Posts Tagged ‘திவசம்’

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும், கலைஞர் தலமரமும் – கருணாநிதி நினைவு நாளுக்கும், கோவில்களில் மரம் நடவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர்27, 2021

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும், கலைஞர் தலமரமும் கருணாநிதி நினைவு நாளுக்கும், கோவில்களில் மரம் நடவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும்: திராவிடம் என்னவெல்லாம் படுத்துகிறது, பாடு படுத்துகிறது, பாடுபடுகிறது என்பதனை இதிலிருந்து பார்க்கலாம். ஒவ்வொரு கோவிலிலும் ஸ்தல விருக்ஷம் இருப்பது தெரிந்த விசயமே. அதனை, அந்த பாரம்பரியத்தை இந்துக்கள் ஆயிரக் கணக்கான வருடங்களாக போற்றி, பாதுகாத்து வருகின்றனர். அதனை, “தலமரம்” என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், இந்த திராவிடப் போலிகள் இதை வைத்தும் மோசடி செய்ய, ஸ்தலமரம் என்பதற்குப் பதிலாக, “தலமரம்” ஆக்கி, “கலைஞர் தலமரம்” என்கின்றன. பிறகு கருணநிதி இறந்த நாளுடன் இணைத்து, இந்துக்களின் பணத்தை விரயம் செய்து, அதே நேரத்தில் அவர்களின் மனங்களைப் புண்படுத்தி, ஆலயங்களில் அந்த இந்துவிரோதியின் பெயரை நுழைக்க இந்த திட்டத்தைப் போட்டுள்ளது தெரிகிறது.  முன்பு, அண்ணாவின் இறந்த தினத்திற்கு, கோவில்களில் சாப்பாடு போட்டனர். ராமகோபாலன் அதனைக் கண்டித்து, “அண்ணா திவசத்திற்கு சாப்பாடா?,” என்று கேட்டுக் கண்டித்ததுடன், சிறுபுத்தகத்தையும் வெளியிட்டார்.

கருணாநிதிக்கும் ஸ்தலவிருக்ஷத்திற்கும் என்ன சம்பந்தம்?: கருணாநிதிக்கும் இந்து அறநிலையத் துறைக்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை. அதாவது, நாத்திகர், இந்துவிரோதி என்ற ரீதியில் அவருக்கும் கோவிலுக்கும், கோவில் காரியங்களுக்கும் எந்த பந்தமும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தின-தினம் அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு தமாஷா செய்து கொண்டிருப்பதைப் போன்று தெரிகிறது. இருப்பினும் அவற்றில் விவகாரத்துடன் செயல்படுவது தெரிகிறது. வந்தவுடன், “அன்னதானம்” என்று சொல்லிக் கொண்டு, பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டியதை தெருவில் போவோருக்கு எல்லாம் கொடுத்து, அந்த நிதியை காலி செய்து விட்டனர். பிறகு, நிதி கேட்டு வேண்டிக் கொண்டனர். ஆனால், விவரம் அறிந்தவர்கள் யாரும் கொடுக்கவில்லை போலும். இது தேரவில்லை என்றதும், கோவில் நிலம் என்று ஆரம்பித்தனர்.

கோவில் நிலம் மீட்கப் பட்டது என்ற நாடகத்தை ஆரம்பித்தது: கோவில், மடங்கள், மடாலயங்கள் முதலியவற்றின் சொத்துக்களை ஆக்கிரமித்து, அபகரித்து சட்டவிரோதமாக செய்து வரும் காரியங்கள், கடந்த 70 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. ஏகப்பட்ட உச்சநீதி, உயர்நீதி, மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புகளில் இதைப் பற்றி விவரங்களைக் கொடுத்துள்ளது. ஒருவேளை ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்றும் நிலுவையில் இருந்து வருகின்றன.  இதில் அதிர்ச்சியடையும் விசயம் என்னவென்றால், துலுக்கர் / முஸ்லிம்கள், கிருத்துவர்கள் தான் கோவில் நிலங்கள், கடைகள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, கோடிக்கணக்கில் குத்தகை-வாடகை பாக்கி வைத்துக் கொண்டுள்ளனர். ஆகவே, இவற்றை வசூல் செய்வதை விட்டு, சில பள்ளிகளைக் குறி வைத்து, அதன் குத்தகை நிலங்களை கையகப் படுத்தி, எதையோ சாதிப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். இதிலும், லயோலா கல்லூரி போன்ற கிருத்துவ கல்வி நிறுவனங்களை காப்பாற்றும் மற்ற அவர்களின் ஆக்கிரமிப்புகளை மறைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இப்பொழுது மரங்களை நடுகிறோம் என்ற இன்னொரு நாடகத்தை ஆரம்பித்துள்ளது: மு.க.ஸ்டாலின் அவர்கள் 07.08.2021 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கும் முகமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்[1]. அதாவது, கோவிலுக்குச் செல்லாமல், ஏதோ ஒரு “சிம்பாலிக்காக” அடையாள சடங்கு போன்று ஏமாற்றும் விதத்தில் உள்ளது. இதில் கனிமொழி கலந்து கொண்டாலும், அவர் மனைவி துர்கா கலந்து கொள்ளாதது கவனிக்கத்தக்கது. இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத் திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்தி வருகிறது[2], என்று செய்தி தொடர்கிறது.         இப்படி சொல்லிக் கொள்வதே மிகப் பெரிய பொய் என்பது எல்லொருக்குமே தெரிந்த விசயம் எனலாம். திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தரமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது[3]. இங்கு கூடம் “திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில்” என்று பொடி வைத்து சொல்வதை கவனிக்கலாம். ஏனெனில், ஆக்கிரமிக்க/அபகரிக்கப் பட்டுள்ள இடங்களில் போய் அந்த தலமரங்களை நடவு செய்யலாமே?

கருணாநிக்கு வேண்டுதலா, காரியமா, என்ன நடக்கிறது?: இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது[4]. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன[5]. பிறகு எதற்கு இந்த இழவு-தலமரங்களை நடவேண்டும்?

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்[6].
  2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும்[7],
  3. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும்[8],

 என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். சரி கலைஞர் தலமரம் நட்டால் என்ன கிடைக்கும்? இந்துக்கள் நாசமாகிப் போவார்களா?:

எத்தனை கோவில்களில் நட்டாலும் நன்மை யாருக்கு என்று தெரியவில்லை: இத்தகு பெருமைமிகு தலமரங்களைப்  மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மேலப்பரங்கிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், அருள்மிகு பாபநாசம் சுவாமி திருக்கோயில். அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

கருணாநிதியின் திவச நாளைக் கொண்டாட கோவில்கள் தான் கிடைத்ததா?: மற்ற ஊடகங்கள் மேலே குறிப்பிட்டபடி பாட்டு பாடிய வேளையில், “கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டுவருகிறது[9]. இதனை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையிட வளாகத்தில் ஸ்டாலின் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் (நாகலிங்க மரம்) நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்,” என்று இடிவி.பாரத் என்ற செய்தி-தளம் டலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[10]. அதாவது, 07-08-2021 கருணாநிதி இறந்த நாள், திவச நாள், அதை கொண்டாட, அனுஷ்டிக்க, இத்தகைய போர்வையுடன், திட்டம்போட்டு இந்துவிரோதிகள் வேலை செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

27-09-2021


[1] தினகரன், கலைஞர்தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன!!, 2021-09-22@ 11:58:51

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=706936

[3] மாலைமலர், அனைத்து கோவில்களிலும் 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்இந்துசமய அறநிலையத்துறை தகவல், பதிவு: செப்டம்பர் 22, 2021 15:14 ISTமாற்றம்: செப்டம்பர் 22, 2021 16:01 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2021/09/22151423/3037617/Tamil-News-1-lakh-plants-in-temples.vpf

[5] தமிழ்.இந்து, தமிழக கோயில்களில்கலைஞர்தல மரக்கன்று நடும் பணி: இந்து சமய அறநிலையத் துறை தகவல், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2021 03:12 AM; Last Updated : 23 Sep 2021 06:35 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/718961-kalaignar-saplings-in-tn-temples.html

[7] தினமுரசு, அனைத்து கோவில்களிலும் 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம், இந்துசமய அறநிலையத்துறை தகவல், September 22, 2021 at 6:40 pm.

[8] http://dhinamurasu.in/news/7530/aQ6k

[9] கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு, Published on: Aug 7, 2021, 12:28 PM IST.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/tree-planting-scheme-on-late-ex-minister-karunanidhi-memorial-day/tamil-nadu20210807122833310