Archive for the ‘தெரசா படம்’ Category

திருவண்ணாமலை கோவில் விபூதி-பிரசாத விநியோக கவர் மூலம் கிறிஸ்துவ பிரச்சாரமா?:

மே3, 2023

திருவண்ணாமலை கோவில் விபூதிபிரசாத விநியோக கவர் மூலம் கிறிஸ்துவ பிரச்சாரமா?:

திருவண்ணாமலை கோவில் பிரசாத விநியோக கவரில் கிறிஸ்துவ பிரச்சாரமா?: பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்[1].  தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்[2]. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சனி-ஞாயிறுமற்றும் பௌர்ணமி-அமாவாசை முன்பு-பின்பு என்று பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும். இப்பொழுது சித்திரை மாதத்தில் விழாக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. மே.1 விடுமுறை என்பதால், மூன்று நாட்கள் விடுமுறை ஆகிவிட்டது. மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு இறைவனை தரிசிக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்படுகிறது[3]. இதில் சாமி சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி பிரசாதத்தை அர்ச்சகர்கள் வழங்குகின்றனர்[4].  இந்நிலையில் திருவண்ணாமலை கோவில் பிரசாத விநியோக கவரில் கிறிஸ்துவ பிரச்சரம் போன்று, தெரசா படம், அன்பின் கரங்கள் என்றெல்லாம் அச்சிட்ட கவர்களில் பிரசாதம் கொடுக்கப் பட்டது.

மாத்யூ கார்மென்ட்ஸ்கவரில் பிரசாதம்: இந்த நிலையில் மே 1ம் தேதி, கோவிலில் சாமி சன்னதியில் கொடுக்கப்பட்ட விபூதி பிரசாத கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை “மாத்யூ கார்மென்ட்ஸ்” பெயருடன், ‘அன்னை தெரசா’ புகைப்படம் அச்சடிக்கப்பட்டு இருந்தது.  விபூதியை நிரப்பும் கவர்களை ஆன்மிக அன்பர்கள் அச்சடித்து வழங்கி வருகின்றனர்[5]. இந்த கவருடன் விபூதி பிரசாதம் வினியோகிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது[6]. கடை பெயர், முகவரி, கிளைகள், போன் நெம்பர் என்று எல்லா விவரங்களும் இருப்பதால், நிச்சயமாக அக்கடை இதற்கான நன்கொடை கொடுத்திருக்கும். அதனை கோவிலைச் சார்ந்தவர்கள் தான் நிச்சயம் வாங்கியிருக்க வேண்டும். இருப்பினும், கலரில் புகைப் படங்களுடன் அச்சிட்டு கவர்கள் வந்திருந்த போது, அதனை, நன்கொடை பெற்றவர்கள் மற்றும் பிரசாத விநியோகம் செய்பவர்கள், அதனை அவனித்திருக்க வேண்டும். இல்லை பிரசாதத்தை அவருக்குள் அடைத்து, தயாரித்தவர்கள் கவனித்து கூறியிருக்க வேண்டும். ஆகவே இவ்வாறு பலநிலைகளைத் தாண்டி வந்து விட்டது, யாருடைய ஒப்புதல் அல்லது விருப்பத்துடன் நடந்திருக்கிறது என்றாகிறது.

இந்து முன்னணி முற்றுகை: இந்நிலையில், கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில், பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கி வந்துள்ளனர்[7]. இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை இன்று (மே 2) முற்றுகையிட்டு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண் தலைமையிலான இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[8]. கோவிலில் ஏகப் பட்ட இந்துஅறநிலையத் துறை அதிகாரிகள், வேலையாட்கள் என்றிருக்கும் பொழுது, அவர்கள் எல்லாம் இவற்றை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒருவேளை அவர்களில் ஒருவர் கிருத்துவராக இருந்தாலும், இத்தகைய திட்டமிட்டு நடக்கும் செயல் அரங்கேறியிருக்கும். அப்போது அவர்கள், “கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டுள்ளன. இதனை கோயில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது. கவர்களை திரும்ப பெற வேண்டும். கவரில் அண்ணாமலையாரின் படத்தை தவிர, வேறு எதுவும் இடம்பெறக் கூடாது. உள்நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்[9]. அவர்களிடம் கோயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்[10]. அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்று வந்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது[11].

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்[12]. விசாரணையில் இக்கோவிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் சோமநாத குருக்கள் மற்றும் முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய கவரில் விபூதி, குங்குமம் பிரசாத கவரினை பக்தர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. மேலே குறிப்பிட்டபடி, இவர்கள் முன்னரே ஏன் கவனிக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களின் உத்தரவு பெறாமல், நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்க்சைக்குரிய விபூதி, குங்கும பிரசாத கவர்களை, திருக்கோயில் நிர்வாகத்துக்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் மே 1ம் தேதி பக்தர்களுக்கு வழங்கி உள்ளனர்[13]. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர்[14]. இப்படியெல்லாம் குற்றம் சாட்டும் அளவிற்கு அர்ச்சகர்கள் இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும் நிகழ்வாகும். உண்மையிலேயே அவர்கள் அர்ச்சகர்களா அல்லது, திராவிட மாடலில் “சான்றிதழுடன்” உள்ளே நுழைந்த வகையறாவா என்று ஆராய வேண்டும். ஏனெனில், திருவண்ணாமலையிலேயே அத்தகைய “பெரியாரிஸ-நாத்திக” அர்ச்சகக் கூட்டம் ஒன்று வேலை செய்து வருகிறது.

இரண்டு சிவாச்சாரியார்கள் / அர்ச்சகர் பணியிடைநீக்கம்: இதையடுத்து அவர்கள் இருவரையும் கோவில் இணை ஆணையர் குமரேசன் 6 மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்[15]. இதனிடையே சர்ச்சைக்குரிய விபூதி கவர் குறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையிலானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[16]. பின்னர் அவர்களிடம் போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்[17]. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது[18]. ஆனால், அந்த இருவரின் பின்னணி என்ன, உண்மையிலேயே அவர்கள் அவ்வாறு செய்தனரா, இல்லை பகடைகளாகப் பயன்படுத்தப் பட்டனரா என்று தெர்யவில்லை. உண்மையில், கிருத்துவ கைகூலிகள் என்றால், அத்தகையோர் எவ்வாறு உள்ளே நுழைந்தனர்?

02-05-2023 தேதியிட்ட கோயில் இணை ஆணையர் வெளியிட்ட கடிதம்: இது தொடர்பாக, கோயில் இணை ஆணையர் குமரேசன் வெளியிட்டிருக்கும் உத்தரவு நகலில்[19], ‘‘நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அலுவலர்கள் உத்தரவோ என எதுவும் பெறாமல், கோயில் நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி, குங்குமப் பிரசாத கவரை சோமநாத குருக்கள் மற்றும் முத்துகுமாரசாமி குருக்கள் இருவரும் வாங்கியிருக்கிறார்கள். அதைத் திருக்கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் 01-05-2023 அன்று பக்தர்களிடமும் வழங்கியிருக்கிறார்கள். தன்னிச்சையாகச் செயல்பட்ட புகாரையடுத்து, இருவரும் அர்ச்சகர், ஸ்தானீகம் பணியிலிருந்து ஆறு மாதகாலத்துக்குத் தற்காலிமாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்[20].

© வேதபிரகாஷ்

03-05-2023


[1] தினமணி, அன்னை தெரசா படத்துடன் விபூதி பிரசாதம் விநியோகம்: அருணாசலேஸ்வரா் கோயில் குருக்கள் இருவா் பணியிடை நீக்கம், By DIN  |   Published On : 03rd May 2023 12:00 AM  |   Last Updated : 03rd May 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2023/may/03/distribution-of-vibhuti-prasad-with-mother-teresa-image-arunachaleswarar-temple-gurus-sacked-3999459.html

[3] மாலை மலர், அன்னைதெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகள்அண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள் சஸ்பெண்ட், By மாலை மலர், 2 மே 2023 5:56 PM, (Updated: 3 மே 2023 12:56 PM)

[4] https://www.maalaimalar.com/news/state/mother-teresa-embossed-vibhuti-pockets-annamalaiyar-temple-priests-suspend-604162

[5] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Tiruvannamalai: விபூதி பாக்கெட்டுகளில் அன்னை தெரசாஅர்ச்சகர்களுக்குத் தண்டனை, Suriyakumar Jayabalan 02 May 2023, 20:16 IST

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/photo-of-mother-teresa-at-vibhuti-prasad-at-annamalaiyar-temple-131683038191824.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி, By Nantha Kumar R, Published: Tuesday, May 2, 2023, 17:49 [IST].

[8] https://tamil.oneindia.com/news/thiruvannamalai/2-priests-suspended-in-tiruvannamalai-annamalaiyar-temple-controversy-over-offering-vibhuti-packet-w-509916.html

[9] NEWS18 TAMIL, திருவண்ணாமலை கோவில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்இந்து முன்னணி போராட்டம்சிவாச்சாரியார்கள் சஸ்பெண்ட், Reported By : சதிஷ்.Editor; Published By :Karthick S, LAST UPDATED : MAY 02, 2023, 19:49 IST.

[10] https://tamil.news18.com/tiruvannamalai/tiruvannamalai-temple-mother-thersa-photo-creates-rucks-962317.html

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்.. 2 அர்ச்சகர்கள் 6 மாதம் சஸ்பெண்ட்..!, , vinoth kumar, First Published May 3, 2023, 7:36 AM IST; Last Updated May 3, 2023, 8:15 AM IST

[12] https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-annamalaiyar-temple-vibhuti-pocket-for-mother-teresa-photo-two-priests-suspended-ru28iu

[13] தமிழ்.இந்து, தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கிறிஸ்துவ மத அடையாள கவரில் விபூதி, குங்குமம் வழங்கல்: 2 சிவாச்சாரியார்கள் சஸ்பெண்ட், இரா.தினேஷ்குமார், Published : 02 May 2023 07:32 PM, Last Updated : 02 May 2023 07:32 PM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/984579-2-shivacharyas-dismissed-in-thiruvannamalai.html

[15] தினத்தந்தி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் விபூதி வினியோகம்; 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்,Update: 2023-05-02 22:10 GMT.

[16] https://www.dailythanthi.com/amp/News/State/distribution-of-vibhuti-in-controversial-cover-at-tiruvannamalai-arunachaleswarar-temple-dismissal-of-2-priests-956134

[17] ஈடிவி.பாரத், திருவண்ணாமலை கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்.. இந்து முன்னணி தர்ணா.. குருக்கள் சஸ்பெண்ட்!, Published: Tuesday, May 2, 2023, 17:56 [IST].

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvannamalai/mother-teresa-image-on-vibhuti-packet-provided-issue-by-thiruvannamalai-annamalaiyar-temple/tamil-nadu20230503100931966966995

[19] விகடன், திருவண்ணாமலை: விபூதி கவரில் அன்னை தெரசா படம்; அர்ச்சகர்கள்மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!, லோகேஸ்வரன்.கோ, Published: 02-05-2023 at 7 PM; Updated: 02-05-2023 at 9 PM

[20] https://www.vikatan.com/spiritual/temples/tiruvannamalai-mother-teresas-picture-on-vibhuti-cover-temple-administration-takes-action-against-priests