2011 – கோவில் விழாவில் நகை கொள்ளை…மதுராந்தகத்தில் நடந்த கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் பொன் நகையை சிலர் களவாடி னர். மதுராந்த கம் தேரடி தெருவை சேர்ந் தவர் சிறீ ராமுலு. இவரது மனைவி வரலட்சுமி (வயது 68).
  19. 29 ஜனவரி 2011 –அழகர்சாமி கோவிலில்  சுவாமி சிலைகள் திருடு போயிருந்தன.  ஆனந்த வள்ளியம்மாள் ஐம்பொன் சிலைகள் திருடுபோயிருந்தன. .
  20. 21 ஜனவரி 2011 – கோவிலில் அம்மன் தாலி திருட்டு 
  21. 6 ஜனவரி 2011 – தாவடிப் பிள்ளையார் கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் 
  22. 25-08-2009: நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீஸ் உடையில் வந்தவர்கள் உடைத்ததால், பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே வடக்கு மாத்தாரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆக., 30 ல் விசர்ஜனம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்துள்ள அமைப்பினர் தான் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த ராஜாசெந்தில், ராமச்சந்திரன், நீலகண்டன், ராஜா, கண்ணன், பாலமுருகன் ஆகிய ஆறு பேரும் பாதுகாப்பு பணியில்..

வேதபிரகாஷ்

12-08-2011


[1] வேதபிரகாஷ்,தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன, https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/

https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D2/

[2] சன் – கலைஞர் டிவிக்கள் வழக்கம் போல பூதக்கண்ணாடி, உண்மை என்று பொய்களைப் பரப்பி வருகின்றன. சமீபத்தில் அவர்கள் கொடுக்கும் விளக்கமாவது, மக்கள் மனம் புண்படுத்தாது மாதிரி, புண்படுத்துவார்களாம்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை!

நவம்பர்14, 2009
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18788

General India news in detail

சென்னை : “”சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும்,” என பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி தெரிவித்தார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: சிலைகடத்தல் தடுப்பு போலீசில், தமிழக அளவில் ஐ.ஜி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் மட்டுமே உள்ளனர். சமீபகாலமாக, பொருளாதாரக் குற்றப்பிரிவில் உள்ள போலீசாரைப் பயன்படுத்தி, கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி மீட்டு வருகிறோம்.

சிலைகடத்தல் தடுப்பு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் அதிகளவில் புராதானச் சிலைகள் உள்ளன என கூறுவது தவறு. விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி என, தமிழகம் முழுவதும் பல பெரிய கோவில்களில், அரிய புராதானச் சிலைகள் உள்ளன.

சில கோவில்களில் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. பாழடைந்த நிலையில், கேட்பாரற்று இருக்கும் கோவில்களில் சிலைகளை திருடினால், வெளியே தெரியாது என திட்டமிட்டு திருடுகின்றனர். சில கோவில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வயது 70க்கும் மேல் உள்ளது.இவற்றை பாதுகாக்க, மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் படையை உருவாக்க வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு திலகவதி கூறினார்.

கோவில் சிலைகள் திருடு போகாமல் பாதுகாப்பது தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறைக்கு, சிலைகடத்தல் தடுப்பு போலீசார் சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவில் சிலை மற்றும் நகைகளை பாதுகாக்க, குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு சிலை மற்றும் நகைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும். விலைமதிப்பற்ற சிலைகள் உள்ள கோவில்களை பட்டியலிட்டு, சிலைகடத்தல் தடுப்பு போலீசாருக்கு வழங்க வேண்டும்.

அச்சிலைகள் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்படும் வரை உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கோவில்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மரகத லிங்கம் திருடு போன திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவிலில், பழுதடைந்த எச்சரிக்கை அலாரம் ஆறு மாதங்களாக சரிசெய்யப்படவில்லை.

நவீன உபகரணங்கள் மூலம், கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். திருடு போகும் சிலைகளை அடையாளம் காண உதவும் வகையில், அனைத்து சிலைகளையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.