Archive for the ‘எதிர்ப்பு’ Category

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

ஒக்ரோபர்18, 2022

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

நாத்திகர் மற்றும் இந்துவிரோத திராவிடத்துவ வாதிகளின் கட்டுப் பாட்டில் கோவில்கள்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அளவுக்கு அதிகமாக, தினம்-தினம் கோவில் பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், திராவிட ஸ்டாக்குகள், என்றெல்லாம் பறைச் சாட்டிக் கொண்டு, இந்துவிரோதிகளாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்துக்களுக்கும் இதில் ஒன்று சந்தேகம் இல்லை. கோவில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அமைத்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: “ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது”.

அரசு தனது கட்டுப்பாட்டை அதிகமாக்கி, அறிக்கைகள் விடுவது: “திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில்திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்,” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு, எல்லா விசயங்களிலும் தலையிட்டு, திராவிடக் கட்சிக்காரர்கள் தங்களது ஆதிக்கம், அதிகாரம், முதலியவற்றைக் காட்ட் வருகிறார்கள். ஊழலில் கைதான அறநிலையத் துறை அதிகாரிகள் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இதனால், ஊழல் ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது.

கோவில் திருப்பணிக்கு லஞ்சம் வாங்க வேண்டு என்ற மனோதத்துவம் என்ன?: இந்நிலையில் தான், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[1] என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. திருச்சி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[2]. கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், என்றெல்லாம் விவரிக்கவும் செய்கின்றன. கோவில் திருப்பணி சேவை செய்ய, அரசு மாதம் சம்பளம் கொடுக்கிறது. ஓய்வு பெற்ற இவர்கள் பென்சனும் பெற்று வருகின்றனர். அதனால், பணம் இல்லை என்ற நிலை இல்லை. ஆகையால், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க வேண்டும், அதிலும், கோவில் சேவைக்கு வாங்க வேண்டும் என்ற இவர்களின் அனோதத்துவம் ஆராய வேண்டியுள்ளது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் ஆரம்பம்: கோவில் திருப்பணிகள் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்[3]. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்[4]. இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள்[5]. அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்[6]. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்[7]. இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது[8]. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

02-06-2022 மற்றும் 12-10-2022 தேதிகளில் மூர்த்தீஸ்வரி வந்தது: இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரி இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார். “இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார்,” என்கிறது காமதேனு[9]

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தது, மூர்த்தீஸ்வரி மாட்டிக் கொண்டது: போலீசார் அதிரடி கைது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார்[10]. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்[11]. இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர்.  அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்[12]. அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்[13]. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூர்த்தீஸ்வரி காரில் ரூ ஐந்து லட்சம் இருந்தது: அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது[14].   மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. ஒருவேளை மற்ற இடங்களுக்குச் சென்று வசூல் செய்த பணம் போலிருக்கிறது. எது எப்படியாகிலும், கோவில் என்றும் பார்க்காமல், இவ்வாறு பலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கோவில் பணத்தை, அதாவது பக்தர்களின் காணிக்கையை இவ்வாறு பலவிதங்களில் கொள்ளையடிப்பது, பங்கு போட்டுக் கொள்வது, முதலியவற்றை நிச்சயமாக, கடவுள் பார்த்துக் கொன்டிருக்கிறார், மற்றும் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் என்று ஒவ்வொரு பக்தனும் நம்பிக் கொண்டிருக்கிறான். அது உண்மை.

© வேதபிரகாஷ்

18-10-2022.


[1] தினத்தந்தி, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது, தினத்தந்தி அக்டோபர் 18, 1:40 am.

[2] https://www.dailythanthi.com/News/State/charity-department-woman-officer-arrested-for-accepting-bribe-of-rs1-lakh-817094

[3] நக்கீரன், கோவில் ஆய்வறிக்கைக்கு லஞ்சம்! பிடிபட்ட தொல்லியல் துறை வல்லுநர்!, மகேஷ்,Published on 18/10/2022 (12:34) | Edited on 18/10/2022 (12:51).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bribe-temple-thesis-arrested-archeologist

[5] குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்… பெண் அதிகாரி அதிரடி கைது…, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 18, 2022, 15:50 IST, TIRUCHIRAPPALLI, INDIA

[6] https://tamil.news18.com/news/trichy/female-officer-arrested-for-bribe-lakhs-of-rupees-to-carry-out-repairs-of-gunaselam-temple-820666.html

[7] தினமலர், கோயில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது, Updated : அக் 18, 2022  10:41 |  Added : அக் 18, 2022  10:34.

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=3148843

[9] காமதேனு, 5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!, காமதேனு, Updated on : 18 Oct, 2022, 9:33 am

[10] தினகரன், ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது, 2022-10-18@ 14:58:17

[11] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=807670

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது, Written by WebDesk, Updated: October 18, 2022 10:30:34 am.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-woman-archaeologist-arrested-for-taking-rs-10-lakh-bribe-for-temple-restoration-527004/?utm_source=newsstand&utm_medium=Referral

[14] https://kamadenu.hindutamil.in/national/archaeologist-arrested-by-anti-bribery-police-for-demanding-bribe-at-gunaselam-temple

வக்புவாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது–இந்துக்களை இம்சிப்பது (3)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது இந்துக்களை இம்சிப்பது (3)

தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது: ஜாபர்அலி கூறுவது, “முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது. இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றியமாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது”. “தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது” என்றால் அது துலுக்கப் பிரச்சினையே அன்று இந்துக்களுடன் தொடர்பு படுத்தப் படும் விசயமல்ல, அது விசமத்தனமானது.

வக்பு வாரியம், மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. ஜாபர்அலி கூறுவது, “இருந்தாலும், அது ஒரு அரசு சார்பு நிறுவனமாக இயங்குகிறது. அதே நேரத்தில், அது மாநில அரசு சொல்லும் எல்லாவற்றையும் கேட்டு நடக்க வேண்டும் என்பதில்லை. வக்பு வாரியம் கூடி என்ன முடிவெடுக்கிறதோ, அதுதான் முடிவு. அரசு இதில் சட்டரீதியாகத் தலையிட்டு, எந்த முடிவையும் எடுக்க வைக்கவோ, எடுத்த முடிவை மாற்றவோ முடியாது. வக்பு வாரியம் தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிர்வாகச் செலவுக்கு இன்று வரை அரசை எதிர்பார்த்தே உள்ளது.” இத்தகைய இருநிலைப் பாட்டில் இருக்கும் நிலை அவர்களது மோசடிகளுக்குத் துணை போகிறது. இது கிருத்துவர்களின் பிரச்சினை போன்றதே. பிஷப், பாதிரிகள் கோர்ட்டுக்குச் சென்றது போல, இவர்களும் கோர்ட்டுக்குச் செல்லலாம்.

வாரியத் தலைவர் பதவி, நியமனம், குற்றச்சாட்டுகள் _ இவையும் துலுக்கர் பிரச்சினையே: ஜாபர்அலி கூறுவது, “வக்பு வாரியம் கட்சி சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் வாரியப் பதவிகள் அனைத்தும், ஏலம் விடப்படாத குறைதான் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் விஷயத்தில், ஆண்டாண்டு காலமாக அரசியல் தலையீடு இருப்பதாகவும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுக அரசு ஒரு தெளிவான முடிவெடுத்திருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் வக்பு வாரியத்தைத் திறம்பட நடத்திச் செல்வதற்காக, நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மானை வக்பு வாரியத் தலைவராக நியமித்திருக்கிறது. பொறுப்பேற்ற பின், அப்துல் ரஹ்மான் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவது நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகிறது”.

வக்பு வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது துலுக்கரே: ஜாபர்அலி கூறுவது,  “இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. வாரியத்தின் சொத்துக்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அந்த கமிட்டி கண்டறிந்தது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை”.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன: ஜாபர்அலி கூறுவது, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீட்க வாரியத்துக்குப் போதுமான சட்ட அதிகாரம் இல்லை. ஆகவே, வலுவான சட்டப் பாதுகாப்புடன் வக்பு வாரியம் கட்டமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சொத்துக்களையெல்லாம் மீட்டு, அவற்றிலிருந்து வருவாய் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்பட்சத்தில், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். வாரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசிடம் கையேந்த வேண்டியதில்லை”. இப்படி சொல்லிக் கொண்டாலும், காபிர்கள் கொடுக்கும் பிச்சையில் தான் இந்த அரேபிய அடிமைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வக்பு வாரியம், வேறெந்தச் சமூகமும் பெற்றிருக்காத அளவுக்குச் சொத்துக்களைப் பெற்றிருக்கிறது. ஜாபர்அலி கூறுவது, ‘ஆனால், வறியவர்கள் அதிகம் இருக்கும் சமூகம் என முஸ்லிம் சமூகம் அடையாளம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது[1]. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், தொழிற்சாலைகள், குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்டவை எங்கெல்லாம் குறைவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. முஸ்லிம் சமூகத்தை அரசும் பொதுச் சமூகமும் கைவிடக் கூடாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லிம் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக வக்பு வாரியம் தன்னலமற்றுச் செயல்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது”.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: சரித்திர ரீதியில், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து, இந்த மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்தும் பார்ப்பதில்லை. டிவி, செல்போன் பார்த்து பொழுதைப் போக்கிக் கொன்டிருக்கிறார்கள்.

  1. “ஆற்காடு நவாப்” என்று குறிப்பிடப் படும் ஒருவர் தான் தான் மயிலாப்பூர் கோவிலுக்கு நிலம் கொடுத்தேன் என்று கிருத்துவக் கூட்டங்களில் சொல்லிக் கொள்வார்.
  • இந்த நசரத் பேட்டை, அல்லாபுரம் ஸ்தலபுராணங்கள் எல்லாம் நாளைக்கு வேளாங்கன்னி, நாகூர் மாடல்களில் செல்லும். முழுங்கப் பார்க்கும்.
  • இறக்குமதி செய்யப் பட்ட மதங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்கள் நிலமாக இருக்கும்? அடிப்படையிலேயே ஏதோ மிகப்பெரிய மோசடி உள்ளது.
  • வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
  • யார் யாருக்கு தடையில்லா சான்றிதழ் கொடுப்பது என்ற விவஸ்தையே வேண்டாமா, இதென்ன புதிய அவஸ்தை, அதிலும் இவர்களிடம் தேவையா?
  • சொந்தமாக எதையும் இல்லாத இந்த மதங்கள், நம்பிக்கையாளர்கள் இந்தியாவில் எல்லாமே கடன் வாங்கி,  கடன் பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
  • பாரத மாதவை வைத அந்தப் பாதிரிப் பதரும், கோவில் நிலத்தை தனதெனும் இந்த அரேபிய அடிமைகளும் இந்துக்களின் சொத்தை அனுபவிக்க வேண்டாம்.
  • உண்மையில் தன்மானம், சூடு-சொரணை இருந்தால் இந்துக்கள் நிலத்தை, பூமியை விட்டு விலக வேண்டும், அம்மண்ணில் விளைவதைக் கூட உண்ணக் கூடாது.
  • வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு கீழ் நடக்கிறதா, அல்லது பத்திரப்பதிவு துறைக்கு கீழ் வக்பு வாரியம் செயல்படுகிறதா? ஆணையிட அதிகாரம் உள்ளதா?
  1. ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்? (10)

© வேதபிரகாஷ்

12-09-2022


[1]  இதுவே பெரிய மோசடி எனலாம், பிறகு, ஏன் அத்தகைய துலுக்கர் உருவாக வேண்டும். யார் அவர்களை அவ்வாறு ஏழைகளாக வைத்திருக்கின்றனர். பிச்சைக் காரர்களில் அதிகமாக துலுக்கர் இருப்பது தெரிகிறது. அது உண்மையில் பிச்சை எடுக்கவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

திசெம்பர்25, 2021

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[1]. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் பிறபிக்கப்பட்ட உத்தரவில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பரமாரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது[2]. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம் செய்யப்பட்டுள்ளனா்[3]. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு[4]:  “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பராமரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகளை சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இத்திருக்கோயில்கள் கட்டடக் கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழா்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா் : அறிக்கை தொடர்கிறது[5], “மேலும் பல்வேறு திருக்கோயில்களின் மூலிகை ஓவியங்களை பழைமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகும். இப்பணியை தொல்லியல் துறையினை சாா்ந்த வல்லுநா்களின் ஆலோசனை பெற்று அவா்களது மேற்பார்வையில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் பழைமையினை பாதுகாக்க இயலும் என்ற நோக்கத்தில் தொல்லியல் ஆலோசகராக காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா்  ஆகிய இணை ஆணையா் மண்டலங்களுக்கு, நிபந்தனைகளுக்குட்பட்டு நியமனம் செய்யப் பட்டுள்ளனா்தொல்லியல் ஆலோசகா்களாக நியமனம் செய்யப்பட்டவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையா் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தி சம்பந்தப்பட்ட இணை ஆணையா் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்,” என்று கூறுகிறது[6].

கோவிலை இடிக்க வந்தபோது, பெண்கள் சாமியாடி விரட்டினர். அதாவது, நாத்திக ஆட்சியாளர்கள் அந்த அளவுக்குக் கூட பெண்களின் உணர்வுகளை மதிக்கவில்லை

ஆலோசக வேலை செய்யவேண்டும்: அறிக்கை தொடர்கிறது[7],தொல்லியல் ஆலோசகா்கள், ஆணையா், இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா்  ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் திருக்கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். தங்கள் பகுதிகளின் பழைமை வாய்ந்த திருக்கோயில்களை அவ்வப்போது ஆய்வு செய்து திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தொல்லியல்துறை ஆலோசகா்கள் அறிக்கை அனுப்ப வேண்டும். தொல்லியல்துறை ஆலோசகா்கள் மேற்கொள்ள  வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது அறிவுரை வழங்கப்படும்,”என்று கூறுகிறது[8].

இதன்படி நியமிக்கப் பட்டுள்ள தொல்துறையினர் பின் வருமாறு[9]: யார்-யார் நியமிக்கப் பட்டுள்ளனர்?

  1. காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன்,
  2. ஈரோடு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன்,
  3. சேலம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் செல்வராஜ்,
  4. தஞ்சாவூர் மண்டல அலுவலகத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் வாசுதேவன்,
  5. வேலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை பதிவு அலுவலர் கலைவாணன்,
  6. விழுப்புரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் தண்டபாணி,
  7. திருவண்ணாமலை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன்,
  8. திருச்சி மண்டலத்துக்கு மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் கணேசன்,
  9. மதுரை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம்,
  10. கடலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை காப்பாட்சியர் பரணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்[10].

ஆலோசகர்களின் வேலை என்ன?: * தொல்லியல் ஆலோசகர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையர் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்திட சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

*  இந்த அலுவலர்கள் ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

* அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது வரையறை செய்ய வேண்டும்.

* மேலும் தங்கள் சரகத்திலுள்ள பழமைவாய்ந்த கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

* தொல்லியல் ஆலோசகர்கள் ஓராண்டிற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்னதோ அதுவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

* வல்லுநர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. வல்லுநர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியத்தினை கோயிலின் நிதியிலிருந்து வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் தொகுப்பூதியத்தினை ஆணையர் பொதுநல நிதியிலிருந்து பெற்று கோயிலுக்கு திரும்ப வழங்கிட விதிகளின்படி உரிய முன்மொழிவினை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*  நிர்வாக நலன் கருதி இந்த தொல்லியல் ஆலோசகர்களை முன்அறிவிப்பின்றி ஆணையர் பணி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்கள் ‘தொல்லியல் ஆலோசகராக’ நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணி: இவையெல்லாம் ஏதோ புதியது போலவும், கட்ந்த ஆண்டுகளில் நடக்காதது போலவும் இருக்கிறது. இடைகாலத்தில், துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், அழிப்புகளுக்குப் பிறகு, விஜயநகர, நாயக்க மன்னர்கள், வணிகர்கள், செல்வந்தர்கள், பக்தர்கள் செய்யாத புனரமைப்பு சேவைகளை இவர்கள் செய்து விடப் போகிறார்களா என்று தெரியவில்லை இதை வைத்து கான்ட்ராக்ட் கொடுக்கும் போது கமிஷன் அடிக்க, கொள்ளையடிக்க திட்டம் போடுவது போல இருக்கிறது. ஏனெனில், கருணாநிதி காலத்தில் காஞ்சிபுரத்தில் புராதன மண்டங்கள் இடிக்கப் பட்டன. அதனை ஆர்.நாகசாமியே எடுத்துக் காட்டியுள்ளார். அவர் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன், பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன. பிறகு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[11],” என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

25-12-2021


[1] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/12/12154342/3282565/Archaeological-Consultants-Appointed-for-Temple-Renovation.vpf

[3] தினமணி, புனரமைப்பு பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள் நியமனம், By DIN  |   Published on : 13th December 2021 05:39 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/dec/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3753816.html

[5] தமிழ்.இந்து, பழைய கோயில்களை சீரமைக்க தொல்லியல் ஆலோசகர் நியமனம், செய்திப்பிரிவு, Published : 13 Dec 2021 03:07 AM; Last Updated : 13 Dec 2021 03:07 AM

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/746484-.html

[7] இ.டிவி.பாரத், 100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்!, Published on: Dec 12, 2021, 7:40 PM IST.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/100-years-old-temples-hr-and-ce-department-appoints-archaeologists-to-restore-temples/tamil-nadu20211212194000330

[9] தினகரன், நூற்றாண்டு பழமையான 8 ஆயிரம் கோயில்கள் புனரமைப்பு பணி தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை, 2021-12-13@ 00:09:46. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[11] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் – நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அறநிலையத் துறை அமைச்சர் செயல்படுவாரா? (3)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள்நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அறநிலையத் துறை அமைச்சர் செயல்படுவாரா? (3)

ரங்கநாதனின் முரண்பட்ட வேடங்கள், தோற்றங்கள்: இவரது வேடங்களும் திகைப்படையச் செய்கின்றன. புகைப்படங்களில் தாராளமாக போஸ் கொடுக்கும் இவர், பிள்ளையாருக்கு மற்றும் அச்சிலைகளை உடைத்த பெரியார் சிலைக்கும் மாலை போடும் போது பூணூல் போட்டுக் கொண்டு, பட்டை-கொட்டைகளுடன் காட்சியளிக்கிறார். போராட்டம், ஆர்பாட்டம் என்று வரும் போது பூணூலை கழற்றி வைத்து விட்டு வருகிறார். கிருதா-மீசை சகிதம் வெறியோடு கத்தும் தோற்றம் காணப் படுகிறது. அத்தகைய நடத்தைகளை யார் அர்ச்சகப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள் அல்லது எந்த ஆகமம் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. பெரியாருக்கு மாலை போடும் போது, இவர் வலது பக்கமாகவும், இன்னொருவர் இடப் பக்கமாகவும் (மாலை போல) பூணூல் போட்டிருப்பதை கவனிக்கலாம். அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது போன்ற விளம்பர யுக்திகளில் ஈடுபட்டுள்ளார் அல்லது ஊடகங்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றாகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி திமுக அரசு ஒன்றும் செய்து விட முடியாது: இந்து அறநிலைச் சட்டப் பிரிவை மாற்றித் தான், திமுக அரசு 2006ல் அத்தகைய அரசாணை [(No. 5 /2006) dated 14.07.2006] பிறப்பித்தது[1]. ஆனால், பிரச்சினை அறிந்தவுடன், மறுபடியும் மாற்றி [The Tamil Nadu Act No. 15 of 2006], இன்னொரு ஆணையை வெளியிட்டது. அதற்கு கவர்னர் 29.08.2006 அன்று ஒப்புதல் அளித்தார். ஆனல், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடுத்தது[2]. உச்சநீதி மன்றம் 16-12-2015 அன்று தீர்ப்பு அளித்தது[3]. “மேற்காணும் விவரமான வாதவிவாதங்களுக்குப் பிறகு அர்ச்சகர் நியமனம் ஆகமசாத்திர விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். அவை அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகள் மற்றும் கொள்கைளுக்கு இயைந்த வகையில் இருக்க வேண்டும். இது சேஷம்மாள் தீர்ப்பின் படியும் பொறுந்தும். அதன்படியே, எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என்று ஆணையிட்டது[4]. இதை எதிர்த்து தமிழக அரசோ, எந்ஹ சங்க்சமோ மேல்முறையீடு செய்யப் படவில்லை.அதாவது ஒப்புக் கொண்டனர் என்றாகிறது. பிறகு இப்பொழுது, 100 நாட்களில் அர்ச்சகராக நியமிப்பேன் என்று அமைச்சர் பேசுவது வேடிக்கையான விசயம் தான். நீதிமன்ற தீர்ப்பின் மகத்துவம் அறிந்து தான் பேசுகிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. உள்ள பல பிரச்சினைகளைத் திசைத் திருப்ப, இவ்வாறு கூறியிருக்கலாம் என்றாலும், இவர்களுக்கு கோவில்கள், கோவில் சொத்துகள் முதலியவற்றின் மீது ஒரு கண் இருப்பதனால், பக்தர்கள் பொறுட்திருந்து தான் கவனிக்கபேண்டும், பார்க்க வேண்டும்.

திக-திமுக-நாத்திக-இந்துவிரோத சக்திகள் ஒன்றாக இணைந்து வேலை செய்வது தெரிகிறது

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என்ற தீவிர-வாத-விவாதங்களில், அரசியல் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, ஆகம நியதிகள் இல்லை.

  • ஈவேரா சொன்னார், கருணாநிதி சட்டம் போட்டார், அரசு ஆணை வெளியிடப் பட்டது போன்ற திரும்ப-திரும்ப செய்யும் வாதங்கள் சட்டமுறைப்படி இல்லை.
  • உச்சநீதி / உயர்நீதி மன்ற தீர்ப்புகள், ஏற்கெனவே இருக்கும் சட்டம், நீதிமுறை, வரையறை, முதலியவற்றைக் கொண்டு வழங்குபவை.
  • அரசியல் 25-சாசனப் பிரிவை நீக்க வேண்டும் என்றால், அம்பேத்கரை எதிர்ப்பதாகாதா, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை எதிர்ப்பதாகாதா, என்பதையும் யோசிக்க வேண்டும்.
  • 2008ல் தீட்சை பெற்ற பிறகு, சிறிய தனியார் கோவில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றிருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது, அவர்களது அரசியலை, விருப்பத்தைக் காட்டுகிறது.
  • அதாவது, பொருளாதார ரீதியில் சம்பளம் பெற்று திருப்தியாக, வசதியாக, 12 ஆண்டுகள் இருந்து வந்திருக்கிறார்கள் வருகிறார்கள், என்று உறுதியாகிறது.
  • ஒவ்வொரு முறையும் பளிச்சென்று ஆடைகள் அணிந்து, ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கின்ற நிலையில் அவர்களது நிலையும் வெளிப்படுகிறது.
  • M.B.B.S, B.E, B.Tech, Bio-Tech என்றெல்லாம் படித்தவர்களுக்கு அத்தகையத் துறை வேலைகள் கிடைப்பதில்லை. சான்றிதழ் உள்ளது வேலைக்கு உத்திரவாதம் என்பது பொலித்தனம்!
  • இவர்கள் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, வேலை கொடு என்று உட்கார்ந்திருந்தால், யாரும் அவர்களை மதிக்க மாட்டார்கள்!
  • சான்றிதழ் வைத்துக் கொண்டு 12 வருடங்களாகக் காத்துக் கிடக்கிறோம் என்பதும், வேறு வேலை செய்கிறோம் என்பதும், வேலை-சம்பளம் இவற்றையும் மீறியதாக உள்ளது.
  • அதாவது, அர்ச்சராக வேண்டும் என்பதில் அரசியல் தான் உள்ளதே தவிர, அதில் உண்மையான பக்தி, சிரத்தை, லயம் முதலியவை இல்லை.
  • அத்தகைய பக்தியுடன் கடவுளிடம் உருகி வேண்டியிருந்தால், நிச்சயம் வேலை கிடைத்திருக்கும். ஆனால், பெரியார் சிலைக்கு மாலை போடுவேன் என்ற ரீதியில் இருந்து வருவது, நாத்திக-இந்து விரோத அரசியலை ஆதரிப்பது புலப்படுகிறது.
  • மேலும், இவர்களை அவ்வாறு ஊக்குவித்து வருவதும் புலனாகிறது. நீதிமன்ற வழக்குகளுக்கு ஆதாரங்களாக, அத்தாட்சியாக தயாரிக்கப் பட்டிருக்கின்றனர்!
  • இவ்வாறு உள்நோக்கத்துடன், நாத்திக அரசியல் செய்யும் இவர்கள் எவ்வாறு ஆகம சாத்திரங்களுக்கு உகந்தவர்களாக இருப்பார்கள்?
  • படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் செயல் பட்டால், ரகளை செய்தால் என்ன செய்ய முடியும்?
  • நாத்திகன், பெரியாரிஸ்ட், திராவிடத்துவ வாதி, இந்து-விரோதி, சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆனால், என்னாகும்?

© வேதபிரகாஷ்

11-06-2021


[1] An Ordinance (No. 5 /2006) dated 14.07.2006 followed the aforesaid G.O. seeking to further amend sub-section (2) of Section 55 of the Tamil Nadu Act. The said provision of the Act i.e. Section 55(2), by virtue of the 1971 amendment referred to above and the 2006 Ordinance, read as follows.

“(2) No person shall be entitled to appointment to any vacancy referred to in sub-section (1) merely on the ground that he is next in the line of succession to the last holder of office.” [Change brought about by amendment of S.55(2)] “or on the ground of any custom or usage”. [Change brought about by Ordinance 5/2006).

The Ordinance was replaced by The Tamil Nadu Act No. 15 of 2006 which received the assent of the Governor on 29.08.2006. The Act, however, did not contain the amendment to Section 55 as was made by the Ordinance. In other words, the said amendment brought by the Ordinance was dropped from the Amending Act 15 of 2006.

[2] Supreme Court of India- Adi Saiva Sivachariyargal … vs Govt. Of Tamil Nadu & Anr on 16 December, 2015; Author: ……………….…………………J.

Bench: Ranjan Gogoi, N.V. Ramana

                                             REPORTABLE

                        IN THE SUPREME COURT OF INDIA

                         CIVIL ORIGINAL JURISDICTION

                    WRIT PETITION (CIVIL) NO. 354 OF 2006

ADI SAIVA SIVACHARIYARGAL NALA SANGAM & ORS.                      …PETITIONER (S)

                                   VERSUS

THE GOVERNMENT OF TAMIL NADU & ANR.                             …RESPONDENT (S)

                                    WITH

                          W.P. (C) No. 355 of 2006, W.P. (C) No.383 of 2006 AND   W.P. (C) No. 384 of 2006.

[3] https://indiankanoon.org/doc/143215272/

[4] “Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

2006ல் திமுக சட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.

சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?

கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.

இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது.  அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி  கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2021

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

ஒக்ரோபர்7, 2012

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

திராவிடக்கொள்ளைதொடர்வதுஏன்? பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”, இந்திய விரோதிகளாக்கி, இந்து விரோதிகளாக்கி, மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி, அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு, மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர்[1]. அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன[2]. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்[3].

 

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008) http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008)) http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகுகுடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களைஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம்ஆக்கிரமிப்புவிவகாரம்ரோசையா– கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

முறைகேடாககுத்தகைக்குவிடப்பட்டகோவில்நிலங்கள்கையகப்படுத்தப்படும்[4]என்று அறிவித்தால் மட்டும் போதுமா, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே? இனி ஆளுங்கட்சியினர் பிரமிப்பை ஏற்படுத்தி, சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், பிறகு, ஊறிப்போன கோவில்-திருட்டுத் திராவிடம் பழையபடி, கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு இறங்கி விடும்.

அப்துல்லாவிற்கும்அகஸ்தீஸ்வரர்கோவிலுக்கும்என்னசம்பந்தம்?: அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அகஸ்திஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக அப்துல்லா என்பவர்[5] 32 லட்சம் பாக்கி வைத்துள்ளாறாம்! கலீல் உர் ரஹ்மான் 10 லட்சம் பாக்கியாம்! அதெப்படி இப்படி முஸ்லீம்கள் கோவில் சொத்தை அனுபவிக்க முடிகிறது? இந்த அழகில் இவர்கள் கோர்ட்டுக்கு வேறு போகிறார்கள். இந்துக்களை இன்னும் இழிவு பேசிவரும் முஸ்லீம்கள் இருக்கும் போது, முஸ்லீம்கள் இவ்வாறு கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் தொழிலை விடவேண்டும். இல்லையெனில் இவர்களை இக்கால ஔரங்கசீப்புகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் கடவுள் தான் ஒசத்தி என்று தம்படாம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்படி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் வெட்கம்கூடபடாமல், பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் எனும்போது, இதுவும் ஜிஹாதின் ஒருவழியாகப் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்[6]: சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி – 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது “ஜரூராக” வசூல் செய்யப்படுவதை[7] அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’: சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’ இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 “கிரவுண்ட்’ சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 “கிரவுண்ட்’ நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 46 “கிரவுண்ட்’ இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 “கிரவுண்ட்’ இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, “கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

456 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஏன் – எப்படி?: கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 “கிரவுண்ட்’ இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 “கிரவுண்ட்’ இடத்தில் இருந்து, 30 “கிரவுண்ட்’ இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 “கிரவுண்ட்’ நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, “இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை’ என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் தக்கார்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?: பி. விஜயகுமார் ரெட்டி என்பவர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருவதோடு, பாக்கியைச் செல்லுத்தாவிட்டால், காலிசெய்யுமாறு நோட்டீஸையும் கொடுத்துள்ளார்[8]. இவர் மீட்டுள்ள சொத்தின் மதிப்பு ரூ.230 கோடிகளுக்கு மேல் என்கிறார்[9]. இதேபோல மற்ற தக்கார்கள் ஏன் வேலை செய்வதில்லை? குறிப்பாக மேஎலேயுள்ள நிலத்தை ஏன் விட்டு வைத்தார்? கோர்ட் கேஸ் என்று சொல்லிவிடுவார், ஆனால், அது நியாயம் அல்லவே? திருமூலர் சொன்னதை, இந்துக்களும் மறக்கலாமோ? பிறகு, நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் வரி பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’: கமிஷனர் அதிரடி நடவடிக்கை[10]: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான 7 கடைகள் பஸ் நிலையம், சன்னதி தெருவில் உள்ளன. இதனை அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், வெங்கடேசன், முருகேச ரெட்டி, ஜான்மனுவேல் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் நடத்தி வந்தனர்.  இதில் 6 கடைகளுக்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் ரூ.6 லட்சம் வரை நகராட்சிக்கு வரிபாக்கி ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கியை செலுத்தாமல் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், என்ஜினீயர் சண்முகம், சுகாதார அதிகாரி லட்சுமி கணேசன், தலைமை எழுத்தர் அமராவதி பொன்மணி, பொதுப்பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வரிபாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதிரடியாக அவர்கள் 6 கடைகளுக்கும், சீல் வைத்தனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, 2011-12ம் ஆண்டு மட்டும் நகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரை வரிபாக்கி உள்ளது. வரிசெலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றார். ஆனால், கோவில் குத்தகை, வாடகை பாக்கி என்றால் அதிகாரிகள் “சட்டப்படி நடவடிக்கை எடுத்து” அமைதி காத்துக் கொண்டிருப்பார்கள் போலும், அப்படியென்றால் திராவிடக் கொள்ளை தொடர்கிறதா?

நிர்வாக சீர்கேட்டால் ரூ.20 லட்சம் குத்தகை பணம் பாக்கி; கடும் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்[11]: புதிய கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பழைய புத்தி போகாது போலும்.திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டால் 1 வருடங்களாக ரூ.20 லட்சம் குத்தகை பணம் வசூல் செய்யாமல் பாக்கியாக உள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஏ.என்.சம்பத் தலைமை தாங்கினார். ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துப்பரவு அலுவலர் பாஸ்கர், துப்பரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் லோகநாதன், விஸ்வநாதன், எம்.எஸ்.செல்வ பாண்டியன், எல்.வி. நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:- பி.லோகநாதன் – தமிழகத்தில் 3 முறையாக ஜெயலலிதாவை முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இல.ஆனந்தன்- தே.மு.தி.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறசெய்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

லோகநாதன்- சுகாதார பிரிவுக்கு 2011- 2012 ஆண்டிற்கு சுண்ணாம்பு நீருக்கு 3 லட்சம் தேவையா? கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் குறைவாக வாங்கியுள்ளீர்கள்.

சம்பத்(தலைவர்)-ஆடு அறுக்கும் தொட்டி குத்தகை பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கியுள்ளது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையாளர்- குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

விஸ்வநாதன்-பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட குத்தகை ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் பாக்கி உள்ளது ஏன் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்யவில்லை.

பி.லோகநாதன்-வார சந்தை குத்தகை ரூ. 7லட்சத்து 14 ஆயிரம் கடந்த 2009 ஆண்டு முதல் நிலுவையில் ஏன் வசூல் செய்யவில்லை.

சம்பத்(தலைவர்)- குத்தகை வசூல் செய்யாமல் ரூ.20 லட்சம் பாக்கியாக உள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.

பச்சையப்பன் – இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன்- பேருந்து நிலைய நுழைவு கட்டண குத்தகை ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் 500 குத்தகை வசூலில் பாக்கி உள்ளது என்ன நிர்வாகம் நடக்கிறது.

ஆணையாளர்- துறை அலுவலர் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதில் முறைகேடு கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

சம்பத் (தலைவர்) -குத்தகை பணம் செலுத்தவில்லை என்றால் மறு டெண்டர் விட்டு விட்டு குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் போலும். திருத்தணி நகராட்சி கமிஷனெர் போல, இங்குள்ள கமிஷனர் ஒன்றும் செய்யமாட்டார் போலும்.

ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள்: 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.  ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி, இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334 ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

வாடகை பாக்கி: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15 ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6 லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6 ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசாணையில்சலுகை 33.33லிருந்து 15%, கிட்டத்தட்ட 20% குறைப்பு[12]: கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; வாடகை உயர்வை குறைக்க வேண்டும் என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு, மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்து முன்னணிக்குத்தான் இவ்விவரங்கள் தெரியும் போலும்: கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில் வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை, குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், கதை தொடகிறது போலும்: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது: காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்[13]. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது[14].

திருப்போரூர் என்ன சளைத்ததா?: திராவிடர் பாதை எல்லா ஊரிலும் பின்பற்றத்தான் செய்வார்கள். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழன் சொன்னது அக்காலத்தில், இன்றோ, ஒரு கோவிலையும் கொள்ளையடிகாமல் இருக்கவேண்டாம் என்று திராவிடர்கள் செயல்பட்டு வருகின்றனர். கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்: ராமகோபாலன்[15]: தரிசன கட்டணத்தை ரத்து செய்வதுடன் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “’கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. கேரளா மற்றும் வடமாநில கோவில்களில் இப்படி கட்டணம் வசூலிப்பது கிடையாது. காசு கொடுத்து சாமியை பார்க்க சாமி காட்சி பொருள் அல்ல. எனவே தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி ரூ.200 கோடி வரை உள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாக்கி தொகையை வசூலிக்க அரசு அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கோவில் களை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள், துறவிகள், இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என்று பேசினார்.

வேதபிரகாஷ்

07-10-2012


[5] தினமலர், அக்டோபர் 6, 2012. சென்னைப் பதிப்பு.

[6] தினமலர், ஆகஸ்ட் 14,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=529267

[7] இதிலென்ன “ஜரூராக” வசூல் செய்வது என்று தெரியவில்லை. கோவிலுக்கு பாக்கி செல்லுத்தாமல் இருப்பவர்கள் இந்துக்கள் என்றாலும் அவர்கள் இந்து மதத்தின் விரோதிகள் என்றுதான் ஆகிறார்கள். அவர்கள் நவீன கால இரண்யகசிபுகள் எனலாம். அனவே அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒன்றும் விஷயமில்லை, மாறாக வெட்கப்பட்டு, கூனிக்குருக வேண்டும். நாத்திகர்கள் என்றோ, ககுத்தறிவுவாதிகள் என்றோ கூட சொல்லிக்கொள்ளமுடியாது, அப்படி செய்தால், அவர்கள் இந்து துரோகிகளைவிட மோசமானவர்கள் எனலாம்.

[9] “We have recovered a little more than 46 grounds from encroachers after starting our drive in March (2012). The property recovered is worth more than Rs 230 crore,” says P. Vijaykumar Reddy, the temple takkar (trustee).

[13] தினமலர், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2012,23:46 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 01,2012,05:16 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557027

[14] தினமலர், அக்டோபர் 05,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560259

 

மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது!

மே26, 2010
மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது
First Published : 26 May 2010 03:16:39 AM IST
Last Updated : 26 May 2010 05:59:31 AM IST
கும்பகோணம், மே 25, 2010: ஆயுதங்களுடன் வந்து, மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மதுரை ஆதீனத்திற்கு உள்பட்ட கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அவரது மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்கள் தரிசனம் முடித்துவிட்டு ஆதீனத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
மரியாதை இல்லாமல் ஆதீனத்திடம் தகராறு: அப்போது கஞ்சனூரைச் சேர்ந்த மோகன், ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் ஆயுதங்களுடன் வந்து ஆதீனத்திடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மடாதிபதிகள் நாத்திக அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் குலாவுவதால், மக்களுக்கு மரியாதை குறைந்து விடுகிறது. இதனால், அண்ட வந்தவர்கள் எல்லாம், மடாதிபதிகளையே இப்படி மிரட்டும் அளவுற்கு வந்து விட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.
கோவில் சொத்தை அபகரிப்பது என்பது தான் நோக்கம்: விசாரணையில் அந்த மூவரும் கோயிலுக்குச் சொந்தமான வாழைத் தோப்பை பராமரித்து வருவதாகவும், அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட அனுமதிக்குமாறும் கேட்டிருந்தனராம். அதற்கு கோயிலுக்கு கட்ட வேண்டிய தொகையைக் கட்டுமாறு கோயில் நிர்வாகம் கூறியதாம். மேலும், அந்த இடத்தின் உரிமத்தை அவர்கள் மூவர் பெயருக்கும் மாற்றித் தரவும் கோயில் நிர்வாகம் மறுத்ததால், ஆதீனத்திடம் அவர்கள் தகராறு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முஸ்லீம்கள் மிரட்டியது: இதே மாதிரி முஸ்லீம்கள் வேறு விசயமாக மிரட்டிச் சென்றுள்ளது நினைவிருக்கலாம். தேவையேயில்லாமல், முஸ்லீம்கள் முன்னம், நபி பற்றி பிரச்சினை செய்தனர். இந்த ஆதினத்தை மிரட்டினர். ஆனால், இன்று நபி பெயராலேயே மசூதிகள் இடிக்கப் படும்போது, முஸ்லீம்கள் கொல்லப் படும் போது, அதே முஸ்லீம்கள் மௌனிகளாக இருக்கின்றனர்!
யார் இவர்களுக்கு இத்தகைய தைரியத்தைக் கொடுப்பது? இப்படி ஆதினத்தையே எதிர்த்து, மிரட்டும் அளவிற்கு எப்படி குத்தகைக் காரர்களுக்கு தைரியம் வரும்? நாத்திகம் மக்களின் அறிவை மழுங்க வைத்து விட்டது. நாத்திகர்களான கருணாநிதி ஆட்சி செய்து கொண்டு இந்துக்கள் (திருடர்கள், பர   தேசிகள் என்று பேசுவது), கோவில்கள், சம்பிரதாயங்கள்……………முதலியவற்றை கேலி செய்தும் (அதுவும் துலுக்கன் கஞ்சி குடித்துக் கொண்டு அவதூறு பேசுவது), கோவில்கள்-மண்டபங்கள் முதலியவற்றை இடிக்கச் செய்தும், கோவில் நிலங்களை விற்றும்……………….இத்தகைய அடாவடித்தனமான, திருமூலருக்கு எதிராக, திருவள்ளுவருக்கு விரோதமாக……………..குரூரக்கொடிய காரியங்களை செய்து வரும் போது, “தமிழர்கள்” கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமைகளாக, கை-கால்கள் இருந்தும் முடவர்களாக இருந்து வருகின்றனர். போலீஸார் புகார்களை பதிவு செய்வதில்லை, உள்ள வழக்குகளை விசாரிப்பதில்லை;  நீதிபதிகளோ தூங்குகின்றனர்; அந்நிலையில் தான், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள் மற்றும் இந்த போர்வையில் உள்ள எல்லா இந்து-இந்திய விரோதிகள் செயல்படுகின்றனர்.