Posts Tagged ‘தங்கப் பட்டை’

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா? (1)

மே20, 2022

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா ? (1)

நான்காவது முறையாக 14-05-2022 அன்று துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு விஜயம்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் செய்தார்[1]. முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் பெருமாளுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்[2]. துர்கா ஸ்டாலின். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு, கோயில் பட்டாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, தேவஸ்தான அறங்காவலர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது[3]. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்[4]. இதனிடையே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என துர்கா ஸ்டாலின் ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். அப்படியென்றால் முன்னர் மூன்று முறை எப்பொழுது வந்தார் என்று தெரியவில்லை. துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி, சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டாலின் இந்துமதத்தை எதிர்த்து, கேலி பேசும்போது, அவர் மனைவி இப்படி கோவில் விஜயம் செய்வது, தெரிந்த விசயம் என்றாலும், சில பிரச்சினைகள் எழுகின்றன.

கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை துவக்கி வைத்தார்: கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா 14-05-2022 அன்று துவக்கி வைத்தார்[5]. அப்படியென்றால், அது முன்னாலேயே தீர்மானிக்கப் பட்டது, ஏற்பாடு செய்யப் பட்டது, என்றாகிறது. இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய திட்டமிடப்பட்டது[6]. மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர். முதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர்[7]. கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா இன்று காலை துவக்கி வைத்தார்[8]. ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வந்ததாகவும் கட்சியினர் கூறினர். மாலை சித்திரை தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். இது தான், பின்னர் சர்ச்சைக்குண்டானது. ஆனால், முன்னரே

05-05-2022 அன்று தொடங்கிய தேத் திருவிழா, 14—05-2022 அன்று பிரச்சினையானது: ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருநட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழாவானது கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது[9]. விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்[10]. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை சிறிது தூரம் வடம் பிடித்து சென்றனர். 4 மாட வீதிகளில் அக்னி மூலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடிரென கனமழை கொட்டியது. இதனால் தேரை பிடித்து இழுக்க முடியாமல் பக்தர்கள் தடுமாறினர். சுமார் ஒரு மணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் தேரோடும் வீதியில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேரை தொடர்ந்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று தேரோட்டம் தடைபட்ட நிலையில் இன்று மீண்டும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து, மறுபடியும், இதே போன்ற பிரச்சினை வந்தது. அதற்கு காரணம், துர்கா ஸ்டாலின்.

திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணர் கோவில் தேர் உற்சவம் மே 14ல் நடந்தது: ‘தேர் புறப்பாட்டுக்கு முன், தேரில் ஏறி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தரிசனம் செய்தார். அது தெய்வ குற்றம்; வைணவ தலங்களில் தேர் உற்சவத்திற்கு முன், தேரில் ஏறி பெண்கள் தரிசனம் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதை துர்கா மீறி விட்டார்’ என, சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் தீர்த்தகாரரும், கோவிலுக்குள் இருக்கும் உடையார் சன்னிதி பட்டாச்சாரியாருமான ராமானுஜம் கூறியதாவது: “திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம். 108 திவ்ய தேசங்களில் 95வது தலம். நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டி அருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணர் விக்கிரகம், உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு. இந்த கோவிலின் தேர் உற்சவம் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடக்கும். கோவிலின் அத்யயன பட்டராக இருக்கும் திருக்கோஷ்டியூர் மாதவன் தான், தேர் உற்சவத்துக்கான நாள் குறித்து கொடுப்பார். கோவிலில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் அவர் தான் பொறுப்பு. ‘மே 14 மாலை 5:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கும்‘ என, அவர் தான் நாள், நேரம் குறித்து கொடுத்தார்.

திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது: என்றைக்கு தேர் உற்சவம் நடக்கும் என அறிவிக்கப்படுகிறதோ, அன்றைய தினம் காலையிலேயே உற்சவர் தேருக்கு வந்து விடுவார். அப்படித்தான், இந்த ஆண்டும் வந்தார். வழக்கம் போல, திருக்கோஷ்டியூர் கிராமத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும், தேர் மீது அமைக்கப்பட்டு இருக்கும் படிகள் வழியாக ஏறிச் சென்று பெருமாளை வணங்கினர்[11]. அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. கிராம மக்களோடு மக்களாக, இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும் வழிபட்டார்[12]. என்றெல்லாம் செய்திகள் வந்தாலும், சில பட்டர்களின் துணையோடு தான் அவ்வாறு நடந்திருக்கிறது என்று தெரிகிறது. வீட்டில் பூஜை அறையில், பல விக்கிரங்களை வைத்துக் கொண்டு, சுலோகங்கள், மந்திரங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு பூஜை செய்து வரும் அவரிடம், உண்மையை சொன்னால், தேரில் ஏறாமல் இருந்திருப்பார்.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] குமுதம், வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!, kumudam bookmark line | TAMILNADU| Updated: May 14, 2022; https://www.kumudam.com/news/national/43522

[2] https://www.kumudam.com/news/national/43522

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேண்டுதலை நிறைவேற்றிய பெருமாள்; நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின், Written by WebDesk, May 16, 2022 10:40:53 pm,

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-prays-at-sivaganga-perumal-temple-454734/

[5] தினத்தந்தி, திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம், Update: 2022-05-14 10:34 GMT.

[6] https://www.dailythanthi.com/amp/News/State/2022/05/14160405/Sami-Darshan-of-Durga-Stalin-at-the-Thirukkoshtiyur.vpf

[7] தினமலர், திருக்கோஷ்டியூர் விமானத்திற்கு தங்கத்தகடு: வேண்டுதலை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின் மனைவி,  -நமது நிருபர், Added : மே 14, 2022  07:31 |

[8] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3029515

[9] தமிழ்.சமயம், கடுப்பான வருண பகவான்: தடைப்பட்டு போன திருக்கோஷ்டியூர் கோவில் தேரோட்டம்!, Curated by Srini Vasan | Samayam TamilUpdated: 15 May 2022, 1:24 pm

[10] https://tamil.samayam.com/latest-news/sivagangai/thirukoshtiyur-temple-car-festival-stopped-by-rain/articleshow/91574812.cms

[11] தினமலர், திருக்கோஷ்டியூர் கோவில் தேரில் ஏறிய துர்கா, நமது நிருபர் –Added : மே 17, 2022  02:05; https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1

[12] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?

செப்ரெம்பர்26, 2021

மு..ஸ்டாலின் உத்தரவுபத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?

பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?: பொது மக்கள் கருத்தைக் கண்டுகொள்ளாமல், ஏற்கெனவே தீர்மானித்த படி, நாத்திக அரசு தொடர்ந்து, வேலைகளை செய்து வருகிறது. பயன்பாடில்லாத கோயில் நகைகளை உருக்கிப் பயன்படுத்தும் திட்டத்தைக் கண்காணித்துச் செயல்படுத்த மூன்று நீதிபதிகள் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்[1]. இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். கோயில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன[2]. அதில் –

  1. சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜூ,
  2. மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆா்.மாலா,
  3. திருச்சி மண்டலத்துக்கு ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைவா்களாக உள்ளனா்[3].

இவர்களுக்கும் காணிக்கை அளித்தபக்தர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அவா்களது தலைமையில் உள்ள குழுக்கள், கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும்[4]. பக்தர்கள் தங்களது நகைகள் அவ்வாறு மாறும் என்று பக்தர்களுக்குத் தெரியுமா?

வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்: அவற்றை வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.  அந்த அளவுக்கு கோவில் நிதி இல்லையா, கஜானாவை காலி செய்தது யார்? இலவச உணவு என்று அன்னதானம் செய்தே அந்த நிதி காலியாகி விட்டது என்று அறிவிக்கப் பட்டது. அதுபோல, மற்ற நிதிகளையும் வந்தவுடன் காலி செய்து விட்டனரா? இதில் கோவில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும், என்று இவர் கணக்கு போடுவது தமாஷாக உள்ளது. பாக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான குத்தகை-வாடகைகளை வட்டியுடன் வசூல் செய்வது தானே? இந்த நகைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறையாக பயன்படுத்த உள்ளோம்[5]. அறநிலையத்துறைக்கு கூடுதல் வருமானம் ஈட்ட இது வழி செய்யும்[6]. இதில் யாருக்கும் எந்த லாப நோக்கமும் இல்லை. ஒவ்வொரு கோயிலும் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பெறப்பட்டதோ அதற்கேற்ப வரவு வைக்கப்படும். நகைகள் என்று இல்லை கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்குப் பயன்படும் எனில் அதற்காக எந்த விமர்சனத்தையும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன்[7]. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நேர்மையாக, உண்மையாக நடத்தப்படும்” என்று அவர் கூறினார்[8].

மு..ஸ்டாலின் உத்தரவுபத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும், என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[9]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[10]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[11]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[12]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[13]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[14]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தங்கத்தை விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது: சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏற்கெனவே இந்த வேலையை செய்து வருகிறது. ஆனால், வேறு விதத்தில் அதனைத் தட்டிக் கேட்டது, வணிகத்துறை, அதாவது விற்பனை வரி கட்டச் சொன்னது. வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது, ஆனால், வரி கட்ட வேண்டாம் என்று தீர்ப்புக் கொடுக்கப் பட்டது[15]. அதில், ஜி.தென்னரசு இருப்பதும் கவனிக்கத் தக்கது. எனவே, இது திட்டமிட்டு கொள்லை அடிக்கு திட்டம் என்றேயாகிறது.  கோவில் சொத்து, நகை, தங்கம் என்று இவற்றிலேயே குறியாக இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. நாத்திகம்-பெரியாரிஸம் பேசி, கோவில் நிர்வாகத்தை இவ்வாறு செய்து வருவது முரண்பாடாக இருக்கிறது. அவர்கள் எப்படி நாணயமாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருக்கும் கோடிக்கணக்கிலான பாக்கியை வசூலித்தாலே, 10 ஆண்டுகள்  கோவில்கள் சிறப்பாக இயங்கும். நடக்க வேண்டிய எல்லாமே ஒழுங்காக நடக்கும்.

பயன்பாடில்லாத கோயில் நகைகள், பயன்பாடுள்ள கோயில் நகைகள் என்று எப்படி பிரிக்க முடியும்?: பக்தர்கள் காணிக்கையாக, பற்பல வேண்டுதல்களுக்காக சிரத்தையாக அர்பணித்துள்ளனர். அவை நிச்சயமாக பக்தர்களுக்கான பயன்படும் நகைகள் தான். அவற்றை எந்த நீதிபதியும், அதிகாரியும் அறிய முடியாது. அந்தந்த வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்ததா, கிடைக்கவில்லையா என்று பக்தர்களுக்குத் தான் தெரியும். அந்நிலையில், அத்தகைய காணிக்கை-நகைகளை அழிப்பது, உருக்கி மாற்றுவது, அந்த பக்தர்களின் வேண்டுதல்களை அவமதிப்பதிப்பதாகும். அவர்களுக்கு கடவுளுக்கும் இடையேயுள்ள ஆத்மார்த்தமான முறையீட்டை (covenant, promise, pledge) மீறுவதாகும். இவ்வாறு நடக்கும் என்றால், அவர்கள் அத்தகைய காணிக்கையினையே செய்திருக்க மாட்டார்கள். நம்பிக்கை எனும் போது, அதில் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

திராவிடநாத்திகஇந்துவிரோதவிக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

2000 கிலோ தங்க நகைகள் என்ற கணக்கு எங்கிருந்து, எவ்வாறு வந்தது?: 2000 கிலோ தங்கம் என்றால் சுமார் ரூ. 950-1000 கோடிகள் மதிப்பாகும். ஆனால், உருக்குகிறேன் என்று போகும் போது, சேதாரம், கற்கள் என்றெல்லாம் போனால், அது எத்தனை கிலோக்கள் குறையும், அதனால், எத்தனை கோடிகள் குறையும் என்பதெல்லாம் சந்தேகத்திற்கு உரிய விவகாரங்கள் ஆகும். உருக்கக் கொடுப்பதற்கு முன்பாகவே நடக்கும் குறைப்புகளில் நிச்சயமாக ஊழல்கள் இருக்கும். இருக்கும் கோவில்களில், எந்தந்த கோவில்களில் எத்தனை நகைகள் இருக்கின்றன என்ற கணக்கை இதுவரை பொது மக்களுக்குக் காட்டவில்லை. ஆகவே, இந்த 2000 கிலோ என்ற கணக்கு எப்படி, எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கோவில் உண்டிகளை எண்ணும் போதே பற்பல ஊழல்கலை இந்த நாத்திக-இந்துவிரோதிகள் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் அதிகாரி கொலையே இதற்கு சான்றாக உள்ளது. எனவே, மறுபடியும் நாத்திக-இந்துவிரோதி இத்தகைய தெய்வ காரியங்களில் தலையிட்டு பிரச்சினைகளை, ஊழல்களை, மோசடிகளை உண்டாக்க வேண்டாம்.

© வேதபிரகாஷ்

26-09-2021


[1] தினமலர், கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து சிறப்பு குழு, மாற்றம் செய்த நாள்: செப் 25,2021 07:13. https://m.dinamalar.com/detail.php?id=2851645

[2] https://m.dinamalar.com/detail.php?id=2851645

[3] தினமணி, கோயில் நகைகளை உருக்கிப் பயன்படுத்தும் திட்டம்: 3 நீதிபதிகள் மூலம் கண்காணிப்பு; அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல், By DIN  |   Published on : 24th September 2021 12:05 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/sep/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3705035.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் நகைகளை உருக்கி.. அப்படியே பிஸ்கட்டுகளாக மாற்றும் சேகர் பாபு.. அரசின் பெரிய பிளான்.. என்ன?, By Shyamsundar I Updated: Friday, September 24, 2021, 9:26 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-temple-golds-will-be-made-into-biscuits-in-invest-in-banks-says-minister-sekar-babu-433827.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச், By Vigneshkumar, Updated: Saturday, September 25, 2021, 20:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/minister-sekar-babu-says-ready-to-face-any-kind-of-accusation-for-god-433976.html

[9]தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[11]தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[12] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[13] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic, Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[14] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[15] Madras High Court – Arulmighu Mariamman Thirukovil vs The Commercial Tax Officer on 23 July, 2018

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT     – DATED: 23.07.2018 CORAM  

THE HONOURABLE MR.JUSTICE M.GOVINDARAJ  இன் W.P.(MD) No.21074 of 2014 and W.P.(MD)No.352 of 2015   and M.P.(MD)No.1,1 of 2014 & 2015 

Arulmighu Mariamman Thirukovil, Represented by Executive Officer   Joint Commissioner,G.Thennarasu,  Samayapuram,   Trichy District.                                        …     Petitioner (in both W.Ps) /Vs./

1.The Commercial Tax Officer,    Lalgudi Assessment Circle,    Lalgudi,    Trichy District.                                     …     1st Respondent (in both WPs). W.Ps)

தேனூர் தங்கப் பட்டைகள் / கட்டிகள்: கிடைத்தது எவ்வளவு, எந்த காலத்தைச் சேர்ந்தது, வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்? ஊடகங்கள், சம்பந்தப் பட்டவர் முரண்பட்ட விவரங்கள் கொடுத்தது ஏன்? (2)

திசெம்பர்16, 2020

தேனூர் தங்கப் பட்டைகள் / கட்டிகள்: கிடைத்தது எவ்வளவு, எந்த காலத்தைச் சேர்ந்தது, வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்? ஊடகங்கள், சம்பந்தப் பட்டவர் முரண்பட்ட விவரங்கள் கொடுத்தது ஏன்? (2)

தங்கக் கட்டிகள் பாண்டியர்களுடையதாக இருக்கலாம்: ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதியது, “குமரியைக் கடந்து கடல் வழியாகச் செல்லும்போது, கொற்கை (ஓணிடூடுடணிடி) இருப்பதாகவும், அந்த ஊர், பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதாகவும், அக்கொற்கைக் கடலில், குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தி, முத்துக் குளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு விளைந்த முத்துக்கள், பாண்டிய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது. தங்கக் கட்டியின் நடுவில் இருக்கும், “மீன்சின்னம், பாண்டியர்களது சின்னம் என்பதும், அது ஆதாரமாகி இருப்பதும், இதில் தெளிவாகத் தெரிகிறது”.

தங்கத்தின் சொந்தக்காரன் அல்லது சொந்க்காரி யார்?: அரசு அருங்காட்சியக பாதுகாவலர், பெரியசாமி, அந்த பத்து எழுத்துகளை, “போகுல் குன்ற பூங்கோதை,” என்று படித்து, கோதை என்ற பெண், போகுல்குன்றம் என்ற இடத்தைச் சேர்ந்தவள், அவளுக்குச் சொந்தமாக அத்தங்கள் இருக்கலாம். சேரர்கள் ஆட்சியில், கோதை என்ற பெயர் பிரபலமாக இருந்தது. இருப்பினும், இத்தங்கம் பாண்டிய நாட்டை / அரசைச் சேர்ந்த இடத்தில் கிடைத்துள்ளது, என்றார்[1]. ‘ஏழு தங்கக் கட்டிகளிலும், தமிழ் பிராமி எழுத்து வடிவில், ‘போகுல் குன்றக் கோதை’ என, எழுதப்பட்டிருந்தது. இவை, 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து[2]. தற்போது, போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது, மலையைக் குறிக்கும்’ என்றார்[3]. மேலே ஆர். கிருஷ்ணமூர்த்தி தங்கம் பாண்டியனுடைது என்று, “அரசன்கு’ “மாறன்’ மற்றும் “கொற்கொய்யின் அரசன்’ என்று படித்ததைக் கவனிக்கலாம். ஆக, இந்த எழுத்துக்களைப் படிப்பதில் ஒருமித்த கருத்து இல்லை என்று தெரிகிறது. வழக்கம் போல, உணர்ச்சிகளின் மீது ஆதாரமாக, கருத்துகள் வெளியிடப் படுகின்றன என்றாகிறது.

கிடைத்த தங்கநகைகள் முழுவதும் அரசுக்கு ஒப்படைக்கப் பட்டதா?: இந்தியத் தொல்லியல் மற்றும் இதர சட்டங்களின் சரத்துகளின் படி, நூறாண்டுகளுக்கு மேலாக கருதப் படும், எந்த பொருள், பூமியை தோண்டும் போது கிடைத்தாலும், அது அரசுக்கு சொந்தம், அது உடனடியாக அரசுக்கு அறிவித்து, ஒப்படைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப் படுகின்றதா என்பது கேள்க் குறியாகவே உள்ளது. செய்தி தாள்கள் தங்கப் புதையல் கிடைத்த விவரங்களை வித்தியாசங்களுடன் வெளியிட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது.

  • தேனூரில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், அவ்வூரின் மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஓர் ஆலமரம் முற்றாகச் சரிந்ததில், பானையில் தங்கப் புதையில் கிடைத்தது.
  • 28-06-2009 இந்தியன் எக்ஸ்பிரஸில், நான்கு தங்கட்டிகள் மற்றும் இதர நகைகள் கிடத்தன என்று செய்தி வெளியிட்டது[4]. 15-05-2012 அன்று அச்செய்தியைப் புதுப்பித்துள்ளது[5].
  • 20-09-2012 தேதியிட்ட தினமணியும் அவ்வாறே, “நான்கு தங்கப் பட்டைகள்” கிடைத்த என்று குறிப்பிட்டது[6]. மதுரை வடக்கு வட்டாரத் தாசில்தார் ஏ.இளமதி, நகைகள் யாருடையது. பழமையானதா என்பதை ஆய்வுக்குப் பிறகே கூற முடியும் என்றார்[7].
  • தமிழ்.இந்தியா செய்தியை வெளியிட்டாலும், எடை போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லை[8]. மதுரை அருகே தங்கப் புதையல்- வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு என்று முடித்துக் கொண்டது[9].
  • பிறகு ஏழு தங்கக் கட்டிகள் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தது.
  • மொத்த எடை விவரங்களிலும் வித்தியாசம் காணப் படுகிறது.

இதனால், கிடைத்த தங்கப் புதையல் / தங்கநகைகள் முழுமையாக அரசுக்கு ஒப்படைக்கப் பட்டதா, இல்லையா என்ற கேள்வி எழுகின்றது.

தங்கம் எந்த காலத்தைச் சேர்ந்தது?: ஆர். கிருஷ்ணமூர்த்தி, “கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது,” என்று குறிப்பிட்டது, மேலே கொடுக்கப் பட்டுள்ளது. எழுத்துகள் பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்ற யூகத்தில் தான், c.300-200 BCE காலம் கொடுக்கப் படுகிறது[10]. மற்றபடி, நேரிடையான தேதி கணிப்பு எதுவும் செய்யப்படவில்லை. மதுரை வடக்கு வட்டாரத் தாசில்தார் ஏ.இளமதி, நகைகள் யாருடையது. பழமையானதா என்பதை ஆய்வுக்குப் பிறகே கூற முடியும் என்றது கவனிக்கத் தக்கது. ஆனால், என்ன ஆய்வு செய்தார்கள், எந்த பரிசோதனை கூடத்தில் தேதி பற்றிய ஆய்வு நடந்தது போன்ற விவரங்கள் வெளியிடப் படவில்லை. இடைக்காலத்தில், மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது, ஏகப் பட்ட தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். அந்நிலையில், துலுக்கர்களின் கொள்ளைக்குத் தப்பிக்க, மக்கள் தங்கம், விக்கிரகங்கள் முதலியவற்றை பூமிக்குள் புதைத்து வந்தனர். ஆகவே, அவ்வாறு கிடைத்ததா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இங்கு தங்கத்தின் காலம், எழுத்துகளை வைத்து, c.300-200 BCE என்று கணிக்கப் படுகிறது. இவை, ஏதேச்சையாகக் கண்டுபிக்கப் பட்டனவேயன்றி, அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், தேதி, புதையுண்ட படிவுகள் மூலமோ, சார்பு தேதி நிர்ணயம் மூலமோ கணித்துத் தீர்மானிக்கப் படவில்லை.

முடிவுரை: மேற்காணும் விவரங்கள், விசயங்கள் மற்றும் செய்திகளை அலசியப் பிறகு, கீழ்காணும் முக்கிய கருத்துகள் பத்வு செய்யப் படுகின்றன:

  1. தமிழகத்தில் சமீப காலத்தில் சங்ககாலத் தொன்மை பற்றி நிறைய பேசப் பட்டு, வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
  2. கீழடி மாதிரி c.580 BCE என்று தேதியிடப் பட்டுள்ளது. அதாவது, இந்த தேதி வரை, சங்ககாலத்தின் தொன்மை சரித்திர ரீதியில் நீட்டிக்கப் படுகிறது.
  3. இருப்பினும், சிலர் பிடிவாதமாக, சிந்துசமவெளி நாகரிகம் “திராவிட நாகரிகம்” என்ற பாட்டைப் பாடி வருகின்றனர். இவை வழக்கம் போல, உணர்ச்சிப் பூர்வமான நிலையில் உள்ளது.
  4. அதே நேரத்தில், “குமரிக் கண்டம்” இருந்ததையும் குறிப்பிட்டு, தமிழர் அங்கிருந்துதான் வந்தனர், மூன்று சங்கங்களில், இரண்டு அங்குதான் நடந்தன என்றும் நம்பி வருகிறார்கள். அதைப் பற்றிய பிரச்சாரம் எப்பொழுதும் அதிரடியாகவே நடந்து வருகிறது.
  5. சிந்துசமவெளி மற்றும்“குமரிக் கண்டம்” இரண்டுமே முரண்பட்ட கருதுகோள்கள். திராவிடர்கள் வடமேற்கிலறிருந்தார்கள் அல்லது தெற்கிலும் இருந்தார்கள் என்பது சரித்திர ஆதாரமற்றது. 2250-1750 BCE மற்றும் c.580 BCE இடைவெளி விளக்கப் படவில்லை.
  6. இத்தகைய நிலையில் தான், தமிழகத்தில் எது கிடைத்தாலும் “பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு” கிடைத்தது என்று விளக்கம் கொடுக்கப் படுகின்றன.
  7. ஆய்வுகள் முடிவுகளையும் முழுமையாக அறிவிக்கப் படுவதில்லை. இந்த தங்கப் பட்டைகள்/கட்டிகள் விவகாரத்திலும் அவ்வாறே இருக்கிறது.
  8. இதனால், தங்கக் கட்டிகள் கிடைத்த விவரங்கள், தேதிகள், எடை முதலியவை தெளிவாக இல்லை.
  9. 2009 முதல் 2013 வரை இவைப் பற்றிய விவரங்கள் பகவாறு குறிப்பிடப் படுவது, மேலே எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
  10. ஆகவே ஆராய்ச்சி, ஆய்வு, சோதனைகள் முதலியவற்றில் வெளிப்படைத் தன்மை, கிடைத்த பொருட்கள் அவற்றைப் பற்றிய விவரங்கள் முதலியவற்றைப் பற்றி முறையாக வெளியிட வேண்டும். அப்பொழுது தான் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

16-12-2020


[1] The ten-letter inscription read, ‘Pogul Kundra Kodhai’. This might be a reference to the owner of the treasure, said Periasamy. “The inscription must be referring to a woman called Kodhai hailing from Pogulkundram. She might be the owner of the treasure. The name Kodhai was popular during the Chera regime. However, the place where the treasure was found belonged to the erstwhile Pandiya Kingdom,” he said.

[2] தினமலர், தங்க கட்டிகளில் தமிழ் எழுத்துகள், Added : அக்டோபர், 09, 2013 00:13.

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=822775&fbclid=IwAR2akvKAubyYx3aInAkR4G9-yKBJS6iz4FPLsz0UfiYci_tVIB5H27zMGkE

[4] Indian express, Pot with golden beads unearthed from cavity, Published: 28th June 2009 08:37 AM  |   Last Updated: 15th May 2012 11:08 PM

[5] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/jun/28/pot-with-golden-beads-unearthed-from-cavity-62720.html

[6] தினமணி, மதுரை அருகே தங்கப் புதையல் கண்டெடுப்பு, Published on : 20th September 2012 01:07 PM

[7] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2009/jun/28/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-31666.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரை அருகே தங்கப் புதையல்வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு, By Staff | Published: Sunday, June 28, 2009, 16:36 [IST]

[9] https://tamil.oneindia.com/news/2009/06/28/tn-golden-treasure-unearthed-near-madurai.html

[10] Frontline, Tamil-Brahmi on gold bars, Print edition : February 19, 2016

https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/tamilbrahmi-on-gold-bars/article8183617.ece

தேனூர் தங்கப் பட்டைகள் / கட்டிகள்: கிடைத்தது எவ்வளவு, எந்த காலத்தைச் சேர்ந்தது, வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்? (1)

திசெம்பர்16, 2020

தேனூர் தங்கப் பட்டைகள் / கட்டிகள்: கிடைத்தது எவ்வளவு, எந்த காலத்தைச் சேர்ந்தது, வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்? (1)

தேனூரில் கிடைத்த கலயத்திற்குள் இருந்தது என்னென்ன?: தேனூர், சோழவந்தான் ஊருக்கு அருகில், மதுரையில் உள்ளது[1]. தேனூரில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், அவ்வூரின் மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஓர் ஆலமரம் முற்றாகச் சரிந்தது. இங்கு, “2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,” என்று குறிப்பிட்டுள்ளது வியப்பாக இருக்கிறது. C.P.சரவணன், வழக்குரைஞர் இவ்வாறு குறிப்பிட்டார் என்பதும் கவனிக்கத் தக்கது. ஒரு மரம் சரிந்தால் ஊரே கூடி நின்று பார்ப்பது வழக்கம். அப்படியே ஊர் கூடி கண்டுகழித்து ஓய்ந்தது ஐந்தாறு சிறுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.  அதிலொரு சிறுவன் எதையோ கூர்ந்து கவனித்தான் அந்த ஆலமர வேர் இடுக்கில் மண்ணோடு மண்ணாக ஒரு சிறிய மண் கலசமிருந்தது. அதை அவன் எடுத்தான் கலசம் முழுக்க மண்ணால் நிரம்பியிருந்தது. அந்த கலசத்தை இரண்டு மூன்று சிறுவர்கள் உருட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் அது இரண்டாக பிளந்தது. அதனுள்ளிருந்த மண் இலகுவாகி உள்ளேயிருந்த தங்கக்கட்டிகளும் சில ஆபரணங்களும் மின்னியது. விஷயம் ஊர் பெரியவர்களுக்கு கசிந்தது. யார் எவரெல்லாமோ அந்த கலசத்தை கைப்பற்றினார்கள். அந்த ஊரே கூடி சரிந்த ஆலமரத்தை சிதில் சிதிலாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். விஷயம் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டியது அன்றிரவே அவ்வூரே காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது[2].

கிடைத்த தங்கத்தின் எடை என்ன?: ஜூன் 2009ல் நான்கு தங்கக் கட்டிகள் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தன. 28-06-2009 இந்தியன் எக்ஸ்பிரஸில், நான்கு தங்கட்டிகள் மற்றும் இதர நகைகள் கிடைத்தன என்று செய்தி வெளியிட்டது[3]. 15-05-2012 அன்று அச்செய்தியைப் புதுப்பித்துள்ளது[4]. அதாவது மூன்று ஆண்டுகள் கழித்து, அச்செய்தியை புதுப்பித்தபோதும் நான்கு தங்கக் கட்டிகளடென்று தான் இருந்தது, இன்று வரை அப்படித்தான் உள்ளது. ஆனால், பிறகு, அந்த கிராம மக்களிடமிருந்து ஏழு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தார்கள். ஒருவேளை பிறகு மூன்று கிடைத்ததா அல்லது மொத்தம் ஏழு கிடைத்ததா என்று தெரியவில்லை. கலயத்திற்குள், –

  1. 750 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள்,
  2. 21 உத்திராட்ச மணிகள்,
  3. மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள்,
  4. 5.3 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன[5].

டைம்ஸ் ஆப் இந்தியா, எதைகளை இவ்வாறு கொடுக்கிறது[6]:

  1. 661.20 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள்,
  2. 81.10  கிராம் எஐயுள்ள 21 உத்திராட்ச மணிகள்,
  3. 7.7 கிராம் எடையுள்ள, மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள்,
  4. 5.35 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன
ஆக மொத்தம் 755.35 கிராம், எல்லாமே 24 கேரட் தங்கத்தினால் செய்யப் பட்டவை[7]. ஆக முதலில் நான்கு, பிறகு ஏழு தங்கக் கட்டிகள் கிடைத்தனவா அல்லது மொத்தம் ஏழு கட்டிகள் கிடைத்தனவா என்று தெரியவில்லை.

 

2009ம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்ட தங்க புதையல்: மதுரை மாவட்டம், தேனூரில், 2009 ஆம் ஆண்டு, செல்வம் என்பவரின் வீட்டருகில் இருந்த முதிர்ந்த மரம் ஒன்று, காற்றில் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை அகற்றுகையில், வேருக்கு அடியில், மண் கலயத்திற்குள், தங்கப் புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது[8]. அந்த மண் கலயத்தினுள்,

  1. 661 கிராம் எடை கொண்ட ஏழு தங்கக் கட்டிகள்,
  2. 21 உத்திராட்ச மணிகள்,
  3. மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள்,
  4. 5.3 கிராம் எடையுள்ள டாலரும் இருந்தன[9].

அவை, மதுரை கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்தத் தங்கக்கட்டிகளில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தும், யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் எல். சுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தங்கக் கட்டிகளில் உள்ள எழுத்துக்கள், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் பெரியசாமி அவர்களால், 2013 ஆம் ஆண்டு படிக்கப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், செய்தியாக வெளியானது. தங்கக் கட்டிகளில், தமிழ்-பிராமி எழுத்து முறையில், “போகுல்குன்றக் கோதை’ என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தங்கக் கட்டிகள், வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.

2013ல் புகைப் படத்தை வைத்து ஆர்.கிருஷ்ணமூர்த்தி எழுத்துகளைப் படிக்க முயன்றது: ஆர்.கிருஷ்ணமூர்த்தி எழுதியது, “அந்த ஏழு கட்டிகளின் புகைப்படங்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது. அந்தத் தங்கக்கட்டிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்டு இருந்ததால், அக்கட்டிகளின் மேல், அதிக அளவில் மாசு படிந்திருக்கலாம். புகைப் படங்களை எடுக்கும் முன், சரியான முறையில் சுத்தம் செய்தனரா என்று தெரியவில்லை. சரியான முறையில் சுத்தம் செய்து, மீண்டும் புகைப்படம் எடுத்தால், தவறில்லாமல் படிக்க வாய்ப்புண்டு. கிடைத்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பல நாட்கள் ஆய்வு செய்தேன். அந்த ஏழு கட்டிகளில், இரண்டு கட்டிகள் தான், ஆய்வுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன். அதில், முதல் கட்டியின் புகைப்படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தக் கட்டியின் எடை, நீளம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியில் படிக்க முடிந்த எழுத்துக்களை மட்டும், கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளேன். தெரியாத எழுத்துக்கள் உள்ள இடங்களில், சிறு வட்டக் குறியீடு போட்டுள்ளேன். கீழே கொடுத்துள்ள முறையில், முதல் கட்டியில் காணப்படும்தமிழ்பிராமிஎழுத்துக்களைப் படித்துள்ளேன். எழுத்து தெளிவில்லாத இடங்களில், ‘ணிவட்டமிட்டு காட்டியுள்ளேன்”.


அரசன்கு‘ “மாறன்என்று முதல் தங்கக் கட்டியில் உள்ளதைப் படித்தது: ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதியது, “முதல் ஐந்து எழுத்துக்களைஅரசன்குஎன்று படித்துள்ளேன். “குஎழுத்திற்கு பிறகு, அடைப்புக்குறி போட்டுள்ளேன். பல தெளிவில்லாத எழுத்துக்கள், படிக்க முடியாத நிலையில் உள்ளன. நடுவில் மீன் சின்னம் உள்ளது. மீன் சின்னத்திற்கு இடப்பக்கம், “மாஎன்ற எழுத்தும், அதை அடுத்து தெளிவில்லா எழுத்தும், சின்னத்தின் வலப்பக்கத்தில், “ன்என்ற எழுத்தும் உள்ளது. இதை, “மாறன்என்று படிக்க வாய்ப்புண்டு. “ன்எழுத்திற்குப் பிறகு சில எழுத்துக்கள் தெரியவில்லை. அத்துடன் அடைப்புக்குறி போட்டு முடித்துள்ளேன். அடைப்புக்குறிக்கு பிறகு, இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களை, “கொற்என்று படிக்க முடிகிறது.இரண்டாவது கட்டியில் இந்த, “கொற்எழுத்துக்களின் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டாவது கட்டியின் புகைப்படத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் எடை, நீளம், அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியின் வலப்பகுதியில், நான்கு எழுத்துக்கள், படிக்கும் நிலையில் உள்ளன. அந்தக் கட்டியின் வரைபடத்தையும், வலப்பகுதியில் உள்ள நான்கு எழுத்துக்களின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன்”.


கொய் கோன் அரசன்என்று என்று இரண்டாவது தங்கக் கட்டியில் உள்ளதைப் படித்தது: ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதியது,  “கீழே கொடுத்துள்ள முறையில், இரண்டாவது கட்டியில் காணப்படும் தமிழ்பிராமி எழுத்துக்களைப் படித்துள்ளேன். இரண்டாவது கட்டியில், “கொய் கோன்என்று படிக்க முடிகிறது. இரண்டு கட்டிகளில் உள்ள தெளிவான எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்பிராமி எழுத்து முறையில், “அரசன்கு கொற்கொய்கோன்என்று தெரிகிறது. இந்தச் சொற்றொடர், “கொற்கொய்யின் அரசன்என்று பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, “தாமிரபருணிஆறு, கடலில் கலக்கும் இடத்தில், கொற்கைத் துறைமுகம் இருந்தது. கொற்கையை தலைநகராகக் கொண்டு, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியர்களுக்கும் என்ன உறவின்முறை என்று தெரியவில்லை. “பெரிப்ளஸ்‘ (கூடஞு கஞுணூடிணீடூதண் ணிஞூ tடஞு உணூtடணூச்ஞுச்ண குஞுச்) என்ற நூலில், சேர நாடு குறித்தும், பாண்டிய நாடு குறித்தும் பல செய்திகளைக் காண முடிகிறது. இந்நூல், கி.பி., 60 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை”.


© வேதபிரகாஷ்

16-12-2020


[1] Chozhavandan is a panchayat town in Madurai district in the Indian state of Tamil Nadu. It is located on the left bank of the Vaigai River, sixteen miles north west of Madurai.

[2] தினமணி, கீழடி ஸ்பெஷல்: இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி! அதுவும் ஒரு பெண்ணின் பெயர்!!, By C.P.சரவணன், வழக்குரைஞர், Published on : 04th November 2019 06:01 PM.

[3] Indian express, Pot with golden beads unearthed from cavity, Published: 28th June 2009 08:37 AM  |   Last Updated: 15th May 2012 11:08 PM

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/jun/28/pot-with-golden-beads-unearthed-from-cavity-62720.html

[5] https://www.dinamani.com/keezhadi-special/2019/oct/17/thenur-2600-year-old-tamil-inscription-with-ancient-gold-bars-3256167.html

[6] Times of India, Thenur gold treasure found four years ago is 2300 years’ old, recent study reveals, TNN | Oct 9, 2013, 03:37 IST.

[7] The gold items, weighing 755.35 gram, consisted of seven bars weighing 661.20 grams, 21 balls designed like a rudraksha and weighing 81.10 grams, 32 small beads used between the rudraksha balls, weighing 7.70 grams and a pendant weighing 5.35 grams. When the objects of the treasure were subjected to tests by officials, they found they were made of pure gold. Jewellers, who assessed the quality, confirmed they were crafted out of 24 carrot gold.

https://timesofindia.indiatimes.com/city/madurai/Thenur-gold-treasure-found-four-years-ago-is-2300-years-old-recent-study-reveals/articleshow/23754735.cms

[8] தினமலர்,தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?, டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் – தென்னிந்திய நாணயவியல் சங்கம், Added : டிச 10, 2013 00:01.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=868756