Posts Tagged ‘கேட்பாரற்று இருக்கும் கோவில்’

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை!

நவம்பர்14, 2009
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18788

General India news in detail

சென்னை : “”சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும்,” என பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி தெரிவித்தார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: சிலைகடத்தல் தடுப்பு போலீசில், தமிழக அளவில் ஐ.ஜி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் மட்டுமே உள்ளனர். சமீபகாலமாக, பொருளாதாரக் குற்றப்பிரிவில் உள்ள போலீசாரைப் பயன்படுத்தி, கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி மீட்டு வருகிறோம்.

சிலைகடத்தல் தடுப்பு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் அதிகளவில் புராதானச் சிலைகள் உள்ளன என கூறுவது தவறு. விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி என, தமிழகம் முழுவதும் பல பெரிய கோவில்களில், அரிய புராதானச் சிலைகள் உள்ளன.

சில கோவில்களில் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. பாழடைந்த நிலையில், கேட்பாரற்று இருக்கும் கோவில்களில் சிலைகளை திருடினால், வெளியே தெரியாது என திட்டமிட்டு திருடுகின்றனர். சில கோவில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வயது 70க்கும் மேல் உள்ளது.இவற்றை பாதுகாக்க, மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் படையை உருவாக்க வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு திலகவதி கூறினார்.

கோவில் சிலைகள் திருடு போகாமல் பாதுகாப்பது தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறைக்கு, சிலைகடத்தல் தடுப்பு போலீசார் சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவில் சிலை மற்றும் நகைகளை பாதுகாக்க, குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு சிலை மற்றும் நகைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும். விலைமதிப்பற்ற சிலைகள் உள்ள கோவில்களை பட்டியலிட்டு, சிலைகடத்தல் தடுப்பு போலீசாருக்கு வழங்க வேண்டும்.

அச்சிலைகள் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்படும் வரை உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கோவில்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மரகத லிங்கம் திருடு போன திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவிலில், பழுதடைந்த எச்சரிக்கை அலாரம் ஆறு மாதங்களாக சரிசெய்யப்படவில்லை.

நவீன உபகரணங்கள் மூலம், கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். திருடு போகும் சிலைகளை அடையாளம் காண உதவும் வகையில், அனைத்து சிலைகளையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.