Posts Tagged ‘பேருர் ஆதீனம்’

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

அரசியல் ஆக்கப் பட்டு விட்டதால் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூக நீதியை விரும்பாத சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[5]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[6]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[7]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[8].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] நக்கீரன், சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இது எரிச்சலை தருகிறது” – திருமாவளவன் கருத்து!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 18/08/2021 (15:13) | Edited on 18/08/2021 (15:44).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/it-irritates-people-subramanian-swamy-thirumavalavan-comment

[3] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[5] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo