Posts Tagged ‘துர்கா’

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

மே20, 2022

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம்கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

ஆக ஏறவிட்டது ஏன், யாரால் என்று தான் கவனிக்க வேண்டும்: ஆனால், ‘திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது. அதனால், தேர் வீதி உலா, முதல் முறையாக கடும் மழையால் நிறுத்தப்பட்டது. உற்சவர் பெருமாள், இரவு முழுதும் தேரிலேயே இருந்தார். ‘முதல்வர் வெளிப்படையாக ஆதீனங்களை அவமதிக்கிறார். அவர் மனைவி வெளிப்படையாக ஆகம விதிகளை மீறி, ஆணவத்தை வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு கட்டுப்பட்ட அறநிலைய துறை செய்வது எல்லாமே தெய் குற்றமாகுது’ என்று, சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி வருகின்றனர். இது சரியான தகவல் அல்ல. ஹிந்து ஆன்மிக பக்தர்கள், இதில் வேதனைப்பட எதுவும் இல்லை. ஐதீகப்படி அல்லது வழக்கப்படியான நிகழ்வுகள் தான், 14ம் தேதி காலையில் நடந்தது.கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூசி, தங்கத் தகடு அமைக்கும் பணி நடக்கிறது.

நன்கொடை எதிர்பார்த்து, அனுமதித்து, பிரச்ச்னை ஆனது: இந்த நேரத்தில், தேர் திருவிழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்து வந்தால், விழா சிறக்கும் என்பதோடு, தங்க முலாம் பூசும் பணிக்கு உதவி கிடைக்கும். அவரே நேரடியாக செய்வார் அல்லது நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்வார் என்பது தான், இதற்கு ஏற்பாடு செய்த திருக்கோஷ்டியூர் மாதவனுடைய எண்ணம். அதில் தவறு ஏதும் இல்லை. கோவில் காரியம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார் அவ்வளவு தான். ஆனால், ஆன்மிக விஷயத்தில், அரசியலை நுழைத்து விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நிர்வாக அலுவலர் சேவற்கொடியோன் கூறியதாவது: “கோவில் தேர் உற்சவத்தை வைத்து, இருவிதங்களில் விமர்சிக்கின்றனர். கோவில் தேரில் பெண்களை ஏற அனுமதிக்க மாட்டோம் என்பது தவறு. காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். தேர் கம்பி வடத்தின் ஒரு பகுதியை, திருக்கோஷ்டியூரை சுற்றிலும் இருக்கும் மயில்ராயன் கோட்டை நாட்டார்களும், இன்னொரு பகுதியை பட்டமங்கலம் நாட்டாரும் தான் சேர்ந்து இழுப்பர்.

வழிபாடு முறையும் மீறப் பட்டது: அவர்களில் ஒரு சிலர், தேர் கம்பி வடத்தின் மேல் ஏறி நின்று தேரை இயக்க, துண்டை அசைத்து சைகை கொடுப்பர். அதன் பின் தான் தேர் இயக்கப்படும். இது தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அதே வகையில் தான் இந்த ஆண்டும் நடந்தது.தேர் இயக்கப்படுவதற்கு முன், நாட்டார் குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தேர் மேல் ஏறி உற்சவர் பெருமாளை வணங்குவது வாடிக்கை. அது இந்த ஆண்டும் நடந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக, துர்கா தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அவரோடு, ஜமீன் பரம்பரையின் மதுராந்தகி நாச்சியாரும் தரிசனம் செய்தார். ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு, கோவில் விழாக்களில் இன்றளவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மனைவி வந்ததால், அம்முறை மீறப் பட்டு, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவரும், தேரிலேயே ஏறி தரிசனம் செய்து விட்டார்!

மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதியுலா நிறுத்தம்: அதுமட்டுமல்ல… துர்கா தேர் ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பின், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குடும்பத்துடன், தேரில் ஏறி வழிபாடு செய்தார். அவர், ஆண்டுதோறும் தேர் ஏறி வழிபடுவது வாடிக்கை. மாலையில் தேர் கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை பெய்தது. தேர் செல்லும் வீதி முழுதும் மழை நீரால் சூழப்பட்டது. தேரை பத்திரமாக செலுத்த வசதியில்லை என்றதும், தேரை இயக்கும் நாட்டார்கள், ‘தேரை நாளை காலை இயக்கலாம்’ என, கூறி விட்டனர். அதையடுத்தே, மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதி உலா நிறுத்தப்பட்டது. மறுநாள் காலையில், 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதுபோன்று, கடந்த, 2012லும் மழை காரணமாக தேர் புறப்பாடு, ஒரு நாள் கழித்து நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூனார்.

2015ல் ஸ்டாலின் இக்கொவிலுக்கு விஜயம் செய்தார்: சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு சென்று பிரனவ் மந்திரமான ஓம் நமோ நாராயணாவை ராமானுஜர் பாடிய அஸ்டாங்க திவ்ய விமானத்தில் ஏறி பார்வையிட்டார்[1]. திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 108 வைணவத்தலங்களில் ஒன்றான சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[2]. கோவிலில் ராமானுஜர் சிலைகள், திருக்கோஷ்டியூர் நம்பி சிலைகளை அவர்கள் பார்வையிட்டனர். இப்படி செய்தி வெளியிட்டாலும், அவர் சாமி கும்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. பெருமாளிடம் மட்டும் பிரத்யேகமாக பற்று இருப்பது தெரிகிறது. தெலுங்கு மொழி பேசுபவர் மற்றும், ஓங்கோல், ஆந்திராவிலிருந்து, முத்துவேலர் வந்திருப்பதாலும், குலத் தொழிலாலும், பெருமாள் தரிசனம், சேவை, மறுக்காமல் இருக்கிறது. 1970களில் விஷ்ணு ஸ்டாலின் என்று சுவரொட்டிகள் ஒட்டியதாக ஞாபகம். ஆயிரம் விளக்குத் தொகுதியில், குறிப்பாக, ஆலயம்மன் கோவில் கூழ்-ஊற்றும் நிகழ்ச்சிகளுக்கு, ஸ்டாலின் மனைவியுடம் வருவது உண்டு. ஆனால், பிறகு வருவதை நிறுத்தி விட்டார்.

2015லிருந்து 2022 வரை நான்கு முறை திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வந்துள்ளார்:

  1. 2015ல் தேர்தல் சமயத்தில், தம்பதியர் இங்கு வந்துள்ளனர். “நமக்கு நாமே” நிகழ்ச்சியின் போது, கோவில்க்குச் சென்றது, திமுகவினரை திகைப்படையச் செய்தது.
  2. பிறகு 2022 வரை காலத்தில் மூன்று முறை வந்துள்ளார். அதாவது, 2022ல் இப்பொழுது வந்திருப்பதால், இதையில் இருமுறை வந்துள்ளார் என்று தெரிகிறது.
  3. 2021ல் தேர்தலுக்கு முன்னர், வெற்றி பேச வேண்டிக் கொண்டு, வந்திருக்க வேண்டும்.
  4. அதே போல, 2016ல் தேர்தலின் போதும் வந்திருக்கலாம்.

அப்பொழுது, தோல்வியடைந்தாலும், 2021ல் பெருமாள் உதவியிருக்கிறார் போலும். அதனால், துர்கா மறக்காமல் வந்து விட்டார். ஊடகங்களும் செய்தியை அவ்வாறே வெளியிட்டு விட்டன.

துர்காவின் நம்பிக்கை, பக்தி முதலியன: ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்ததை அழித்திருக்கலாம், ஆனால், வீட்டில், ஆசையாக துர்கா வைத்து விட்டிருக்கலாம். பதவி ஏற்றபோது, கண்கலங்கிய போது, அவரது வேண்டுதல்கள் எல்லாம் நடந்து விட்டன என்றே ஆயிற்று. முன்னர் கோவிலைப் புதிப்பித்துக் கட்டியது, பல கோவில்களுக்கு சென்றது – காசி, காளஹஸ்தி, திருமலை…முதலின, அர்ஜுன் நடிகரின் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றது என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன. இப்பொழுது, ஆன்மீகம், ஆன்மீக அரசு என்றெல்லாம் வெளிப்படையாக பேசுகிறார்கள். சேகர்பாபு, அறநிலையத் துறை சார்பாக, தினம்தினம் ஏதேதோ அறிக்கைகள் விடுகிறார், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிச்சயமாக பக்தர்கள் கண்டுகொளளவில்லை. நம்புவதாகவும் இல்லை. ஏதோ, செயற்கையாக, விளம்பரத்திற்காகவே செய்வதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு..ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார், By Mayura Akilan Published: Tuesday, September 29, 2015, 12:47 [IST].

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-visits-thirukosthiyur-temple/articlecontent-pf170866-236679.html

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா? (1)

மே20, 2022

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா ? (1)

நான்காவது முறையாக 14-05-2022 அன்று துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு விஜயம்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் செய்தார்[1]. முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் பெருமாளுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்[2]. துர்கா ஸ்டாலின். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு, கோயில் பட்டாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, தேவஸ்தான அறங்காவலர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது[3]. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்[4]. இதனிடையே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என துர்கா ஸ்டாலின் ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். அப்படியென்றால் முன்னர் மூன்று முறை எப்பொழுது வந்தார் என்று தெரியவில்லை. துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி, சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டாலின் இந்துமதத்தை எதிர்த்து, கேலி பேசும்போது, அவர் மனைவி இப்படி கோவில் விஜயம் செய்வது, தெரிந்த விசயம் என்றாலும், சில பிரச்சினைகள் எழுகின்றன.

கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை துவக்கி வைத்தார்: கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா 14-05-2022 அன்று துவக்கி வைத்தார்[5]. அப்படியென்றால், அது முன்னாலேயே தீர்மானிக்கப் பட்டது, ஏற்பாடு செய்யப் பட்டது, என்றாகிறது. இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய திட்டமிடப்பட்டது[6]. மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர். முதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர்[7]. கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா இன்று காலை துவக்கி வைத்தார்[8]. ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வந்ததாகவும் கட்சியினர் கூறினர். மாலை சித்திரை தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். இது தான், பின்னர் சர்ச்சைக்குண்டானது. ஆனால், முன்னரே

05-05-2022 அன்று தொடங்கிய தேத் திருவிழா, 14—05-2022 அன்று பிரச்சினையானது: ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருநட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழாவானது கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது[9]. விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்[10]. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை சிறிது தூரம் வடம் பிடித்து சென்றனர். 4 மாட வீதிகளில் அக்னி மூலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடிரென கனமழை கொட்டியது. இதனால் தேரை பிடித்து இழுக்க முடியாமல் பக்தர்கள் தடுமாறினர். சுமார் ஒரு மணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் தேரோடும் வீதியில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேரை தொடர்ந்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று தேரோட்டம் தடைபட்ட நிலையில் இன்று மீண்டும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து, மறுபடியும், இதே போன்ற பிரச்சினை வந்தது. அதற்கு காரணம், துர்கா ஸ்டாலின்.

திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணர் கோவில் தேர் உற்சவம் மே 14ல் நடந்தது: ‘தேர் புறப்பாட்டுக்கு முன், தேரில் ஏறி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தரிசனம் செய்தார். அது தெய்வ குற்றம்; வைணவ தலங்களில் தேர் உற்சவத்திற்கு முன், தேரில் ஏறி பெண்கள் தரிசனம் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதை துர்கா மீறி விட்டார்’ என, சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் தீர்த்தகாரரும், கோவிலுக்குள் இருக்கும் உடையார் சன்னிதி பட்டாச்சாரியாருமான ராமானுஜம் கூறியதாவது: “திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம். 108 திவ்ய தேசங்களில் 95வது தலம். நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டி அருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணர் விக்கிரகம், உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு. இந்த கோவிலின் தேர் உற்சவம் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடக்கும். கோவிலின் அத்யயன பட்டராக இருக்கும் திருக்கோஷ்டியூர் மாதவன் தான், தேர் உற்சவத்துக்கான நாள் குறித்து கொடுப்பார். கோவிலில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் அவர் தான் பொறுப்பு. ‘மே 14 மாலை 5:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கும்‘ என, அவர் தான் நாள், நேரம் குறித்து கொடுத்தார்.

திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது: என்றைக்கு தேர் உற்சவம் நடக்கும் என அறிவிக்கப்படுகிறதோ, அன்றைய தினம் காலையிலேயே உற்சவர் தேருக்கு வந்து விடுவார். அப்படித்தான், இந்த ஆண்டும் வந்தார். வழக்கம் போல, திருக்கோஷ்டியூர் கிராமத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும், தேர் மீது அமைக்கப்பட்டு இருக்கும் படிகள் வழியாக ஏறிச் சென்று பெருமாளை வணங்கினர்[11]. அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. கிராம மக்களோடு மக்களாக, இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும் வழிபட்டார்[12]. என்றெல்லாம் செய்திகள் வந்தாலும், சில பட்டர்களின் துணையோடு தான் அவ்வாறு நடந்திருக்கிறது என்று தெரிகிறது. வீட்டில் பூஜை அறையில், பல விக்கிரங்களை வைத்துக் கொண்டு, சுலோகங்கள், மந்திரங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு பூஜை செய்து வரும் அவரிடம், உண்மையை சொன்னால், தேரில் ஏறாமல் இருந்திருப்பார்.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] குமுதம், வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!, kumudam bookmark line | TAMILNADU| Updated: May 14, 2022; https://www.kumudam.com/news/national/43522

[2] https://www.kumudam.com/news/national/43522

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேண்டுதலை நிறைவேற்றிய பெருமாள்; நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின், Written by WebDesk, May 16, 2022 10:40:53 pm,

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-prays-at-sivaganga-perumal-temple-454734/

[5] தினத்தந்தி, திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம், Update: 2022-05-14 10:34 GMT.

[6] https://www.dailythanthi.com/amp/News/State/2022/05/14160405/Sami-Darshan-of-Durga-Stalin-at-the-Thirukkoshtiyur.vpf

[7] தினமலர், திருக்கோஷ்டியூர் விமானத்திற்கு தங்கத்தகடு: வேண்டுதலை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின் மனைவி,  -நமது நிருபர், Added : மே 14, 2022  07:31 |

[8] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3029515

[9] தமிழ்.சமயம், கடுப்பான வருண பகவான்: தடைப்பட்டு போன திருக்கோஷ்டியூர் கோவில் தேரோட்டம்!, Curated by Srini Vasan | Samayam TamilUpdated: 15 May 2022, 1:24 pm

[10] https://tamil.samayam.com/latest-news/sivagangai/thirukoshtiyur-temple-car-festival-stopped-by-rain/articleshow/91574812.cms

[11] தினமலர், திருக்கோஷ்டியூர் கோவில் தேரில் ஏறிய துர்கா, நமது நிருபர் –Added : மே 17, 2022  02:05; https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1

[12] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது[1]: இவையெல்லாம், ஏதோ புதியதாக கண்டுபிடித்தவை போன்று அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதாவாது, கோவில் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் நுழைவது என்று தீர்மானமாக இருப்பது தெரிகிற்து. முன்னர் உழவாரப் பணிக்குக் கூட புதியதாக கன்டிஷன்களுடன் அறிக்கை வெளியிடப் பட்டது[2]. அவற்றைப் படித்துப் பார்த்தால், உழவாரப் பணியையே நிறுத்திவிட அத்தகைய திட்டம் போட்டுள்ளது போன்றிருந்தது. இத்தனை ஆண்டுகளாக, மனமார தொண்டு செய்ய வேண்டும் என்று சிறுவர்-பெரியவர், ஆண்கள்-பெண்கள்; படித்தவர்-படிக்காதவர் என்று எந்த வித்தியாசமு இல்லாமல், ஏல்லோரும் சேர்ந்து திருப்பணி செய்து வந்தனர். இதனால், ஆயிரக் கணக்கான கோவில்களின் உட்புறம்-வெளிப்புறம் சுத்தமடைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருக்கும்கோவில்களில் கூட பணி செய்யப் பட்டது. இனி, அவ்வாறு நடக்காது போலிருக்கிறது. ஏற்கெனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பிரச்சினையால் உழவாரப் பணி நடௌபெறாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம் தான். தினம்-தினம் கும்பாபிஷேகம் நடத்துவர்கள் வசூல் செய்வார்கள். ஆனால், ஆகமங்கள், விதிமுறைகள் தடுக்கின்றன.
  2. அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
  3. பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
  4. மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  5. இப்படியெல்லாம் நடந்து கொண்டே இருந்தால், ஜாலியாகத்தான் இருக்கும். அதனால் தான், அதிகாரிகள், ஊழியர்கள் கழுத்துகளில் தொங்கும் நகைகளின் விட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
  6. நூதனம், கும்பாபிஷேகம், புனருத்தாரனம் முதல் மற்ற எந்த புனித காரியமாக இருந்தாலும் சரி, கமிஷனர் வரைக் கூட பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது. பலதடவை சென்று வர வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நாளில் வாருங்கள் என்று சொல்லி அவர் இல்லை என்றால், எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். கவனிக்கப்படவில்லை என்றால் பலதடவை நடக்கவேண்டியிருக்க வேண்டும்.
  7. பிறகு அனுமதி ஆணை வாங்கவேண்டும், அதை வாங்குவதற்கு கீழுள்ள அதிகாரிகள் கவனிக்கப் படவேண்டும். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்திலிருந்து, கோவில் உள்ள இடம் வரை அறநிலயத்துறை ஆட்கள் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள்.
  8. யாரிடம் எப்படி வாங்குகிறீர்கள், என்றெல்லாம் கேட்பது, வாங்கும் லஞ்சத்தின் அளவை நிர்ணயிக்கும். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்றால், லஞ்சம் தவிர மற்ற எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் வெளிப்படும், வரும்.
  9. முன்பே விசாரிக்கவும் செய்வார்கள் – எவ்வளவு தேரும் என்ற கணக்கீடு. பழைய ஆவணங்களை, முந்தைய விண்ணப்பங்கள் முதலியவற்றையும் எடுத்துப் பார்த்து கணக்குப் போட்டு வைப்பார்கள்.
  10. கஷ்டப்பட்டு, லட்சங்கள் கோடிகள் வசூல் செய்து, வேலை ஆரம்பித்து முடிக்கும் வரையில் ஏகப்பட்ட இடையூறுகள், இடைஞல்கள்………உண்டாக்குவார்கள்.
  11. அந்தந்த வேலைகள் செய்ய, எங்கள் ஆட்களை வைக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற தொல்லை……..வட்டம், மாவட்டங்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
  12. கோவில் உள்ள கிராமத்தில், இடத்தில் உள்ளூர் கோஷ்டிகள் தொல்லைகள், மிரட்டல்கள்…..அங்கும் காசு கொடுக்க வேண்டும்…..
  13. சப்ளை செய்யும் மண், செங்கல், கம்பி, பெயின்ட் …….எல்லாவற்றிற்கும் பணமாக / கேஷாக கொடுத்துவிட வேண்டும்….பில்கள், இன்வாட்ஸ்கள் பற்றி சொல்ல வேண்டாம்…..
  14. இதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை என்றால், இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் காணாமல் போய்விடும், கோவில் வேலைகளைப் பொறுபேற்று செய்யும் சேவகர்கள் மிரட்டப் படுவார்கள், அவர்கள் வீட்டில் திருடுகள் நடக்கும், பொய் வழக்குகள் போடப் படும். அந்த அளவுக்கு இடையூறுகள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மீறி, சாமர்த்தியமாக, திருப்பணி செய்ய வேண்டும்.
  15. எல்லாம் முடிந்து விழா ஏற்பாடு என்றால், அந்த நோட்டிஸுகளில், சுவரொட்டிகளில், விழா அழைப்பிதழ்களில் உண்மையான / உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை விட அந்த லஞ்சக்காரன், கொள்ளைக்காரன், ரௌடி, அரசியல்வாதி, சம்பந்தமே இல்லாத இதே வகையறாக்கள்…….. அதற்கும் மேலாக நாத்திக-இந்துவிரோதி அமைச்சர், முதலம்மைச்சர் படங்கள் முன் அட்டையில் பக்கத்தில் இருக்க வேண்டும், ஆனால், அக்கோவில் சாமி படம் பின்னால் இருக்க வேண்டும்.
  16. முதலமைச்சர் படம் இல்லையென்றால், அவ்வளவுதான், நிகழ்ச்சியே ரத்து செய்யப் படும் அளவுக்கு காரியங்கள் நடந்துள்ளன. மறுபடியும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன.
  17. விழா அன்றோ இவர்களுக்கு வண்டி ஏற்பாடு, சாப்பாடு செலவு எல்லாம் செய வேண்டும். கோவில் விழா என்றாலும் அசைவ சாப்பாடு கேட்பார்கள், ஏற்பாடு செய வேண்டும்….சில இடங்களில் மற்றவையும் கேட்பார்கள்…..
  18. பூஜாரிகள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள், போன்றவர்களை ஒருமையில் பேசுவார்கள், விளிப்பார்கள், உரையாடல்களில் குறிப்பிடுவார்கள்.
  19. ஆக இத்தனை இடையூறுகள், அவமானங்கள், பாதிப்புகள் முதலிய கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்போதும், கோவில்கள் நலம், ஆகமங்களைப் போற்றும் கடமை, அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு பொறுமையோடு கடமைகளை ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செய்து வருகின்றனர்.
  20. ஆனால், நாத்திகம், இந்துவிரோதம் மற்றும் ஆட்சியாளர்களின் சார்பு என்று கொண்டுள்ளவர்கள் உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்[3]. கருணாநிதி இந்துமதத்தின் நண்பன் என்றேல்லாம் எழுதுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஔரங்ஜசீப் கோவில்கள் கட்ட மானியம் கொடுத்தான் போன்ற கதைகள் தான்[4].

ஔரங்கசீப்பின் ஜெஸியாவை நோக்கி செல்லும் திமுகவின் நாத்திகஇந்துவிரோத ஆட்சி[5]: ஔரங்கசீப் ஆட்சியில் ஜெஸியா முறை பின்பற்றப் பட்டு வந்தது. அத்தகைய வரிமுறைப்படி, இந்துக்கள் கடுமையாக அடக்கி வைக்கப் பட்டனர். தங்களது தினசரி பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், பண்டிகைகள் எத்வும் பின்அர்ர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி, யாரும் (இந்துக்கள்) புதியக் கோவிலைக் கட்டக் கூடாது. இருக்கும் கோவில்களைப் புதுப்பிக்கக் கூடாது. பழுதடைந்தாலும், ரிப்பேர் செய்யக் கூடாது. இந்துக்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, ஆனால், முகமதியர்களுக்கு அனுமதி கொடுக்கப் படவேண்டும்[6]. அவர்கள் தங்குவதானாலும், இடம் கொடுக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முழுவதும் அரசுக்கு வரவேண்டும். விலையுயர்ந்த சிலைகள், பொருட்கள் முதலியன, சுல்தான் கொள்ளையிட்டு செல்வான். யாரும்தடுக்கக் கூடாது. கூட்டம்சேர்க்கக் கூடாது, விழாக்கள் கொண்டாடக் கூடாது. 

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] இது நிச்சயமாக உள்நோக்கத்துடன் உண்டாக்கப் பட்ட தடை தான், இத்தகைய அடக்குமுறைகளில் உழவாரப் பணியே நடக்காமல் போய் விடும், ஒருவேளை அதுதான், ஆட்சியாளர்களின் திட்டம் போலும்.

[2] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 06:19 AM.

https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[3] பாரி ஜோஸ்-சிவகுமார், கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன், PARI JOSE; A Sivakumar,  JUNE 14, 2020.

[4]https://ilovedmk.wordpress.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/

[5] நிச்சயமாக ஔரங்கசீப்பின் அட்சிமுறை மக்களுக்குத் தெரிந்திருக்காது, ஆனால், இந்த இந்த ஆறாண்டு மாத கால ஆட்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு, எடுத்துக் காட்டிவிட்டது.

[6] இப்படித்தான் கருணாநிதி குடும்பத்தினர் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர், கிரிவலம் வருகின்றனர், நேர்த்திக்கடன் செல்லுத்தி வருகின்றனர்.