Archive for the ‘சின்னம்’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

காஞ்சிபுரத்தில் சண்டை

மே31, 2010

கருட சேவையில் மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7205&Print=1

வரதராஜ பெருமாள் விவகாரமா, திமுக ஆட்சியின் தூண்டுதலா? புதுடில்லி; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவையின் போது மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் (தேவராஜ சுவாமி கோவில்) உள்ளது. இங்கு ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் சிலைகள் உள்ளன. தென்கலைப் பிரிவைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் சிலையும் உள்ளது.

1991ல் ஆரம்பித்து வைக்கப் பட்ட இந்து அறநிலையப் பிரச்சினை: கடந்த 1991ம் ஆண்டு இந்து அறநிலையத் துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், “பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் கருடசேவையின் போது, கோவில் பிரகாரத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சிலை முன், தேவராஜ சுவாமி வரும் போது, மணவாள மாமுனிகள் சிலைக்கு சடாரி மரியாதை செய்ய வேண்டும்‘ என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் கோர்ட்டில் சீனிவாசராகவன் என்பவர் வழக்கு தொடுத்தார். “மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வது பாரம்பரியமானது அல்ல. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை, 1997ம் ஆண்டு காஞ்சிபுரம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

தமிழ்வாணனின் தீர்ப்பு எதிர்பார்த்தபடிதான் இருந்தது: இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசராகவன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், “தென்கலை ஆச்சாரியரான மணவாள மாமுனிகளுக்கு மரியாதை செய்வது பாரம்பரியத்துக்கு எதிராக ஆகாது. சாதாரண மக்களுக்கே சடாரி மரியாதை செய்யும் போது, தென்கலை பிரிவின் தலைவரான மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வதில் தவறில்லை. “எனவே, கருட சேவையின் போது ஆழ்வார் பிரகாரத்தில் அமைந்துள்ள மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்வது சட்ட விரோதமானதோ, வைணவ பாரம்பரியத்துக்கு எதிரானதோ அல்ல. காஞ்சிபுரம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறேன். அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசராகவன் அப்பீல் மனுவை தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் ரவீந்திரன், ராதாகிருஷ்ணன் அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டது. தேவராஜ சுவாமி கோவிலில் பகல்பத்து விழாவின் போது, ரேவதி நட்சத்திரம் வரும் நாளன்று மணவாள மாமுனிகள் விக்ரகத்தை ஊர்வலமாக ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துச் சென்று மீண்டும் அங்கேயே கொண்டு வருவது குறித்து இந்து அறநிலையத் துறை கமிஷனர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதை எதிர்த்து வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபாவின் செயலர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இனி உச்சநீதி மன்றத்தை கேட்க வேண்டுமா, ராமரையே கேள்வி கேட்ட சரித்திரம் படைத்த பாலகிருஷ்ணன் இருந்த இடமாயிற்றே? இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு: காஞ்சிபுரம் தேவராஜ கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ரங்கநாதரை தரிசிக்கும் இந்த இரு பிரிவினர் மத்தியில் ஆரோக்கியமான மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக இது இல்லை. ஒருவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை மனிதனாக பார்ப்பவன் தான் உண்மையான பக்தன். கடவுளை எங்கும் காண்பதன் மூலம் கோபம், வெறுப்பு இவற்றில் இருந்து அந்த உண்மையான பக்தன் மீள வேண்டும். பகல்பத்து விழாவின் போது மணவாள மாமுனிகளின் விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் அதே இடத்துக்கு மாலையில் கொண்டு வருவதன் மூலம், ரங்கநாதரை வழிபடும் இரண்டு பிரிவினருக்கு இடையில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக, இந்து அறநிலையத் துறை கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதில் குறை காண முடியாது. மேலும், 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட்டால் நிறுத்த முடியாது. எனவே, இந்து அறநிலையத் துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட எந்த காரணமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.

இது வடகலை-தென்கலை என்ற பிரச்சினையைவிட நாத்திகர்கள் ஏற்படுத்திய குளறுபடியாகத்தான் தெரிகிறது: முன்னமே இவர்கள் இவ்வாறு நிறைய தகராறுகள் செய்துள்ளனர் அல்லது ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப் பட்டு அவ்வாறான கலாட்டாக்களை செய்துள்ளனர். இப்பொழுது இந்த கருப்புப் பரிவார் உபயோகித்துக் கொள்கிறது. மற்ற வழக்குகலை விட்டுவிட்டு சுப்ரீம் கோர்ட்டும், இதை விசாரித்து, இந்த சந்தர்ப்பத்தில் தீர்ப்பு அளிப்பதும் வினோதமா அல்லது அரசு இட்ட ஆணையா என்று காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.