Archive for the ‘உழவாரப் பணி’ Category

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

மார்ச்15, 2024

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

13-03-2024 – உழவாரப்பணியில் திமுக அமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தூய்மையை பராமரித்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற புதிய திட்டங்களை கடந்த 33 மாதங்களில் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்படுத்துகின்ற மகத்தான முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

கோவில் விவகாரங்களில் திமுக-நாத்திக அரசியல்வாதிகளின் தலையீடு ஏன்?: 27-07-2021 முதல் உழவாரப்பணி பதிவு ஆரம்பிக்கப் பட்டது. அதிலிருந்து தொடர்ந்து, சேகர்பாபு அமைச்சர் கோவில் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டுக் கொண்டு வருகிறார் என்று தெரிகிறது. தங்கநகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றுவது, பூஜைகளுக்கு கட்டுப்படுவது, சிறப்பு தரிசனங்கள் அன்னதானத் திட்டங்கள் என்று பல சாதாரணமாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் எல்லாமே ஏதோ, இவர் சொல்லித்தான் நடப்பது போல காட்டிக் கொண்டு வரும் போக்கும் தென்படுகிறது. குறிப்பாக தினம்-தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்று, கோவில் நிலம் மீட்கப்பட்டது, கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவது போன்ற போக்கும் காணப்படுகிறது. இவை எல்லாம் சாதாரணமாக யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் ஆகவே திமுகவினர் ஆட்சிக்கு வந்திருப்பதினால், தங்களது நாத்திக, கடவுள் நம்பிக்கை இல்லாத, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்துவிரோத பிம்பத்தை சரி செய்வதற்கு, இந்த துறையை உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. இப்பொழுது, எல்லாமே ஸ்டாலின் சொல்லித் தான் செய்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

நடந்து வரும் உழவாரப் பணியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி: அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 திருக்கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம்[1]. உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் திருக்கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும். உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்[2]. இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.

சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது: இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்றவர், அரசியல்ரீதியில் பேசி வருவது தமாஷாக இருக்கிறது. சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அந்த வகையில் நம்முடைய உழவாரப்பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்[3]. பல்லாண்டுகளாக நடந்து வரும் உழவாரப் பணியில், திடீரென்று இவர்களுக்கு இத்தனை ஆர்வம் வருவது திடுக்கிட வைக்கிறது. முதலில், இப்பணிக்கே கட்டுப் பாடு விதிக்கும் முறையில் நடந்து கொண்டது ஞாபகத்தில் இருக்கலாம். இப்பொழுதோ, அளவு கடந்து ஆசை வந்துள்ளது பயமாக இருக்கிறது. நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சீத்தனஞ்சேரியில் 2022ம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவார பணியை மேற்கொண்டனர்[4]. அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடைய பணி தொடர்ந்து அரக் கோணத்தில் ஏப்ரல் மாதம் 124வது உழவார பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை சாதனை பட்டியல்: ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை திராவிட மாடல் அரசு பதித்திருக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டாட்சியர்களை பணிநியமனம் செய்திருக்கிறோம். இவர்கள் இதுவரை ₹5979 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர். குடமுழுக்கு என்று பார்த்தால் இதுவரை 1477 நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் வசிக்கிற பகுதியில் 5000 கோயில்களுக்கு திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில்களை பாதுகாக்கவும், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு 4000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி, இந்த திமுக அமைச்சர் கூறிக் கொண்டலும், சாதாரண மக்கள் நமொஉவதாக இல்லை.

திமுக இரும்பு மனிதர் ஆணை பெயரில் நடக்கிறதாம்: .4000 கோயில்களுக்கு தேவையான நிதி 70 கோடி ரூபாய் அரசே மானியமாக வழங்கி அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 16000 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ஒரே அரசு தமிழக அரசு. தமிழக அரசு வரலாற்றில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்தாலும் ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி னாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக. அதனுடைய தலைவர் இரும்பு மனிதர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருக்கோயில்களின் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்[5]. உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 2021 தொடங்கி தற்போது வரை 18,225 கோயில்களில் 36,554 உழவாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்[6]

14-03-2024 அன்று நீர்மோர் வழங்கும் திட்டம் ஆரம்பம்: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்[7].. 14-03-2024 அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது[8]. உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது[9]. ஸ்டாலின் சொல்லித்தான், இதையெல்லாம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டார்[10].

© வேதபிரகாஷ்

15-03-2024


[1] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு, March 13, 2024, 9:55 pm

[2] https://www.dinakaran.com/temples_tillagework_minister_shekharbabu/

[3] தினகரன், ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு, March 13, 2024, 3:05 pm.

[4] https://www.dinakaran.com/it_cbi_missiles_dmk_minister_shekharbabu/

[5] தினகரன், உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார், March 13, 2024, 10:10 am.

[6] https://www.dinakaran.com/temple_servants_farmingequipment_ministershekharbabu/

[7] தமிழ்.இந்து, வெயில் தாக்கம் | முதல்கட்டமாக நாளை முதல் 48 கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 14 Mar 2024 01:22 PM; Last Updated : 14 Mar 2024 01:22 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1215252-free-buttermilk-for-devotees-in-48-temples-around-tn-from-tomorrow.html

[9] தினத்தந்தி, தமிழ்நாட்டில் 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர்மோர்அமைச்சர் சேகர்பாபு தகவல், தினத்தந்தி மார்ச் 14, 3:51 pm (Updated: மார்ச் 14, 5:04 pm)

[10] https://www.dailythanthi.com/News/State/free-water-buttermilk-in-48-temples-in-tamil-nadu-from-tomorrow-minister-shekharbabu-informs-1097361

உழவாரப்பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு தேவையா?

பிப்ரவரி24, 2024

உழவாரப் பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தேவையா?

23-02-2024 அன்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.

அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் சொன்னதும், நீதிபதிகளின் கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் செய்தால் அதை பரிசீலித்து செயல் அலுவலர் அனுமதி வழங்குவார். கோயில்களில் துாய்மைப் பணிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[5]: “மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இரண்டு வாரத்தில் திட்டத்தை வகுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.., அல்லது பி.டி.., தலைமையில் குழு அமைத்து மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி தற்போது அந்த கோவில்களின் நிலை குறித்த விபரங்களுடன் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை இரண்டு வாரத்துக்குள் ஹிந்து அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என, தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்[6].

உழவாரப் பணி பற்றிய புரிதல் இல்லாத அமைச்சரா, துறையா எது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே உள்ளது. பக்தர்களின் வரவேற்பை பொறுத்து தினசரி பதிவு செய்யும் வகையில் மாற்ற, திட்டம் உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].

ஊழவாரப் பணி அனுமதிக்கு பதிவு செய்வது எப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].

© வேதபிரகாஷ்

24-02-2024


[1] காமதேனு, கோயில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டம்தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!, Updated on: 23 Feb 2024, 9:35 pm

[2] https://kamadenu.hindutamil.in/divine/plan-to-carry-out-plowing-work-in-tamil-nadu-temples-high-court-orders-to-tamil-nadu-government

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவில்களில் உழவாரப் பணி… திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, 24 Feb 2024 06:29 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-tn-govt-to-plan-for-tillage-work-in-temples-3985906

[5] தினமலர், கோயில்களில் உழவார பணி: : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: பிப் 24,2024 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3559175

[6] https://m.dinamalar.com/detail.php?id=3559175

[7] தினத்தந்தி, கோவில்களில் மேற்கொள்ளப்படும்உழவாரப்பணிஎன்றால் என்ன? அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம், ஜூலை 29, 2021 7:40 am (Updated: ஜூலை 29, 2021 7:40 am).

[8] https://www.dailythanthi.com/News/State/2021/07/29074036/Carried-out-in-temples-What-is-plowing-Description.vpf

[9] தினமலர், உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம், பதிவு செய்த நாள்: ஜூலை 27,2021 21:52; https://m.dinamalar.com/detail.php?id=2810772

[10] https://m.dinamalar.com/detail.php?id=2810772

[11] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 03:15 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[13] தினமணி, கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம், Published on: 28 ஜூலை 2021, 12:45 am; Updated on: 28 ஜூலை 2021, 2:19 am

[14]https://www.dinamani.com/tamilnadu/2021/Jul/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3668433.html

[15] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி : அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்!!, July 27, 2021, 11:54 am.

[16]https://www.dinakaran.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/

[17] வேதபிரகாஷ், ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2), 12-10-2021.

[18] https://atheismtemples.wordpress.com/2021/10/12/dmk-atheist-and-anti-hindu-rulers-set-out-to-suppress-hindus-temple-practices-and-traditions/