Posts Tagged ‘அறிக்கை’

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

UNESCO குழு மே முதல் ஜூன் 2017 வரை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை  அண்மையில்  வெளியிட்டது: கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல… நிர்வாக மையங்களாகவும், கல்விக் கூடங்களாகவும் விளங்கியுள்ளன.  நம் நாகரிகமும், பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக் கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக மிஞ்சுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் கோயில்களை பாதுகாப்பதில் நமக்கிருக்கும் அலட்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும்  குழு,  தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் 2017 வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவுகளை அண்மையில்  வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. பழம் பெருமை மிக்க கோயில்களில் தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் கோயில்களின் ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[1].  யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோயில்களில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலும் இடம் பெற்றிருக்கிறது[2].    

மானம்பாடிநாகன்பாடிவீரநாராயணபுரம் இருக்கும் இடம்: கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிற்றூர்தான் மானம்பாடி. இங்குள்ள இறைவன், நாகநாதசாமி எனஅழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் இவரது பெயர் கைலாச முடையார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் வணிக தலமாக விளங்கியது. நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் மானம்பாடி என மருவியது. இந்த ஊர் வீர நாராயணபுரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்குதான் இருக்கிறது நாகநாத சுவாமி கோயில். இது, 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோயில் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.  காவிரி நங்கையின் அரிய சிற்பம் ஒன்று இந்தக் கோயிலில் இருக்கிறது.

2017ல் கோயிலைப் பற்றி ...விகடன் ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசியது:  பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயிலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். “இந்தக் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் பற்றியும் அவனது பேரன் குலோத்துங்கச் சோழன் பற்றியும் ஒன்பது கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. எங்குமே காணக் கிடைக்காத அரிய சிற்பங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், காவிரித் தாய் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பமும் நடராஜப் பெருமானின் திருவடிகளுக்கு அருகில் ராஜேந்திர சோழன் குடும்பத்துடன் இருப்பது போன்ற சிற்பமும் ராஜேந்திர சோழனின் ஒன்றரை அடி உயர உருவச் சிற்பமும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்தக் கோயில் நெடுங்காலமாக சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது. இதைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல் துறையின்  அப்போதைய இயக்குனர் நாகசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கோயிலைப் பார்வையிட்டு தொல்பொருள் துறையின்  ஸ்தபதிகளைக் கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்புக்கு வந்த இயக்குநர்கள் யாரும் கோயிலைக் கண்டுகொள்ளவே இல்லை.

நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றி கோவிலை இடிக்க முற்பட்டது: ‘இந்தக் கோயில் தொல்பொருள் துறைக்குச் சொந்தம்’ என்று  அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. மற்றுமொரு சிக்கலும் இந்தக் கோயிலுக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மத்திய அரசு அந்தப் பகுதியில் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றியது. கோயிலை இடிப்பதற்காக அடையாளக் குறியீடும் செய்யப்பட்டு விட்டது. அப்போதுதான்  ஊர்மக்கள் மூலமாக எனக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினோம்[3]. இத்தகவலைக் கேள்விப்பட்ட  இந்து சமய அறநிலைத் துறையினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு,  கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கியது. கோயில் புனரமைப்பு வேலைகள், கான்ட்ராக்டர் ஒருவரிடம்  ஒப்படைக்கப்பட்டு வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பிரச்னை உருவானது. அதன் பின்னர், வேறோரு கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 

திருப்பணிகள் தொடங்கப்பட்டபோது சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்கவேண்டும்:

* தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

 * திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில் முழுவதுமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். 

* கோயிலின் தற்போதைய நிலையை, சரியான அளவீட்டுடன்  பொறியாளர்களைக் கொண்டு வரைபடம் ஒன்று தயாரித்திருக்க வேண்டும். 

* ஒவ்வொரு சிற்பத்தின் மீதும் அடையாள எண் குறிக்கப்பட வேண்டும். 

* முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர்தான் வேலைகளையே தொடங்க வேண்டும். 

* நன்றாக இருக்கும் சிற்பங்களை தொடாமல்,  சேதமடைந்த சிற்பங்களை மட்டும் தனியாக எடுத்து பழுதுநீக்க வேண்டும்.

மேற்சொன்ன எந்த நடைமுறையும் மானம்பாடி கோயில் திருப்பணியில்  பின்பற்றப் படவில்லை.  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே சிற்பங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அதனால் சிற்பங்கள் பலத்த சேதமடைந்தன. அதன் பின்னர் அது கண்டுகொள்ளப் படவே இல்லை.  இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை உடனடியாக கைப்பற்றி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையிடமோ, இந்தியத் தொல்லியல் துறையிடமோ ஒப்படைக்க வேண்டும். இதுதான் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி” என்று ஆதங்கமாகக் கூறினார் பாலசுப்பிரமணியன். 

வேதபிரகாஷ்

06-11-2022


[1] விகடன், அலட்சியத்தால் சிதைக்கப்பட்ட, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானம்பாடி கோயில் சிற்பங்கள், ரா.செந்தில் கரிகாலன், Published: 14 Aug 2017,  7 PM; Updated:14 Aug 2017 7 PM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/99109-manambadi-temple-sculptures-that-were-destroyed-by-indifference#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

[3] A forum ‘Kudanthai Jyothirmani Iraippani Thirukoottam’ from Kumbakonam and Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, wrote to the then Chief Minister to spare the temple as it is an ancient monument. The NHAI then decided to leave the temple alone and submitted three alternate proposals for road project skirting the temple.

Deccan Chronicle, Thanjavur: Road project spares 1,000-year-old temple, Published: Sep 12, 2018, 3:25 am IST; Updated: Sep 12, 2018, 3:25 am IST.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/120918/thanjavur-road-project-spares-1000-year-old-temple.html

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது[1]: இவையெல்லாம், ஏதோ புதியதாக கண்டுபிடித்தவை போன்று அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதாவாது, கோவில் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் நுழைவது என்று தீர்மானமாக இருப்பது தெரிகிற்து. முன்னர் உழவாரப் பணிக்குக் கூட புதியதாக கன்டிஷன்களுடன் அறிக்கை வெளியிடப் பட்டது[2]. அவற்றைப் படித்துப் பார்த்தால், உழவாரப் பணியையே நிறுத்திவிட அத்தகைய திட்டம் போட்டுள்ளது போன்றிருந்தது. இத்தனை ஆண்டுகளாக, மனமார தொண்டு செய்ய வேண்டும் என்று சிறுவர்-பெரியவர், ஆண்கள்-பெண்கள்; படித்தவர்-படிக்காதவர் என்று எந்த வித்தியாசமு இல்லாமல், ஏல்லோரும் சேர்ந்து திருப்பணி செய்து வந்தனர். இதனால், ஆயிரக் கணக்கான கோவில்களின் உட்புறம்-வெளிப்புறம் சுத்தமடைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருக்கும்கோவில்களில் கூட பணி செய்யப் பட்டது. இனி, அவ்வாறு நடக்காது போலிருக்கிறது. ஏற்கெனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பிரச்சினையால் உழவாரப் பணி நடௌபெறாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம் தான். தினம்-தினம் கும்பாபிஷேகம் நடத்துவர்கள் வசூல் செய்வார்கள். ஆனால், ஆகமங்கள், விதிமுறைகள் தடுக்கின்றன.
  2. அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
  3. பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
  4. மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  5. இப்படியெல்லாம் நடந்து கொண்டே இருந்தால், ஜாலியாகத்தான் இருக்கும். அதனால் தான், அதிகாரிகள், ஊழியர்கள் கழுத்துகளில் தொங்கும் நகைகளின் விட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
  6. நூதனம், கும்பாபிஷேகம், புனருத்தாரனம் முதல் மற்ற எந்த புனித காரியமாக இருந்தாலும் சரி, கமிஷனர் வரைக் கூட பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது. பலதடவை சென்று வர வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நாளில் வாருங்கள் என்று சொல்லி அவர் இல்லை என்றால், எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். கவனிக்கப்படவில்லை என்றால் பலதடவை நடக்கவேண்டியிருக்க வேண்டும்.
  7. பிறகு அனுமதி ஆணை வாங்கவேண்டும், அதை வாங்குவதற்கு கீழுள்ள அதிகாரிகள் கவனிக்கப் படவேண்டும். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்திலிருந்து, கோவில் உள்ள இடம் வரை அறநிலயத்துறை ஆட்கள் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள்.
  8. யாரிடம் எப்படி வாங்குகிறீர்கள், என்றெல்லாம் கேட்பது, வாங்கும் லஞ்சத்தின் அளவை நிர்ணயிக்கும். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்றால், லஞ்சம் தவிர மற்ற எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் வெளிப்படும், வரும்.
  9. முன்பே விசாரிக்கவும் செய்வார்கள் – எவ்வளவு தேரும் என்ற கணக்கீடு. பழைய ஆவணங்களை, முந்தைய விண்ணப்பங்கள் முதலியவற்றையும் எடுத்துப் பார்த்து கணக்குப் போட்டு வைப்பார்கள்.
  10. கஷ்டப்பட்டு, லட்சங்கள் கோடிகள் வசூல் செய்து, வேலை ஆரம்பித்து முடிக்கும் வரையில் ஏகப்பட்ட இடையூறுகள், இடைஞல்கள்………உண்டாக்குவார்கள்.
  11. அந்தந்த வேலைகள் செய்ய, எங்கள் ஆட்களை வைக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற தொல்லை……..வட்டம், மாவட்டங்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
  12. கோவில் உள்ள கிராமத்தில், இடத்தில் உள்ளூர் கோஷ்டிகள் தொல்லைகள், மிரட்டல்கள்…..அங்கும் காசு கொடுக்க வேண்டும்…..
  13. சப்ளை செய்யும் மண், செங்கல், கம்பி, பெயின்ட் …….எல்லாவற்றிற்கும் பணமாக / கேஷாக கொடுத்துவிட வேண்டும்….பில்கள், இன்வாட்ஸ்கள் பற்றி சொல்ல வேண்டாம்…..
  14. இதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை என்றால், இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் காணாமல் போய்விடும், கோவில் வேலைகளைப் பொறுபேற்று செய்யும் சேவகர்கள் மிரட்டப் படுவார்கள், அவர்கள் வீட்டில் திருடுகள் நடக்கும், பொய் வழக்குகள் போடப் படும். அந்த அளவுக்கு இடையூறுகள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மீறி, சாமர்த்தியமாக, திருப்பணி செய்ய வேண்டும்.
  15. எல்லாம் முடிந்து விழா ஏற்பாடு என்றால், அந்த நோட்டிஸுகளில், சுவரொட்டிகளில், விழா அழைப்பிதழ்களில் உண்மையான / உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை விட அந்த லஞ்சக்காரன், கொள்ளைக்காரன், ரௌடி, அரசியல்வாதி, சம்பந்தமே இல்லாத இதே வகையறாக்கள்…….. அதற்கும் மேலாக நாத்திக-இந்துவிரோதி அமைச்சர், முதலம்மைச்சர் படங்கள் முன் அட்டையில் பக்கத்தில் இருக்க வேண்டும், ஆனால், அக்கோவில் சாமி படம் பின்னால் இருக்க வேண்டும்.
  16. முதலமைச்சர் படம் இல்லையென்றால், அவ்வளவுதான், நிகழ்ச்சியே ரத்து செய்யப் படும் அளவுக்கு காரியங்கள் நடந்துள்ளன. மறுபடியும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன.
  17. விழா அன்றோ இவர்களுக்கு வண்டி ஏற்பாடு, சாப்பாடு செலவு எல்லாம் செய வேண்டும். கோவில் விழா என்றாலும் அசைவ சாப்பாடு கேட்பார்கள், ஏற்பாடு செய வேண்டும்….சில இடங்களில் மற்றவையும் கேட்பார்கள்…..
  18. பூஜாரிகள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள், போன்றவர்களை ஒருமையில் பேசுவார்கள், விளிப்பார்கள், உரையாடல்களில் குறிப்பிடுவார்கள்.
  19. ஆக இத்தனை இடையூறுகள், அவமானங்கள், பாதிப்புகள் முதலிய கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்போதும், கோவில்கள் நலம், ஆகமங்களைப் போற்றும் கடமை, அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு பொறுமையோடு கடமைகளை ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செய்து வருகின்றனர்.
  20. ஆனால், நாத்திகம், இந்துவிரோதம் மற்றும் ஆட்சியாளர்களின் சார்பு என்று கொண்டுள்ளவர்கள் உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்[3]. கருணாநிதி இந்துமதத்தின் நண்பன் என்றேல்லாம் எழுதுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஔரங்ஜசீப் கோவில்கள் கட்ட மானியம் கொடுத்தான் போன்ற கதைகள் தான்[4].

ஔரங்கசீப்பின் ஜெஸியாவை நோக்கி செல்லும் திமுகவின் நாத்திகஇந்துவிரோத ஆட்சி[5]: ஔரங்கசீப் ஆட்சியில் ஜெஸியா முறை பின்பற்றப் பட்டு வந்தது. அத்தகைய வரிமுறைப்படி, இந்துக்கள் கடுமையாக அடக்கி வைக்கப் பட்டனர். தங்களது தினசரி பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், பண்டிகைகள் எத்வும் பின்அர்ர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி, யாரும் (இந்துக்கள்) புதியக் கோவிலைக் கட்டக் கூடாது. இருக்கும் கோவில்களைப் புதுப்பிக்கக் கூடாது. பழுதடைந்தாலும், ரிப்பேர் செய்யக் கூடாது. இந்துக்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, ஆனால், முகமதியர்களுக்கு அனுமதி கொடுக்கப் படவேண்டும்[6]. அவர்கள் தங்குவதானாலும், இடம் கொடுக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முழுவதும் அரசுக்கு வரவேண்டும். விலையுயர்ந்த சிலைகள், பொருட்கள் முதலியன, சுல்தான் கொள்ளையிட்டு செல்வான். யாரும்தடுக்கக் கூடாது. கூட்டம்சேர்க்கக் கூடாது, விழாக்கள் கொண்டாடக் கூடாது. 

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] இது நிச்சயமாக உள்நோக்கத்துடன் உண்டாக்கப் பட்ட தடை தான், இத்தகைய அடக்குமுறைகளில் உழவாரப் பணியே நடக்காமல் போய் விடும், ஒருவேளை அதுதான், ஆட்சியாளர்களின் திட்டம் போலும்.

[2] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 06:19 AM.

https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[3] பாரி ஜோஸ்-சிவகுமார், கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன், PARI JOSE; A Sivakumar,  JUNE 14, 2020.

[4]https://ilovedmk.wordpress.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/

[5] நிச்சயமாக ஔரங்கசீப்பின் அட்சிமுறை மக்களுக்குத் தெரிந்திருக்காது, ஆனால், இந்த இந்த ஆறாண்டு மாத கால ஆட்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு, எடுத்துக் காட்டிவிட்டது.

[6] இப்படித்தான் கருணாநிதி குடும்பத்தினர் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர், கிரிவலம் வருகின்றனர், நேர்த்திக்கடன் செல்லுத்தி வருகின்றனர்.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977