Posts Tagged ‘நாயக்க மன்னர் காலம்’

பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு

மே20, 2010
பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு
மே 20,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25276

வேலூர்: பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆறு அடி உயரமுள்ள பச்சைக்கல் சிவலிங்கம், வேலூர் அருகே பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அடுத்த கந்தனேரி அருகே பாலாற்றில், அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு  மணல் அள்ளிக் கொண்டிருந்த போது, அதிகளவு எடை கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறியதாவது:

இந்த பச்சைக்கல் சிவலிங்கம்,400 ஆண்டுகள் பழமையானது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர் காலத்தைச் சேர்ந்தது. சிலையின் உயரம் ஆறு அடி. அகலம் ஒன்பது அடி. சிலையின் எடை 1,500 கிலோ. சிலை, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு சரவணன் கூறினார். சிலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மேலும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

  1. சமீக காலங்களில் சாலைகளை அகலப் படுத்துதல், பெரிய பலமாடி, அடுக்கு வீடுகள், கட்டடங்கள் கட்டப்படுதல், அதற்காக ஆழமாகத் தோண்டுதல்……………………………………….போன்ற வேலைகள் நடந்து வருகின்றன.
  2. பொதுவாக, அவ்வாறு ஆழமாகத் தோண்டும் போதுதான், அதுவும் பரவலாகத் தோண்டும் போது, பல தொல்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
  3. ஆனால், இதுவரை அத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
  4. உண்மையிலேயே எதுவும் கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தது, திருட்டுத்தனமாக விற்றுவிற்றார்களா, மறைக்கப்பட்டுவிட்டனவா அல்லது அழிக்கப்பட்டுவிட்டனவா?
  5. காலம் தான் பதில் சொல்லும்.