Posts Tagged ‘விதி’

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

மே20, 2022

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, நான்கு முறை துர்கா ஸ்டாலின் விஜயம்கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தது! (2)

ஆக ஏறவிட்டது ஏன், யாரால் என்று தான் கவனிக்க வேண்டும்: ஆனால், ‘திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது. அதனால், தேர் வீதி உலா, முதல் முறையாக கடும் மழையால் நிறுத்தப்பட்டது. உற்சவர் பெருமாள், இரவு முழுதும் தேரிலேயே இருந்தார். ‘முதல்வர் வெளிப்படையாக ஆதீனங்களை அவமதிக்கிறார். அவர் மனைவி வெளிப்படையாக ஆகம விதிகளை மீறி, ஆணவத்தை வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு கட்டுப்பட்ட அறநிலைய துறை செய்வது எல்லாமே தெய் குற்றமாகுது’ என்று, சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி வருகின்றனர். இது சரியான தகவல் அல்ல. ஹிந்து ஆன்மிக பக்தர்கள், இதில் வேதனைப்பட எதுவும் இல்லை. ஐதீகப்படி அல்லது வழக்கப்படியான நிகழ்வுகள் தான், 14ம் தேதி காலையில் நடந்தது.கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூசி, தங்கத் தகடு அமைக்கும் பணி நடக்கிறது.

நன்கொடை எதிர்பார்த்து, அனுமதித்து, பிரச்ச்னை ஆனது: இந்த நேரத்தில், தேர் திருவிழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்து வந்தால், விழா சிறக்கும் என்பதோடு, தங்க முலாம் பூசும் பணிக்கு உதவி கிடைக்கும். அவரே நேரடியாக செய்வார் அல்லது நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்வார் என்பது தான், இதற்கு ஏற்பாடு செய்த திருக்கோஷ்டியூர் மாதவனுடைய எண்ணம். அதில் தவறு ஏதும் இல்லை. கோவில் காரியம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார் அவ்வளவு தான். ஆனால், ஆன்மிக விஷயத்தில், அரசியலை நுழைத்து விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நிர்வாக அலுவலர் சேவற்கொடியோன் கூறியதாவது: “கோவில் தேர் உற்சவத்தை வைத்து, இருவிதங்களில் விமர்சிக்கின்றனர். கோவில் தேரில் பெண்களை ஏற அனுமதிக்க மாட்டோம் என்பது தவறு. காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். தேர் கம்பி வடத்தின் ஒரு பகுதியை, திருக்கோஷ்டியூரை சுற்றிலும் இருக்கும் மயில்ராயன் கோட்டை நாட்டார்களும், இன்னொரு பகுதியை பட்டமங்கலம் நாட்டாரும் தான் சேர்ந்து இழுப்பர்.

வழிபாடு முறையும் மீறப் பட்டது: அவர்களில் ஒரு சிலர், தேர் கம்பி வடத்தின் மேல் ஏறி நின்று தேரை இயக்க, துண்டை அசைத்து சைகை கொடுப்பர். அதன் பின் தான் தேர் இயக்கப்படும். இது தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அதே வகையில் தான் இந்த ஆண்டும் நடந்தது.தேர் இயக்கப்படுவதற்கு முன், நாட்டார் குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தேர் மேல் ஏறி உற்சவர் பெருமாளை வணங்குவது வாடிக்கை. அது இந்த ஆண்டும் நடந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக, துர்கா தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அவரோடு, ஜமீன் பரம்பரையின் மதுராந்தகி நாச்சியாரும் தரிசனம் செய்தார். ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு, கோவில் விழாக்களில் இன்றளவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மனைவி வந்ததால், அம்முறை மீறப் பட்டு, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவரும், தேரிலேயே ஏறி தரிசனம் செய்து விட்டார்!

மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதியுலா நிறுத்தம்: அதுமட்டுமல்ல… துர்கா தேர் ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பின், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குடும்பத்துடன், தேரில் ஏறி வழிபாடு செய்தார். அவர், ஆண்டுதோறும் தேர் ஏறி வழிபடுவது வாடிக்கை. மாலையில் தேர் கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை பெய்தது. தேர் செல்லும் வீதி முழுதும் மழை நீரால் சூழப்பட்டது. தேரை பத்திரமாக செலுத்த வசதியில்லை என்றதும், தேரை இயக்கும் நாட்டார்கள், ‘தேரை நாளை காலை இயக்கலாம்’ என, கூறி விட்டனர். அதையடுத்தே, மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதி உலா நிறுத்தப்பட்டது. மறுநாள் காலையில், 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதுபோன்று, கடந்த, 2012லும் மழை காரணமாக தேர் புறப்பாடு, ஒரு நாள் கழித்து நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூனார்.

2015ல் ஸ்டாலின் இக்கொவிலுக்கு விஜயம் செய்தார்: சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு சென்று பிரனவ் மந்திரமான ஓம் நமோ நாராயணாவை ராமானுஜர் பாடிய அஸ்டாங்க திவ்ய விமானத்தில் ஏறி பார்வையிட்டார்[1]. திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 108 வைணவத்தலங்களில் ஒன்றான சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[2]. கோவிலில் ராமானுஜர் சிலைகள், திருக்கோஷ்டியூர் நம்பி சிலைகளை அவர்கள் பார்வையிட்டனர். இப்படி செய்தி வெளியிட்டாலும், அவர் சாமி கும்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. பெருமாளிடம் மட்டும் பிரத்யேகமாக பற்று இருப்பது தெரிகிறது. தெலுங்கு மொழி பேசுபவர் மற்றும், ஓங்கோல், ஆந்திராவிலிருந்து, முத்துவேலர் வந்திருப்பதாலும், குலத் தொழிலாலும், பெருமாள் தரிசனம், சேவை, மறுக்காமல் இருக்கிறது. 1970களில் விஷ்ணு ஸ்டாலின் என்று சுவரொட்டிகள் ஒட்டியதாக ஞாபகம். ஆயிரம் விளக்குத் தொகுதியில், குறிப்பாக, ஆலயம்மன் கோவில் கூழ்-ஊற்றும் நிகழ்ச்சிகளுக்கு, ஸ்டாலின் மனைவியுடம் வருவது உண்டு. ஆனால், பிறகு வருவதை நிறுத்தி விட்டார்.

2015லிருந்து 2022 வரை நான்கு முறை திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வந்துள்ளார்:

  1. 2015ல் தேர்தல் சமயத்தில், தம்பதியர் இங்கு வந்துள்ளனர். “நமக்கு நாமே” நிகழ்ச்சியின் போது, கோவில்க்குச் சென்றது, திமுகவினரை திகைப்படையச் செய்தது.
  2. பிறகு 2022 வரை காலத்தில் மூன்று முறை வந்துள்ளார். அதாவது, 2022ல் இப்பொழுது வந்திருப்பதால், இதையில் இருமுறை வந்துள்ளார் என்று தெரிகிறது.
  3. 2021ல் தேர்தலுக்கு முன்னர், வெற்றி பேச வேண்டிக் கொண்டு, வந்திருக்க வேண்டும்.
  4. அதே போல, 2016ல் தேர்தலின் போதும் வந்திருக்கலாம்.

அப்பொழுது, தோல்வியடைந்தாலும், 2021ல் பெருமாள் உதவியிருக்கிறார் போலும். அதனால், துர்கா மறக்காமல் வந்து விட்டார். ஊடகங்களும் செய்தியை அவ்வாறே வெளியிட்டு விட்டன.

துர்காவின் நம்பிக்கை, பக்தி முதலியன: ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்ததை அழித்திருக்கலாம், ஆனால், வீட்டில், ஆசையாக துர்கா வைத்து விட்டிருக்கலாம். பதவி ஏற்றபோது, கண்கலங்கிய போது, அவரது வேண்டுதல்கள் எல்லாம் நடந்து விட்டன என்றே ஆயிற்று. முன்னர் கோவிலைப் புதிப்பித்துக் கட்டியது, பல கோவில்களுக்கு சென்றது – காசி, காளஹஸ்தி, திருமலை…முதலின, அர்ஜுன் நடிகரின் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றது என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன. இப்பொழுது, ஆன்மீகம், ஆன்மீக அரசு என்றெல்லாம் வெளிப்படையாக பேசுகிறார்கள். சேகர்பாபு, அறநிலையத் துறை சார்பாக, தினம்தினம் ஏதேதோ அறிக்கைகள் விடுகிறார், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிச்சயமாக பக்தர்கள் கண்டுகொளளவில்லை. நம்புவதாகவும் இல்லை. ஏதோ, செயற்கையாக, விளம்பரத்திற்காகவே செய்வதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு..ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார், By Mayura Akilan Published: Tuesday, September 29, 2015, 12:47 [IST].

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-visits-thirukosthiyur-temple/articlecontent-pf170866-236679.html