Archive for the ‘ஆயிர வைசியர் மடம்’ Category

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.