Archive for the ‘கோவில்’ Category

உழவாரப்பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு தேவையா?

பிப்ரவரி24, 2024

உழவாரப் பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தேவையா?

23-02-2024 அன்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.

அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் சொன்னதும், நீதிபதிகளின் கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் செய்தால் அதை பரிசீலித்து செயல் அலுவலர் அனுமதி வழங்குவார். கோயில்களில் துாய்மைப் பணிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[5]: “மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இரண்டு வாரத்தில் திட்டத்தை வகுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.., அல்லது பி.டி.., தலைமையில் குழு அமைத்து மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி தற்போது அந்த கோவில்களின் நிலை குறித்த விபரங்களுடன் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை இரண்டு வாரத்துக்குள் ஹிந்து அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என, தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்[6].

உழவாரப் பணி பற்றிய புரிதல் இல்லாத அமைச்சரா, துறையா எது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே உள்ளது. பக்தர்களின் வரவேற்பை பொறுத்து தினசரி பதிவு செய்யும் வகையில் மாற்ற, திட்டம் உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].

ஊழவாரப் பணி அனுமதிக்கு பதிவு செய்வது எப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].

© வேதபிரகாஷ்

24-02-2024


[1] காமதேனு, கோயில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டம்தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!, Updated on: 23 Feb 2024, 9:35 pm

[2] https://kamadenu.hindutamil.in/divine/plan-to-carry-out-plowing-work-in-tamil-nadu-temples-high-court-orders-to-tamil-nadu-government

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவில்களில் உழவாரப் பணி… திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, 24 Feb 2024 06:29 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-tn-govt-to-plan-for-tillage-work-in-temples-3985906

[5] தினமலர், கோயில்களில் உழவார பணி: : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: பிப் 24,2024 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3559175

[6] https://m.dinamalar.com/detail.php?id=3559175

[7] தினத்தந்தி, கோவில்களில் மேற்கொள்ளப்படும்உழவாரப்பணிஎன்றால் என்ன? அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம், ஜூலை 29, 2021 7:40 am (Updated: ஜூலை 29, 2021 7:40 am).

[8] https://www.dailythanthi.com/News/State/2021/07/29074036/Carried-out-in-temples-What-is-plowing-Description.vpf

[9] தினமலர், உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம், பதிவு செய்த நாள்: ஜூலை 27,2021 21:52; https://m.dinamalar.com/detail.php?id=2810772

[10] https://m.dinamalar.com/detail.php?id=2810772

[11] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 03:15 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[13] தினமணி, கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம், Published on: 28 ஜூலை 2021, 12:45 am; Updated on: 28 ஜூலை 2021, 2:19 am

[14]https://www.dinamani.com/tamilnadu/2021/Jul/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3668433.html

[15] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி : அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்!!, July 27, 2021, 11:54 am.

[16]https://www.dinakaran.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/

[17] வேதபிரகாஷ், ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2), 12-10-2021.

[18] https://atheismtemples.wordpress.com/2021/10/12/dmk-atheist-and-anti-hindu-rulers-set-out-to-suppress-hindus-temple-practices-and-traditions/

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ரியல் எஸ்டேட்கோவில் வியாபாரம் உதலியவை: இத்தகைய சூழ்நிலையில் தான் இப்பொழுது இவ்வாறு புதிய கோவில்களை உருவாக்குவது அல்லது இருக்கின்ற கோவில்களை மாற்றுவது அதை வைத்து வியாபாரம் செய்வது, சாலைகளை போடுவது, அந்த குறிப்பிட்ட நிலங்களின் விலையை அதிகமாக்குவது, இதன் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்குவது, என்று பல வழிகளில் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எத்தகைய குறிப்பிட்ட கோவில்களைத் தேர்ந்தெடுத்து அதை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு சங்கிலி போன்ற வியாபாரம் முறையில் திட்டங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்கலாம். கோவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், அதற்கு உண்டான வழிமுறைகள் அதாவது புதியதாக பக்தர்கள் வருவது, அவர்களை நம்பிக்கை அதிகமாகவது அல்லது அதிகமாக்குவது, அதற்கு உண்டான பிரச்சாரங்களை நடத்துவது போன்றவை வருகிறா அல்லது உண்மையிலேயே இருக்கும்கோவிலுக்கு எதையாவது செய்ய உதவுகிறார்களா என்று ஆராய்ந்தால், இந்த நாத்திக-பெரியாரிஸ கும்பல்களின் நோக்கம் தெரிந்து விடும்.

புதிய ஜோதிடர்கள்அர்ச்சகர்கள் உருவாக்கப் படுவது ஏன்?: நிச்சயமாக பகுத்தறிவு, பெரியாரிஸ சித்தாந்தம், திராவிட மாடல், இந்து விரோதம், சனாதன ஒழிப்பு என்பதெல்லாம் இவற்றிற்கு துணையாக இருக்காது. எந்த பலனையும் கொடுக்காது. ஆகவே இங்கு இத்தகைய ஆன்மீக பக்தி பரசத்துடன் வியாபாரத்திற்கு உண்டான முறையில் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிச்சயமாக அதிக விவரங்கள் தெரிந்தவர்கள் தான் துணை போக வேண்டும். அதனால் தான் சில ஜோதிடர்கள், சில அர்ச்சகர்கள் என்றெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய-புதிய கதைகளை உருவாக்குகிறார்கள், ஆதாரமாக புராணங்களை உருவாகுகிறார்கள். இந்த பலன் வேண்டுமானால் இத்தகைய பூஜைகள் செய்ய வேண்டும் கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால்,  பரிகாரங்கள் செய்ய வேண்டும், இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என்றெல்லாம் புதிய புதிய வழக்கங்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன. ஆகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சனி ஞாயிறு விடுமுறை காலங்களில் தூரத்திலிருந்து கூட கார்கள், வேன்கள் என்று கூட்டம்- கூட்டமாக பக்தர்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, அடவாடி வியாபாரமும் அதிகமாகிறது: ஏதோ ஒரு நாள் இரு நாள் அப்படியே குடும்பத்துடன் வந்து சென்று விடுகிறார்கள் என்றாலும், நாளுக்கு நாள் கூட்டம் 100, 200, 500, 1000 என்று அதிகமாக வரும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவிடம் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இங்குதான் வியாபாரமயமாக்கம்- உண்மையான பக்தர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள், மக்களை சுரண்டும் கோஷ்டிகள் -இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் உள்ளூர் மக்ககள் உண்மையாக இத்தருணத்தை தங்களுக்கு உபயமாக கொண்டு வசதிகளை ஏற்படுத்து வருமானத்தை ஈட்டலாம். சுற்றுலா என்று வரும் பொழுதும் தீர்த்த யாத்திரை என்று வரும் பொழுதும் இது ஒரு சாதாரண விஷயமே. ஆனால் குறிப்பிட நாட்களில் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் மக்கள் வருவார்கள், அதனால் அதை வைத்து வியாபாரம் செய்யலாம், கொழுத்தலாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கத்துடன் ஏதோ வசதிகளை செய்கிறேன் என்று கழிப்பிடத்திற்கு ஐம்பது ரூபாய் -நூறு ரூபாய் என்றெல்லாம் வசூல் செய்வது, வாகங்களை நிறுத்துவதற்கு 50-100 ரூபாய் என்று ரசீது போட்டு அடாவடித்தனம் செய்வது, போன்றவற்றில் மனக்கசப்பு, வெறுப்பு முதலியவை பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.

பக்தர்களை, பக்தியை பாதிக்கும் அடாவடி அயோக்கியத் தனமான வியாபாரங்கள்: அதே மாதிரி பூஜைக்கு வேண்டிய பொருள்களை விற்பதிலும் இரண்டு, மூன்று மடங்குகள் வைத்து விற்பது போன்ற காரியங்களை நம் கண்கூடாக இத்தகைய இடங்களில் கவனிக்கலாம். அதிலும் பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட பூக்கள், பழங்கள், எண்ணை போன்றவை, அதிலும் பரிகாரங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொருட்கள் இவை எல்லாமே மறுபடியும் மறுபடியும் கடைகளுக்கு வருவது, அதனை திருப்பி கொடுப்பது போன்ற செயல்களையும் நாம் கவனிக்கலாம். இத்தகைய, “சுழற்சி” வியாபாரம் பக்தி, பக்தர்களின் நம்பிக்கை முதலியவை சோதனைக்குள்ளாகி புனிதமும் கெட்டு விடுகிறது. ஆக இதில் பூஜாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் புனிதமற்ற காரியங்களையும் கவனிக்கலாம். மனசாட்சிக்கு உகந்து அல்லது விரோதமாக செய்கிறார்களா இல்லையா என்று ஆராய வேண்டா, ஆனால், நிச்சயமாக இந்த பூஜை-புனஸ்காரர்களில் ஈடுபடுபவர்கள் செய்யக் கூடாது. செய்ஜுறார்கள் என்றால், அதையும், “கலிகாலம்,” என்று சொல்லி நியாயப் படுத்தி விடலாம்.

பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பு: ஒருவிதத்தில், உண்மையான சிரத்தையான பக்தர்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது அல்லது தெரிந்து கொள்ளும் பொழுது, மிகவும் மன வருத்தம் அடைகிறார்கள். இதனாலும், பக்தர்களுக்கு நாளடைவில் பாதிப்பு ஏற்படுகிறது. வெறுத்து விடுகிறார்கள். கிருபானந்தவாரியாரியே மிரட்டிய கும்பல்களும் இந்த தமிழகத்தில் இருந்தார்கள். ஆக, சாதாரணமான, அப்பாவி பக்தர்கள் என்ன செய்ய முடியும். ஒருவேளை அயோத்தியா மண்டபத்தில் தருப்பைப் புல் விற்றுக் கொண்டிருந்த எழை பிராமணர்களை கத்தியால் வெட்டியது போல, வெட்டவும் அந்த பெரியாரிஸ்டுகள் தயாராக இருக்கலாம். பாதி பக்தர்களுக்கு வேண்டுதல் நடக்கிறது, பாதி பக்தர்களுக்கு வேண்டியது நடக்கவில்லை என்றால், “நடக்கவில்லை,” என்று பக்தர் என்றும் சொல்ல மாட்டார், தனக்குக் கொடுப்பினை இல்லை என்று அமைதியாக இருப்பார். ஆனால், பலன் பெற்றவர் சொல்லும் பொழுது, சொல்ல வைக்கும் பொழுது, இதற்கு விளம்பரம் கொடுத்து பரப்பும் பொழுது, சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்கிறது.

இந்துவிரோத-பெரியாரிஸ்டுகள் வளரும் விதம்: கிராமங்களில், தொலைவில் இருக்குமிடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இத்தகைய பெரியாரிஸ்டுகள், இந்துவிரோதிகள், முதலியவர்களை எதிர்த்து சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்களுக்கும் அர்சியல் பின்னணி இருந்தால், தட்டிக் கேட்கலாம், ஆனால், அவர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டு, அனுப்பப் படுவார்கள். கோவில்-வளர்க்கும் வியாபாரங்களும் இந்த மனிதர்களுக்குத் தான் கிடைக்கின்றன, கிடைக்கும். அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு எல்லா “ஆர்டர்களும், டெண்ர்களும்” கிடைக்கின்றன. பிறகு, அக்கோவிலையே கட்ட்ப் படுத்தும் அளவுக்கு “தாதாவாகிறார்கள்.” சிறப்பு தரிசனத்திற்கு, விஐபிக்கள் அவர்களிடம் தான் செல்ல வேண்டும். அப்படித்தான், நடந்து வருகிறது. இதனால் தான், இவர்கள் எல்லோருமே இந்துக்களாகத் தான் இருக்கிறார்கள், இந்துவிரோதிகளாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள். சனி இவர்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களைத் தான் பிடிக்கிறது. அதையும் இந்நாத்திகர்கள் பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

13-10-2024

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை–ஸ்தல புராணம் வளரும்விதம் (2)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை ஸ்தலபுராணம் வளரும் விதம் (2)

குச்சப்புல் உருவம், உருவம் ஆகி விக்கிரமானது: இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு. குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது[1]. அந்த அனீஸ்வரன், “குச்சனூர் சனீஸ்வரன்” ஆனான். அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது[2]. ஆக, இன்றைக்கு பிரசித்தியாகி விட்டார். கூட்டமும் பெருகி விட்டது. சுற்றிலும் கடைகளும் பெருகி விட்டது. இதனால், வியாபாரம் பெருக, மற்ற விவகாரங்களும் பெரிதாகி விட்டது. ஆக உள்ளூர்வாசிகள் இதை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று பார்த்தால், அதில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. “சாமி காரியம்” என்பதால், எல்லாமே “புனிதமாகி” விடுகிறது.

2,000 கோவில் தொன்மையானது: 2 ஆயிரம் நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்[3]. செண்பகநல்லூர் என்று இருந்த உரை சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு குச்சிப்புள்ளினால் கோவில் கட்டியதால் இது குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது[4]. இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட வருபவர்கள் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரை சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.

2003ல் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்தது: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[5]. இந்த திருக்கோவிலில் நிர்வாக பொறுப்பினை ஆரம்ப காலத்தில் அறங்காவலர் குடும்பத்தினர்கள் செய்து வந்தனர்[6]. கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையினர் கோவில் நிர்வாகப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர்[7]. இந்நிலையில் மீண்டும் கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் “தீர்ப்பு வெளியான 4 வாரங்களுக்குள், கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்தாலும்நிர்வாகத்தை டிரஸ்டிகள் ஏழு பேரிடமும் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது  ,”தீர்ப்பு வழங்கியுள்ளது[8]. கோயில் நிர்வாகங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி இருக்கும் நிலையில் கோயிலை  மீண்டும் கோயில் டிரஸ்ட் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[9].  இது தொடர்பாக, அறநிலைய அதிகாரிகள், “இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது,” என்கிறார்கள்[10].

2023ல் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை என்று ஒரூவர் கேள்வி எழுப்பியது!: இந்து சமய அறநிலையத் துறையானது தன்வசம் வைத்திருக்கும் ஆலயத்தை மீண்டும் பரம்பரை அறங்காவலர்களிடம் நான்கு வாரத்திற்குள் ஒப்படைப்பு செய்து[11], இத்திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களே நிர்வகிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 03 அன்று உத்தரவிட்டு, அந்த உத்தரவினை மனுதாரருக்கு டிசம்பர் 01 அன்று கொடுக்கப்பட்டுள்ளது[12]. நீதி தேவதை வழங்கிய உத்தரவின்படி, குச்சனூர் திருக்கோயிலில் பொறுப்பேற்க இருக்கும் பரம்பரை அறங்காவலர்களே!!! நீங்களாவது இந்த திருக்கோயிலுக்கு கடந்த 10 வருடங்களாக பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை??? இந்த மாடுகள் உண்மையிலேயேஇருக்கின்றதா? இல்லை இதற்கு வேறு எந்த விதமான பதிலும் வைத்து உள்ளீர்களா!!! ஆகவே உடனடியாக இந்த மாடுகளை கண்டுபிடித்து தர வேண்டும்??? என்று பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்???[13] அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர் – அ.ந.வீரசிகாமணி[14].

2023ல் அறநிலையத் துறையிலிருந்து விடுபட்டது: இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கூறி இந்து சமய அறநிலைத்துறையினர் அலுவலகத்தை அறங்காவலர் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை செயல் அலுவலரிடம் வழங்கிவிட்டு நாங்கள் பொறுப்பேற்க இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரவினை பெறுவதற்கு இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் மறுப்பு தெரிவித்து நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்திருப்பதாக தகவல் கூறி வாங்க மறுத்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை சுவரில் ஒட்டினார்கள். அப்போது அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை சுவரிலிருந்து கிழித்து எரிந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவினை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக கூறி அறங்காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

© வேதபிரகாஷ்

13-10-2024


[1] தெய்வீகம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு, By Raji -Jan 14, 2020, 08:52PM IST.

[2] https://dheivegam.com/kuchanur-saneeswaran-temple-history/

[3] ஏபிபி.லைவ், Kuchanur Saneeswaran Temple: தேனி: 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?, By: நாகராஜ் | Published at : 20 Jul 2023 07:12 AM (IST), Updated at : 20 Jul 2023 07:12 AM (IST)

[4] https://tamil.abplive.com/news/madurai/theni-2000-years-old-kuchanur-saneeswaran-temple-know-specials-benefits-of-worshipping-tnn-129683

[5] காமதேனு,கோயில் பொறுப்பில் இருந்து அறநிலையத்துறை விலகிக் கொள்ள வேண்டும்உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!, Updated on:  06 Dec 2023, 11:46 am

[6] https://kamadenu.hindutamil.in/divine/order-to-hand-over-the-management-of-the-kuchanur-temple-to-the-trustees

[7] தமிழ்.சமயம், குச்சனூர் சனி பகவான் கோவிலில் பரபரப்பு! அறங்காவலர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் வாக்குவாதம்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 29 Dec 2023, 5:11 pm.

[8]  https://tamil.samayam.com/latest-news/theni/the-trustees-staged-a-siege-protest-at-kuchanur-saneeswaran-bhagavan-temple/articleshow/106381464.cms

[9] தினகரன், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க உத்தரவு: மேல்முறையீடு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு, December 6, 2023, 7:49 pm

[10] https://www.dinakaran.com/order-handover-hereditarytrustees-saneeswarabhagwantemple-kuchanur/

[11] தினமலர், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு , டிசம்பர் 05, 2023, 12:12

[12] https://temple.dinamalar.com/news_detail.php?id=140181

[13] ஐமம்.மீடியா, கடந்த பத்து ஆண்டுகளில் குச்சனூர் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட எருமைக் கன்றுகள் எங்கே??? எங்கே ???, A N Veerasigamani , Theni, Tamil Nadu (TN) 08/12/2023 08:49 AM   

[14] https://aimamedia.org/newsdetails.aspx?nid=179478

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

சனிசனீஸ்வரன் சனிபகவான் என்று மாறிவரும் நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.

நவகிரக க்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.

புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.

தனியாக சனீஸ்வரன் கோவில் சந்நிதி, கோவில் உருவாகும் முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

சனி, ஏழரை சனி முதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.

தினகரன் மான்மியம் சொல்லும் குச்சனூர் சனீஸ்வரன் புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

குச்சனூர் சனி கோவில் பலன் உண்டான விதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார்.  வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.

© வேதபிரகாஷ்

13-10-2024

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டது, வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! (1)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, வீசியது ஒரு தொடர்குற்றவாளி! (1)

ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில் உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.

பெட்ரோல் குண்டுடன் வந்த பக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வெடிப்புப் பற்றி விதவிதமான செய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].

முதலில் போலீஸார் விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும் என்று அறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல் குண்டை வீசியவர் கோயில் அருகே கடை நடத்திவரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, `கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவருகிறேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போது முரளி கிருஷ்ணா போதையில் இருந்ததாகத் தெரிகிறது[9]. அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].

பெட்ரோல் குண்டு போட்டவன் ஜார்ஜ்ஷீட்டர்தொடர் குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

முரளிகிருஷ்ணன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்[13]: “ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்எனும் பெயரில், முந்திரி வியாபாரம் செய்து வருகிறேன். தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ரவுடி தொழில் ஓரளவு கை கொடுத்தது. கொஞ்சம் கடன் தொல்லையும் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு ஆண்டுகளாக சென்று வருகிறேன். சுவாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், பெட்ரோல் குண்டு வீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தினமணி, ‘கடவுள் கைவிட்டதால்கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!, By DIN  |   Published On : 10th November 2023 01:32 PM  |   Last Updated : 10th November 2023 01:32 PM  |

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/10/petrol-bomb-inside-the-temple-4103993.html

[3] மாலைமலர், சென்னையில் பரபரப்பு: பாரிமுனை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு, By மாலை மலர்10 நவம்பர் 2023 10:54 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/petrol-bomb-in-chennai-parrys-temple-683895

[5] காமதேனு, சென்னையில் பரபரப்புபோதையில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!, Updated on : 10 Nov 2023, 11:11 am.

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/man-arrested-for-throwing-petrol-bomb-on-temple

[7] விகடன், `சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால்தான்..!’ – கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் `பகீர், எஸ்.மகேஷ், Published: 10-11-2923 at 4 PMU; pdated: 10-11-2023 at 5 PM.

[8]  https://www.vikatan.com/news/general-news/petrol-bomb-hurled-in-a-temple-in-chennai

[9] தினகரன், பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம், Published: November 10, 2023, 5:35 pmLast Updated on November 10, 2023, 5:46 pm.

[10] https://www.dinakaran.com/alcohol_addiction_temple_petrol_bomb_arrest/

[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் : சென்னை காவல் ஆணையர் விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.

[12] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-clarifiesabout-history-sheeter-hurls-petrol-bomb-inside-the-temple-1227897.html

[13] ஜீ.டிவி, சாமி எதுவும் தராததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…!, பதிவு செய்த நாள்: நவ 10,2023.

[14] https://zeenews.india.com/tamil/videos/chennai-paris-temple-petrol-bomb-cctv-video-472117

[15] பாலிமர்.டிவி, கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!. நவம்பர்.10, 2023. 08:49:32 PM.

[16] https://www.polimernews.com/dnews/209675

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்- அந்தந்த கோவில் ஆகம முறைப் படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

ஓகஸ்ட்27, 2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்அந்தந்த கோவில் ஆகம முறைப்படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனம் நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].

புதிய சட்டத்தின் படி செய்யப் பட்ட நியமனம் நிறுத்தி வைக்கப் பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சர்டிபிகேட் / சான்றிதழ் இருந்தால் எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.

அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் போன்றவை பின்பற்ற முடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.

சுகவனேஸ்வரர் கோவில் தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].

ஆகமமா, ஆகம பயிற்சியா, பரம்பரை நியமனமாபோன்றவை தொடர்பிரச்சினைகளாக இருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ் 12-08-2023 / 27-08-2023


[1] தினத்தந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை, தினத்தந்தி ஆகஸ்ட் 12, 1:50 am

[2] https://www.dailythanthi.com/News/State/all-castes-are-ordained-priests-prohibition-against-cancellation-of-appointment-1028514

[3] தினகரன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி, August 12, 2023, 12:54 am.

[4] https://www.dinakaran.com/allcaste_priest_cancel_icourtbranch/

[5] தினமலர், அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள்: ஆக 12,2023 06:10

[6] https://m.dinamalar.com/detail.php?id=3401950

[7] ஏபிபி.லைவ், Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை, By: சுதர்சன் | Updated at : 11 Aug 2023 06:44 PM (IST), Published at : 11 Aug 2023 06:00 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-sets-aside-single-judge-order-of-cancelling-archakas-appointment-under-tamil-nadu-govt-directive-134417

[9] இடிவி.பாரத், குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!, Published: Aug 11, 2023, 5:19 PM

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/hc-madurai-bench-stays-order-of-single-judge-cancelling-appointment-of-kumaravayalur-temple-priests/tamil-nadu20230811171918018018770

[11] நக்கீரன், அர்ச்சகர் நியமனம்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/07/2023 (13:21) | Edited on 28/07/2023 (13:31),

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ordination-priests-madras-high-court-action

[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.

[13] https://tamil.news18.com/national/supreme-court-disposes-of-cases-related-to-appointment-of-archakas-in-tamil-nadu-temples-1121582.html – gsc.tab=0

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

ஜூலை25, 2023

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்காலமாக நடைமுறையில் உள்ளன: இந்து கோவில்களில் நடக்கும், நடந்து வரும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்-காலமாக நடைமுறையில் உள்ளன. சுருக்கமாக சொல்வதானால், ஜைன-பௌத்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவை இந்நாட்டு மதங்கள் மற்றும் பின்பற்றியவர் இந்தியர் என்ற நிலையில் ஓரளவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, பெருமளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. கோவில்கள், விக்கிரங்கள் இடிக்கப் பட்டன.  விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றிலும் நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், இடைகாலங்களில் அவர்களுடைய  அக்கிரமான இடைஞல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன. பிறகு ஐரோப்பிரர்களின் தலையீடுகளால், மறுபடியும் இடையூறுகள் ஏற்பட்டன. நடைமுறையில், நிர்வாகம் என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டன.

துலுக்கர்-ஐரோப்பியர் காலங்களில் இடையூறுகள் அதிகமாகின: ஜாதிய முறைகள், மதமாற்றம் போன்ற காரணங்களினால் இருக்கமாகின. அதன் படி, கோவில்களில் யார் நுழையலாம்-கூடாது போன்ற பிரச்சினைகளும் உண்டாகின. நவீனகாலங்களில், நகரமயமாக்கம் போன்ற காரணங்களினால், மேன்மேலும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், முதலியன ஏற்படுத்தப் பட்டன. மாற்று மதத்தினர் எண்ணிக்கை அடிகமாகிய போது, அவர்களும் இவற்றை எதிர்க்க ஆரம்பித்தார்கள். தடுக்க கலவரம் போன்ற முறைகளையும் கையாண்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்ற பிறகும். சட்டம்-ஒழுங்குமுறை என்ற ரீதியில் அடக்குமுறைகள் ஆரம்பித்தன.

1960களிலிருந்து திராவிட நாத்திகர்களால் தொந்தரவுகள்: 1960களிலிருந்து திராவிடம், பெரியாரிஸம், பகுத்தறிவு போர்வைகளில், முன்பில்லாத அளவுக்கு நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் அதிகமாகின. இந்துஅறநிலையத் துறையில் அத்தகையோர் நுழைய ஆரம்பித்தனர். இப்படியாக, கடந்த 60-70 ஆண்டுகளாக அவர்களின் தலையீடு மூன்று தலைமுறைகளாக உருமாறி பலவிதங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜாதிய அரசியல் நடத்துவதால் இந்துக்களும் அவ்வாறே பிரிந்து கிடக்கின்றனர். கோவில்களும் அவ்வாறே பிரிய ஆரம்பித்தன. இதற்கு ஜாதிவாரி அரசியல்-உள்-நுழைந்தவர்களும், ஜாதியவாதியினரும், காரணமாகினர். இதனால், கோவில் சம்பந்தப் பட்டவை வியாபார மயமாக்கப் பட்டன. முன்பெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் நடத்த யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. ஆனால், இன்று, போக்குவரத்து, மற்றவர்களின் நிலை, சட்டம்-ஒழுங்குமுறை என்று பல நிலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ள. இம்மாதிரிதான், இப்பொழுது திராவிட மாடலில் இப்பிரச்சினைகள் வளர்க்கப் பட்டுள்ளன.

சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டது: நிதானமாக யோசித்தால், போலீசுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். கோவில் திருவிழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது[1]. வன்முறையை தவிர்க்க, கோவில்களை மூடி விடலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[2]. மயிலாடுதுறை மாவட்டத்தில், ருத்ர மகா காளியம்மன் கோவில் உள்ளது[3]. இதன் அறங்காவலரான தங்கராசு, 92, என்பவர், தன் மகன் நடராஜன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு[4]: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, வரும் 23 முதல் ஆக., 1 வரை நடக்கவுள்ளது. விழா அமைதியாக நடக்கும் விதமாக, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, ஜூன் 21ல் எஸ்.பி.,க்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை[5]. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. அப்படியென்றால் போலீஸார் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கவில்லையே? அதனால், போலீஸ் ஷ்டேஷன்களை ஊடிவிடலாமா என்று கேட்கவில்லையே?

சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை: வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது[7]. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ”இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில், இரண்டு குழுக்களுக்கு இடையே பிரச்னை உள்ளது[8]. ”சீர்காழி தாசில்தார் தலைமையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை,” என்றார். அப்படியென்றால், பிரச்சினை அங்கும் உள்ளது. தாசில்தார், போலீஸார் முதலியவர்களையும் மீறும் அந்த “இரு பிரிவினர்” யார், அத்தகைய பலம் பொறுந்திய கூட்டத்தினர் யார், எந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமா? இல்லை எந்த ஜாதியினர் என்று கேட்கவேண்டுமா?

பிரச்சினை செய்யும் இரு பிரிவினர் தலைவர்களை கோவில் பொறுப்பிலிருந்து நீக்கி விடலாமே?: இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு[9]: தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது[10]. அதாவது, அந்த அலவுக்கு அடிக்கடி வழக்குகள் தொடுக்கிறார்கள் போலும். அப்படியென்றால் கடவுளை விட இதில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு இவர்களை கோவில்களினின்று வெளியேற்றி விடலாமே? திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகிறது[11]. கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன[12]. கடவுளை பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பெற தான் கோவில்கள் உள்ளன[13]. ஆனால், துரதிருஷ்டவசமாக கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாகின்றன[14]. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது[15]. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை[16]. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையை தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” இங்கு தான் பிரச்சினை அணுகுமுறை முரண்பாடாக இருக்கிறது.

அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன்: “அகங்காரம் இல்லாமல், கடவுளின் அருளை பெற விரும்பா விட்டால், கோவில்கள் இருப்பதன் நோக்கமே பயனற்றதாகி விடும்.கடவுள் பக்தியை கருத்தில் கொள்ளாத திருவிழாக்களில், இரு குழுவினர் இடையே ஏற்படும் தேவையற்ற பிரச்னையை தீர்க்க, போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். போலீஸ், வருவாய் அதிகாரிகளுக்கு இதை விட முக்கியமான பல பணிகள் உள்ளன. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். உண்மையில் நீதிபதி சரியாகத்தான் தீர்ப்புக் கொடுத்துள்ளார். ஊடகங்கள் தான் அதைத் திரித்து வெளியிட்ட ரீதியில் தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

25-07-2023


[1] தினமலர், திருவிழாக்கள் வன்முறை களமானால் கோவில்கள் அர்த்தமற்றதாகி விடும்!: நீதிமன்றம் கண்டனம், பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 02:03

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3382836

[3] தமிழ்.இந்து, “பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” – உயர் நீதிமன்றம் வேதனை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 21 Jul 2023 08:21 PM, Last Updated : 21 Jul 2023 08:21 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1060832-temple-festivals-to-demonstrate-strength-not-true-devotion-high-court.html

[5] காமதேனு, திருவிழாக்களில் வன்முறை வெடித்தால் கோயில்கள் இருப்பதற்கே அர்த்தமில்லை: உயர்நீதிமன்றம் வேதனை, Updated on : 21 Jul 2023, 7:26 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/the-madras-high-court-opined-that-temple-festivals-are-held-to-prove-who-is-the-stronger-of-the-two-factions

[7] தினமணி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை: உயா்நீதிமன்றம் வேதனை, By DIN  |   Published On : 22nd July 2023 05:32 AM  |   Last Updated : 22nd July 2023 05:32 AM.

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jul/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4041969.html

[9] தினத்தந்தி, கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை‘ – சென்னை ஐகோர்ட்டு வேதனை, ஜூலை 21, 5:45 pm

[10] https://www.dailythanthi.com/News/State/temple-festivals-are-held-to-show-strength-not-true-piety-high-court-agony-1012771

[11] நியூஸ்.7.தமிழ்.லைவ், திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை!” – சென்னை உயர்நீதிமன்றம்!, by Web EditorJuly 21, 2023.

[12] https://news7tamil.live/there-is-no-true-devotion-in-holding-temple-festivals-temples-may-be-closed-if-violence-erupts-during-festivals-high-court.html

[13] தமிழ்.வெப்.துனியா, கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!, Webdunia, வெள்ளி, 21 ஜூலை 2023 (16:36 IST)

[14] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-highcourt-says-about-temple-festival-123072100054_1.html?amp=1

[15] நக்கீரன், யார் பெரியவர் என நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது” – நீதிமன்றம் அதிருப்தி, செய்திப்பிரிவு, Published on 21/07/2023 (16:32) | Edited on 21/07/2023 (16:52)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-festivals-are-held-prove-who-greatest-court-disapproves

300 ஆண்டுகள் ஆன 18ம் நூற்றாண்டு கோவில் இந்திய தொல்லியல் துறை அனுமதி இல்லாமல் இடிக்க முடியுமா?

ஜூன்30, 2023

300 ஆண்டுகள் ஆன 18ம் நூற்றாண்டு கோவில் இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் இடிக்க முடியுமா?:

ஆரணிசெய்யாறு நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் இடிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி., நகரத்திலிருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன[1]. மேலும், சாலை மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்[2]. மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது[3]. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்[4]. இதனால், ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில், வருவாய்த்துறையினர் சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்[5]. பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[6].

18ம் நூற்றாண்டு கோவில் இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் இடிக்க முடியுமா?: 300 ஆண்டுகளாக இருக்கும் கோவில் எனும்பொழுதே, அந்த சாலைகள், பேரூந்து நிலையம், வீடுகள் எல்லாமே பிறகு தான் வந்துள்ளன. அப்படியென்றால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தான், அவை கட்டப் பட்டிருக்க வேண்டும். கோவில் மதிற்சுவற்றை நீக்கித் தான், ஆக்கிரமிப்பே ஆரம்பிக்கிறது. எனவே, கோவில் ஆக்கிரமிக்கப் பட்டது என்பது பொய்யாகிறது. முன்பு செய்யாறில் இதே போன்று ஒரு கோவிலை இடிக்க சில ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற போது, கைது செய்யப் பட்டனர். இவர்கள் எல்லோரும் இந்துக்கள் தான் எனலாம். ஆமாம், ஆனால், திராவிடத்துவத்தால், நாத்திகத்தால், ஊறிப்போன, இந்துவிரோதிகளாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் என்றால், 18ம் நூற்றாண்டு கோவில் என்றாகிறது. பிறகு, அதனை இவர்கள் எப்படி இடிக்க முடியும். 100 ஆண்டு காலம் தொன்மை என்றால் இந்திய தொல்லியல் சட்டத்தின் கீழ் புராதனமானது என்றாகிறது. பிறகு, இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால், 300 ஆண்டுகளாக, ரோடு போடுவது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன.

கோவில்கள் இடிப்பது சட்டப்படி அல்லது திட்டப் படியான செயலா?: இப்பொழுது தான் கோவில் இடைஞ்சலாக இருப்பது தெரிகிறது போலும் தொடர்ந்து இப்படி கோவில்களை இடித்து வருவது, ஏதோ ஒரு அசாதாரணமான செயல் போலத்தான் தென்படுகிறது. முன்பு திமுக ஆரம்ப காலத்தில் ஈவேரா / பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்து வந்தது, ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, ஊர்வலம் சென்றது முதலியவை ஊக்கப்படுத்தப் பட்டது எனலாம். அதே போல, இப்பொழுதும், திமுக ஆட்சிக்கு வந்ததும், இத்தகைய செய்திகள் தினம்-தினம் வருகின்றன. இந்து அறநிலையத் துறை என்பது கூட அறநிலையத் துறை என்று தான் குறிப்பிடப் படுகிறது. ஏதோ, இது செக்யூலரிஸ ரீதியில் பொதுவானது, அனைவருக்கும் பொதுவானது போன்ற விதத்தில் குறிப்பிடப் படுகிறது. அதே போல கோவில் ஊழியர் சங்கங்களும் பெயர் வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.

திமுக ஆட்சியில் கோவில்கள் இடிக்கப் படுவது தற்செயலான விசயமா, அசாதரணமான நிகழ்வா?: திமுக ஆட்சியில் இடிக்கப் பட்டது எத்த்னை கோவில் என்ற பேச்சு எழுந்த போது, 100, 120, 150 என்றெல்லாம் கணக்குப் போட்டு, பிறகு குறைக்கப் பட்டது. ஆனால், கோவில்களை இடித்தது ஒப்புக் கொள்ளப்பட்டது. கோவில் இடிக்கப் பட்ட விவரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்[7]. இதில் அக்கிரமித்துக் கட்டப் பட்டது, நூறாண்டுகளுக்கு முன்னரே கட்டப் பட்டது என்பதை சுலபமாகப் பிரித்துக் காணலாம்[8]. நிச்சயமாக 1947-க்கு முன்னர் இப்பிரச்சினை வராது-வரக்கூடாது. பிறகு எப்படி 100-ஆண்டுகளுக்கு மேலான கோவில்களையும் இடிக்கின்றனர் என்பது புரியவில்லை. செம்மொழி மாநாட்டின் போதும் சில கோவில்கள் இடிக்கப் பட்டன[9]. செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின[10].

இந்துக்களால் என்ன செய்ய முடியும்?: ஒரு பக்கம் கோவில் கும்பாபிஷேகம், இன்னொரு பக்கம் கோவில் இடிப்பு. இந்துக்கள் என்ன செய்ய முடியும்?

  1. தினமும் பேப்பரை / டிவியைப் பார்த்தால், ஏதோ கோவில்களில் தான் பிரச்சினை என்பது போல செய்திகள் வெளியிடப் படுகின்றன.
  2. கோவிலில் தகராறு, போலீஸார் நுழைந்தனர், பக்தர்கள் அவதி, அறநிலைத் துறையினர் தலையீடு, அமைச்சர் எச்சரிக்கை,
  3. கோவிலில் சிலைகள் உடைப்பு, உண்டியல் திருட்டு, அம்மன் நகைகள் காணோம், கோவில் கொள்ளை, திருட்டு, இப்படி……
  4. கோவில் இடிப்பு, ஜேசிபி / பொக்லைன் எந்திரம் வைத்து இடிப்பு, கோவில் தரை மட்டம், பக்தர்கள் எதிர்ப்பு, போலீஸார் குவிப்பு…..
  5. பக்தர்களுக்குள் சண்டை, கலவரம் எற்படும் நிலை, கோவிலுக்கு பூட்டு, அதிகாரிகள் சீல் வைப்பு,…..கோர்ட் ஒப்புதல்..
  6. 300 வருட பழமையான கோவில் என்றாலே, ஏ.எஸ்.ஐ.யிடம் (இந்திய தொல்லியல்) அனுமதி தேவையே, பெற்றார்களா?
  7. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், ஆகமம் இல்லையென்றால் சாதகம் தான், பாதகம் இல்லை, சோதனை காலம் தான்!
  8. நாத்திகர்களுக்குத் தான் கோவில் மீது, எவ்வளவு அக்கரை, அல்லேலூயா என்று கத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுகிறான்!
  9. கோவிலுக்குள் கக்கூஸ், பாத்ரூம் கட்டிக் கொண்டு வாழவா அறநிலையத் துறை? பிறகு உள்ளே வராதே என்று ஏன் கத்துகிறாய்?
  10. எந்தவிதத்திலும், உனக்கும், கோவிலுக்கும் ஒத்துப் போவதில்லையே, பாவம் பெண்டாட்டி தான் சாம்  கும்பிடவும் தேவையாகிறது!
  11. நாத்திகனே, பெரியாரிஸ இந்து விரோதிகளே, பிள்ளையார் சிலை உடைத்தவர்களே, வெளியேறு என்ற கோஷம் செயலாகும்!

நகரமயமாக்கம் போர்வையில் கோவில்களை குறிவைத்து இடிப்பது என்ன?: நகரமயமாக்கம் நோக்கில், ரீதியில், சாலைகளை விரிவு படுத்துதல், புதிய சாலைகளை போடுதல், இடையில் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகள் கடந்த 30-35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தனியார் வீடுகள், நிலங்கள் என்று வரும்பொழுது, அவற்றிற்கு இழப்பீடு கொடுத்து, கையகப் படுத்தப் படுகிறது. புராதன கட்டிடங்கள், கோவில்கள் போன்றவை வரும் பொழுது, பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்து, திட்டம் போடுவது, வேலை செய்வது பணிக்கப் பட்டுள்ளது. இல்லை, அவை இடம் மாற்ற வேண்டும். அதாவது, அப்படியே கட்டித்தரவேண்டும். இவ்வாறு தான் ஒப்பந்தம் போடப் படுகிறது. இருப்பினும், பெருவாரியாக, இச்சரத்துகள் மீறப் படுகின்றன. ஒப்பந்தக் காரர்கள் அரசியல்வாதிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்-நண்பர்களாக இருக்கும் பொழுது மீறப் படுகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் கோவில்களுடைது தான். அவற்றை அபகரித்து தான், ரோடுகள், பேரூந்து நிலையங்கள், கட்டிடங்கள் எல்லாம் கட்டப் படுகின்றன. ஆகவே, கோவில்கள் என்றும் இடைஞ்சலாக இருப்பதில்லை. அவற்றின்  நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும் பொழுது, அவை அவ்வாறு காணப் படும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. யாரும் நடுத்தெருவில் கோவிலைக் கட்ட மாட்டார்கள். ஆகவே, அத்தகைய பேச்சு, வாதம், முழுப்பொய்யாகிறது. எனவே, கடைசியில் இவையெல்லாம் என்ன அன்று ஆராயும் பொழுது, இந்துவிரோதம் தான் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

30-06-2023


[1] தினமலர், விநாயகர் கோவில் இடிப்பு, Added : ஜூன் 30, 2023  00:14

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3361862

[3] மாலைமலர், 300 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு, By மாலை மலர் 29 ஜூன் 2023 2:18 PM

[4] https://www.maalaimalar.com/news/district/thiruvannamalai-news-demolition-of-300-year-old-temple-629205

[5] தினத்தந்தி, ஆரணியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், By தந்தி டிவி, 29 ஜூன் 2023 8:37 AM

[6] https://www.thanthitv.com/latest-news/300-years-old-ganesha-temple-in-arani-demolished-by-highway-department-officials-195987

[7]  வேதபிரகாஷ், கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் கருணாநிதி ஆட்சியா?, ஜூலை.09, 2010.

[8]https://antihidnu.wordpress.com/2010/07/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/

[9] வேதபிரகாஷ், செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு!, மே 15, 2010.

[10]https://chemozhi.wordpress.com/2010/05/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95/