மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)
ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது: அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது[1]. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது[2], என்றார். இக்கதை ஜனவரியிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஊடக செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்[3]. இதற்கெல்லாம் என்ன பெரிய தொழிற்நுட்பம் தேவைப் படுகிறது என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.
மயில் மூக்கில் இருந்தது பாம்பா, பூவா?: முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தானே சென்று பார்த்தார் எனும்போது, விவரங்களை அவர் அறிந்திருப்பார் என்றாகிறது. புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால், தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது[4]. இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது[5]. “புதிய சிலையை உருவாக்கலாம்,” என்பது திகைப்பாக இருக்கிறது அப்படியென்றால், ஸ்வர்ணம் எக்ஸ்போர்ட்ஸ் அச்சிலையை ஏற்றுமதி செய்ததாக கூறப் பட்டதை கண்டுகொள்ளவில்லையா?
போலீஸ் விசாரணையும், அறநிலையத் துறை அறிக்கைகளும் முரண்படுவது ஏன்?: தமிழக போலீஸார் மற்றும் அறநிலையத் துறை ஆளும் ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன. எனவே, ஒரே அரசின் இரு துறைகள், இருவேறான கருத்துகளை, விளக்கங்களை, விவரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், இந்த வழக்குகளில் 2004லிருந்தே, முரண்பட்ட, முன்னுக்கு முரணான வாதவிவாதங்கள், கருத்துகள், அறிக்கைக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. சிலை மாற்றப் பட்டது என்பதை ஒப்புக் கொண்டப் பிறகு, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், கைதுகள், ஜாமீனில் வெளி வருதல், மறுபடியும் பதவிகளில் அமர்ந்து கொள்ளுதல், ஆவணங்களை அழித்தல் என்றெல்லாம் நடந்து வருவது, சம்பந்தப் பட்ட குற்றமனப்பாங்கை (mens rea), குற்றம் செய்த நிலையை (culpability of mind and action), ஆதாரங்களை அழிக்கும் போக்கை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், உயர் அதிகாரிகள், அரசு, மந்திரிகள், முதலமைச்சர் என்று எல்லோருமே ஒன்றுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சி அளுக்கும் விசயமாகும். ஏனெனில், அது அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது போலிருக்கிறது. மேலும், குற்றம் செய்தவர்கள், அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்று இன்னும் ஆணவமாக, அகங்காரமாக, எதேச்சதிகாரத்துடன் செயல் படுவர். “பார்த்தியா, என்னை ஒண்ணும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது,” என்ற தோரணையில் மேன்மேலும் அநியாய காரியங்களில் செயல்படுவர்.
2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிப்பது: 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக காலந்தாழ்த்தி, வேண்டுமென்றே வழக்குகளை இழுத்தடித்துள்ளது தெரிகிறது. அதற்குள் பெயிலில் வெளியே வந்தவர்கள், கைதாகாமல் பெயில் வாங்கியவர்கள் நிச்சயமாக தமது அரசியல் தாக்கம், அதிகார பலம், பண பலம் முதலியவற்றை பிரயோகித்து, இருக்கு அத்தாட்சிகளை அழித்திருப்பர். திருமகள் 2100 ஆவணங்களை 2009மற்றும் 2013 ஆண்டுகளில் அழித்துள்ளார், என்பது தெரிகிறது. மயில் விக்கிரகம் சம்பந்தமான ஆவணங்களை திருமகள் அழித்ததை மூன்று இணை ஆணையர்களே தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களில் கொடுத்திருப்பதாக, போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியென்றால், அவர்களையும் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் என்று 04-03-2022 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன[6]. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்[7]. கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்[8]. இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[9]. பி.டி.ஐ பாணியில் இந்த வரிகள் மற்ற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன[10]. உக்ரைனுக்கு மற்ற விவகாரங்களுக்கு ஊதி ஊளையிடும் புலன் விசாரணை நிபுணர்கள் இவ்விசயத்தில் அப்படியே கமுக்கமாக சிலவரிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர்[11]. இந்த தனபாலும், அந்த தனபாலும் ஒன்றா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர், பிறகு இவர் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாற் என்று புரியவில்லை.
©வேதபிரகாஷ்
04-03-2022
[1] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/missing-peacock-idol-buried-in-mylapore-temple-pond-police-report-filed-to-mhc/tamil-nadu20220301195013449
[2] மாலைமுரசு, கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலை கோவில் குளத்தில் புதைந்துள்ளதாக காவல்துறை தகவல்.!!, Muthu KumarMuthu KumarMar 1, 2022 – 17:30Updated: Mar 1, 2022 – 17:30.
[3] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Police-say-a-mysterious-peacock-statue-has-been-buried-in-the-temple-pond-at-the-Kabaliswarar-temple
[4] பத்திரிகை.காம், மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…, By A.T.S Pandian, March 1, 2022.
[5] https://patrikai.com/kapaleeswarar-temple-stolened-peacock-idol-buried-under-mylapore-temple-tank-tn-govt-information/
[6] தினமலர், கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலையை கண்டறிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு, Added : மார் 03, 2022 22:34.
[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2974651
[8] தமிழ்.இந்து, தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல், செய்திப்பிரிவு, Published : 04 Mar 2022 06:53 AM; Last Updated : 04 Mar 2022 06:54 AM.
[9] https://www.hindutamil.in/news/tamilnadu/773776-kumbhabhishekham-1.html
[10] தினத்தந்தி, 1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல், பதிவு: மார்ச் 04, 2022 00:18 AM
[11] https://www.dailythanthi.com/News/State/2022/03/04001821/Minister-Sekarbabu-informed-that-this-year-Kumbabhishekam.vpf