Archive for the ‘சிவன் கோவில்’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

UNESCO குழு மே முதல் ஜூன் 2017 வரை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை  அண்மையில்  வெளியிட்டது: கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல… நிர்வாக மையங்களாகவும், கல்விக் கூடங்களாகவும் விளங்கியுள்ளன.  நம் நாகரிகமும், பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக் கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக மிஞ்சுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் கோயில்களை பாதுகாப்பதில் நமக்கிருக்கும் அலட்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும்  குழு,  தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் 2017 வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவுகளை அண்மையில்  வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. பழம் பெருமை மிக்க கோயில்களில் தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் கோயில்களின் ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[1].  யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோயில்களில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலும் இடம் பெற்றிருக்கிறது[2].    

மானம்பாடிநாகன்பாடிவீரநாராயணபுரம் இருக்கும் இடம்: கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிற்றூர்தான் மானம்பாடி. இங்குள்ள இறைவன், நாகநாதசாமி எனஅழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் இவரது பெயர் கைலாச முடையார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் வணிக தலமாக விளங்கியது. நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் மானம்பாடி என மருவியது. இந்த ஊர் வீர நாராயணபுரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்குதான் இருக்கிறது நாகநாத சுவாமி கோயில். இது, 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோயில் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.  காவிரி நங்கையின் அரிய சிற்பம் ஒன்று இந்தக் கோயிலில் இருக்கிறது.

2017ல் கோயிலைப் பற்றி ...விகடன் ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசியது:  பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயிலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். “இந்தக் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் பற்றியும் அவனது பேரன் குலோத்துங்கச் சோழன் பற்றியும் ஒன்பது கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. எங்குமே காணக் கிடைக்காத அரிய சிற்பங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், காவிரித் தாய் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பமும் நடராஜப் பெருமானின் திருவடிகளுக்கு அருகில் ராஜேந்திர சோழன் குடும்பத்துடன் இருப்பது போன்ற சிற்பமும் ராஜேந்திர சோழனின் ஒன்றரை அடி உயர உருவச் சிற்பமும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்தக் கோயில் நெடுங்காலமாக சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது. இதைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல் துறையின்  அப்போதைய இயக்குனர் நாகசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கோயிலைப் பார்வையிட்டு தொல்பொருள் துறையின்  ஸ்தபதிகளைக் கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்புக்கு வந்த இயக்குநர்கள் யாரும் கோயிலைக் கண்டுகொள்ளவே இல்லை.

நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றி கோவிலை இடிக்க முற்பட்டது: ‘இந்தக் கோயில் தொல்பொருள் துறைக்குச் சொந்தம்’ என்று  அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. மற்றுமொரு சிக்கலும் இந்தக் கோயிலுக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மத்திய அரசு அந்தப் பகுதியில் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றியது. கோயிலை இடிப்பதற்காக அடையாளக் குறியீடும் செய்யப்பட்டு விட்டது. அப்போதுதான்  ஊர்மக்கள் மூலமாக எனக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினோம்[3]. இத்தகவலைக் கேள்விப்பட்ட  இந்து சமய அறநிலைத் துறையினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு,  கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கியது. கோயில் புனரமைப்பு வேலைகள், கான்ட்ராக்டர் ஒருவரிடம்  ஒப்படைக்கப்பட்டு வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பிரச்னை உருவானது. அதன் பின்னர், வேறோரு கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 

திருப்பணிகள் தொடங்கப்பட்டபோது சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்கவேண்டும்:

* தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

 * திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில் முழுவதுமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். 

* கோயிலின் தற்போதைய நிலையை, சரியான அளவீட்டுடன்  பொறியாளர்களைக் கொண்டு வரைபடம் ஒன்று தயாரித்திருக்க வேண்டும். 

* ஒவ்வொரு சிற்பத்தின் மீதும் அடையாள எண் குறிக்கப்பட வேண்டும். 

* முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர்தான் வேலைகளையே தொடங்க வேண்டும். 

* நன்றாக இருக்கும் சிற்பங்களை தொடாமல்,  சேதமடைந்த சிற்பங்களை மட்டும் தனியாக எடுத்து பழுதுநீக்க வேண்டும்.

மேற்சொன்ன எந்த நடைமுறையும் மானம்பாடி கோயில் திருப்பணியில்  பின்பற்றப் படவில்லை.  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே சிற்பங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அதனால் சிற்பங்கள் பலத்த சேதமடைந்தன. அதன் பின்னர் அது கண்டுகொள்ளப் படவே இல்லை.  இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை உடனடியாக கைப்பற்றி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையிடமோ, இந்தியத் தொல்லியல் துறையிடமோ ஒப்படைக்க வேண்டும். இதுதான் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி” என்று ஆதங்கமாகக் கூறினார் பாலசுப்பிரமணியன். 

வேதபிரகாஷ்

06-11-2022


[1] விகடன், அலட்சியத்தால் சிதைக்கப்பட்ட, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானம்பாடி கோயில் சிற்பங்கள், ரா.செந்தில் கரிகாலன், Published: 14 Aug 2017,  7 PM; Updated:14 Aug 2017 7 PM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/99109-manambadi-temple-sculptures-that-were-destroyed-by-indifference#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

[3] A forum ‘Kudanthai Jyothirmani Iraippani Thirukoottam’ from Kumbakonam and Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, wrote to the then Chief Minister to spare the temple as it is an ancient monument. The NHAI then decided to leave the temple alone and submitted three alternate proposals for road project skirting the temple.

Deccan Chronicle, Thanjavur: Road project spares 1,000-year-old temple, Published: Sep 12, 2018, 3:25 am IST; Updated: Sep 12, 2018, 3:25 am IST.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/120918/thanjavur-road-project-spares-1000-year-old-temple.html

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

கங்கைகொண்ட சோழபுரம் போன்ற சிற்பம், சிவனின் மூன்று கைகளும் உடைக்கப் பட்டிருக்கின்றதைக் கவனிக்கலாம்.
ஒருபக்க்ம் இருந்த சிற்பத்தைக் காணோம், இன்னொரு பக்கம் இருக்கும் சிலையின் கை உடைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்!

கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்களா?: கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். அம்பிகை கருவறை முகப்பு மண்டபத்தின் அருகிலேயே தெற்கு நோக்கி உள்ளது கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. கோவிலில் அனுக்கிரக மூர்த்தி, கங்காவிசர்ஜனர், அர்த்தநாரிஸ்வரர், சண்டாள ரூபமூர்த்தி, அதிகார நந்தி, பிட்சாடனர் போன்ற மூர்த்திகள் காணக்கிடைக்காத தெய்வாம்சம் மிகுந்த கலைநயமிக்க மூர்த்திகளாக உள்ளனர். அளவுக்கு அதிகமான பெருங்கோயில்களை அருகாமையிலேயே கண்டு புழங்கி வருவதாலோ என்னவோ நம் மக்கள் இவற்றிக்கு உரிய மரியாதையை தராமல் உள்ளனர். காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை!, என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்கள் போன்ற லாஜிக் வூத்தேசம் / முடிவு தவறானது. சரித்திர ரீதியில் உண்மையினை தெரிவிக்க வேண்டும்.

 மந்திரதந்திரயந்திர வழிபாடு, விசேஷமான சூலக்கல்[1]: மேலும் நுழைவு வாயிலின் அருகே சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய கற்கள் சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் நடப்பட்டிருக்கும். இங்கு காணப்படும் சூலக்கல்லில் சூலமும், அதன் மேற்புறம் சூரியன் – சந்திரன் வடிவமும் சூலத்தின் கீழ்ப்பகுதியில் பன்றியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது[2]. சோழர்கள் “மந்திர-தந்திர-யந்திர” வழிபாடுகளில், கிரியைகளில், பிரயோகங்களில் ஈடுபட்டபோது, இத்தகைய யந்திரங்கள், தேவதைகள், அவற்றிற்கான கோவில்கள் உருவாக்கப் பட்டன. உறையூரில் 850ல் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன் (846-881), தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்து, குலதெவமாக்கினார். அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அஷ்டகாளிகளை பிரதிட்டை செய்தார். நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர். பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. சாளுக்கிய மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் (வராகத்தை) பன்றியை அரசு இலச்சினையில் கொண்டிருந்தனர்.  இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.

முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்த கோவில்: தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் அதிட்டானப் பகுதியில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. அதாவது உடைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதற்கு தயக்கம். கட்டடக்கலை, சிற்பக்கலையின் அடிப்படையில் இக்கோயில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இவன் சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவன சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றவன். கீழைச் சாளுக்கிய மன்னனாகிய இராஜராஜ நரேந்திரனின் புதல்வன். இவனுடைய தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கைதேவியார் ஆவார். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் காணப்படும் சூலக்கல்லில் பன்றி (வராகம்) அரச சின்னம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதமுடிகிறது.  

கலைநயம் மிக்க சிற்பத்தின் கை உடைக்கப் பட்டுள்ளது……இதனை கவனிக்காதவர்கள் கலைக் காவலர்கள் என்றுக் கூறிக் கொண்டு அலைகிறார்கள்!
இருகைகள் உடைக்கப் பட்டிருப்பதைக் காணுங்கள். சிற்பி அதனை உருவாக்க தனது முழு உழைப்பைக் கொடுத்திரிக்கிறான். ஆனால், உடைத்தவன் உடைத்து விட்டு சென்று விட்டான். இன்று உடைத்தவனைப் போற்றுகிறார்கள்!

சிற்பங்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டாலும் காரணம் சொல்வதில்லை: இக்கோயிலில் பல சிற்பங்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணும்பொழுது கண்ணில் நீர் பெருகுகிறது, என்று ஒருவர் உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிட்டாலும், என்ன காரணம் என்று சொல்லவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் மகாமண்டபத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அங்கே தேவியுடன் அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் மட்டும் அமர்ந்து சண்டேசுவரருக்கு சண்டீசபதம் அளிக்கும் காட்சியை அழகிய சிற்பவடிவில் காணலாம். சிவபெருமான் தலைக்கு மேலே குடை காணப்படுகிறது. சிவபெருமான் காலின் கீழே சண்டேசுவரர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கைகளை உடைத்திருக்கின்றனர், என்று புலம்புவதோடு சரி. கருவறை விமானச் சுதைச் சிற்பங்கள் நாயக்கர்காலக் கலைச்சிறப்புடன் காட்சி தருகிறது. விமானத்தின் மீதும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன.

ராஜராஜன்ராஜேந்திரனை போற்றுவது, தூற்றுவது: ராஜராஜன், ராஜேந்திரன் முதலியோரை பார்ப்பன வருடிகள் என்று தூசித்து, பிருகதீஸ்வரர் கோவிலில் இந்தி கல்வெட்டுகள் இருக்கின்றன என்று பொய்களை சொல்லி, தமிழில் குடமுழுக்கு என்று பிரச்சினை கிளப்பி, இவ்வாறு பிரச்சாரம் செய்யும் தமிழ்வெறியர்களின் குறிக்கோள் என்ன? ராஜராஜன், ராஜேந்திரன் பிராமணர்களுக்கு “பிரமதேயம்” கொடுத்து பார்ப்பனீயத்தை ஊக்குவித்தான். அடிமைகளை வைத்து கோவில்கள் கட்டினான். கோவில்களில் பல தேவரடியார்களை வைத்து சமூகத்தைக் கெடுத்தான் போன்று எழுதியுள்ளார்கள். இப்படி ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை ஒரு பக்கம் தூஷிப்பது, இன்னொரு பக்கத்தில், பல நாடுகளை வென்றான், உலகத்தை ஆண்டான் என்றெல்லாம் புகழ்வது. இத்தகைய முரண்பாடும், இவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் பிரிவை உண்டாக்கி, பிரச்சினைகளை உருவாக்கத்தான் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மேலும், இவர்களுக்கு உதவுவது அயல்நாட்டவர் என்று தெரிகிறது. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், சரித்திரம், அகழ்வாய்வு என்று எந்த ஆதாரமும் இல்லாமல், “உலகம் முழுவதும் தமிழ் மொழி இருந்தது, கல்வெட்டுகள் இருக்கின்றன, தமிழ் தான் முதல் மொழி” என்ற திட்டத்துடன், மொழிப் பற்றை மொழிவெறியாக்கி, புதிய மொழி-அடிப்படைவாதம் போன்ற பயங்கரவாதத்தை உண்டாக்க பார்க்கின்றனர். தமிழன் கடல், கடல்சார் விஞ்ஞானம், கப்பல் கட்டும் தொழிற்நுட்பம் இவற்றில் எல்லாம் பெரிய முன்னோடிகள், விற்பனர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்றால், ஏன் ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை?

கோவில்களை சீரழிக்கும் திராவிடத்துவ வெறுப்பு, காழ்ப்பு அரசியல், நிர்வாகம்: திராவிட மேடைகளில் திராவிட தோள்களை பார்த்தீர்களா, சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம் மார் தட்டி வீராப்புப் பேசுவது வழக்கம்.. கருணாநிதி தன்னை ராஜராஜன் போலக் காட்டிக் கொண்டாலும், பெருங்கோவிலுக்குள் நுழைய பயந்தார். மதிலை உடைத்து, வழி செய்து கொண்டு உள்ளே நுழைந்தார்.. ஏ..ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசினாலும், ராஜராஜன் பார்ப்பன அடிவருடி, பார்ப்பனீயத்டைத் தூக்கிப் பிடித்தவன் என்ற் மற்ற மேடைகளில் பேசுவது வாடிக்கையான விசயமாக உள்ளது..  2021 வரை இத்தகைய கதைகளை புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்[3]. ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?, ராஜராஜ சோழனின் மறுபக்கம் என்று தலைப்புகளில் வெளிவரும் இந்த புத்தகங்களில், சரித்திரத் தன்மையே இல்லாமல், ஏதோ குழாயடி வம்பு, கிசுகிசுப்பு போன்று எழுதப்பட்டுள்ளனர்[4]. சரித்திர ஆதாரம் இல்லாமல், கட்டுக் கதைகளை இவ்வாறு பரப்புவதை, மெத்தப் படித்த மற்றவர்களும் கண்டிக்காமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இத்தகைய செயல்கள் துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், கலை-அழிப்புகள், இலக்கிய எரிப்புகளை விட மோசமாக இருப்பதைக் கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] கி.ஸ்ரீதரன், திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில், இதழ் 114, டிசம்பர் 16, 2014.

[2] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1310

[3] டி.எஸ்.கிருஷ்ணவேல், ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா? தமிழ் நூல் மன்றம், 2019.

[4] துரை.இளமுருகு, ராஜராஜ சோழனின் மறுபக்கம், நுண்மை பதிப்பகம், 2021. 

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

திசெம்பர்31, 2021

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது.
சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. வடக்கில் கும்பகோணம், தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் கடல் மற்றும் இலங்கை, மேற்கில் மதுரை என்றுள்ளது.
கொள்ளுக்காடு (Kollukkadu) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமமாகும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் உப்பளங்கள் அதிகமாக உள்ளன.
கோவில் இருப்பிடம் – கூகுள் மேப் – நன்றி

அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது: சேதுபாவாசத்திரம்[1] அருகே அக்னியாறு முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாவதால் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மணல் திட்டுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கொள்ளுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்ன ஆவுடையார் கோயில் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து 80 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அக்னியாற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது. இதனால் படகுகளை கடலுக்குள் செலுத்தவும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும்போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதிலும் மீனவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கூரை இடிந்துள்ள நியையில் பண்டபம்……
கூரை இடிந்து கீழே விழுந்துள்ள கற்களைப் பார்க்கலாம்..

மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதனால் மிக குறைந்த நாட்களே அதாவது மாதத்துக்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது[2]. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன் பிடிக்க செல்ல ஏதுவாக மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்[3]. போலி மதுபான விற்பனை முதலியவையும் இங்கு நடைபெறுவதாகத் தெரிகிறது[4]. சம்பந்தப் பட்ட நபர்கள் அழுத்தம் கொண்டவர்களுடன் தொடர்புடைவர்கள் மற்றும் வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளனர்[5].

தூண்களுடன் உள்ள இன்னொரு மண்டபம்…….
இக்காலத்தில் வண்ணம் பூசியடாக தெரிகிறது……

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்திற்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு[6]: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சட்டமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதியை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கீடு செய்தார்[7]. உண்மையில் மத்திய அரசின் பிரதான மந்திரி திட்டங்களின் கீழ் நிதி பெற்று அதிலிருந்து கொடுப்பது[8]. பிறகு அருகில் இருக்கும் அந்த கோவிலுக்கு சில லட்சங்கள் கூட ஒதுக்க முடியாதா? கொரோனா காலத்தில் இந்து அறநிலையத் துறை பணத்தில் ஆஸ்பத்திரிகளில் “அன்னதானம்” கொடுக்கப் பட்டது. ஆகவே, இந்த துறைமுகத்தால் யார் பலனடையப் போகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது.

இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……இதில் மீன்………
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……இதில் ஒரு கல்வெட்டு வரிவடிவங்கள் காணப் படுகின்றன…. உடைந்துள்ளதாகத் தெரிகிறது……

யார் கோவில்களைக் காக்கப் போகின்றனர்?: தமிழ்-தமிழ் என்று பேசுகின்றவர்களுக்கு மாணிக்கவாசகர் கட்டிய கோவில் மீது ஏன் கரிசனம் வரவில்லை. அப்படியே உடைந்து விழுந்து மறைந்து விடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களா? உழவாரப் பணி செய்யும் குழுக்களும் அறிக்கைகள் விட்டு மௌனமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை நாளைக்கு கோவில் சிறக்க ஆரம்பித்தால், சுற்றியுள்ளவர்கள் வியாபாரத்திற்காக, கடைகள் வைக்க வந்து விடுவார்கள் போலும். “கோவிலை காப்போம்,” “ஆலயங்களை விடுவிப்போம்” என்றே சமூக ஊடகங்களில் நிறைய பேர், இயக்கங்கள் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் உண்மையான சேவை செய்தாலும், பலர் திடீரென்று தோன்றி மறைந்து விடுகிறார்கள்! “கோவில் அடிமை நிறுத்து” என்று ஆரம்பிக்கப் பட்டது, இப்பொழுது என்னவாயிற்று என்று தெரியவில்லை, ஒரு சில மாதங்களிலேயே மறைந்து விட்டது.

நாத்திக புற்றுநோயா, ஆத்திக புது நோயா?: தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பொதுவாக 60 ஆண்டுகால நாத்திக திகவினர் ஆட்சியினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று சொல்லிவந்தாலும், ஏன் “இந்துக்கள்,” என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் மற்றவர்கள் இவ்விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று தெரியவில்லை. லட்சங்களைக் கொட்டி, நிதி வாங்கிக் கொண்டு, கலை ஆராய்ச்சியாளர்கள்,  சிற்பக்கலை வல்லுனர்கள், சித்திரங்கள் ஆய்வு வல்லுனர்கள் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டு,  புகைப்படங்களைப் பிடித்துச் சென்று, சொற்பொழிவுகள் நடத்தி, பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி,  ஏன் புத்தகங்களையும் வெளியிட்டு புகழ், பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,  சிதிலமடையும் இக்கோவில்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அழகை ரசிக்கிறேன், கலையை ஆராதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அழகு-கலை முதலியன மற்ற கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்படும் போது, “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகிறார்கள்.  ஆனால், இவ்விவகாரங்களிலும் ஒரு அமைப்பு தென்படுகிறது. அதாவது கோவில்கள் இவ்வா றுகாணமல் போனால்,  சிலைகளை விற்றுப் பிழைத்துக் கொள்கின்றனர்;  குளங்களைத் தூர்த்து நிலங்களைப் பட்டாப் போட்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்; கோவில் நிலங்களை தரிசு நிலங்கள் என்று சொல்லி விற்று கொள்ளை அடிக்கின்றனர்.  இதனால், மற்றவர்களும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்கிறவர்கள் அமுக்கப் படுகின்றனர்.

© வேதபிரகாஷ்

31-12-2021


[1]  மன்னார்குடியில் இருந்த அனந்தமௌனி சுவாமிகளின் இரு சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். சேது சுவாமிகள் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார். தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அங்கிருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு அருளும்படி வேண்டியபோது அவர் தான் உலக வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளதாகவும், மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறவும் கூறினார். அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெற்று, தன் குருவிற்குத் தஞ்சாவூரின் கீழ ராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து தங்கச் செய்து, குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் நினைவாக மன்னார்குடியில் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் குளமும், அக்குளத்தின் கரையில் உள்ள கோயிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சேதுபாவா சத்திரம் என்னும் ஊரும், தஞ்சாவூர் பிரதாபவீர அனுமார் (மூலை அனுமார்) கோயிலும் விளங்கி இவரது பெயரையும், புகழையும் இன்றும் நிலைநிறுத்தி வருகின்றன. இவரது சமாதி கும்பகோணம் அருகேயுள்ள குத்தாலத்தில் உள்ளது.

[2] தினகரன், கடலுக்குள் படகுகளை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு, 3/11/2020 5:49:53 AM.

[3] https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=992895

[4] Consumer Complaints , sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

[5] The person jaisankar s/o nagooran chinna avudayar koil, kollukkadu panjayat, rajamadam po, pattukkottai tk, thanjavur dt, tamilnadu, pin: 624701 who is selling illegal sales of duplicate liquor on 24/7 with local person name edin s/o sourimuthu, andivayal, rajamadam po, pattukottai tk thanjavur dt. Please take severe action and stop this illegal act.The person Edin is supporting this illegal act and he is doing lot of illegal act by giving brief to local administration and He has earned lot of assets regardless of his legal income and he never have legal income. Due to his local influence he is threatening to public peoples. Then number of people died since having this duplicate liquor Illegal Trade Of Duplicate Alcohol…— sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

https://www.consumercomplaints.in/illegal-trade-of-duplicate-alcohol-sale-of-illegal-and-duplicate-liquor-c2298287

[6] தினமணி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ 10 கோடியில் மேம்பாடு அமைச்சா் அறிவிப்புக்குமீனவா்கள் மகிழ்ச்சி, By DIN  |   Published on : 29th August 2021 01:53 AM.

[7] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/aug/29/sethupavasathiram-fishing-landing-site-at-rs-10-crore-3689094.html

[8]துறைமுகம், மீந்துறை பற்றி வெட்டுவேன், புரட்டுவேன் போன்று கொடுக்கப் பட்டுள்ள விவரங்களை, இங்கே படிக்கலாம். கடந்த 50 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர், ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977

தேவூர் கோவிலில் புதைக்கப் பட்ட 17 விக்கிரங்கள், 36 பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளது எதனைக் காட்டுகிறது?

செப்ரெம்பர்27, 2021

தேவூர் கோவிலில் புதைக்கப் பட்ட 17 விக்கிரங்கள், 36 பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளது எதனைக் காட்டுகிறது?

4ம் நூற்றாண்டில் கோசெங்கட் சோழன் கட்டிய தேவூர் கோவில்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது தேன்மொழி உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில். குலோத்துங்க சோழர் (1070-1120) கால கோயிலான இங்கு திருப்பணிக்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[1]. கோயிலில் திருப்பணிக்கு குழி தோண்டிய போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது[2]. இக்கோயில் 4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும்[3]. கோச்செங்கணான் காலம் க 400-600க்கு இடைப்பட்டதென்பதை உறுதி செய்யும் என்று இரா. கலைக்கோவன் எடுத்துக் காட்டுகிறார்[4]. மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. முதலாம் குலோத்துங்கன் எல்லா மதங்களையும் மதித்தான். நாகப்பட்டினத்தில் விகாரம் கட்டிக் கொள்ள இடமும், மானியமும் அளித்தான். ஆனால், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் சமணர்கள், பௌத்தர்கள் அதிக தொல்லைகள் கொடுத்தனர். பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையில் உள்ள 85-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்[5].

கோசெங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் தேவூர் கோவிலும் ஒன்று: கோசெங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்[6]. மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார்.

அம்மன் சிலை கண்டதும் குழியை மூடியது ஏன்?: திமுக ஆட்சிக்கு வந்ததும், திடீரென்று கோவில்களின் மீது அக்கரைக் கொண்டுள்ளது போலக் காட்டிக் கொள்வது திகைப்பாக இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் 25-09-2021 அன்று கோயிலில் ஒரு பகுதியில் நவக்கிரக சாமிகள் வைக்க மண்டபம் கட்ட பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது[7]. இந்நிலையில், கோயிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணிக்காக நேற்று நிலத்தை தோண்டியபோது, அங்கு ஐம்பொன்னாலான சில சுவாமி சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன, என்கிறதுதமிழ்.இந்து. அப்போது 4 அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர்[8]. இந்த தகவல் தேவூர் பகுதியில் கசிய தொடங்கியது.

பூஜைப் பொருட்கள் கிடைத்தது 30 / 36 என்று வேறுபடுகின்றன: தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தை தொழிலாளர்கள் மீண்டும் தோண்டினர். அப்போது தோண்டத் தோண்ட அரை அடி முதல்  4 அடி வரையிலான 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகளாக இருந்தன. மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 30 பூஜை பொருட்களும் கிடைத்தது. மேலும், ஐம்பொன்னாலான தாம்பூலம், கமண்டலம், துாபக்கால், விசிறி போன்ற 36 வகையான பூஜை பொருட்களும் அடுத்தடுத்து கிடைத்தன என்கிறது தினமலர்[9]. தேவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக வந்து, சிலைகளை வணங்கி சென்றனர்[10]. பின்னர் அந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது[11]. அவை கோயிலில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது[12]. இந்த சிலைகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலிகாபூர் படையெடுப்பின் (1310-11) போது தமிழக கோவில்கள் சூரையாடப் பட்டது: மாலிகாபூர் (1310-11) படையெடுத்து, கோவில்களைக் கொள்ளையடிக்க வந்த போது, தென்னிந்தியாவில் பெரும்பாலான முக்கியமான கோவில்கள் சூரையாடப் பட்டன. முகமதிய நூல்கள் இவற்றை விளக்குகின்றன. அது மட்டுமல்லாது, கோவில்கள் இடிந்து கிடக்கும் நிலை, சிற்பங்கள் மூளியாக்கப் பட்ட நிலை, கை-கால்கள் உடந்த நிலை என்று பார்க்கும் போதும் தெரிந்து கொள்ளலாம். பூஜாரிகள், அடியார்கள், பக்தர்கள் விக்கிரங்களைக் காக்க பல தியாகங்களை செய்தனர், வழிமுறைகளைக் கையாண்டனர். செய்தி வரும் போதே அவசரம்-அவசரமாக மூலவர் விக்கிரகத்தை மறைக்க அரும் பாடு பட்டனர். அது போலவே, உற்சவர் மற்ற விலையுயர்ந்த சிலைகள், பூஜா பாத்திரங்கள், விளக்குகள், என்று பற்பல கிரியைகளுக்கு உபயோகப் படும் உலோக வஸ்துக்களை மறைத்து வைத்தனர். பல நேரங்களில் கோவில் வளாகங்களிலேயே புதைத்து வைத்தனர்.

துலுக்கருக்குப் பிறகு ஐரோப்பியர், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனி பலவற்றை வாரிக் கொண்டு சென்றனர்: முகமதிய, துலுக்கர்களுக்குப் பிறகு, ஐரோப்பியர் கொள்ளையடித்துச் சென்றனர். கிழக்கிந்திய கம்பெனிகளும் சூரையாடி அள்ளிச் சென்றன. இன்றைக்கு, ஆயிரக் கணக்கன ஐரோப்பிய-அமெரிக்க அருங்காட்சியகங்களில் தமிழக பஞ்சலோக சிலைகள், கோவில் பகுதிகள், தூண்கள், சிற்பங்கள் எல்லாம் கோடிக் கணக்கில் இருக்கின்றன என்பதே ஆதாரம் ஆகிறது. பிறகு, ஆயிரம் ஆண்டுகளாக, சிலை திருடும் கூட்டம் இதை அறிந்து கொண்டு பற்பல சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றைக் கொள்ளையடுத்துச் சென்றனர். பிறகு 1970களிலிருந்து, நாத்திக-இந்துவிரோத அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என்று அத்தகையோரின் கூட்டுடன், தொலைவில் அடிக்கடி யாரும் வராத கோவில்களில் கொள்ளையடுத்து வந்தனர். அதற்காக, லட்சங்கள் லஞ்சமாக வாங்கிக் கொண்டனர். இவ்வாறெல்லாம் போக, மிஞ்சியவைத் தான் இப்பொழுது கிடைக்கின்றன.

கீழடி புராணம் ஓடிக் கொண்டிருக்கும் போது, இது பெரியாரிஸ்ட்நாத்திகதிராவிடத்துவவாதிகளைக் கலக்குகிறது: நவக்கிரக சாமிகள் வைக்க மண்டபம் கட்ட பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது 4 அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர். பொதுவாக அம்மன் சிலைகளுக்கு மிகுந்த பக்தியும், மரியாதையும், கிராம, நகர்ப்புற மக்கள் செல்லுத்துவது உண்டு.  அச்சிலைக்ளை / விக்கிரங்களைத் தொடுவதற்கும் பயப்படுவர். அந்நிலைதான், இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், அகழாய்வுத்துறை / தொல்லியல் துறைக்கு தெரிவிக்காமல் இருப்பது தான்.  தினம்-தினம் கீழடி பாட்டு பாடும் இவர்களுக்கு அது கூட தெரியாமல் போகுமா என்பது ஆச்சரியமே. மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 30 / 36 பூஜை பொருட்களும் கிடைத்தது. அதனால், ஒரு ஆபத்தான நிலையில், விக்கிரங்களுடன், பூஜைப் பொருட்கள், சாமான்கள் என்று எல்லாவற்றையும் புதைத்திருப்பது தெரிகிறது. கீழடி புராணம் ஓடிக் கொண்டிருக்கும் போது, இது பெரியாரிஸ்ட்-நாத்திக-திராவிடத்துவவாதிகளைக் கலக்குகிறது எனலாம். இதைப் பற்றி டிவிசெனல்களில் விவாதங்கள் நடத்துவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

27-09-2021


[1] தமிழ்.இந்து, தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது ஐம்பொன்னாலான 14 சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுப்பு, செய்திப்பிரிவு, Published : 27 Sep 2021 03:20 AM; Last Updated : 27 Sep 2021 05:44 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/720366-aimpon-statues-found-in-devapureeswarar-temple.html

[3] தினமணி, தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 சுவாமி சிலைகள், பூஜை பொருள்கள் கண்டெடுப்பு!, By DIN  |   Published on : 27th September 2021 07:42 AM.

[4] இரா. கலைக்கோவன், கோச்செங்கணான் யார் – 3, http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=73

[5] https://www.dinamani.com/tamilnadu/2021/sep/26/idols-of-swami-found-and-ambal-found-at-thevur-devapureeswarar-temple-3706769.html

[6]  முக்குல மன்னர்கள், https://mukkulamannargal.weebly.com/29903006297529653021296530192997300729943021296529953021-1.html

[7] தினகரன், கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு, 2021-09-27@ 00:54:59.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708062

[9] தினமலர், நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்,  Updated : செப் 27, 2021  04:03 |  Added : செப் 27, 2021  03:55.

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2854368&Print=1

[11] தினத்தந்தி, நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு, பதிவு : செப்டம்பர் 26, 2021, 04:57 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/09/26165702/2742741/Discovery-of-17-idols-at-Nagai-Devapuriswarar-Temple.vpf.vpf

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

2006ல் திமுக சட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.

சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?

கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.

இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது.  அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி  கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2021